Tuesday, February 21, 2023

அறிதல் நன்று..

 


அவர் நெல்லை மாவட்டம் பத்தமடை பிறப்பு, அந்தண குலத்தில் குப்புசாமி என 1887ல் பிறந்தார்.  வறுமையுற்ற குடும்பம் என்றாலும் அவர் படிப்பில் கெட்டிக்காரர், அதனால் அந்நாளைய மருத்துவபடிப்பினை தஞ்சாவூரில் படித்தார்


அவரின் தந்தையின் மரணம் அவரை வறுமையில் தள்ளி 1915 களில் மலேய நாட்டுக்கு தள்ளிற்று


அது மலேயாவின் ரப்பர் தோட்டம் ஆதிக்கம் செலுத்திய காலம், அந்நாட்டில் பெரும் தொழிலாளர்களை குவித்த வெள்ளையன் அவர்களுக்காக மருத்துவர்களையும் குவித்திருந்தான், ஓயா மழை கொட்டும் ரப்பர் எஸ்டேட்டுகளில் ,காடுகள் நிறைந்த அத்தேசத்தில் நோய் இயல்பானது பல விஷயங்களுக்கு தரமான மருத்துவர்கள் தேவையாய் இருந்த காலமது


அப்பொழுதுதுதான் குப்புசாமி அங்கு பணியாற்றினார், மலேய தோட்ட தொழிலாளர்களில் இந்தியாவில் பொருளாராதார ரீதியாக ஒடுக்கபட்ட மக்கள் அதிகம்


இந்தியாவில் சாதிகொடுமை என பலரை வைத்து தூண்டிவிட்ட வெள்ளையன் அம்மக்களை இலங்கை தேயிலை தோட்டம், மலேய ரப்பர் தோட்டம் , தென்னாப்ரிக்க சுரங்கம் போன்ற பல கடினமான வேலைக்கு வஞ்சகமாக அழைத்து வந்திருந்தான்


ஆம் தமிழகத்தில் விவசாய கூலிகளாக இருந்த அவர்களை சிலரை வைத்து தூண்டிவிட்டு தனக்கு அடிமையாக அவன் தூக்கி சென்ற தந்திரம் அது


குப்புசாமி மலேயாவின் மிக சிறந்த மருத்துவராக மின்னினார் அவர், பெரும் பட்டமும் பதக்கமும் அவரை தேடி வந்தது, மிகபெரிய மருத்துவ கலாநிதியாக அவர் கொண்டாடபட்டார்


எவ்வளவு பெரும் சென்றாலும் அவர் மனதில் ஒரு இரக்கம் இருந்து கொண்டே இருந்தது, அதுதான் தெய்வத்தின் குரல்.


மலேயாவில் எஸ்டேட் கூலிதொழியான பெண்ணின் பிரசவத்தில் உதவி மிக கடினபட்டு தாயினையும் சேயினையும் இருநாட்கள் போராடி காத்தார் அந்த குப்புசாமி


உயிர் பிழைத்த குடும்பம் அவர் காலில் விழுந்து நன்றி சொல்லிற்று, அந்த நன்றியில் தெய்வத்தை உணர்ந்தார் குப்புசாமி


ஆம், ஒருவனின் மனம் எதையெல்லாமோ தேடும், தேடி தேடி ஓடும். தேடியதை அடைந்தபின் அந்த உச்சியில் ஒரு தருணம் அவன் மனம் கடவுளை தேடும், இதற்கு மேல் என்ன உண்டு என நினைக்கும் நொடியில் அந்நேரம் இறைவன் உண்டு என்பது தரிசனமாகும்


சிந்தை என்பது ஆன்மாவினை தொடும்பொழுது ஆன்மாவும் சிந்தையும் புத்தியும் சரியாக சந்திக்கும்பொழுது அந்த விழிப்புநிலை உருவாகும்


அந்த ஏழை குடும்பத்தின் நன்றி கண்ணீர் அவருக்குள் இருந்த இறைதன்மையினை உசுப்பிவிட்டது, "சாமி நீங்க தெய்வமய்யா" எனும் அந்த வார்த்தை அவரை உருக்கிற்று


ஆம் அந்த பிரசவம் கடினமானது, அக்குழந்தையும் தாயும் தன்னை மீறிய ஒரு சக்தியால் பிழைக்கவைக்கபட்டனர் என்பதை உணர்ந்த குப்புசாமி மனம் முழுக்க மருத்துவம் மீறி தெய்வம் நிரம்பிற்று


மலேய நாட்டில் ஒரு ஏழை குடும்பத்துக்கே இவ்வளவு உதவி தேவைபட்டால் இந்தியாவில் எவ்வளவு பெரும் உதவி தேவையாயிருக்கும் என எண்ணினார், விளைவு சேவையில் இறைவனை காணலாம் என்ற மனம் அவருக்கு வந்தது


இன்னும் அவரின் சிந்தனை நீண்டது, மருத்துவம் நோயினை மட்டும் தீர்க்கின்றது ஆனால் மனம் சம்பந்தமான சிக்கலை, வாழ்வியலின் பல தீர்வுகளை அதனால் சொல்லமுடிவதில்லை


அந்த பெண்மணியும் குழந்தையும் பிழைத்தது தன்னாலோ தன் மருத்துவத்தாலோ அல்ல என நம்பினார், பிரபஞ்சத்தின் ஒரு பெரும்சக்தி அந்த அதிசயத்தை தன்மூலம் செய்ததாக உணர்ந்தார்


ஆன்ம பலமே உண்மையான மருத்துவம் என்பதை அந்நொடியில் தெரிந்து கொண்டார்


மனம் முக்கியம், ஆன்மபலம் முக்கியம் அதுதான் அடிப்படை மருத்துவம், அது படிப்பால் வராது ஆங்கில ஆராய்ச்சியால் வராது. பாரத பண்பாட்டின் ஆன்மீகத்தால் மட்டும் மீட்டெடுக்க முடியும் என்பதை உணர்ந்தார்


அவரின் மனம் ஆன்ம பலம் ,யோகா, தியானம் என இறைநிலையை நோக்கிய பயணத்தைத் துவக்கியது


"தன்னலமற்ற தொண்டே ஆன்மிக வாழ்வின் அடிப்படை. அதன் மூலம் உள்ளத் தூய்மையும், அதனால் யோகமும், வேதாந்த ஞானமும், இறுதியில் ஆத்ம அனுபூதியும் பெறலாம்" என அவர் மனம் சொல்லிற்று


தன் டாக்டர் தொழிலை உதறினார், கோட்டும் ஸ்டெஸ்கோப்பும் அகன்றது காவியும் ருத்திராட்சமும் கழுத்தில் ஏறியது, ஆயினும் மனம் நிலையின்றி தவித்தது


ஆம் நிலையில்லா மனம் என்பது நதி கடலை தேடி ஆரவாரமாக ஒடுவது போல் பொங்கி கொண்டே இருக்கும் , ஞானம் அடையும் வரை அது அடங்காது


தன் மனதை அடக்க ரிஷிகேஷம் சென்றார் குப்புசாமி அல்லது விதி இழுத்து சென்றது,பல நாள் பட்டினி கிடந்தார், வீதியில் உறங்கினார், பிச்சைகார கோலத்தில் ஞானம் தேடினார்


அந்த தேடலில் மகான் விஸ்வானந்த சரஸ்வதியினை சந்தித்தார், அவர் இவரை எதிர்பார்த்து இருந்தவர் போல அழைத்து தீட்சை கொடுத்து


ஞானத்தை ஞானமே அடையாளம் கண்டுகொள்ளும் என்பது போல அந்த விஸ்வானந்தர் இவருக்கு சிவானந்தர் எனும் பட்டமும் கொடுத்து மன்னனிடம் சொல்லி ஒரு காணிநிலமும் கொடுத்து ஆசிரமம் அமைத்தார்


அப்படித்தான் சிவானந்தாவின் ஆஸ்ரமம் தொடங்கியது, மெல்ல மெல்ல அவரின் ஆன்மீக மருத்துவ சேவை உள்ளிட்டவை தொடர்ந்தன‌


ஒரு கட்டத்தில் 100 பணியாளர்கள் கொண்ட மருத்துவ ஆஸ்ரமம் எழுந்தது, அதில் தொழுநோயாளி முதல் எல்லா நோயாளிகளும் பராமரிக்கபட்டனர்


ஆம் சிவானந்த சுவாமிகளே இந்தியாவில் ஏழை தொழுநோயாளிகளை மருத்துவரீதியாக அரவணைத்த மகான், தெரசா இவருக்கு பின்னால் வந்தவர் அதுவும் மதம் மாற்ற வந்தவர்


இந்தியாவின் சொந்த மக்களுக்கான தொழுநோய் மருத்துவமனையினை தொடங்கியது இந்து சன்னியாசிதான்


இதில் விஷேஷமான செய்தி என்னவென்றால் சுவாமியின் ஆஸ்ரமத்தில் நோயாளிகளாக‌ இஸ்லாமியர் இருந்தார்கள், பவுத்த மக்கள் இருந்தார்கள், ஆனால் யாரையும் அவர் மதம்மாற்றவில்லை


இஸ்லாமியர் தொழுகை நடத்த கூட இடம் ஒதுக்கி கொடுத்திருந்தார்


ஆம் உண்மையான பாரத ஆன்மீக மனிதநேயம் எதுவோ, சனாதனதர்மம் சொன்ன தத்துவம் எதுவோ அதை அப்படியே பின்பற்றினார், ஒரு இடத்திலும் மததுவேஷமோ இல்லை வன்மமோ அவர் காட்டியதில்லை, பழுத்த ஞானம் என்பது அதுதான்


நாள் செல்ல செல்ல அவருக்கு இறை அனுபவம் கூடிற்று, இறையருள் அவரை நடத்திற்று, எப்படியெல்லாமோ ஆச்சரியங்கள் நிகழ்ந்தன‌


அவர் ஆசிரமத்தில் அனுதினமும் பக்தர்கள் அலைமோதினர், அதில் பிள்ளையில்லாமல் வருந்திய தம்பதியும் ஒன்று


ஒருநாள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட பெண்ணோருத்தி சாமியின் சீடர்களால் காப்பாற்றபட்டு அவரிடம் கொண்டுவரபட்டார்கள், அவள் தொலைதூரத்தில் இருந்து வந்தவள், அவள் சாக துணிந்த காரணம் மணமாகாமல் கர்ப்பம் தரித்தது


சுவாமி அவளை திட்டவில்லை, கர்ப்பம் கலைக்க சொல்லவில்லை, அவளை பெற்றோரிடமும் அனுப்பவில்லை, அனுப்பினால் என்னாகும் என்பது சுவாமிக்கு புரிந்தது


அவள் அங்கேயே தங்க வைக்கபட்டாள் குழந்தை பிறந்ததும் குழந்தை இல்லா தம்பதியிடம் அக்குழந்தையினை ஒப்படைத்துவிட்டு அப்பெண்ணின் வழியில் அவளை போக சொன்னார்


சுவாமியின் காலில் விழுந்து இரு பெண்களும் அழுதனர், சுவாமி நிதானமாக சொன்னார்


"ஒரு உயிரை காத்து இன்னொரு உயிரிடம் ஒப்படைக்க‌ இறைவன் என்னை பயன்படுத்தினான் அவ்வளவுதான்"


சிவானந்த சாமியின் புகழும் அவரின் ஞானமும் அது கொடுத்த போதனையும் ஏராளம், ஏகபட்ட புத்தகங்களை எழுதினார், உலகெல்லாம் அவர் மடம் கிளைகளும் திறந்தது


இன்று சுமார் 300 கிளைகளுடன் மிகபெரிய தொண்டு நிறுவணமாக அது வளர்ந்தும் நிற்கின்றது


அந்த இளைஞன் 1962ல் ரிஷிகேஷில் விரக்தி நிலையில் இருந்தான், ஒல்லியான உருவமும் குள்ள வடிவமும் கொண்ட அவன் கண்களில் நீர்வழிய சுவாமி முன் நின்றிருந்தான்


அவனையே உற்று நோக்கினார் சுவாமி, அந்த இளைஞன் கண்ணீர் விட்டு சொன்னான், "சுவாமி நான் ஏழை மீணவ வீட்டு மகன், நன்றாக படித்து பைலட்டாக வேண்டுமென கனவு கண்டேன், படித்தும் முடித்தேன்


ஆனால் பைலட் தேர்வில் என்னை நிராகரித்துவிட்டார்கள், நான் அதற்கு தகுதி இல்லையாம், இனி நான் என்னாவேன் என எனக்கே தெரியவில்லை" என மனமுடைந்து நின்றான்


புன்னகைத்த சுவாமி சொன்னார் "நீ படைக்கப்பட்டது விமான ஓட்டியாவதற்கு அல்ல. வேறு எதற்காகவோ நீ படைக்கப்பட்டிருக்கிறாய். அதை நோக்கிச் செல். காரணங்களின்றி இங்கு எதுவும் நடக்காது"


அவரிடம் ஆசீர்வாதம் வாங்கிய அந்த இளைஞன் பின் தீவிரமாக உழைத்து ஏவுகனை விஞ்ஞானியாகி பாரதத்தின் குடியரசு தலைவனுமானான்


அவர்தான் அப்துல் கலாம்


ஆம், வாழ்வில் தோல்வினையே பெற்று தத்தளிக்கும் ஒவ்வொருவரும் நினைவு வைக்க வேண்டிய வரிகள் சுவாமியினுடவை


படைக்கபட்ட நோக்கத்தை நோக்கியே ஒவ்வொருவானையும் இழுத்து செல்லும் காரியத்தின் பெயர்தான் தோல்வி, இதை ஞானிகளின் கண்கள் அறியும்.


சிவானந்தர் இந்தியாவின் மிகபெரும் யோகி, அதுவும் விஞ்ஞான கல்வி கற்றுவிட்டு அதெல்லாம் பணம் சம்பாதிக்கும் விஷயம் மட்டுமே, வாழ்க்கைக்கு உண்மையன தேவை ஆத்ம தெளிவு, ஆன்ம பலம் கொடுக்கும் ஆன்மீகம் என உணர்ந்து நின்றவர்


சுருக்கமாக சொன்னால் தன்னை அறிந்தவர்


எத்தனையோ லட்சம் மக்கள் அவரால் கல்வி, மருத்துவம், ஆன்மீக தெளிவு என பலன் பெற்றனர், இன்னும் பெற்று கொண்டே இருக்கின்றனர்


ஒவ்வொருவர் வாழ்வும் அதன் நோக்கில் நல்லபடியாக செல்ல, அவர்கள் பிறந்த கடமையினை சரியாக செய்ய இடையூறுகளை நீக்கி வழிகாட்டினார் சுவாமி, இன்றும் அவரின் ஆஸ்ரமம் அதை தொடர்ந்து செய்கின்றது

அந்த நெல்லை பிறப்பு பாரதி போல தனித்துவம் மிக்கது, தொழுநோயாளிகளை தொட்டு அரவணைத்த உன்னத கரங்கள் அவருடையது


ஆனால் தெரசாவுக்கு இருந்த விளம்பரமும் உலகளாவிய கொண்டாட்டமும் பாரத ரத்னா போன்ற விருதுகளும் ஏன் சுவாமி சிவானந்தாவுக்கு இல்லை


அதுதான் இங்கு இந்து யோகிகள் அவர்கள் நடத்தும் தொண்டு நிறுவணங்களெல்லாம் வெளியே தெரிய கூடாது எனும் கள்ளதனம், மிகபெரிய மோசடி


அதுதான் நெல்லை பிறப்பான அந்த உத்தம சத்திய ஞானவானை ஏன் மறைத்தது?


ஆம் நெல்லையில் பாரதி தவிர ஏகபட்ட பிம்பங்கள் உண்டு, பொதுநல பித்தர்கள் உண்டு. தன் ஆஸ்தி கொடுத்து பாலம் கட்டிய சுலோச்சன முதலியார் முதல் பெரும் மருத்துவ வாழ்வினை உதறி தள்ளி தொழுநோய் ஆசிரமம் அமைத்த ஞானி சிவானந்தர் வரை பலர் உண்டு


ஆனால் தமிழரில் யாருக்காவது இவர்களை தெரியும்?


அல்பேனியாவில் இருந்து வந்த தெரசாவினை தெரிந்த அளவு, மானிட நேயத்தில் உண்மையான பாரத மரபில் இங்கு தொழுநோயாளிகளை அரவணைத்த சுவாமி சிவானந்தா பற்றி யாருக்கும் தெரியாது


வெறும் வாக்கும் அரசியலும் இங்கு மாற்றத்தை கொண்டுவராது, மக்கள் மனம் மாற வேண்டும், இங்கு நடந்த பெரும் மோசடிகளை அவர்கள் உணரவேண்டும், தங்களின் அடையாளமும் பெருமையும் மறைக்கபட்டு அதன் மேல் கட்டபட்ட போலி பிம்பங்களையும் அவர்கள் உணர்தல் வேண்டும்.


அப்படி உணரும் பட்சத்தில் இங்கு மாற்றம் தானாக வரும், வந்த மாற்றம் நிலைத்தும் நிற்கும்


இம்மாதிரி மகான்களை என்று தேசம் கொண்டாட தொடங்குமோ அப்பொழுதுதான் இத்தேசம் இன்னும் வேகமாக தன்  பொற்காலத்தை எட்டும்


Stanley Rajan


இனியேனும் இருக்கும் போதே...

 நல்லவர்..

வல்லவர்..

மனித நேயமிக்கவர்..

எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்தவர்..

பலரது பசியையும் ஆற்றியவர்..

இளகிய மனம் கொண்டவர்..


என்றெல்லாம் இன்றைக்கு புகழுகின்ற ஒருவர் கூட, 


அந்த மனிதர் விருகம்பாக்கம் சட்டமன்ற தேர்தலில் (2021) சுயேச்சையாகப் போட்டியிடுகின்ற பொழுது..


மயில்சாமி மிகவும் நல்ல மனிதர் என்று கூறி..


அவருக்காக வாக்கு கேட்கவில்லை..


அவருக்கு ஆதரவாக ஒரு அறிக்கைக்கூட விட்டதில்லை..


தேர்தல் செலவுகளுக்காக எதுவும் கொடுத்ததில்லை..


நானிருக்கிறேன் நண்பா..வா.. களமாடலாம் என்று ஒருவர்கூட பிரச்சாரத்திற்குப் போனதில்லை..


கேவலம்.. ஒரே ஒரு பேஸ்புக் பதிவுகூட அவருக்காக அந்தத் தேர்தலில் யாரும் ஆதரவாக எழுதி நான் பார்த்திருக்கவில்லை..


அவருக்கு யாரும் வாக்களிக்கவும் இல்லை..


அந்தத் தேர்தலில் அவர் பெற்ற வாக்குகள் வெறும் 1,440..இத்தனைக்கும் அந்த தொகுதிக்குதான் மயில்சாமி விழுந்து விழுந்து பேரிடர் காலங்களில் உதவினார்.. அதைவிட, நம் மக்கள் எதைப் பார்த்து வாக்களிக்கிறார்கள் என்பதும் புரியாத புதிராகவே இருக்கிறது. அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்கள் என்று நினைத்துதான், எத்தனையோ புதுமுகங்கள் காலடி எடுத்து வைக்கிறார்கள்.. ஆனால், நல்லது செய்துவிட்டு அதன்பிறகு அரசியலுக்கு வந்த மயில்சாமிக்கே இந்த நிலைமை என்றால்?!!இன்று அவர் மரணத்திற்குப் பிறகு.. 


மைக் பிடித்து அழுவது..


உருகி உருகி பதிவு போடுவது..


ஆளுயர மாலை கொண்டு வந்து போடுவது..


என்று செய்வது எல்லாம் சரிதான்..


ஆனால்..


அது எதுவும் அவருக்குத் தெரியாது..


அதையெல்லாம் அவர் பார்க்கவும் முடியாது..


இதுதான் வாழ்க்கை..


இவ்வளவுதான் வாழ்க்கை..


இனியாவது..


மனிதர்களை.. அதிலும் பிறருக்கு உதவி செய்து வாழும் நல்லவர்களை


அவர்கள் இந்த பூமியில் வாழும் போதே

கொண்டாடப் பழகுங்கள்..


வாழ்க்கை மிகவும் புதிரானது..


இருந்தாலும்... மறைந்தாலும்... பேர் சொல்ல வேண்டும்.


லயன் ராமர்🙏🙏🙏

Friday, February 17, 2023

இவர் எதனால் இன்னும் ..வாழ்ந்து கொண்டிருக்கிறா..

 எம்.ஜி.ஆர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்தமான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.


ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட் கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோ வில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார்த்து, ‘‘அண்ணே, குடிக்க கொஞ்சம் தண்ணி’’ என்று கேட்டார். அதற்கு அப்பன் எரிச்சலுடன், ‘‘இருய்யா, பெரிய நடிகர்களுக்கு ஜூஸ் கொண்டுபோறேன். நீ வேற’’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின்னரும் எம்.ஜி.ஆருக்கு அவர் தண்ணீர் கொண்டுவரவில்லை.


சில ஆண்டுகளில் எம்.ஜி.ஆர். தமிழ்த் திரையுலகின் நம்பர் ஒன் கதாநாயகனாக உயர்ந்ததோடு, அதே நெப்டியூன் ஸ்டுடியோவையே விலைக்கு வாங்கி அதற்கு தன் தாயின் பெயரை வைத்தார். எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுக் காமல் அலட்சியப்படுத்திய பணியாளர் அப்பன், அதே ஸ்டுடியோவில்தான் பணியாற்றி வந்தார். அவ ருக்கு இப்போது எம்.ஜி.ஆர். முதலாளி!


ஸ்டுடியோவில் அப்பனைப் பார்த்த எம்.ஜி.ஆர்., அவரை அருகில் அழைத் தார். பழைய சம்பவங்கள் மனதில் ஓட, ‘வேலை போச்சு’ என்ற நினைப் புடன் கண்கலங்கியபடியே கும்பிட்ட வாறு எம்.ஜி.ஆரிடம் வந்தார் அப்பன். ‘‘உங்களுக்கு எவ்வளவு சம்பளம்?’’ என்று எம்.ஜி.ஆர். கேட்டார். ‘‘இரு நூறு ரூபாய்’’ பலவீனமான குரலில் அப்பனிடம் இருந்து பதில் வந்தது.


‘‘இந்த மாதம் முதல் உங்களுக்கு நானூறு ரூபாய் சம்பளம்’’ என்று அப்பனின் தோள்களைத் தட்டி புன்முறுவலுடன் கூறிய எம்.ஜி.ஆரின் கால்களில் விழுந்து அழுதார் அப்பன். அவரைத் தூக்கி அணைத்தபடி தேற்றினார் எம்.ஜி.ஆர்.!


- தி இந்து .

Wednesday, February 15, 2023

இடைத்தேர்தலும் மக்கள் மனோபாவமும்..

 


முன்பு

பதவிக் காலம் முடியும் முன்

மக்கள் பிரதிநிதிகள் இறந்தால்

அவர்கள் குடும்பத்தாரைப் போலவே

மனம் கலங்கிய காலம் ஒன்று இருந்தது


அவர்கள் குடும்ப வாரீசுகள்

எவரேனும் போட்டியிட்டால்

அனுதாப ஓட்டுக்களால் மிக எளிதாக

வெல்லும் காலம் என்றும் இருந்தது


இன்று

எப்படியும் வென்றாக வேண்டும்

என்கிற முனைப்பில் வெறியில்

ஆளும் கட்சிகள் அள்ளி இறைக்கும்

பணத்தைப் பார்க்கையில்....


எப்படியும் தோற்க வைக்க வேண்டுக்

என்கிற நோக்கில் அதற்கு இணையாக

எதிர்கட்சிகள் செய்யும்

அட்டகாசங்களைக் கவனிக்கையில்...


மெல்ல மெல்ல

பிறதொகுதி மக்களின் மனோபாவமும்

மாற்றம் கொள்ளத் துவங்குகிறது

நலமாக இருக்கும் தங்கள் பிரதிநிதியை

கொஞ்சம் ஆற்றாமையோடு பார்க்கிறது


இருக்கையில்

தொகுதிக்கு ஏதும் செய்ய இயலாவிட்டாலும்

இதுபோல் இடையில் போயாவது

தொகுதி மக்களுக்கு நனமை செய்ய மாட்டாரா என

ஏக்கப் பெருமுச்சு விடுகிறது


எனவே......

பெருமூச்சு மெல்ல மெல்ல

ஆசையாக மாறாதிருக்கவாவது

வேண்டுதலாக ஆகாதிருக்கவாவது.....                                                                                                           அதன் தொடர்ச்சியாய்                                                                                                                                         இனி இடைத்தேர்தலே இல்லை என்று                                                                                                           ஆகித் தொலைப்பதற்காகவாவது...                                                                                                               அடக்கி வாசிக்கப் பயில்வோமா.....                                                                                                                 இடைத்தேர்தலை போர்க்களமாகக் கருதாது                                                                                               போட்டித் தேர்வாகக் கொள்வோமா...


Monday, February 13, 2023

இனியேனும் அளவுகோலை மாற்றாதிருப்போம்

 முன்பெல்லாம்

குடிகாரன் தீயவனாகத் தெரிந்தான்


இப்போது எல்லோரும் குடிப்பதால்

குடித்து கலாட்டா செய்பவன் மட்டுமே

தீயவனாகத் தெரிகிறான்


குடித்தும் அமைதியாக இருப்பவன்

நல்லவனாகத் தெரிகிறான்


எனவே இந்த நல்லவன் பட்டியலில்

குடிக்காதவனுக்கு இடமே இல்லை


முன்பெல்லாம்

கையூட்டுப் பெறுபவன் 

மோசமானவனாகத் தெரிந்தான்


இப்போது எல்லோரும் கையூட்டுப் பெறுவதால்

கையூட்டுப் பெற்றும் காரியம் முடிக்காதவனே

மோசமானவனாகத் தெரிகிறான்


கையூட்டுப் பெற்று காரியம் முடிப்பவன்

சிறந்த நிர்வாகி ஆகிப் போகிறான்


இந்தச் சிறந்தவன் பட்டியலில்

கையூட்டுப்பெறாதவனுக்கு வாய்ப்பே இல்லை


முன்பெல்லாம்

அரசியலில் ஊழல் செய்பவன் மட்டுமே

மோசமானவனாகத் தெரிந்தான்


இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாருமே

ஊழல் வாதிகளாக இருப்பதால்

பிடிபடுபவன் மட்டுமே

மோசமானவனாகத் தெரிகிறான்


பிடிபடாது ஊழல் செய்பவன்

அரசியல் சாணக்கியன் ஆகிப் போகிறான்


இந்த சாணக்கியன் பட்டியலில்

ஊழலற்ற அரசியவாதிக்கு சம்பந்தமே இல்லை


அளவுகோலை நிலையானதாக வைத்து

பொருட்களை எடைபோட்ட காலம் மாறி


பொருளுக்கு ஏற்றார்ப்போல

அளவுகோலை மாற்றும் நம் மனோபாவம்

தொடர்கிறவரையில்.......


இனி வரும்காலங்களில்

குடிக்காதவன் தீயவனாகிப் போகவும்

கையூட்டுப் பெறாதவன் மோசமானவனாகிப் போகவும்

ஊழல் செய்யாதவன் அரசியலுக்கு

இலாயக்கற்றுப் போகவுமே

அதிகச் சாத்தியம் ....


எனவே இனியேனும்

அளவுகோலை நிலையானதாகக் கொள்வோம்


பொருட்களை இனியேனும்

அளவுகோலை மாற்றாது எடை போடப் பயில்வோம்


Sunday, February 12, 2023

சுருக்கமாக எனினும் நறுக்..

 (அர்த்தமுள்ள வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது இந்தச் சிறிய கட்டுரை)


நீங்கள் ஒரு கப் காபியைக் கையில் வைத்திருக்கிறீர்கள்.


_அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதி, உங்கள் கைகளைத் தட்டி விடுகிறார். காபி வெளியே சிதறிவிடுகிறது._


_நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள்?_


_“ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம்._


_ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானது._ _அப்படியென்றால் என்ன காரணம்?_


உங்கள் கப்பில் காபி இருந்தது. அதனால் காபி சிதறிவிட்டது. _ஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும்._

_கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும்._


_இதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம்._ 


_வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும்._

_இதைச் சொல்வது எளிது, கடைப்பிடிப்பது கடினம்தான்._ 

_ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம்._


_வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?_


_கோபம், மோசமான வார்த்தைகள், கசப்புணர்ச்சி, பயம் இவைகளா? நிச்சயம் இல்லை._


_வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறது._ அதில் நன்றி, மன்னிப்பு, மகிழ்ச்சி, கருணை, அன்பு, இங்கிதமான வார்த்தைகள்…

_இவற்றை நிரப்பி வைத்திருந்தால், எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது எல்லாம் நல்லவையாகத்தானே இருக்கும்!_


நல்லவற்றை நமக்குள் 

நிரப்பி வைப்போம்!

_வாழ்க்கை நமக்கு  கிடைத்த வரம்... அதை அனுபவித்து வாழ்வோம்..

Sunday, February 5, 2023

நளினமா...நடத்தையா..

 ஒரு கற்றறிந்த குரு ஒரு 35 வயது திருமணமான இளைஞனை தனது சொற்பொழிவின் போது எழுந்து நிற்கச் சொன்னார்.


 "நீங்கள் ஒரு கடற்கரையில் நடந்து கொண்டிருக்கிறீர்கள். ஒரு இளம் அழகான பெண் முன்னால் இருந்து வருகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்?"


 அந்த இளைஞன் பதிலளித்தான் - "அவள் பார்க்கப்படுவாள், அவளுடைய ஆளுமையை நான் பார்த்து பாராட்டத் தொடங்குவேன்".


 குருஜி கேட்டார் - "அந்தப் பெண் முன்னேறிய பிறகு, நீங்களும் திரும்பிப் பார்ப்பீர்களா?"


 அந்த இளைஞன் சொன்னான் - ஆம், என் மனைவி என்னுடன் இல்லை என்றால் .  (கூட்டத்தில் அனைவரும் சிரிக்கிறார்கள்)


 குருஜி மீண்டும் கேட்டார் - "அந்த அழகான முகத்தை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள் என்று சொல்லுங்கள்?"


 அந்த இளைஞன்,- "இன்னொரு அழகான முகம் தோன்றும் வரை 5-10 நிமிடங்கள் இருக்கலாம்" என்று பதிலளித்தார்.  மற்றும் புன்னகைத்தார்


 குரு ஜி பின்னர் அந்த இளைஞனிடம் கூறினார் - இப்போது கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் இங்கிருந்து செல்லும் போது, ​​நான் உங்களுக்கு ஒரு புத்தகப் பொட்டலத்தைக் கொடுத்தேன். உங்கள் வீட்டிலிருந்து 75 கிமீ தொலைவில் உள்ள ஒரு பெரிய பணக்காரரிடம் அந்த பாக்கெட்டை டெலிவரி செய்ய வேண்டும் என்று சொன்னேன்.


 புத்தகங்களை விநியோகிக்க நீங்கள் அவருடைய வீட்டிற்குச் செல்கிறீர்கள். அவருடைய வீட்டைப் பார்த்தாலே அவர் ஒரு கோடீஸ்வரர் என்பது தெரிய வருகிறது.


 அவரது பங்களாவின் வராந்தாவில் 10 வாகனங்களும், வீட்டின் வெளியே 5 வாட்ச்மேன்களும் நிற்கின்றனர்.


 உள்ளே புத்தகப் பொட்டலத்துடன் நீங்கள் வந்த தகவலை அனுப்பிவிட்டீர்கள், பிறகு அந்த மாண்புமிகு தானே வெளியே வந்து உங்களை வரவேற்றார்.


 உங்களிடமிருந்து புத்தகப் பொட்டலத்தை எடுத்துக் கொண்டார்.  பின்னர் நீங்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறத் தொடங்கிய போது உங்களை அவரது வீட்டிற்குள் வரும்படி அவர் மிகவும் பணிவுடன் கேட்டுக் கொள்கிறார். அவர் உங்கள் பக்கத்தில் அமர்ந்து உங்களுக்கு சூடான தேநீர் மற்றும் உணவு கொடுத்தார்.  மிகவும் நன்றாக கவனித்து, இவ்வளவு சீக்கிரம் புத்தகங்களை அவரிடம் கொண்டு சேர்த்ததற்கு நன்றி கூறுகிறார்.  நீங்கள் திரும்பி வரவிருக்கும் போது, ​​அவர் உங்களிடம் கேட்கிறார் - நீங்கள் எப்படி என் வீட்டிற்கு வந்தீர்கள்? என்று.

 நீங்கள் சொன்னீர்கள் - உள்ளூர் ரயிலில்.


 உடனே அவர் தனது டிரைவரிடம் தனது சொகுசு கார் ஒன்றில் உங்களை உங்கள் இலக்குக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். நீங்கள் உங்கள் இடத்தை அடையும் நேரத்தில், அந்த கோடீஸ்வரர் உங்களை அழைத்து கேட்டார் - தம்பி, நீங்கள் வசதியாக வந்துவிட்டீர்களா..!!


 குருஜி கேட்டார், இப்போது சொல்லுங்கள் *இந்த மனிதரை எவ்வளவு காலம் நினைவில் வைத்திருப்பீர்கள்?*


 அந்த இளைஞன் சொன்னான் - குருஜி!  அவர் இவ்வளவு பெரிய கோடீஸ்வரராக இருந்தும் பணிவான மற்றும் அன்பான நடத்தைக்காக அந்த நபரை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது.


 இளைஞர்கள் மூலம் கூட்டத்தில் உரையாற்றிய குரு ஜி - "இதுதான் வாழ்க்கையின் யதார்த்தம்" என்றார்.


 "அழகான முகம் குறுகிய காலத்திற்கு நினைவில் இருக்கும், ஆனால் அழகான நடத்தை வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும்."


 💐 உங்கள் முகம் மற்றும் உடலின் அழகை விட உங்கள் நடத்தையின் அழகில் கவனம் செலுத்துங்கள்.  வாழ்க்கை உங்களுக்கு சுவாரஸ்யமாகவும், மறக்க முடியாத அழகாகவும் மற்றவர்களுக்கு உத்வேகமாகவும் மாறும்.......வாட்ஸ் அப் பகிர்வு

Wednesday, February 1, 2023

நினைவில் கொள்வோம்..

 அன்பும் பண்பும் பாரம்பரியமும் நிறைந்த ஒரு மூத்த  சகாப்தம் முடிவுக்கு வர இருக்கிறது.வரும் 10/15 ஆண்டுகளில் அன்பாலும் பாசப்பிணைப்பாலும் கட்டமைக்கப்பட்ட மற்றும் தர்மத்திற்கு கட்டுப்பட்ட ஒரு மூத்த தலைமுறை உலகை விட்டு போக இருக்கிறது.இந்த தலைமுறை மக்கள் முற்றிலும் வேறுபட்டவர்கள்.!

இவர்கள் இரவில் சீக்கிரம் தூங்குபவர்கள், அதிகாலையில் சீக்கிரமே எழுபவர்கள்,

காலையில் நடை பயிற்சிக்கு செல்பவர்கள்

வீட்டு தோட்டம், செடிகளுக்கும் தண்ணீர் விடுப்பவர்கள், கருவேப்பிலை, பச்சை மிளகாய், மருதாணி, செம்பருத்தி தன் வீட்டிலேயே வளர்ப்பவர்கள்.

கடவுளை வழிபடுவதற்காக தானே பூக்களைப் பறித்து பிரார்த்தனை செய்பவர்கள்.தினமும் கோவிலுக்குச் செல்பவர்கள்,வழியில் சந்திப்பவர்களுடன் பேசுபவர்கள், அவர்களின் மகிழ்ச்சியையும், துயரத்தையும் விசாரிப்பவர்கள், இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிப்பவர்கள்அவர்கள் உலகம் வித்தியாசமான உலகம், அவர்களும் வித்தியாசமானவர்கள்.

திருவிழாக்கள், விருந்தினர் உபச்சாரம், உணவு, தானியங்கள், காய்கறிகள், அக்கறை, யாத்திரை, பழக்கவழக்கங்கள் அவர்களின் அனைத்துமே எதார்த்தமாகவும், மனிதநேயத்தோடும், இயற்கையாகவும், எந்தவிதமான நாடகத்தன்மையும் கலக்காமல் இருக்கும்.

லேண்ட் லைன் தொலைபேசி மீது அலாதி பிரியம் கொண்டவர்கள். தொலைபேசி எண்களை மனப்பாடமாகவும், டைரியிலும் பராமரிக்கும் பழக்கம் உடையவர்கள். முகவரியை தெளிவாக கூறுவார்கள். முடிந்தால்  அழைத்துச் சென்று காட்டுவார்கள்.ஒருநாளைக்கு இரண்டு-மூன்று முறை செய்தித்தாளைப் படிப்பவர்கள்.எப்போதும் ஏகாதசி, அமாவாசை மற்றும் பௌர்ணமி நினைவில் வைத்து கொள்பவர்கள் இந்த மக்கள் கடவுள் மீது வலுவான நம்பிக்கை உள்ளவர்கள், குடும்ப, சமூக அக்கறை பயம் உள்ளவர்கள்.தைத்து பராமரிக்கப்பட்ட பழைய செருப்புடன் உலா வருபவர்கள், பனியன், பெரிய கண்ணாடி என மிக எளிய தோற்றத்தில் உலா வருபவர்கள்.

கோடையில் ஊறுகாய், வடகம் தயாரிப்பவர்கள், வீட்டில் உள்ள உரலில் இடித்த மசாலாப் பொருள்களைப் பயன்படுத்துபவர்கள்

விடியற் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போட்டு அவர்களே தங்கள் கைகளாலேயே வீட்டைப்பெருக்கி, ஒட்டடை அடித்து வீட்டை சுத்தபத்தமாக வைத்திருப்பவர்கள்.எப்போதும் நாட்டு மாட்டுப்பால், தக்காளி, கத்திரிக்காய், வெந்தயம், கீரைகளைத் தேடி தேடி வாங்குபவர்கள்.இவர்கள் அனைவரும் நம்மை மெதுவாக விட்டு செல்ல இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா...?உங்கள் வீட்டிலும் இப்படி யாராவது இருக்கிறார்களா? ஆம் எனில், நீங்கள் மட்டுமே மிகவும் கொடுத்து வைத்தவர்கள்  அவர்களை மிகவும் அன்பாக கவனித்துக் கொள்ளுங்கள் மரியாதை கொடுங்கள்.அவர்களிடம் வாழ்வியலை கற்று கொள்ளுங்கள்.இல்லையெனில் அவர்களுடன் ஒரு முக்கியமான வாழ்வியல் என்னும் அதிமுக்கிய வாழ்க்கைப்பாடம் அழிந்தே போய்விடும்.அதாவது,

மனநிறைவு, எளிமையான வாழ்க்கை, உத்வேகம் தரும் வாழ்க்கை, கலப்படம் மற்றும் புனைவு இல்லாத வாழ்க்கை, நமது கலாச்சாரத்தின் வழியைப் பின்பற்றும் வாழ்க்கை மற்றும் அக்கறையுள்ள ஒரு ஆத்மார்த்தமான வாழ்க்கை எல்லாம் அவர்களுடன் மறைந்து போய் விடும்.

உங்கள் குடும்பத்தில் யார் மூத்தவராக இருந்தாலும், அவர்களுக்கு மரியாதை, நேரம் மற்றும் அன்பு கொடுங்கள். 

நம்முன்னோர்களே நமது அடையாளம், நமது முகவரி, மற்றும் நமது பெருமை, நம் கடமை.தனிமனித வாழ்வியில் சடங்குகள் மட்டுமே பல குற்றங்களை தடுக்க முடியுமே தவிர, அரசாங்கத்தால் மட்டுமே முழுமையாக தடுக்க இயலாது.

 இயற்கையோடு ஒன்றி வாழ முயற்சிப்போம்.

ஆரோக்கியம் பேணுவோம்.

உடல் நலனிற்கு முக்கியத்துவம் தருவோம்

பாரம்பரியத்தை தூக்கிச்செல்லும் கலாச்சாரக் காவலராவோம்.....வாட்ஸ் அப் பகிர்வு..