Monday, March 21, 2022

செய்வோமா...

 // #போப்பாண்டவர் காரபோரேட் சாமியார் இல்லையா? //


'கார்போரேட் சாமியார்கள்'

என்று ஒரு புதிய சொல்லாடல்.


இது இந்துக்களின் எழுச்சியைக்

 கண்டு பொறுக்காத  ஒரு கூட்டம் 

தூண்டி விடுவதை புரியாமல் வழக்கப்படி நம்ம ஆட்களே பேச தொடங்குகிறார்கள். 


கொஞ்சம் திரும்பி பாருங்கள். 


சாமியார்கள் அல்லது குருக்கள் எப்போதும் யாராலாவது 

ஆதரிக்கப்பட்டே வந்துள்ளனர்.


வாடிகனில் இருக்கும் போப்பாண்டவரின் சொத்து யாருக்காவது தெரியுமா ? 


போப்பாண்டவர் காரபோரேட் சாமியார் இல்லையா? 


பிராடஸ்டென்ட் தலைமையான 

சர்ச் ஆஃப் இங்கிலாந்து  (Church of England) தான் இங்கிலாந்தின் மிகப் பெரிய நிலப் பிரபு என்று நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?


அவர்கள் சமீபத்தில் கூட ஸ்பீட் 

வட்டி விடும் கம்பெனி கூட நடத்தினர். ஏசுவின் பெயரால்.


கடந்த நூற்றாண்டின் முதல் 10 வருடம் வரை சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் ஐரோப்பாவில் எல்லா நாட்டு மன்னரும் போப்பாண்டவரின் பின்னே அவரது சமிக்கையின்படியே ஆண்டனர். 


இஸ்லாத்தை பற்றி 

சொல்லவே வேண்டாம். 


வஹாபிக்களை உலகம் முழுவதும் வளர்க்க சவுதி சுமார் ஒரு லட்சம் கோடிகளுக்கு மேல் கடந்த 30 ஆண்டுகளில் செலவழித்தது.


தொடர்ந்து செலவழிக்கிறது.


சரித்திரத்தை தொடர்ந்து கவனியுங்கள். 


இதெல்லாம் வந்தேறிய 

சமயங்களை பற்றியது. 


நம் இந்து சமயத்தில் மட்டும் என்ன?


ராமாயணம் முதல் ஒளவையார் வரை அரசரின் அரவணைப்பு இல்லாமல் எந்த சாமியார் எந்த புலவர் சமுதாயத்தை வழி நடத்த முடிந்திருக்கிறது?


வசிஷ்ட்டரும், விஷ்வாமித்தரரும் 

யாகம் செய்ய தசரதனிடமே வர வேண்டியிருந்தது.

 

கம்பர் என்ன வெறும் கஞ்சி குடித்து 

கம்ப ராமாயணம் எழுதினாரா? 

சடையப்ப வள்ளலின் ஆதரவு 

தேவைப் படவில்லையா?


வெறும் காவி வேட்டி கட்டி காட்டில் தவமிருப்பவனை சமுதாயம் வணங்கும். ஆனால் அவன் வழி நடக்குமா?  


இருக்கும் 47000 கோவில்களில் 

30000 ஆயிரம் கோவில்களில் ஒரு வேளை பூஜை செய்ய கூட ஆளில்லை.


யார் இதை முன்னெடுப்பது?


ஜக்கியை, ஸ்ரீ. ஸ்ரீ. ரவி சங்கரை திட்டுவதற்கு முன் நீங்கள் இது 

போன்ற ஒரு கோவிலில் ஒரு நாள் உழவார பணியை இலவசமாக செய்திருக்கிறீர்களா?


நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வுடன் குறைந்த பட்சம் நம் ஊரில் இருக்கும் ...


ஒரு கோவிலுக்கு வாரம் ஒரு முறை அர்ப்பணிப்புடன் இலவசமாக திருப்பணி செய்ய கிளம்பி இருந்தால் ...


இன்று நம் இறை வழிபாட்டுத் தலங்கள் மட்டும் இந்த நாத்திக அரசுகளின் கையில் சிக்கியிருக்குமா?


சங்கர மடம் கூட பவதி பிக்ஷாந்த் தெஹி என்று நன்கொடை பிச்சை எடுத்துதான் இத்தனை வருடம் வாழ்ந்து வருகிறது.


அது என்ன திமுக வா? ஒவ்வொரு தேர்தலுக்கும் விண்ணப்ப படிவம் 

விற்றே கோடிகளில் காசு அள்ளுவதற்கு?


தஞ்சையிலும் நெல்லையிலும்

இருக்கும் மடாதிபதிகள் தங்களிடம் இருக்கும் பெரும் செல்வங்களை கொண்டு இன்னும் நிறைய தமிழ் 

மற்றும் தெய்வ தொண்டு செய்திருக்க வேண்டும்.  


மாறி வரும் உலகில் நவீன மருத்துவத்தையும் நவீன கல்வியையும் வெள்ளையர் தயவால் தாம் மட்டும் கைக்கொண்டு 


அதன் மூலம் ஒரு பத்து தலைமுறையின் சிந்தனையையே மாற்றி கருத்து அடிமைகளாக வைத்திருக்கும் ...


மாற்று மதத்தினரிடம் இருந்து மீட்டு எடுக்க நாம் அந்த கல்வியையும் மருத்துவத்தையும் கொடுக்க வேண்டும் என்றால் அது

பணம் இல்லாமல் சாத்தியமா?


புட்டபார்த்தி சாய் பாபா அந்த வறண்ட அனந்தபூர் மாவட்டத்தில் கடந்த 50 வருடங்களாக செய்த மாற்றம் வேறு யார் செய்தார்கள்?  


அவர் எழுப்பிய கல்வி கூடங்களும், மருத்துவ சாலைகளும் இன்னும் பல நூறு வருடங்களுக்கு பேசும். 


ஆமாம். இதையெல்லாம் செய்ய 

ஒரு அமைப்பு வேண்டும். அதற்கு 

சில அலங்காரங்கள் வேண்டும். 

மனித மனம் அப்படிப் பட்டது. 


மாயாவியின் ஜாலத்தை நம்பும் 

மனதுதான் நமது.  சூப்பர் மேன் இருப்பதாக 40% நம்பும் கூட்டத்தை கொண்டதுதான் அமெரிக்கா.


எங்கிருந்தோ வந்து ஒரு கூட்டம் 

லட்சம் கோடிகளில் மதத்தின் பெயரால் கொள்ளை அடித்து அன்னை தெரசா அன்று இத்தாலிக்கு அனுப்பிய போது வாயில் விரலை வைத்துக் கொண்ட ...


நாம் பக்கத்தில் மேல் மருவத்தூரில்

ஒரு இந்து சாமியார் குடும்பம் கல்வி கூடங்கள் மருத்துவ மனைகள் கட்டி கொஞ்சம் காசு சேர்த்தவுடன் நீதிடா.. நேர்மைடா.. நியாயம்டா என்று 

பொங்கி வருவது காமெடி.


அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசின் மூலம் கிடைத்த பணம் இப்போது யாரிடம் சென்றது? என்று கேளுங்கள். தெரியாது. 


அவர் கல்கத்தாவின் ஏழ்மையை 

காட்டி வெளிநாட்டில் நன்கொடையாக திரட்டிய கோடிகள் எங்கே போனது?

என்று கேளுங்கள். தெரியாது. 


என்னைக் கேட்டால் தமிழகம் 

முழுவதும் 30 மாவட்டங்களிலும் ஒவ்வொரு ஆதி பராசக்தி டிரெஸ்ட் 

போல எழும்பி நின்று அந்தந்த

மாவட்ட தேவைகளை பூர்த்தி 

செய்தால் கூட தவறில்லை.


இங்கு குருடர்களை பார்க்க 

வைக்கிறேன். நொண்டிகளை 

நடக்க வைக்கிறேன் என்று வரும் 

பால் தினகரன் போன்றவர்கள் ...


இங்கு ஏசுவை விற்று அமெரிக்காவில் 1000 கோடி சேர்த்து வைக்கிறார்கள். 


அதை பேச இன்றுவரை 

யாருக்கும் வாயில்லை. 


ஜக்கி சிவராத்திரி கொண்டாடினால் வயிறு கனன்று எரிகிறது. 


ஆமாம். இத்தனை பெரிய நாட்டில்

இப்படி சில நல்லவர்கள் நல்லது செய்ய எழுந்து வரும்போது நாலு பிராடுகளும் வரத்தான் செய்வார்கள். இதில் ஆச்சரியமென்ன? 


இதுவும் உலகெங்கும் நடக்கும் 

விஷயம் தான். 


ஸ்ரீ ராம் சிட் பண்டஸ் போன்ற கம்பெனிகள் இருக்கும் இடத்தில்தான் ஸ்னேகம், ஈஸ்வரி, கேரளா பேஷன் ஜூவல்லரி போன்ற பிராடுகளும் கிளம்பி வந்தனர். 


என்ன செய்ய? 

நாம் எல்லாரும் நல்லவர் இல்லையே!


எல்லா இடம் போல இந்து மதத்திலும் அடிக்கடி தூர் எடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். தவறினால் கசண்டுகள் நிரம்பித்தான் போகும்.


ஆனால் தூர் எடுக்க முதலில் நாம் 

அங்கு தொடர்ந்து இருக்க வேண்டுமே!


எனவே நாம் அனைவரும் 

செய்ய கூடியது ஒன்றே.


அருகிலிருக்கும்  உள்ளூர் கோவிலுக்கு வாரம் ஒரு நாள் சென்று உபயோகமாக 

நற்பணி செய்ய முயலுங்கள். ஒரு நாளைக்கு ஐந்து முறை வேண்டாம்..ஐந்து நாளைக்கு ஒருமுறையேனும்..


மாற்றம் நம்மிடமிருந்து 

தொடங்கட்டும். 


Well Said by Venkatesh Gopala Rao Arcot .

Thank You Sir.

8 comments:

நெல்லைத் தமிழன் said...

ரொம்ப நல்ல பதிவு.

இந்த மதச்சார்பின்மை கூட்டம், இந்துக்களையும் பாஜகவையும் மட்டுமே பேசுபவர்கள். அவர்களைப் பொருட்படுத்தத் தேவையில்லை.

துரை செல்வராஜூ said...

மனதின் எண்ணங்கள் இந்தக கட்டுரை..

மதுரை ஆதீனத்தார் அவர்கள் மேலை மதங்களின் தாக்கத்தால் விளைந்த கேடுகளை சொல்கின்றார்.. அது ஒரு Fb காணொளி.. ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிகழ்ச்சியில் பேசுகின்றார்கள்..

அதற்கு ஒரு ஆள் கருத்து சொல்கிறான் - நீ பிடித்திருக்கும் மைக் கிறித்தவன் செய்தது..- என்று..

அறிவு என்ற ஒன்று இருந்திருக்குமானால் இப்படி ஒரு கருத்து வந்திருக்குமா?.. மைக்கை ஒன்றும் சும்மா கொடுக்கவில்லையே..

இப்படித்தானே - ரொட்டி மாவுக்கும் பால் மாவுக்கும் விலை போயிருக்கின்றது இந்து சமயம்..

மைக் வருவதற்கு முன்பே இங்கு உண்மையான ஞான உபதேசங்கள் நடை பெற்றிருப்பதும் தாளில் அச்சிடுவதற்கு முன்பே கல்லில் கலை பாடியிருப்பதும் அவனுங்கள் அறிந்திராத உண்மை..

துரை செல்வராஜூ said...

// கல்கத்தாவின் ஏழ்மையை
காட்டி வெளிநாட்டில் நன்கொடையாக திரட்டிய கோடிகள் எங்கே போனது?..//

பாரதத்தின் செல்வங்களைக் கொள்ளையடிக்கத்தானே அராபியனும் ஐரோப்பியனும் வந்தார்கள்!..

துரை செல்வராஜூ said...

ஆலயங்களில் இருந்தும் அறிவுரைகளில் இருந்தும் நம்மை விலக்கியது மெக்காலே என்பவன் வலிந்து அளித்த கல்வி முறை..

இளையோர் கெட்டுக் குட்டிச் சுவராவதற்குக் காரணமும் இதுவே தான்!..

Jayakumar Chandrasekaran said...

மற்ற மதத்தினரை காட்டுவதால் என்ன பிரயோஜனம். அவன் திருடுறான், அதனால் நானும் திருடுவேன் என்பது சரியில்லை. இந்து மதத்தில் சாமியார் என்பது முற்றும் துறந்தவன், மண் ஆசை, பெண்ணாசை, பொன் ஆசை இல்லாமல் வாழ்வதே சாமியார் இலக்கணம். அல்லாமல் கம்பனிகள் உருவாக்கி தலமைப் பதவி வகிப்பதும், லாபம் சம்பாதிப்பதும் அல்ல அவர்களுடைய வேலை. இறை சேவை, மத சேவை செய்வதே அவர்கள் தொழில். ஆகவே கார்பொரேட் சாமியார்கள் என்பது சரி தான். 

காஞ்சி மகா பெரியவர் தான் நல்ல சாமியாருக்கு உதாரணம். ஜக்கி அல்ல. காவி உடுத்தியவர் எல்லோரும் சாமியாராகி விட முடியாது. 

Jayakumar

ஸ்ரீராம். said...

​சபாஷ்...

நெல்லைத் தமிழன் said...

//இந்து மதத்தில் சாமியார் என்பது முற்றும் துறந்தவன், மண் ஆசை, பெண்ணாசை, பொன் ஆசை இல்லாமல் வாழ்வதே சாமியார் இலக்கணம்.// ஜெ கே சார்... அவருக்கும் ஒரு கார்ப்பரேட் இருந்தது, அவரது தேவைகளையோ இல்லை நிர்வாகத்தின் தேவைகளையோ பார்த்துக்கொள்வதற்கு. சாமியார்களுக்கு மண்/பெண்/பொன் ஆசை தேவையில்லை..ஆனால் அவர்கள் நிர்வாகத்திற்கு இவை தேவைப்படுகிறது (மண், பொன்). இதில் விதிவிலக்கானவர்கள், ஒருவேளை இமயமலையில் வசிக்கலாம்.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கட்டுரை.

Post a Comment