முன்பெல்லாம்
குடிகாரன் தீயவனாகத் தெரிந்தான்
இப்போது எல்லோரும் குடிப்பதால்
குடித்து கலாட்டா செய்பவன் மட்டுமே
தீயவனாகத் தெரிகிறான்
குடித்தும் அமைதியாக இருப்பவன்
நல்லவனாகத் தெரிகிறான்
எனவே இந்த நல்லவன் பட்டியலில்
குடிக்காதவனுக்கு இடமே இல்லை
முன்பெல்லாம்
கையூட்டுப் பெறுபவன்
மோசமானவனாகத் தெரிந்தான்
இப்போது எல்லோரும் கையூட்டுப் பெறுவதால்
கையூட்டுப் பெற்றும் காரியம் முடிக்காதவனே
மோசமானவனாகத் தெரிகிறான்
கையூட்டுப் பெற்று காரியம் முடிப்பவன்
சிறந்த நிர்வாகி ஆகிப் போகிறான்
இந்தச் சிறந்தவன் பட்டியலில்
கையூட்டுப்பெறாதவனுக்கு வாய்ப்பே இல்லை
முன்பெல்லாம்
அரசியலில் ஊழல் செய்பவன் மட்டுமே
மோசமானவனாகத் தெரிந்தான்
இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாருமே
ஊழல் வாதிகளாக இருப்பதால்
பிடிபடுபவன் மட்டுமே
மோசமானவனாகத் தெரிகிறான்
பிடிபடாது ஊழல் செய்பவன்
அரசியல் சாணக்கியன் ஆகிப் போகிறான்
இந்த சாணக்கியன் பட்டியலில்
ஊழலற்ற அரசியவாதிக்கு சம்பந்தமே இல்லை
அளவுகோலை நிலையானதாக வைத்து
பொருட்களை எடைபோட்ட காலம் மாறி
பொருளுக்கு ஏற்றார்ப்போல
அளவுகோலை மாற்றும் நம் மனோபாவம்
தொடர்கிறவரையில்.......
இனி வரும்காலங்களில்
குடிக்காதவன் தீயவனாகிப் போகவும்
கையூட்டுப் பெறாதவன் மோசமானவனாகிப் போகவும்
ஊழல் செய்யாதவன் அரசியலுக்கு
இலாயக்கற்றுப் போகவுமே
அதிகச் சாத்தியம் ....
எனவே இனியேனும்
அளவுகோலை நிலையானதாகக் கொள்வோம்
பொருட்களை இனியேனும்
அளவுகோலை மாற்றாது எடை போடப் பயில்வோம்
6 comments:
சிகரெட் குடிப்பவனுடன் சேர்ந்து நடக்காமலிருந்த (கல்லூரியில் படிக்கும்போது) அந்தக் காலம் நினைவுக்கு வருது. 'குடி'யா? அப்படிப் பட்ட அபூர்வ ஆட்களை, சமூகம் ஒரு மாதிரியாகப் பார்த்த காலம்.
நல்லவனாக வாழ்வதை விட, வல்லவனாக வாழ்வதே மேல்!
என்று ஏற்கனவே, பழ மொழி சொல்லி வச்சுட்டாங்க..
படிக்கப் படிக்க 'உண்மை... உண்மை' என்று தலை தானாய் ஆடுகிறது!
இப்படித்தான் இருக்கு... மாற்ற குறள் வழி மட்டுமே உண்டு...
அளவுகோல் மாறுவது சகஜம். புலி மானைக் கொன்றால் அது உணவுக்காக. மனிதன் மானை கொன்றால் அது சட்டங்களுக்கு எதிர். இப்படி பல கூறலாம். நன்மை தீமை என்பது அவரவர் எண்ணங்களில் தான்.
Jayakumar
நன்றாக சொன்னீர்கள் காலம் இப்படித்தான் இருக்கிறது.
Post a Comment