Wednesday, July 25, 2018

சில இலக்கணங்கள்

அளவின்றி
சாவதற்காகக்  குடிக்காது
அளவறிந்து
சாகும்வரைக் குடிப்பவன்
குடிக்கத் தெரிந்தவன்

அளவின்றி
வயிறு நிறைக்க உண்ணாது
அளவறிந்து
உயிர்வளர்க்க உண்பவன்
உண்ணத் தெரிந்தவன்

இல்ல விஸ்தீரணம்
இருப்புப் பொருத்து அல்லாது
தேவைப்பொருத்து என அறிந்தவன்
நல்ல குடும்பஸ்தன்

ஆடை வடிவமைப்பு
தன் ஆசைப்படியல்லாது
உடல்   அமைப்புப்பின்படி எனத் தெளிந்தவன்
நல்ல இரசிகன்

மொத்தத்தில் ...

இருப்பதனால்
வாழ்ந்துகொண்டிருக்காது
வாழவதற்காக இருப்பவன்
வாழத்தெரிந்தவன்

எதையும்
எழுதுவதற்காகச் சிந்திக்காது
சிந்திப்பதனால் எழுதுபவன்                சிறந்த எழுத்தாளன்
என்பதைப் போலவும் ...

Tuesday, July 24, 2018

அடைகாத்தல்..

"விடுவி
இல்லையேல்
என்னைக் குறித்து
விசாரம் கொள்

காரணமின்றி
ஆயுள் கைதியினைப்போல்
அடைபட்டுக் கிடக்க
எனக்குச் சம்மதமில்லை "

பிதற்றிக் கொண்டே இருக்கிறது...

இன்னும் முழு வளர்ச்சிக் கொள்ளாத..

அடைபடுதலுக்கும்
அடைகாத்தலுக்குமான
வித்தியாசம் புரியாத...

விரும்பி என்னுள்
நான் இட்டுவைத்த உயிர்க்கரு.

கொக்கரித்துத் திரியும்
புறச் சேவல்களால்
மீண்டும் கருவுறாதபடியும்...

என் கவனச் சூடு
தவறியும் துளியும்
சிதறிவிடாதபடியும்...

நான் அன்றாடம் படும்பாடு..
நிச்சயம் கருவுக்குப் புரிய
சாத்தியமில்லாததால்...

அது பிதற்றிக் கொண்டே இருக்கிறது

 தாய்மைக்கே உரிய
அக்கறையுடனும் அவஸ்தையுடனும்
அதனை அடைகாத்துக் கொண்டிருக்கிறேன்...

இன்றும் எப்போதும்போலவே 

Monday, July 23, 2018

"மந்திரி "எனும் மாயச் சொல்லும்....

பற்பலப் பொருள் தரும் ஒரு சொல்
பலப்பலச் சொற்கள் தரும் ஒரு பொருள்

தமிழுக்கே ஆன சிறப்பு
அது தழிழனுக்குத் தந்தது பெரும் செறுக்கு

ஆனால் இன்று
முரண்பட்ட இரு சொற்கள் தரும்ஒரே பொருள்
இது தமிழுக்கே ஆன அழுக்கு

அது தமிழனுக்குத் தருதே பெரும் இழுக்கு

நம் விருப்பமின்றி நம்மை ஆண்ட
அன்னியனுக்கான
"ஆக்கிரமிப்பாளன் "எனும் சொல்லும்..

நம் வெறுப்புடனேயே கூட
நம்மை விடாது ஆளும்
"ஆட்சியாளன் "எனும் சொல்லும்...

அடிமை நாடு என்பதற்கு அடையாளமாய்
தவறாது அன்னியனுக்குச் செலுத்திய
"கப்பம் "என்னும் வரியும்

நமக்குப் பயன்படாது
சுய நலத்துக்குச் சுருட்டவே எனத் தெரிந்தும் செலுத்தும்
"வரி "என்னும் கப்பமும்

நமக்காக ஆள்வதாக சொல்லியபடி
தனக்காக ஆட்சி செய்பவனுக்கான
"சர்வாதிகாரி "எனும் சொல்லும்

நம் விருப்பப்படியே என முழங்கியபடி
தான் தன் குடும்பத்திற்கென ஆளுவோனுக்கான
"மந்திரி "எனும் மடச் சொல்லும்....

இப்படித் தொடரும் முரண்பட்ட சொற்கள்
ஒரு பொருள் தரும் இந்த அவலத்தை
என்று நம் செயலால் மாற்றப் போகிறோம்

முன்பு போலவே

பற்பல பொருள்தரும் ஒரு சொல் தரும் பெருமையும்
பற்பல சொற்கள்  தந்த ஒரு பொருள் அருமையும்
போதுமென நம் முயற்சியால் ஆக்கப்போகிறோம்

Tuesday, July 17, 2018

கொசுக்கள் உள்ளிருக்கும் கொசுவலை

கொசுக்கள் சூழ்ந்த இடத்தில்
குழந்தையைக் காக்க
கொசுவலைக்  கட்டுதல்
புத்திசாலித் தனமே

ஆயினும்
தெரிந்தோ தெரியாமலோ
கொசுக்களை
உள்ளே விட்டுக்கட்டுதல்
பெரும் மடத்தனமே

அடுக்கு மாடிக் குடியிருப்புகளில்
பாதுகாப்புக் கருதி
காவலர்களை நியமிப்பது
நிச்சயம் அவசியமே

ஆயினும்
வாய்ப்புக் கிடைத்தால் உடல் மேயும்
காமாந்திரர்களை நியமித்தல்
நிச்சயம் பெரும் ஆபத்தே

மக்கள் நலம் பேண
ஜனநாயக வழியில்
தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையே
ஆகச் சிறந்த முறையே

ஆயினும்
இலவசங்களுக்கு மயங்கி
பேராசைப் பேய்களைத் தேர்ந்தெடுத்து
அவதியுறும் நிலைபோலவே

Sunday, July 15, 2018

Useful message ...

If you know anyone in class 11 or 12, & interested in IIT preparation:
The IIT-Professor Assisted Learning (PAL) video lectures for Class XI and Class XII can be accessed on You Tube through the links shown below. Many faculty members from various IITs have contributed to these lectures. Prof. Ravi Soni from the Dept. of Physics, IIT Delhi is the national coordinator and IIT Delhi has coordinated this entire effort with funding from MHRD. Over 600 hours of lectures in Physics, Chemistry, Maths and Biology are available for students.
 Pl. pass on the information to your friends/relatives and their needy children.

Biology: Channel 19
www.youtube.com/channel/UCqiFTyCxFFMAN_lhAzIkdpA/videos
Chemistry: Channel 20
www.youtube.com/channel/UC3Zv0XxBjYlWMjbMv8ODE8Q/videos
Mathematics: Channel 21
www.youtube.com/channel/UCfz4W0rG8HoyyrrK6qNc1rA/videos belonging
Physics: Channel 22
www.youtube.com/channel/UCwNr8peMxn8-Nc2V_RZsRvg/videos

These videos can also be accessed on Doordarshan Freedish DTH. Complete list of videos is available at (Channel 19,20,21 and 22)

www.swayamprabha.gov.in/index.php/ch_allocation

 *Student no need to attend tuitions anymore.. forward to all students..save their money ..stop tuition mafia..*

Saturday, July 14, 2018

பயிற்சியும் முயற்சியும் வளர்ச்சியும்

 (விடா முயற்சியும் தொடர்ப்  பயிற்சியுமே
நீடித்த வளர்ச்சியுடன்நிலையாக
சிகரத்தில் நிற்க வைக்கும்

இந்தப் பாலப் பாடம் அறிந்தால் போதும்
மற்றவை எல்லாம்
தானாய் நிழலாய்த்  தொடரும்

இந்தச் சூட்சமம் அறிந்தோர் அனைவருக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்வதோடு

திறமையும் தகுதியும் இருப்பதால்  தானே
 தலைவர்கள் ஆனோம்

 பின் வீணாய் இன்னும் எதற்கு
இந்த அயற்சித் தரும்கூடுதல்  பயிற்சி
 என நினைப்போர் மட்டும்

 சிந்திக்க ஒரு சிறிய முயற்சி
ஒரு சிறு கவிதையாய்)

அந்த அழகிய ஏரியில்
உல்லாசப் படகில்
பலரும் பயணத்துக் கொண்டிருந்தார்கள்

அதில் நீச்சல் அறிந்தவர்களும் இருந்தார்கள்
 நீச்சல் அறியாதவர்களும் இருந்தார்கள்

 நீச்சல் அறிந்தவர்களின் கண்களும் மனமும்
ஏரியின் அழகில் அதன் குளுமையிலும்
மயங்கிக் களிக்க

அது அறியாதவர்களின்
 மனமும் நினைவும் ஏரியின் ஆழத்தையும்
இதற்கு முன் நடந்த விபத்தையும்
எண்ணியே  கலங்கிக் கொண்டிருந்தது

படகில் பயணம் செய்ய
நீச்சல் பயின்றிருக்க அவசியம் இல்லைதான்

ஆயினும் இரசித்துப் பயணிக்க
நீச்சல் அறிதல் நிச்சயம் அவசியம்

ஆம் எதையும்
வருந்திச் செய்யாது
விரும்பிச் செய்யவும்.
 விரும்பிச் செய்வதைத்
திருந்தச் செய்யவும்

பயிற்சி என்பது நிச்சயம் அவசியம்
.
 இன்றைய அரிமா மாவட்ட பயிற்சிமுகாமில்
கலந்து கொள்ளும் தலைவர் செயலாளர்
பொருளாளர் அனைவருக்கும் மனமார்ந்த 
வாழ்த்துக்களுடன்.

எஸ் வெங்கட சுப்பிரமணியன்
324B3 District  Area coordinator (Madurai )

Tuesday, July 10, 2018

உப்பும் தலைமையும்

இல்லையோ என
உணரும்படியாகக்
குறைவாகப் போடப்பட்ட உப்பும்

அதிகமோ என
உணரும்படியாக
அதிகமாகப் போடப்பட்ட உப்பும்

நிச்சயம்
உணவின் தரம் குறைத்துவிடும் என்பதும்

இருப்பது தெரியாதபடி
மிகச் சரியான அளவில்
இடப்பட்ட உப்பே
உணவின் சுவைக்  கூட்டும் என்பதுவும்

நல்ல சமையற்காரருக்குத் தெரியும்

பொறுப்பில்லையோ என
உணரும்படியாக
ஈடுபாடு இல்லாத தலைமையும்

ஆக்கிரமிக்கிறாரோ என
எரிச்சலூட்டும்படியான
அதிகாரம் காட்டும் தலைமையும்

நிச்சயம்
இயக்கத்தைப் பாழப்படுத்திவிடும் என்பதும்

தன்னைப் பிரதானப் படுத்தாது
அனவரையும் இயங்கவிட்டு
இணைந்து இயங்குவதே
இயக்கத்தை வலுப்படுத்தும் என்பதுவும்

நல்ல தலைவர்களுக்குத் தெரியும்

ஆம் பயிற்சிப் பெற்ற
அனைத்து அரிமாத் தலைவர்களுக்கும்
இது மிகத் தெளிவாய்த் தெரியும்

பயிற்சிப் பெற்றப் பின்
உங்களுக்கும் இது
மிகத் தெளிவாய்ப் புரியும்

( 15/07/2018 இல் நடைபெற உள்ள
 பயிற்சிப் பட்டறையில் கலந்து கொள்ள இருக்கிற
இவ்வாண்டின் தலைவர் செயலாளர் மற்றும்
பொருளாளர் அனைவருக்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள் )

அரிமா.எஸ். வெங்கடசுப்ரமணியன்
அரிமா மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
மதுரை