Tuesday, March 29, 2022

அதுவும் சரிதானே..(படித்ததில் பிடித்தது)

 ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தின 40 நாட்கள் 

என்பது கிறிஸ்துவர்களுக்கு தவக்காலம் ஆகும்.

அந்நாட்களில் அவர்கள் non-veg உணவு சாப்பிட மாட்டார்கள்.


ரோம் நகரில் ஒரு பஞ்சாபி இருந்தார். அவருக்கு தினசரி சிக்கன் இல்லாமல் சாப்பிட முடியாது😂


ஒரு முறை அந்த பஞ்சாபி வசித்த அந்த ஏரியாவில் இருக்கும் அனைத்து கிறிஸ்த்தவர்களும் fastingல் இருந்தாங்க..


அதேவேளை பஞ்சாபி வீட்டிலிருந்து கும்முன்னு சிக்கன் குருமா வாசனை வந்தது..


அக்கம்பக்கத்து வீட்டிலிருப்பவர்களுக்கு  வாயில் எச்சில் ஊற ஆரம்பித்தது..

Fasting என்பதால் சாப்பிடவும் முடியல...


சிக்கன் சாப்பிடும் ஆசையையும் தூண்டியது..


அதனால் அக்கம்பக்கத்து வீட்டினர் எல்லாரும் ஒன்று கூடி அந்த பஞ்சாபி வீட்டுக்கு போய் சண்டையிட்டனர்.


நாங்க விரதத்தில் இருக்கோம்..நீ இப்படி non veg சமச்சா ...எங்களுக்கு ஆசை வராதா? ன்னு கேட்டனர்..


இனி 40 நாட்களுக்கு veg உணவு தான்.. நீங்க சாப்பிடணும் னு சொல்விட்டு போய்ட்டாங்க..

இவரும் மண்டைய ஆட்டினார்.


மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் fry

வாசனை அனைவரின் மூக்கையும் துளைத்தது..


அக்கம்பக்கத்தினர் ஒரு முடிவுக்கு வந்தனர்..


எல்லோரும் அந்த பகுதியில் உள்ள பாதிரியாரிடம் சென்று complaint செய்தனர்.


பாதிரியார் அந்த பஞ்சாபியை நேரில் அழைத்து அறிவுரை கூறி.. சிக்கன் சமைக்காதே என்று சொல்லி அனுப்பினார்..


மறுநாள் மதியம் பஞ்சாபி வீட்டில் சிக்கன் தந்தூரி


இந்த முறை வாசனை ரொம்ப சூப்பர் போல

எல்லோரும் திபு திபு னு பாதிரியாரிடம் ஓடினார்கள்....


பாதிரியாருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை....


அவருக்கு தெரிந்த, அடிக்கடி செய்யும், ஒரு ஐடியாவை பண்ணினார்....

அந்த பஞ்சாபியை கிறிஸ்துவரா ஞானஸ்நானம் பண்ணி விட்ருவோம் என்று முடிவு பண்ணினார்..


மறுநாள் அவரை அழைத்து.. கிறிஸ்துவின் பல விஷயங்களை எடுத்து கூறி அவரை ஒரு தண்ணீர் தொட்டியில்  மூன்று முறை முக்கி ஞானஸ்நானம் கொடுத்து கிறிஸ்துவரா மாற்றினார்..


"உன் பேர் என்ன ?

"சுக்விந்தர் சிங் "


"இன்று முதல் நீ சாமுவேல் சாமுவேல் சாமுவேல்" ன்னு தண்ணில மூன்று முறை முக்கி சொன்னார்.


இன்று முதல் 40 நாளுக்கு நீ சிக்கன் சாப்பிடக் கூடாது, 

ஜீஸஸ் மீது ஆணை ன்னு சொல்ல, சாமுவேல் என்ற சுக்விந்தரும் ஒப்புக்கொண்டார்


எல்லோருக்கும் நிம்மதி..


பாதிரியார்க்கு  பெருமிதம்.


அனைவரும் மறுநாள் மதியம் ஆவலுடன் வெய்ட் பண்னாங்க..

பஞ்சாபி என்ன செய்றான் என்று பார்க்க..


மதியம் திரும்பவும் பஞ்சாபி வீட்ல இருந்து சிக்கன் வாசனை வந்தது..


எல்லோரும் மீண்டும் பாதிரியாரிடம் முறையிட ..

பாதிரியார் பஞ்சாபியை அழைத்து விசாரிக்க.....


பஞ்சாபியோ, நான் ஜீசஸ் மீது.. சத்தியம் பண்ணிருக்கேன்..நான் இன்னிக்கி சத்தியமா சிக்கன் சாப்பிடல potato தான் சமைத்தேன் னு சொல்ல..


கூட இருந்தவர்கள் மறுத்தனர்..


இல்லை.. நான் பொய் சொல்லவில்லை என்று சத்தியம் செய்து விட்டு போய்விட்டார் பஞ்சாபி..


மறுநாளும் அதே கதை..கூப்பிட்டு கேட்டா...நான் சமச்சது potato ன்னு பஞ்சாபி சாதித்தார்


என்னடா இது...

மக்கள் complaint பண்றாங்க..

இவரோ ஜீசஸ் மீது சத்தியம் பண்றாரே...

யாரு பொய் சொல்றா னு தெரியவில்லையே என்று சந்தேகத்துடன் பாதிரியார், மறுநாள் அந்த பஞ்சாபி க்கே தெரியாமல்..அவர் கிச்சனில் என்ன நடக்குதுன்னு எட்டி பார்த்தார்..


பார்த்த பாதிரியார் மயங்கி விழுந்து விட்டார்


ஏனென்றால்...


அந்த பஞ்சாபி ஒரு full சிக்கன் ஐ எடுத்து அதை ஒரு பக்கெட் டில் மூன்று முறை முக்கி முக்கி..


இன்றிலிருந்து நீ சிக்கன் இல்லை ..


Potato..

Potato..

Potato..


ன்னு சொல்லிக்கொண்டு இருந்தார்...

Monday, March 28, 2022

உண்மைக்கு எதிராக பொங்கியவர்களுக்காக..

 ஆகச் சிறந்த கவிஞனோ கவிதையோ வேண்டியதில்லை..என் இசைக்குத் தகுந்தார்ப்போல வார்த்தைகளை அடுக்கினால் போதும் என இளையராஜா அவர்கள் சொன்னபோது கோபித்துக் கொண்டவர்களுக்காக...


Sunday, March 27, 2022

நினைவு கூர்வோம்.

 இசை விமர்சகர் சுப்புடு

===================


பெண்கள் சிறப்பு மலர் ஓன்றில் திருமதி D.K.பட்டம்மாள் கச்சேரி பற்றி இப்படி எழுதியிருந்தார்.


என்ன மேதா விலாசம்

என்ன பாடாந்தரம்

எத்தனை உருப்படிகள்

சாகித்ய சுத்தம்

எப்பேர்பட்ட பல் உடைகின்ற சங்கதியையும் ஒரு கை பார்த்து விடுவார் என எழுதினார்.


இவர் சுதா ரகுநாதன், செளம்யா, பாம்பே ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியன், உன்னி கிருஷ்ணன் இவர்களின் ஆரம்ப கால கச்சேரிகளை ரசித்து பார்த்து நம்பிக்கை நட்சத்திரம் என புகழ்ந்தது வீண் போகவில்லை.


இந்த சிறுவன் என்னமா வாசிக்கிறான். இவருடைய பாண்டித்யம் அலாதியானது. என்ன ஒரு மேதா விலாசம். இது போன்ற ஒரு அவதார புருஷனை கண்டதில்லை. எனக்கு விமர்சனம் எதுவும் எழுத முடியவில்லை என மாண்டலின் சீனுவாசனைப் பற்றி எழுதி இருந்தார்.


மேலே கூறியதெல்லாம் இவரா எழுதினார் என பலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.  இவர் வாழ்த்தி கூட எழுதுவாரா என பலர் வியப்படைவார்கள்.


அவர் ஒரு இசை விமர்சகர். திரு P V சுப்ரமணியன் என்கிற சுப்புடுதான் இவர்.


ஒரு முறை திருமதி M L வசந்த குமாரி அவர்களின் கச்சேரிக்கு சென்றிருந்ததைப் பற்றி எழுதி இருந்தார். அரங்கில் தாளம் போட்டு அமைப்பை புரிந்து கொள்ள முயற்சி செய்தார். தாளம் நிற்கவில்லை. சுற்றும் முற்றும் பார்த்தார். முன் வரிசையில் அமர்ந்திருந்த இளம் பெண்கள் அநாசயமாக தாளம் போட்டுக் கொண்டு இருந்தனர். இவருக்கோ சந்தேகம். கேன்டீனுக்கு அவர்களை அழைத்து சென்று சந்தேகத்தை கேட்ட போது விடை பளீச்சென்று வந்தது அந்த இசை கல்லூரி மாணவிகளிடமிருந்து.  இதை சொல்லிக் கொள்ள எனக்கு வெட்கமில்லை என எழுதி இருந்தார்.


சுப்புடு அவர்களின் தேன் போன்ற கருத்துகளும், தேள் போன்ற விமர்சனங்களும் அவருடைய குணாதிசயங்கள்.


காதிலும் கம்மல், குரலிலும் கம்மல்.


கேதாரம் சேதாரம்


சுற்றளவைக் குறைத்தால் உலகை சுற்றி வரலாம்.


இவையெல்லாம் அவரின் trade mark criticism.


சமீபத்தில் இணையத்தில் படித்தேன். இதயம் பேசுகிறது மணியன் அவர்கள் அந்த கால கட்டத்தில் மியூசிக் அகாடமி வாசலில் ஒரு போர்டு வைத்திருந்தார்.


இசைக் கலைஞர்களே உஷார். நமது நகரத்துக்கு சுப்புடு விஜயம்.  (Artists beware Subbudu is in Town).


ஒரு இசைக் கலைஞரை கடம் போன்றும், அதை வாசிக்கும் கலைஞராக சுப்புடு அவர்களையும் கேலி சித்திரமாக வரைந்திருந்தார். 


சினிமா இசைக் கலைஞர்களையும் அவர் விட்டு வைத்தது இல்லை. 


காதலன் படத்தில் என்னவளே என்ற பாடலை திரு A R ரஹ்மான் அவர்கள் இசை அமைத்திருந்தார். திரு உன்னி கிருஷ்ணன் பாடினார். கேதார ராகத்தில் அமைந்த பாடல்.  இதைக் கேட்டு கேதாரத்திற்கு சேதாரம் என எழுதினார்.


புகழ வேண்டிய சமயத்தில் சினிமா கலைஞர்களை புகழவும் இவர் தவறியது இல்லை.  சங்கீத ஜாதி முல்லை பாடலைக் கேட்டு திரு. இளைய ராஜா அவர்களை பாராட்டினார். திரு T  ராஜேந்தர் அவர்களின் தட்டி பார்த்தேன் கொட்டாங்கச்சி பாடலையும் பாராட்டி உள்ளார்.


அதே சமயம் திரு ஜேசுதாஸ் அவர்கள் சுப்புடுவின் விமர்சனத்திற்கு தப்பவில்லை.  நன்றாக தயார் செய்வதில்லை என விமர்சித்தார். திரு ஜேசுதாஸ் அவர்கள் சுப்புடு இருந்தால் பாட மறுத்தார்.


திரு பால முரளி கிருஷ்ணா அவர்களின் புது ராகங்களில் எந்த ஒரு depth உம் இல்லை என கூறினார். இருவருக்கும் உரசலில் ஆரம்பித்தது பின்னர் நட்பாக முடிந்தது.


அந்த காலங்களில் மிகவும் புகழ் பெற்ற சீனியர் ஆர்ட்டிஸ்ட் திரு. செம்மங்குடி. அவரை விடாமல் விமர்சித்து வந்தார்.


செம்மங்குடி ஒரு முறை கூறினார். சுப்புடு என்னை விமர்சித்து எழுத, எழுத என் கச்சேரிக்கு கூட்டம் அதிகமாகிக் கொண்டே போகிறது என்றார்.


சுப்புடுவோ பதிலுக்கு செம்மங்குடி நன்றாக பேசுகிறார். அவர் நல்ல பேச்சாளர் ஆகலாம். கச்சேரி செய்வதை விட்டு விட்டு என பதிலுக்கு கிண்டலடித்தார்.


இதே சுப்புடுவின் தலைமையில் கல்கி அவர்கள் செம்மங்குடிக்கு பாராட்டு விழா நடத்தினார். எல்லோரும் பயந்து கொண்டு இருந்ததற்கு மாறாக அவரை வாழ்த்தி பேசினார்.


கல்கி அவர்களின் அறிமுகமே ஒரு வித்தியாசமான சம்பவத்தால் நடந்தது.


ஒரு சங்கீத வித்வான் பாபநாசம்  சிவன் அவர்களின் பாடலான நீ இரங்காயெனில் புகலேது அம்பா...... பாடலை அடானா ராகத்தில் பாடினார்.


மறு நாள் கருநாடகம் என்ற புனைப் பெயரில் வாசகர் கடிதம் ஒன்றை எழுதினார் ஆனந்த விகடனுக்கு.  வித்வான் ஏன் அம்பாளை இறங்காய் என பாடுகிறார். ஏதோ மரத்தின் மீது இருந்து இறங்க மறுப்பது போல இருக்கிறதே என்று எழுதினார். கடிதத்தை படித்து மகிழ்ந்த கல்கி அவர்கள் யார் இந்த அதிகபிரசங்கி என வியந்து சுப்புடுவை தொடர்ந்து விகடனில் எழுத வாய்ப்பளித்தார்.


சுப்புடு விகடன், கல்கி, தினமணி, தினமணிக் கதிர், ஸ்டேட்ஸ்மென், இதயம் பேசுகிறது இதழ்களில் தொடர்ந்து எழுதினார்.


ரங்கூனில் சுப்புடு அவர்களின் தந்தையார் சிறைத் துறையில் பணி புரிந்தார். இளமைப் பருவத்தில் மியான்மார் (பர்மா) நாட்டில் வளர்ந்தார். உலகப் போர் காரணமாக பாரதம் வந்து, மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார்.


இளம் வித்வான்களுக்கு

இவர் தூண்டு கோல்

முதிய வித்வான்களுக்கு

இவர் துலாக் கோல்


கொன்னக் கோலைக் கூட

குற்றமிருக்கிறதா என்று

குடைந்து பார்க்கும்

கன்னக்கோல்....


இது வாலி அவர்களின் புகழாரம்.


பல இசைக் கலைஞர்களின் எதிர்ப்புகளைச் சந்தித்தவர்.


பல இசைக் கலைஞர்களின் அன்புக்கும் பாத்திரமானவர்.


காரணம்


சமன் செய்து சீர் தூக்கும் கோல் போல 

அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி....


ஆமாம் அவரது விமர்சனங்கள் துலாக் கோல் (தராசு) முனை போன்றது.


சுப்புடு அவர்களின் பாகுபாடு பார்க்காத, விறுப்பு வெறுப்பு இல்லா விமர்சனமும், அவரது இசை ஞானமும், அவரது  விமர்சனம் கடுமையாக இருந்தாலும் பலர் ரசித்தனர்.


அவர் இந்த உலகை விட்டு பிரிந்த போது, அவர் மேல் மாறா பற்று கொண்டிருந்த அன்றைய குடியரசு தலைவர் திரு.அப்துல் கலாம் அவர்கள், மொஹல் கார்டனிலிருந்து, அழகான மஞ்சள் ரோஜா கொத்துகளை , சுப்புடு அவர்களின் உடல் மேல் வைத்து மரியாதை செலுத்தினார்.


அவர் மார்ச் 27, 1917 அன்று பிறந்தார். தனது 90 ஆவது வயதிலே, மார்ச் 29, 2007 அன்று நம்மை விட்டு பிரிந்தார்.


இன்று அவரது பிறந்த நாள்.

நாளை மறு நாள் அவரது நினைவு நாள்.


இன்றும் மியூசிக் அகாடமி போன்ற சபாக்களுக்கு செல்லும் போது, முன் வரிசைகளில் ஜிப்பா அணிந்து, பொக்கை வாயுடன், சிரித்துக் கொண்டு, கச்சேரிகளை கேட்கும் சிலரைப் பார்க்கும் போது, எனக்கு ஏனோ திரு. சுப்புடு அவர்களின் நினைவு வந்து போகிறது.....(வாட்ஸ் அப்பில் வந்த முத்து..)

Friday, March 25, 2022

நல்ல செய்தியைப் பகிர்ந்து மகிழ்வோம்..

 *தமிழக அரசின் தலைமைச் செயலரும், பயிற்சித் துறையின் தலைமை இயக்குநருமான இறையன்பு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அகில இந்திய குடிமைப் பணிகள் (சிவில் சர்வீசஸ்) தேர்வில் முதல்நிலை, முதன்மை தேர்வுகளை எதிர்கொள்ளும் தேர்வர்களுக்கு, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் தமிழக அரசால் நடத்தப்படும் பயிற்சி மையத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது*


*இங்கு 2021-22-ல் முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற்ற 80 பேரில்12 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 3 பேர் தமிழை விருப்பபாடமாக எடுத்து தேர்ச்சி பெற்றவர்கள். தேர்ச்சி பெற்றவர்களில் 2 பேர் பெண்கள், ஒருவர் மாற்றுத்திறனாளி*


*தேர்வர்களுக்கு உண்டு உறைவிடத்துடன் கூடிய தனி அறை வழங்கப்பட்டு, பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. பயிற்சி மையத்தில் இருந்து தேர்வு மையத்துக்கு சென்றுவர, சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டது. அனைத்து தேர்வர்களுக்கும் ஊக்கத் தொகையாக மாதம் ரூ.3,000 வழங்கப்பட்டது*


*தற்போது இம்மையத்தில் தேர்ச்சி பெற்றுள்ள தேர்வர்களுக்கு, பணியில் உள்ள மற்றும் ஓய்வு பெற்ற அகில இந்திய குடிமைப் பணி அலுவலர்கள், தலைசிறந்த வல்லுநர்களால் மாதிரி ஆளுமைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வர்கள் தங்களது ஆளுமைத் தேர்வை சிறப்பாக எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும்*


*இதில் பங்குபெற விரும்புவோர், தங்களைப் பற்றிய விவரங்களை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல், 9444286657 என்ற வாட்ஸ்அப் எண் அல்லது 044-24621909 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மாதிரி ஆளுமைத்தேர்வுக்கான தேதி குறித்தவிவரங்கள். பயிற்சி மைய இணைய தளத்தில் (www.civilservicecoaching.com) விரைவில் வெளியிடப்படும்*


*இந்த மையத்தில் பயின்று தேர்வான தேர்வர்கள் ஆளுமைத் தேர்வுக்கு டெல்லி செல்வதற்கான பயணச் செலவு தொகையாக ரூ.2,000 வழங்கப்பட்டு வந்தது.கடந்த ஆண்டு முதல் இது ரூ.5,000ஆக உயர்த்தி வழங்கப்படுகிறது*

பழனிக்கே பஞ்சாமிர்தம்

 பழனிக்கு பஸ் ஏறினார் ஒருத்தர் சென்னைலேயிருந்து..

கண்டக்டர் சொன்னார்.. போங்க சார்.. இடம் நிறைய இருக்கு போய் உக்காருங்க..


ஆனா அவர் உக்காரவே இல்ல.. பஸ்ல அங்கயும் இங்கயுமா நடந்துட்டே இருந்தார்.. பஸ் செங்கல்பட்டு தாண்டிடுச்சி..

இன்னும் அந்த ஆளு நடந்துட்டு தான் இருக்கார்.

மறுபடியும் கண்டக்டர் சொன்னார்.. என்னங்க ஆச்சு, இத்தன சீட்டு காலியா இருக்கே, எங்கயாவது உக்காரலாமேன்னு..

இல்ல நா உக்காரலன்னு சொல்லிட்டாரு..

விழுப்புரத்துல ஒரு ஹோட்டல்ல வண்டி நிக்க.. சாப்ட எல்லாரும் இறங்கிட்டாங்க, ஆனா இவர் மட்டும் இறங்கல.. கண்டக்டர் திரும்பவும் கேட்டார்..

அதே பதில் தான்..

அடுத்து திருச்சி… திண்டுக்கல்னு.. போய்ட்டு இருக்கு… எல்லாரும் தூங்கி எழுந்துட்டாங்க…

இந்த மனுஷன் நடந்துட்டு தான் இருக்கார்.

ஒரு வழியா… பழனியும் வந்துடுச்சு..

சென்னைலருந்து பழனி வரைக்கும் இவர் உக்காராம நடந்துட்டே தான் இருக்கார்..

கண்டக்டருக்கு ஒன்னும் புரியல… என்னதான் ஆச்சு இவருக்குன்னு.. இன்னொரு பக்கம் ஆர்வமும் கூட.. என்ன சமாச்சாரம்னு கேட்டுடனும்னு.. இறங்கும் போது அவர் கிட்ட கேட்டாரு…

ஏங்க இப்டி காசு கொடுத்து டிக்கெட் வாங்கிட்டு உக்காரமலேயே பழனி வரைக்கும் வந்திங்கன்னு..

அதுக்கு அவர் பதில் சொன்னாரு…


பழனிக்கு நடந்து வர்றதா ஒரு வேண்டுதல்.. அதான் சார்..


🚶‍♂️🚶‍♂️🚶‍♂️🚶‍♂️திருநேல்வேலிக்கே அல்வா *பழனிக்கே பஞ்சாமிர்தம்* என்பது இதுதானோ..😂😀😀(படித்ததில் பிடித்தது)

Monday, March 21, 2022

செய்வோமா...

 // #போப்பாண்டவர் காரபோரேட் சாமியார் இல்லையா? //


'கார்போரேட் சாமியார்கள்'

என்று ஒரு புதிய சொல்லாடல்.


இது இந்துக்களின் எழுச்சியைக்

 கண்டு பொறுக்காத  ஒரு கூட்டம் 

தூண்டி விடுவதை புரியாமல் வழக்கப்படி நம்ம ஆட்களே பேச தொடங்குகிறார்கள். 


கொஞ்சம் திரும்பி பாருங்கள். 


சாமியார்கள் அல்லது குருக்கள் எப்போதும் யாராலாவது 

ஆதரிக்கப்பட்டே வந்துள்ளனர்.


வாடிகனில் இருக்கும் போப்பாண்டவரின் சொத்து யாருக்காவது தெரியுமா ? 


போப்பாண்டவர் காரபோரேட் சாமியார் இல்லையா? 


பிராடஸ்டென்ட் தலைமையான 

சர்ச் ஆஃப் இங்கிலாந்து  (Church of England) தான் இங்கிலாந்தின் மிகப் பெரிய நிலப் பிரபு என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?


அவர்கள் சமீபத்தில் கூட ஸ்பீட் 

வட்டி விடும் கம்பெனி கூட நடத்தினர். ஏசுவின் பெயரால்.


கடந்த நூற்றாண்டின் முதல் 10 வருடம் வரை சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பாவில் எல்லா நாட்டு மன்னரும் போப்பாண்டவரின் பின்னே அவரது சமிக்கையின்படியே ஆண்டனர். 


இஸ்லாத்தை பற்றி 

சொல்லவே வேண்டாம். 


வஹாபிக்களை உலகம் முழுவதும் வளர்க்க சவுதி சுமார் ஒரு லட்சம் கோடிகளுக்கு மேல் கடந்த 30 ஆண்டுகளில் செலவழித்தது.


தொடர்ந்து செலவழிக்கிறது.


சரித்திரத்தை தொடர்ந்து கவனியுங்கள். 


இதெல்லாம் வந்தேறிய 

சமயங்களை பற்றியது. 


நம் இந்து சமயத்தில் மட்டும் என்ன?


ராமாயணம் முதல் ஒளவையார் வரை அரசரின் அரவணைப்பு இல்லாமல் எந்த சாமியார் எந்த புலவர் சமுதாயத்தை வழி நடத்த முடிந்திருக்கிறது?


வசிஷ்ட்டரும், விஷ்வாமித்தரரும் 

யாகம் செய்ய தசரதனிடமே வர வேண்டியிருந்தது.

 

கம்பர் என்ன வெறும் கஞ்சி குடித்து 

கம்ப ராமாயணம் எழுதினாரா? 

சடையப்ப வள்ளலின் ஆதரவு 

தேவைப் படவில்லையா?


வெறும் காவி வேட்டி கட்டி காட்டில் தவமிருப்பவனை சமுதாயம் வணங்கும். ஆனால் அவன் வழி நடக்குமா?  


இருக்கும் 47000 கோவில்களில் 

30000 ஆயிரம் கோவில்களில் ஒரு வேளை பூஜை செய்ய கூட ஆளில்லை.


யார் இதை முன்னெடுப்பது?


ஜக்கியை, ஸ்ரீ. ஸ்ரீ. ரவி சங்கரை திட்டுவதற்கு முன் நீங்கள் இது 

போன்ற ஒரு கோவிலில் ஒரு நாள் உழவார பணியை இலவசமாக செய்திருக்கிறீர்களா?


நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் குறைந்த பட்சம் நம் ஊரில் இருக்கும் ...


ஒரு கோவிலுக்கு வாரம் ஒரு முறை அர்ப்பணிப்புடன் இலவசமாக திருப்பணி செய்ய கிளம்பி இருந்தால் ...


இன்று நம் இறை வழிபாட்டுத் தலங்கள் மட்டும் இந்த நாத்திக அரசுகளின் கையில் சிக்கியிருக்குமா?


சங்கர மடம் கூட பவதி பிக்ஷாந்த் தெஹி என்று நன்கொடை பிச்சை எடுத்துதான் இத்தனை வருடம் வாழ்ந்து வருகிறது.


அது என்ன திமுக வா? ஒவ்வொரு தேர்தலுக்கும் விண்ணப்ப படிவம் 

விற்றே கோடிகளில் காசு அள்ளுவதற்கு?


தஞ்சையிலும் நெல்லையிலும்

இருக்கும் மடாதிபதிகள் தங்களிடம் இருக்கும் பெரும் செல்வங்களை கொண்டு இன்னும் நிறைய தமிழ் 

மற்றும் தெய்வ தொண்டு செய்திருக்க வேண்டும்.  


மாறி வரும் உலகில் நவீன மருத்துவத்தையும் நவீன கல்வியையும் வெள்ளையர் தயவால் தாம் மட்டும் கைக்கொண்டு 


அதன் மூலம் ஒரு பத்து தலைமுறையின் சிந்தனையையே மாற்றி கருத்து அடிமைகளாக வைத்திருக்கும் ...


மாற்று மதத்தினரிடம் இருந்து மீட்டு எடுக்க நாம் அந்த கல்வியையும் மருத்துவத்தையும் கொடுக்க வேண்டும் என்றால் அது

பணம் இல்லாமல் சாத்தியமா?


புட்டபார்த்தி சாய் பாபா அந்த வறண்ட அனந்தபூர் மாவட்டத்தில் கடந்த 50 வருடங்களாக செய்த மாற்றம் வேறு யார் செய்தார்கள்?  


அவர் எழுப்பிய கல்வி கூடங்களும், மருத்துவ சாலைகளும் இன்னும் பல நூறு வருடங்களுக்கு பேசும். 


ஆமாம். இதையெல்லாம் செய்ய 

ஒரு அமைப்பு வேண்டும். அதற்கு 

சில அலங்காரங்கள் வேண்டும். 

மனித மனம் அப்படிப் பட்டது. 


மாயாவியின் ஜாலத்தை நம்பும் 

மனதுதான் நமது.  சூப்பர் மேன் இருப்பதாக 40% நம்பும் கூட்டத்தை கொண்டதுதான் அமெரிக்கா.


எங்கிருந்தோ வந்து ஒரு கூட்டம் 

லட்சம் கோடிகளில் மதத்தின் பெயரால் கொள்ளை அடித்து அன்னை தெரசா அன்று இத்தாலிக்கு அனுப்பிய போது வாயில் விரலை வைத்துக் கொண்ட ...


நாம் பக்கத்தில் மேல் மருவத்தூரில்

ஒரு இந்து சாமியார் குடும்பம் கல்வி கூடங்கள் மருத்துவ மனைகள் கட்டி கொஞ்சம் காசு சேர்த்தவுடன் நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா என்று 

பொங்கி வருவது காமெடி.


அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசின் மூலம் கிடைத்த பணம் இப்போது யாரிடம் சென்றது? என்று கேளுங்கள். தெரியாது. 


அவர் கல்கத்தாவின் ஏழ்மையை 

காட்டி வெளிநாட்டில் நன்கொடையாக திரட்டிய கோடிகள் எங்கே போனது?

என்று கேளுங்கள். தெரியாது. 


என்னைக் கேட்டால் தமிழகம் 

முழுவதும் 30 மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆதி பராசக்தி டிரெஸ்ட் 

போல எழும்பி நின்று அந்தந்த

மாவட்ட தேவைகளை பூர்த்தி 

செய்தால் கூட தவறில்லை.


இங்கு குருடர்களை பார்க்க 

வைக்கிறேன். நொண்டிகளை 

நடக்க வைக்கிறேன் என்று வரும் 

பால் தினகரன் போன்றவர்கள் ...


இங்கு ஏசுவை விற்று அமெரிக்காவில் 1000 கோடி சேர்த்து வைக்கிறார்கள். 


அதை பேச இன்றுவரை 

யாருக்கும் வாயில்லை. 


ஜக்கி சிவராத்திரி கொண்டாடினால் வயிறு கனன்று எரிகிறது. 


ஆமாம். இத்தனை பெரிய நாட்டில்

இப்படி சில நல்லவர்கள் நல்லது செய்ய எழுந்து வரும்போது நாலு பிராடுகளும் வரத்தான் செய்வார்கள். இதில் ஆச்சரியமென்ன? 


இதுவும் உலகெங்கும் நடக்கும் 

விஷயம் தான். 


ஸ்ரீ ராம் சிட் பண்டஸ் போன்ற கம்பெனிகள் இருக்கும் இடத்தில்தான் ஸ்னேகம், ஈஸ்வரி, கேரளா பேஷன் ஜூவல்லரி போன்ற பிராடுகளும் கிளம்பி வந்தனர். 


என்ன செய்ய? 

நாம் எல்லாரும் நல்லவர் இல்லையே!


எல்லா இடம் போல இந்து மதத்திலும் அடிக்கடி தூர் எடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். தவறினால் கசண்டுகள் நிரம்பித்தான் போகும்.


ஆனால் தூர் எடுக்க முதலில் நாம் 

அங்கு தொடர்ந்து இருக்க வேண்டுமே!


எனவே நாம் அனைவரும் 

செய்ய கூடியது ஒன்றே.


அருகிலிருக்கும்  உள்ளூர் கோவிலுக்கு வாரம் ஒரு நாள் சென்று உபயோகமாக 

நற்பணி செய்ய முயலுங்கள். ஒரு நாளைக்கு ஐந்து முறை வேண்டாம்..ஐந்து நாளைக்கு ஒருமுறையேனும்..


மாற்றம் நம்மிடமிருந்து 

தொடங்கட்டும். 


Well Said by Venkatesh Gopala Rao Arcot .

Thank You Sir.

Saturday, March 19, 2022

பகிர்ந்து வைப்போமே..

 🔲♻️🟣*அன்பு உறவுகளே உஷார், வெறும் வார்த்தைகள் .இல்லை. ஆபத்தான போலி வார்த்தைகள்.*


🔲♻️🟣

நீ அழகா இருக்கே, 

உன் கேரக்டர் புடிச்சிருக்கு.


🔲♻️🟣

Friendly-யா பேசுறதுல என்ன தப்பிருக்கு.


🔲♻️🟣

இதெல்லாம் இந்த காலத்துல ரொம்ப சகஜம்.


🔲♻️🟣

சரியான பட்டிக்காடா இருக்கியே.


🔲♻️🟣

Facebook-ல தானே பேசுறாங்க,

சும்மா பேசிப்பாரு.


🔲♻️🟣

என்னது BoyFriend-டே இல்லையா,

எனக்கெல்லாம் ரெண்டு மூணு பேரு இருக்காங்க.


🔲♻️🟣

இந்த காலத்துல எந்த பொண்ணு

தப்பு பண்ணாம இருக்கு.

Teenage-ன்னா அப்படி இப்படி தாம்பா இருக்கும். இதெல்லாம் சகஜம்.


🔲♻️🟣

சீரியஸா

நீ அந்த மாதிரி 

ஒரு வீடியோ கூட பார்த்ததே இல்லையா.


🔲♻️🟣

Friend கூட சினிமா போனா என்ன தப்பு.


🔲♻️🟣

இதெல்லாம் கூடவா வீட்ல சொல்வாங்க.


🔲♻️🟣

சும்மா ஜாலி டிரிப் தானே.


🔲♻️🟣

Hot வேணாம் Beer வேணா லைட்டா சாப்பிட்டு பாரு, ஜூஸ் மாதிரி தான் அது.


🔲♻️🟣

தயவு செஞ்சி வீட்ல மட்டும் சொல்லிடாத

அப்புறம் வெளியவே விடமாட்டாங்க.

எல்லாத்துக்கும் சந்தேகப்படுவாங்க.


🔲♻️🟣

Photo வச்சி என்ன பண்ண போறான், அதெல்லாம் ஒண்ணும் இல்ல அனுப்பு.


🔲♻️🟣

சும்மா லவ் பண்ணி பாரு,

Set ஆனா ஓகே.

இல்லன்னா Breakup பண்ணிடு 

அவ்ளோதானே.

இதுக்கு ஏன் பயப்புடுறே.

Etc etc etc.


🔲♻️🟣

*இவையெல்லாம் வெறும் வார்த்தைகள் இல்லை பொள்ளாச்சியில் நடந்தது போன்ற அத்தனை பாலியல் பிரச்சனைகளும் இது போன்ற சாதாரண உரையாடல்களில்

இருந்து தான் தொடங்குகிறது.

வளர்கிறது. அல்லது தூண்டப்படுகிறது.*


🔲♻️🟣

காமுகர்களைப்பற்றிய போதுமான

விழிப்புணர்வு இல்லாமல் மிக ஆபத்தான

சமூகவலைதளங்களில் உலாவருவதும்,

ஒழுக்கத்தின் மீதான மதிப்பை

இழந்துவிட்டதும், சினிமாவை வாழ்க்கையோடு

பொருத்தி வாழ்வதும், பொறுப்பற்ற வளர்ப்பும்,

பொய் பேசுவதும், தவறை மறைப்பதும்

தாமே தீர்வு தேடுவதும் போன்ற 

பலப்பல காரணங்கள் சேர்ந்து

இரக்கமற்ற நவீன கொடூர இளைஞர்களிடம்

சிக்கி நாசமாக போக காரணமாக இருக்கிறது,


🔲♻️🟣

*எது நடந்தாலும் ஆரம்பத்திலேயே 

பெற்றோரிடம் சொல்லிவிடும் 

பெண் பிள்ளைகள் பெரும்பாலும்

இதுபோன்ற நரகத்தில் சிக்குவதில்லை.*


*இழந்ததை திரும்ப பெற முடியாது, இனி இருக்கின்ற பெண்களாவதுமேலே சொன்ன ஆபத்தான போலி வார்த்தைகளை நம்பி ஏமாறாமல் இருக்க வேண்டும்.*


🔲♻️🟣🔲♻️🟣🔲♻️🟣🔲

Friday, March 18, 2022

தொழிற்நுட்பத்தில் ..பழம்பெருமை



https://view360.in/virtualtour/madurai/

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் படங்கள். இதனை திறந்து படத்தை இடது அல்லது வலது பக்கமாக திரையில் விரலை நகர்த்துங்கள். மிகவும் அருமையாக இருக்கும். அடியில் காணப்படும் பட்டியலில் வேண்டிய கட்டங்களை சொடுக்கி வேறுபட்ட பகுதிகளை பார்வையிடலாம். https://view360.in/virtualtour/madurai/ தொழில்நுட்ப புரட்சியில் மிக அருமையான காட்சி அமைப்பு . நேரிலே சென்றாலும் கூட கோவிலின் அமைப்பை முழுமையாக பார்க்க இயலாது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக அருகில் நின்று பார்ப்பது போல் தோற்றம் அமைந்துள்ளது. கோயிலின் வட்டாரத்தில் உள்ள கட்டப்பட்ட ஆண்டுகள் அதனுடைய வரலாறு ஒலி வடிவிலும் காதுகளுக்கு இன்னிசைகளுடன் கேட்கிறது கோயில் வளாகம் முழுவதும் கண்டு சுவைக்கும் வகையில் இந்த அமைப்பு உள்ளது


தொழில்நுட்ப புரட்சியில் மிக அருமையான காட்சி அமைப்பு .

 

நேரிலே சென்றாலும் கூட கோவிலின் அமைப்பை முழுமையாக பார்க்க இயலாது. இந்த தொழில்நுட்பத்தின் மூலம் மிக அருகில் நின்று பார்ப்பது போல் தோற்றம் அமைந்துள்ளது.

கோயிலின் வட்டாரத்தில் உள்ள கட்டப்பட்ட ஆண்டுகள் அதனுடைய வரலாறு ஒலி வடிவிலும் காதுகளுக்கு இன்னிசைகளுடன் கேட்கிறது கோயில் வளாகம் முழுவதும் கண்டு  சுவைக்கும் வகையில் இந்த அமைப்பு உள்ளது

Tuesday, March 15, 2022

KASHMIR FILES


 The Kashmir Files : படம் பார்த்தாச்சா ! 


மதுரையில் மதுரை மாநகர பாஜக சார்பில் நாளை 16.03.22 மாலை 5.30 க்கு சக்தி தியேட்டரில் இலவச ஷோ நடைபெற உள்ளது 


நண்பர்கள் சிலர் தமிழில் வருமா என்று கேட்டு இருந்தார்கள் ..


சகமனிதர்களின் வலி புரிய மொழி எதற்கு ...

இருந்தாலும் 

 கூட  தமிழில் Subtitle வருது போய் பாருங்க ! 


ஒரு குறிப்பிட்ட மனிதருக்கு ஏன் இப்படி கோர முடிவுன்னு பலமுறை யோசிச்சது உண்டு ..


1990 இல் அவர் கண்டுக்காமல் விட்ட இந்த கொடுமையின் "கர்மா" என்று இன்று புரிகிறது ..


" ஹே ராம் " படத்தில் ஒரு வசனம் வரும் " ராம் நீ சவுத் இந்தியன் , உனக்கு எங்கள் வலி புரியாதுனு "


100% உண்மை ... வலி என்று இதனை சொல்வது  சாதாரண வார்த்தை ..ரணம் ..


உன் வீட்டு பெண்களையும் ,குழந்தையையும் விட்டுட்டு , நீ இந்த இடத்தை விட்டு ஓடி போயிடுனு துப்பாக்கி முனையில் எந்த சவுத் இந்தியன் கேட்டு இருக்கான் ?


அடிபட்ட தீவிரவாதிக்கு துப்பாக்கி முனையில் ரத்தம் கொடுக்க வெச்சு , கொடுத்தவரையே துடி துடிக்க   ..


இன்று எங்கோ உக்ரைனில் நடந்த நிகழ்வுக்கு இங்கே எத்தனை கூக்குரல் ,அதுவும் அரசு இந்த அளவிற்கு உழைத்து மீட்டு எடுக்கும்போதே ..


ஜஸ்ட் 30 ஆண்டுகளுக்கு முன்னாள் ,நாம் இங்கே ஜாலியாக "அஞ்சலியும் ,தளபதியும்" பார்த்து கொண்டு இருந்த போது ஒரு சமூகமே நம் சொந்த நாட்டில் அகதிகளாக இருந்துள்ளார்கள் ..


மத்திய அரசு , மிலிட்டரி ,படைகள் இருந்தும் ?

ஒரு ஆதரவு குரல் ?


இன்று ஏன் வடக்கில் "மோடிஜியை" பலர் கடவுளாக பார்க்கிறார்கள் என்பதற்கும் பதில் கிடைக்கும் ..


ஆர்டிகிள் 370 யை நீக்கி இன்று அங்கே இயல்பு நிலையை கொண்டுவந்தது சாதாரண விஷயம் இல்லை 


JNU போன்ற பல்கலைக்கழகங்களில் உள்ள அர்பன் நக்சல்கள் நாட்டின் மாணவர்களிடையே எப்படி பிரிவினை நச்சை பரப்புகிறார்கள் என்பதை தெளிவாக சொல்கிறது ..


இந்த படத்தை பற்றி பல  மீடியாக்கள்  பேசமாட்டார்கள், பின்ன செப்டிக் டேங்கிற்குள் அவர்களை தள்ளிவிட்டு பிறகு தூக்கி வெளியே  உக்கார வைக்கும் படி வசனங்கள் ..


இந்த படத்தின் டைரக்டர் விவேக் அக்னியோத்தரி : இவரின் காலில் ஏன் பண்டிட்டுகள் விழுந்து நன்றி சொன்னார்கள் என்று இப்போ புரிகிறது ..


நடுநிலைகளுக்கு சுருன்னு உரைக்கும் ...உணர்வு என்று ஒன்று இருந்தால் ...


Must Watch .....


இந்த பதிவை உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பகிருங்கள்

Sunday, March 13, 2022

படித்ததும் பகிரப்பிடித்தது..

 🙏


*

“ நாம்   உயிருடன்  இருக்கும்  வரை,  நம் வாழ்க்கையில்  என்ன செய்ய வேண்டும்  என்று  விரும்புகிறோமே,  அவை அனைத்தையும்  செய்கிறோமா ? “

*

காலம்  தாழ்த்த வேண்டாம்

*

மிகவும்  புத்திசாலியான  டாக்டர் ஒருவர்   இருந்தார்.  அவருடைய  விசேஷமான குணம்  என்னவென்றால்,  அதாவது,  அவர்  எப்போதுமே  புன்சிரிப்போடு  இருப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தார்.     அவர்  ஒரு மகிழ்ச்சியான  டாக்டர்  என்பதை அனைவரும்  அறிவார்கள்.   இறப்பை  நெருங்கிக் கொண்டு  இருக்கின்ற நிலையில் உள்ள  நோயாளி என்றால் கூட,  உயிருடன்  திரும்பவும் கொண்டு வந்து விட முடியும், என்று  இவரைப் பற்றிக் கூறப்படுகிறது.


தன்னிடம்  வருகின்ற நோயாளிகள்,  எல்லோரையும் கடிதம்  ஒன்று  எழுதித் தரும்படி  கூறுவதை தனது வழக்கமாக கொண்டு  இருக்கிறார்.  நீங்கள்  உங்கள்  வாழ்க்கையின்  எஞ்சிய பகுதியை,  எவ்வாறு  வாழப்போகிறீர்கள்;   நீங்கள் உயிரோடு இருந்தால், இப்போது  வாழ்க்கையில்  என்ன செய்ய வேண்டும்  என்று  விரும்புகிறீர்கள்;  அவற்றில் விடுபட்டவை என்னென்ன?  அதை எல்லாம்  இந்தக் கடிதத்தில்  எழுதுங்கள்.


நோயாளிகள்  அனைவரும்  தங்கள் மனதில்  இருப்பதை எழுதினார்கள்.


நான் உயிரோடு  இருந்தால்,   என்னுடைய  அந்த நேரத்தை, எனது  குடும்பத்தினருடன் சேர்ந்து  இருப்பேன்.


என்னால்  முடிந்தவரைக்கும்  என்னுடைய மகன், மகள் மற்றும்  அவர்கள்  குழந்தைகளோடு  விளையாடுவேன்.


நான் என்னுடைய  கணவரையும்,  அவர்  பெற்றோரையும்  மிகவும்  துன்புறுத்தி விட்டேன்.   ஆபரேஷனுக்குப் பிறகு  நான் அனைவரிடமும்  மன்னிப்புக் கேட்டு விட்டு,  அவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக வாழ்வேன்.


சில பேர்,  அவர்களுடைய  இதயத்தின்  உள்ளே இருப்பதை அப்படியே  எழுதினார்கள். 


சில பேர் இப்படியும்  எழுதினார்கள்;  யாராவது  என்னால் வாழ்க்கையில்  துன்பப்பட்டு  இருந்தால், பிறகு  நான் அவர்களிடம்  மன்னிப்புக் கேட்டு  விடுவேன்.


சில பேர் எழுதினார்கள்;   அதாவது  நான் மகிழ்ச்சியை வாழ்க்கையில்  அதிகரிக்கச் செய்வேன்.


வாழ்க்கையில்  யாரையும்  நான் குறை கூற மாட்டேன்;   என்னைப் பற்றி  குறை கூற  அவர்களுக்கு  நான் ஒரு சந்தர்ப்பம்  கொடுக்கவும்  மாட்டேன்.     நான் என்ன செய்தாலும்,  என்னால்,  யாரும்  துன்பம் அடையக் கூடாது,  என்பதில்  நான் கவனம்  எடுத்துச் செய்வேன்.


யாரோ  ஒருவர்  எழுதினார்;  தியானம்  மூலமாக நான் வாழ்க்கையின்  லட்சியத்தை  அறிந்து  கொள்ள  விரும்புகிறேன்.   ஏராளமான  எண்ணிக்கையில்  மக்கள்,  பல்வேறு  வித்தியாசமான  விஷயங்களைப் பற்றி  எழுதினார்கள்.


ஆபரேசனுக்குப் பிறகு  நோயாளிகளை  வீட்டுக்குத் திரும்ப  அனுப்பும் போது,  டாக்டர்,  அவர்கள்   எழுதிய  கடிதங்களை அவர்களிடம்  திரும்பக் கொடுத்தார்.  அவர்களிடம்  கூறினார், “நீங்கள் கடிதத்தில்  என்னவெல்லாம்  எழுதி இருக்கிறீர்களோ,  அதே மாதிரி  செய்யுங்கள்.  இதில் எவ்வளவு  உங்களால் வாழ்வில்  நிறைவேற்ற    முடிகிறது என்பதையும்  பாருங்கள்.   ஒரு வருடம் கழித்து  மீண்டும்  வாருங்கள்;   என்னிடம் கூறுங்கள்;  “ உங்களால்  என்ன செய்ய முடிந்தது,  என்ன மாதிரியான வாழ்க்கையை நீங்கள் வாழ்ந்தீர்கள். “


டாக்டரைப் பொறுத்தவரை  ஆச்சரியப்பட வைக்கும் விஷயம்  என்னவெனில், அதாவது  ஒருவர் கூட, இவ்வாறு  எழுதவில்லை.  அதாவது, “நான் உயிரோடு  மீண்டும்  வந்தால், பிறகு, நான் ஒருவர் மீது பழி தீர்த்துக் கொள்வேன்;  நான் என் பகைவனை  தீர்த்து விடுவேன்;  நான் நிறைய பணம் சம்பாதிக்க  விரும்புகிறேன்;  நான் என்னை மிகவும் சுறுசுறுப்பாக வைத்துக் கொண்டாக வேண்டும்;  பிறரை  விட  நான் வெற்றி  கொண்டாக வேண்டும்;   அதிக அளவு  மரியாதையை  பெற்றிட வேண்டும்.”


ஒவ்வொருவரும் வாழ்க்கையில்  வித்தியாசமான  அணுகுமுறையைக் கொண்டு  இருந்தார்கள்.  அப்போது,  டாக்டர்  அவர்களிடம்  வினா  எழுப்பினார்;   “நீங்கள்  அனைவரும்  ஆரோக்கியமாக இருக்கும் போது இவை எல்லாவற்றையும்  ஏன் செய்ய விரும்பவில்லை;   யார் உங்களை தடுத்து  நிறுத்தினார்கள் ………  இப்போது  உங்களை தடுத்துக் கொண்டு  இருப்பது எது?   இப்போதும்   காலம்  மிகவும் கடந்து விட்டதா?


இதுதான்  மகிழ்ச்சியான டாக்டரின் கதை !!

நாம் ஒரு சில  கணம் எடுத்துக் கொண்டு  நம்முடைய வாழ்க்கையைப் பார்ப்போம்.  நாம் நமது வாழ்க்கையை  எப்படி வாழ வேண்டும் என்பதைப் பற்றி   சிந்திப்போம் …….


இந்த மாதிரியான வாழ்க்கையை  வாழ்வதற்கு  நாம் சற்று முன்னர் தொடங்கியுள்ளோம்.   வாழ்க்கையின்  மகிழ்ச்சி  என்பது  வாழ்க்கை பயணம்  முழுமையாவதில்  மட்டுமே இருக்கிறது.  அப்போது அங்கே  எவ்வித ஆசையும்  இல்லை.   இனியும்  எவ்வித குற்ற உணர்வும்  இல்லை.   அப்போது  நம்மால் கூற முடியும் ……… “நாம் வாழ விரும்பிய  அழகான வாழ்க்கையை நாம்  வாழ்ந்தோம். “


இன்னும்  அதிக  காலம் தாழ்த்தி விடாதீர்கள். !!  

*

🙏

Friday, March 11, 2022

நண்பர் மூலம் கிடைத்த பயனுள்ள தகவல்.

 ஓர் அறிவிப்பு

பிறப்பிலிருந்தே காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர் என்று உங்களுக்குத் தெரிந்தால்.  இப்போது காக்லியர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சையின் கண்டுபிடிப்பால் இந்த ஊனமுற்ற குழந்தையை குணப்படுத்த முடியும்.


 அறுவை சிகிச்சைக்கு கிட்டத்தட்ட 10 முதல் 12 லட்சம் செலவாகும், ஆனால் கவலைப்பட வேண்டாம், இப்போது Rotary club of Bombay Worli, Dist 3141 இன் உதவியுடன், இந்த அறுவை சிகிச்சை மும்பை SRCC மருத்துவமனையில் இலவசமாக செய்யப்படுகிறது.


 தயவுசெய்து மற்ற குழுக்களில் பதிவிடவும், இதனால் செய்தி தேவைப்படுபவர்களுக்கு சென்றடையும்.


 தொடர்புக்கு :-

 ரோட்டரி கிளப் ஆஃப் பாம்பே வோர்லி.

 டிஜி ஆர்டிஎன் ராஜேந்திர அகர்வால்

 9820085149

 அன்புடன்.                                                                                                                                                                                                                                         Rtn  M சதாசிவம் பெருந்துறை ரோட்டரி சங்கம். 9842221051 


🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

Tuesday, March 8, 2022

TNPSC & VAO QUESTION PAPERS

 ✍🏻✍🏻 All TNPSC Exam Original Question Papers in Single Page


📌TNPSC GROUP1, 

📌TNPSC GROUP 2, 

📌TNPSC GROUP 3, 

📌TNPSC GROUP 4, 

📌TNPSC GROUP 7, 

📌TNPSC GROUP 8,

📌VAO Exam Original Question Papers 


2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தேர்வில் கேட்கப்பட்ட அனைத்து ஒரிஜினல் வினாத்தாள்கள் இதில் உள்ளது.  இதனை படித்து தேர்வில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள்.


https://bit.ly/3IgDZqPhttps://www.kalvinews.org/2022/01/tnpsc-exam-previous-year-original.html?m=1


_இந்த பயனுள்ள  செய்தியை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் – யாரேனும் ஒருவருக்காவது  தேர்வில் வெற்றி பெற இவை பயன்படும்._

Monday, March 7, 2022

மகளிர் தின நல்வாழ்த்துகள்..

 


*நமது குழுவின் சார்பாகவும்*

*குழுவில் உள்ள  உறுப்பினர்கள்  சார்பாகவும்* 

*அனைத்து பெண்மணிகளுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துகள்*




மகளிர் தின வரலாறு!


மார்ச்-8, 1857 - அன்று முதல் உலகமெங்கும் மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தினம் மார்ச் மாதம் 8 -ம் தேதி கொண்டாடப்படுகிறது.


ஆனால், அது வந்த வரலாற்றை சற்று பின்னோக்கி பார்ப்போம். வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடந்த பெண்கள், தற்போது வானில் பறந்து கொண்டிருக்கின்றனர் என்றால், அதற்கு வித்திட்ட பல்வேறு போராட்டங்களின் வெற்றியே இந்த மகளிர் தினமாகும். இந்த உலக மகளிர் தினம் கொண்டாடுவதற்கு காரணமான‌ போராட்டத்திற்கான வெற்றிகள் அவ்வளவு எளிதாக கிட்டவில்லை. ஆணாதிக்க சமுதாயத்திலிருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள்தான் இது.


1910-ம் ஆண்டு பெண்கள் உரிமை மாநாடு நடைபெற்றது. இதில் உலகின் பல நாடுளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துகொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு காட்டினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஜெர்மனி நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் கிளாரா செர்கினே, ஒரு தீர்மானத்தை வலியுறுத்தி சிறப்புரை ஆற்றினார். அந்த தீர்மானத்தின் முக்கிய சாரம்சமாக மார்ச் மாதம் 8-ம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த தீர்மானம் நிறைவேறாமல் போனது. இதற்கிடையில், 1920-ம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயிண்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் ரஷ்யாவை சேர்ந்த அலெக்ஸாண்டரா கேலன்ரா கலந்து கொண்டார். அவர்தான் உலக மகளிர் தினத்தை ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி நடத்த வேண்டும் என்று பிரகடனம் செய்தார்.


மார்ச் 8-ம் தேதிக்கும், மகளிருக்கும் என்ன சம்பந்தம் என்று உழைக்கும் கீழ்த்தட்டு பெண் வர்க்கமே அறிந்துகொள்ளாத தினமாகத்தான் இந்த பெண்கள் தினம் இன்று இருக்கிறது. 1789-ம் ஆண்டு ஜூன் 14-ம்‌ தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து, பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர். ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டுமணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் என்று கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்.


1907-ல் தொடக்கம். 1909-ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910-ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911-ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1912-ல் Bread and roses வாசகம், 1914-1916-ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917-ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945 தனி பெண்ணுக்கான உரிமை,  உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம். 1975-1977 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014-ல்  100-க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.


சமீப காலமாகத்தான் இந்தியாவில் மகளிர்                தினம் கொண்டாடப்படுகிறது.

நானும் நேற்று முதல்....

நானும் நேற்று முதல் இந்தப் பரிதாபப் பட்டியலில்..