பெ ரிய பெரிய கிரிமினல் விசயங்கள் தான் மிகவும் நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அப்படியான ஒன்று தான் ” ஹாப்பி ஸ்ட்ரீட் ”. இதைப் படிச்சா உங்க குடும்பத்திற்கு நல்லது.
ஹாப்பி ஸ்ட்ரீட் என்றவுடன், ஏதோ கலாச்சார சீரழிவு என்று நினைத்துக் கொண்டு கலிகாலம்டா என்று தலையில் அடித்துக் கொண்டு போய் விடுகிறோம். ஆனால், அது லெஃப்ட்ல போட்ட இண்டிகேட்டர். நிஜத்தில் வலதுபுறமா கூட்டிட்டுப் போய் போதைப் பொருள் விற்கும் தளம் அது!
மனிதர்களுக்கு பொதுவாகக் கொண்டாட்ட மனநிலை தேவைப்படுகிறது. பண்டிகைகள் / கோவில் திருவிழாக்கள், நண்பர்களுடன் கூடிக் கும்மாளம் போடுவது, அவ்வளவு ஏன்.... ஞாயிற்றுக் கிழமை கறி எடுத்து குடும்பத்துடன் சேர்ந்து புசிப்பது கூட கொண்டாட்ட மனநிலை தான். இது தனிமையில் கிடைக்காது. குறைந்தபட்சம் சிறு கூட்டம். வாய்ப்பு கிடைத்தால் பெருங்கூட்டம்.
கொஞசம் யோசித்துப் பாருங்கள்... நியூ இயர் கொண்டாட்டம் என்பதில் என்ன நடக்கிறது? யாரும் யாருக்கும் வாழ்த்து சொல்லிக்கலாம். ஆரவாரமாக எந்த கூச்ச நாச்சமும் இல்லாமல் கெட்ட வார்த்தைகளில் கூட கத்திக் கொள்ளலாம். வாகனங்களை கட்டுப்பாடின்றி ஓட்டிக் கொள்ளலாம். குடித்து விட்டு பொது நாகரீகம் இல்லாமல் அலையலாம். ஏன் பொதுவிடத்திலேயே குடிக்கலாம். இதெல்லாம் கூட்டமாகச் செய்யும் போது குற்றவுணர்வின்றி போகும்.
எல்லாரும் செய்வதால் தவறில்லை என்ற மாயை. எல்லாரும் செய்றாங்க நானும் செய்றேன்.
இப்ப புரியுதா...? கூட்டமா செய்யும் போது சமூக பயம் , சமூக ஒழுங்கு, கட்டற்ற கொண்டாட்ட மனநிலை.
சரி, ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்கும், போதைப் பொருள் விற்பனைக்கும் என்ன சம்பந்தம்?
முதலில் பெரிய ஸ்பீக்கர் வைத்து இளைஞர்களின் தினவுக்கு இரையாக ஆடச் செய்வர். ஆண்களுக்கு பெண்கள் முன் வித்தையைக் காட்டவும், பெண்களுக்கு ஆண்கள் முன் ஈர்ப்பைக் காட்டவும், ஆட்டத்தில் உற்சாகமும், அதீத கொண்டாட்டமும் பொங்கும். நிகழ்ச்சி முடிந்ததும், ஏதோ பெரிதாகக் கொண்டாடியது போன்ற ஒரு மகிழ்ச்சி உருவாகும்.
அடுத்து....?
நாமெல்லாம் நண்பர்களுடனோ சில குடும்பங்கள் சேர்ந்தோ டூர் போய்விட்டு திரும்பும் போதே... அடுத்து எங்கே போகலாம் என்று திட்டமிடுவோம் இல்லையா? அதே போல அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டிற்கு இப்படி போகணும், அவனையும் கூப்பிடணும் லைட்டா சரக்கு அடிச்சுட்டுப் போனா கூடுதல் மஜாவா இருக்கும் என்றெல்லாம் திட்டம் எழும். அடுத்த சில நாட்களுக்கு ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடியதை எல்லாம் சற்றே மிகைப் படுத்தி நண்பர்களிடம் பகிரப்படும். ஹாப்பி ஸ்ட்ரீட்டுக்குப் போகாதவனெல்லாம் சமகால இளைஞன் அல்ல என்பதாக சித்தரிக்கப்படும்.
அடுத்த ஹாப்பி ஸ்ட்ரீட்டில் சீனியர்கள் சரக்கடித்து விட்டு வந்திருப்பார்கள். உடன் வந்த குடிப்பழக்கம் இல்லாத பெண்களை, “இன்று மட்டும் கொஞ்சமா” என்று வற்புறுத்துவார்கள். அவர்களும், அவர்கள் வற்புறுத்துவதால் மட்டும் என்று தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டு குடிக்கத் தொடங்குவார்கள். இதன்... நீண்ட நாள் இலக்காக...
இந்தக் கூட்டத்திற்குள் ஒருவன் நுழைந்து ஒரு ஸ்டஃப் இருக்கு பாஸ்... யூஸ் பண்ணிப் பாருங்க என்று ஒரு பணக்கார இளைஞனை இழுப்பான். முதலில் ஓசியாக... பிறகு ஷேரிங்காக, அப்புறம் அவனவன் காசில், பிறகு ஸ்டஃப் கிடைக்கவில்லை என்று டிமாண்ட் கூட்டி... வேண்டுமென்றால் கொஞ்சம் மொத்தமாக வாங்கணும். இன்னும் நாலைந்து பேர் ஷேர் பண்ணினால் தான் என்று இன்னும் இளைஞர்களை உள்ளிழுப்பார்கள். இது தான் எல்லா தேசத்திலும் போதை விற்பனை ஆசாமிகளின் சேல்ஸ் டெக்னிக்.
நம்பாதவர்கள் ஹாப்பி ஸ்ட்ரீட் ஸ்பான்சர்களின் நெட்வொர்க்கை தேடிப் பாருங்கள்.
ஒன்று பத்தாகும், பத்து ஆயிரமாகும். நாளைக்கு பிடிபடுபவர்கள் எல்லாம் சமூகத்தில் பொருளாதார பெருசுகளாக இருப்பதால், பணத்தை விட்டெறிந்து ரகசியம் காப்பார்கள். இந்த போதைப் பழக்கம் நடுத்தரக் குடும்பத்திற்குள் நுழையும் போது, பணத் தட்டுப்பாட்டால், வழிப்பறி திருட்டு, கொலை வரை சர்வசாதாரணமாகி விடும்.
எச்சூச்மீ.... உங்க வீட்ல இளம் வயதினர் இருக்காங்களா? ஹாப்பி ஸ்ட்ரீட் பத்தி பேசத் தொடங்கும் போதே செருப்பால் அடித்து அடக்கி வச்சுடுங்க. புள்ள முக்கியமா இல்ல அதோட பிடிவாதம் முக்கியம்
இந்த பதிவை உங்கள் குழுவில்/நண்பர்களுடன் பகிருங்கள்.
1 comment:
இப்போதுதான் இதை வாட்ஸாப்பில் படித்து வந்தேன். எவ்வ்ளவு திட்டம் போட்டு சீரழிக்கிறார்கள்...
Post a Comment