Tuesday, August 31, 2021

 கணித அறிவும் தொழிற் நுட்பச் சூட்சுமமும் ...மனிதனுக்கு மட்டுமே என கர்வம் கொள்ள வேண்டியதில்லை..


Sunday, August 29, 2021

கொரோனா சான்றிதழ்

 *UNIVERSAL PASS CUM CERTIFICATE*

https://epassmsdma.mahait.org

நமது இந்திய அரசு கொரோனா  டோஸும் போட்டவர்களுக்கு ஒரு பாஸ் கம் சர்டிபிகேட் ஐ ஆன்-லைன் மூலமாகவே பெற ஏற்பாடு செய்திருக்கிறது.


இந்த பாஸ்  & சர்டிபிகேட் ஐ பெறுவதால் நீங்கள் அரசு போக்குவரத்து, பொது இடங்கள், பேருந்து-ரயில்-விமான நிலையம் மற்றும் மால் போன்ற அனைத்து இடங்களிலும் உங்களது புகைப்படத்துடன் கூடிய இந்த பாஸை வைத்து எந்த தடங்களின்றியும் நுழையலாம் - பயணிக்கலாம்.


கீழே  தந்துள்ள லிங்க் ஐ க்ளிக் செய்து உங்களது பதிவு செய்த மொபைல் எண் ஐ தந்து OTP பெற்று Enter செய்தால் உங்களது பாஸ் & சர்டிபிகேட் அடுத்த 30 நிமிடங்களுக்குள் டவுன்லோடு ஆகும்.


Link ஐ க்ளிக் செய்வதற்கு முன்னர் உங்களது போனில் உங்களது பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை தயார்நிலையில் வைத்துக் கொள்ளுங்கள்.

பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இல்லாதிருந்தால் ஷோக்கா ஒரு செல்ஃபி எடுத்தும் அனுப்பலாம்.


உங்களது சர்டிபிகேட் ஐ  வெளிநாடு செல்வதற்குக் கூட PASS ஆக பயன்படுத்தலாம்.



கிளிக் செய்ய வேண்டிய லிங்க்👇


https://epassmsdma.mahait.org

Friday, August 27, 2021

கண்களின் பாஷை..


1. கண்கள் வலப்புறமாக பார்த்தால் பொய் சொல்கிறது 


2. கண்கள் இடப்புறமாக பார்த்தால் உண்மை பேசுகிறது.


3. கண்கள் மேலே பார்த்தால் ஆளுமை செய்கிறது.


4. கண்கள் கீழே பார்த்தால் அடிபணிகிறது.


5. கண்கள் விரிந்தால் ஆச்சர்யப்படுகிறது,ஆசைப்படுகிறது.


6. கண்கள் சுருங்கினால் சந்தேகப்படுகிறது. 


7. கண்கள் கூர்ந்து பார்த்தால் விரும்புகிறது.


8. கண்கள் வேறு எங்கோ பார்த்தால் தவிர்க்கிறது.


9. கண்கள் வலமும் இடமும் மாறி மாறி ஓடினால் பதட்டத்தில் உள்ளது.


10. கண்கள் படபடத்தால் விரும்புகிறது, வெட்கப்படுகிறது.


11. கண்கள் மூக்கைப்பார்த்தால் கோபப்படுகிறது.


12. கண்கள் எதை பார்க்கிறதோ அதை விரும்புகிறது.


13. கண்கள் கழுத்துக்கு கீழே பார்த்தால் காமம்.


14. கண்கள் கண்ணுக்குள் பார்த்தால் காதல்.


15. கண்கள் இடமாக கீழே பார்த்தால் தனக்குள் பேசிக்கொள்கிறது.


16. கண்கள் இடமாக மேலே பார்த்தால் பழைய நினைவுகளை தேடுகிறது.


17. கண்கள் வலமாக கீழே பார்த்தால் விடை தெரியாமல் யோசிக்கிறது.


18. கண்கள் வலமாக மேலே பார்த்தால் பொய் சொல்ல யோசிக்கிறது.


19. கண்கள் உயர்ந்தும் தலை தாழ்ந்தும் இருந்தால்  எதையோ தேடுகிறது.


20. கண்கள் ஓரப்பார்வையில் அவ்வப்பொழுது பார்த்தால் விரும்புகிறது. 


21. கண்கள் மூடித்திறந்தால் உள்ளுக்குள் தேடுகிறது


22. கண்களை கைகள்

 மறைத்தால் எதையோ மறைக்கிறது.


23. கண்களை கைகள் கசக்கினால் தஞ்சம் கேட்கிறது. 


24. கண்கள் மூடித்திறந்தால் வெறுக்கிறது.


25. கண் புருவங்கள் உயர்ந்தால் பேச விரும்புகிறது 


26. கண் புருவங்கள் சுருங்கினால் பேச விருப்பமில்லை. 


27. கண்களும் புருவங்களும் சுருங்கியிருந்தால் கோபம்.....


28. ஒரு கண் திறந்திருந்தால் சேட்டை


29. இரண்டு கண்களும் மூடி இருந்தால் தூக்கம்.


30. கண்கள் திறக்கவில்லையென்றால் மரணம் 👍👍👍(வாட்ஸ் அப்பில் வந்தது.சரிபோலத்தான் படுது..)

Monday, August 23, 2021

பயனுள்ள வாட்ஸ் அப் பதிவு

 ஒரு நிலம் வாங்குவதற்கு முன்பு 

என்ன செய்ய வேண்டும்?


1.1975 முதல் கணினியில் வில்லங்கச் சான்று (Encumbrance Certificate) போட்டுப் பார்க்க வேண்டும்;


1975 முதல் பின்னோக்கி, 

1908 அல்லது 1858 வரை manual EC கட்டாயம் போட்டுப் பார்க்க வேண்டும்.


நிலத்தின் மதிப்பு 0 சுழியம் என்று இருந்தால், 

அது நிலக்கொடை இயக்கத்தில் நன்கொடையாகத் தரப்பட்ட  நிலம்; அல்லது புறம்போக்கு 

அல்லது வில்லங்க நிலம்.


வாங்காதீர்.


2. இரட்டை ஆவண  நிலம்.


Power of attorney (POA யோடு

 வரும் நிலத்தை வாங்காதீர்.


வாங்கியே தீர வேண்டும் என்றால், 

அதன் நகல் வாங்கி 

அதில் குறிப்பிடப்படுள்ள முகவரியில் power எழுதிக் கொடுத்தவரை 

நேரில் சந்தித்துப் பேசுங்கள்.


செல்லக் கூடியாதா என்று கேளுங்கள்.


அதாவது முகவரும் (agent )விற்கலாம், பவர் எழுதிக் கொடுத்தவரும் விற்கலாம்.

அப்படி விற்றால் 

அது இரட்டை ஆவணம். 

வாங்காதீர்


3.உயில் பத்திர நிலம்.


எது இறுதி/கடைசி உயில் என்று கவனமாகப் பாருங்கள்.


பதிவு செய்யபட்ட உயில் மூலம் விற்பனை நடந்தால்,

அது ஒரு நில விற்பனைப் பத்திரம்.


பதிவு செய்யப்பட்ட உயிலுக்கு பிறகு வேறு ஏதாவது பதிவு செய்யாத உயில் இருக்கின்றதா? என

நிலம் விற்பவரின் உறவினர்களைக் கேட்க வேண்டும்.


பதிவு செய்யாத உயில் மூலம் விற்றால் அது செல்லாது.


4. ஏற்பாட்டு ஆவணம் Settlement பத்திரம் மூலம் நிலம் விற்பனைக்கு வந்தால், செட்டில்மெண்ட் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றதா என்று கவனமாகப் பாருங்கள்.


1990 முதல் 2015 வரை பத்திரப்பதிவு அலுவலகங்களில் செட்டில்மெண்ட் ரத்து செய்து 

நிலத்தில் மேலும் சிக்கல் ஆக்கி விட்டாரர்கள்.


செட்டில்மெண்ட் பத்திரத்தை 

நீதிமன்றம்தான் ரத்து செய்ய  முடியும்.


EC யில் SRO=Sub register Office மூலம் ரத்து ஆகி இருந்தால் 

அந்த நிலத்தை வாங்காதீர்.


உயில் பத்திரம் தாய் பத்திரம் ஆக இருந்தால்,

அந்தத் தாய் பத்திர உயில் மூலம் 

விற்று இருந்தால்,

அந்தப் பத்திரத்துக்கு இணைப்பு உள்ளதா  என்று பாருங்கள்.


5. 1987-UDR, 1995-நத்தம் நிலவரி திட்டம் முன்பு 

நிலம் பத்திரத்தின் மூலம் வாங்கியவர் அதை revenue record எனப்படும் பட்டாவில்,

தற்போதைய உரிமையாளர் தான்தான் current owner என்பதைப் பதிவு செய்யாமல் இருந்தால்,


1987க்கு முந்தைய உரிமையாளர்,

அவரின் வாரிசுகள் பழைய பட்டா மூலம் விற்றால்.


அடுத்து நிலம் வாங்கி 

பட்டாவில் பதிவு செய்யாமல் விட்டுவிட்ட 

உண்மையான உரிமையாளர் அல்லது

 அவரின் வாரிசுகள் விற்று இருந்தால் 

அதுவும் இரட்டை ஆவணம். 

செல்லாது.


6.வடிவம், உருவ மாற்றம் செய்த  நிலமா? (Layout frame)


நத்தம் நிலமா, layout பிளாட்டா என்று பாருங்கள்.


DTCP approved or CMDA approved என்றால் 

அவர்களுடைய இணையதளங்களில்

சரி பாருங்கள்.


கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் நேரில் LPA (local planning authority என்னும் DTCP அல்லது CMDA அலுவலகத்திற்குச் சென்று சரி பாருங்கள்.


அவர்களுடைய உரிமம் பெற்ற பிறகும் கூட 

வரைபடத்தில் திருத்தம் செய்து இருப்பார்கள் 

அதைச் சரி பாருங்கள்.


Layout ப்ளூ பிரிண்ட் இருந்தால் கொண்டு சென்று,

பூங்கா பள்ளி கட்டுவதற்கு

இடம் விட்டு இருக்கின்றார்களா என்று கேளுங்கள்.


நிறையப் பேர் 

பூங்கா பள்ளி கட்ட இடம் ஒதுக்கி உரிமம் வாங்கிய பிறகு 

அந்த வரைபடத்தைத் திருத்தி 

அந்த இடங்களையும் மனைகளாகக் காட்டி விற்று விடுவார்கள் .


ஊர் ஆட்சி மன்றங்கள்  approved இடங்கள் வாங்காமல் இருப்பது நல்லது. ஏனென்றால், வாங்கிய பின்பு 

நீங்கள்தான் நிலத்தை  வரையறை செய்ய அலைய வேண்டும்.


நத்தம் நிலம் என்றால்

 VAO வைப் பார்க்க வேண்டும்‌.


உங்கள் சர்வே எண் UDR காலத்து 1987 ஆம் ஆண்டின் சிட்டா அடங்கலை, (FMB) நேரில் சென்று கேளுங்கள்.


இனாம் கிராமம் ஆக இருந்து 

இனாம் ஒழிப்பின் மூலம் 

நத்தம் நிலவரித் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்ட நிலமா என்று பாருங்கள். 


அந்தப் பட்டா UDR காலத்து சிட்டா அடங்கல் பதிவு ஆகி இருக்கின்றதா? என்று பாருங்கள்.


நேரில் கேட்டும் VAO தரவில்லை என்றால்

  RTI மனுவில் கேளுங்கள்.

RTI யில் கட்டாயம் கொடுக்க வேண்டும்.


4. EB, சொத்து வரி விற்பவர் பெயரில் இருக்கின்றதா? என்று பாருங்கள்.

இல்லை என்றால் மாற்றி, 

அதன் பிறகு விற்கச் சொல்லுங்கள் .


5. நிலம் விற்பவர் பெயரில் 

பட்டா இருக்கின்றதா?


கூட்டுப் பட்டா நிலம் எனில், 

பங்குதாரர்களுள் 

யாருக்கு எவ்வளவு இடம்,

எந்த இடம் என்று பிரித்து இருக்க வேண்டும்.


பட்டா வாங்குவது  நிறைய அலைச்சல்.


அதனால் விற்பவர் பெயரில் 

பட்டாவை மாற்றச் சொல்லுங்கள்.

அதன் பின்பு நிலத்தை வாங்குங்கள்.


6. நிலத்தின் வகைப்பாடு கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.


நஞ்சை, புஞ்சை, 

நத்தம், நத்தம் புறம்போக்கு, 

மேய்ச்சல், வாய்க்கால், 

ஓடை  புறம்போக்கா, 

நெல் போராடிக்கும் இடமா, 

விளையாட்டுத் திடல், கோயிலுக்கு ஒதுக்கப்பட்ட நிலமா,

பொதுவில் மாடு கட்ட விடப்பட்ட இடமா, நிலவியல் பாதை(அரசு நிலம் ), நிலவியல் ஓடையா என்று பார்க்க வேண்டும்.


7. பட்டாவின் பயனாளி யார்?


முன்பு அது ஜமீன் நிலமா அல்லது இனாம் நிலமா 

அல்லது ரயத்வாரி நிலமா  என்று பார்க்க வேண்டும்.


மேஜர் இனாம்


ரயட்வாரி

1802  permanent settlement record காலத்தின் 

ஜாகிர் இனாம் , 

ஜமீன் நிலமாக இருந்து 

ரயத்வாரி யாக மாற்றம் பெற்றதா என்று பாருங்கள்.


வெள்ளைக்காரன் காலத்தில்

இனாம் ஒழிப்பில் இருந்து 

ஜமீன் நிலமாக மாறியதா என்றும் ஆராய வேண்டும்.


இதற்கு VAO, தாலுகா & கலெக்டர் அலுவலகத்தில் இருக்கும் 

B-record, OSR, RSR, SLR இன் நகல் தேவை.


உங்கள் நிலத்தின் சர்வே எண் குறிப்பிட்டு ஒரு மனு கொடுத்து, 

50 ரூபாய் கட்டி வாங்கிக் கொள்ளலாம்.


------------

Minor இனாம் 


விடுதலைக்கு முன்பு பிரிட்டிஷ்காரர்கள் கொடுத்த

DC land (எ) (Depressed Class) நிலமா? என்று பார்க்க வேண்டும்


தொழில் முறை இனாம் நிலம்


தச்சர், கருமான், நாவிதர், காவக்காரன்,கர்ணம்,தலையாரி,

வெட்டியான், சக்கிலியர்,புதிரை வண்ணார்  இனாம் நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


வெள்ளைக்காரன் காலத்தில்,

ஊழிய மானியங்களாகக் கொடுக்கப்பட்ட

பூசாரி, தேவதாசி,

பூ கட்டும் மானியம் நிலமா? என்று பார்க்க வேண்டும்.


சோஸ்திராம் மானியம் ஒழிக்கப்பட்ட நிலமா? 

ஹாஜி இனாம் ஒழிக்கப்பட்ட நிலமா? என்றும் பார்க்க வேண்டும்.


------------

DC அல்லாத பிற இனத்தவருக்குக் கொடுக்கப்பட்ட 

குறவர், கள்ளர் (குற்றப் பரம்பரை)

நிலமா? என்று பார்க்க வேண்டும்.


மேற்சொன்ன வகைப்பாடு அனைத்தும் வெள்ளைக்காரன் காலத்தவை.


---------

விடுதலைக்குப் பின் கொடுக்கப்பட்ட Assigment land.


Assignment land (எ ) ஒப்படை பட்டா நிலங்கள் எனில் 

அதற்கு உண்டான (HSD பட்டா , D-பட்டா, நமுனா பட்டா, TKT பட்டா,F-பட்டா

 B-memo பட்டா, அனுபந்த பட்டா, Assignment land என்னும் ஒப்படை நிலமா  என்று பார்க்க வேண்டும்.


SC & ST பிரிவினருக்குக் கொடுத்த

 AD  assignment Land (Adi Dravidar )பட்டா உள்ள நிலமா என்றும் பார்க்க வேண்டும்.


F-பட்டா.


இது நிலசீர்திருத்தத் துறையால் வழங்கப் பட்டது. 


நிலச் சீர்திருத்தத் துறை வேறு 

வருவாய்த் துறை revenue வேறு.


ஜமீன் ஒழிப்பில் இருந்த நிலங்களை பயனாளிக்குக் கொடுத்தது என்பதை உறுதிப்படுத்தும் ஆவணமே F-பட்டா.


1970-B-Memo land =பீமா பட்டா.


B memo பட்டா நிலம் விற்பனை க்கு வந்தால் வாங்காதீர். 


அது நில உரிமைப் பட்டா அல்ல. 

அது அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவன் என்ற  நோட்டீஸ் மட்டுமே. 

B-memo நிலத்தில் குடி இருப்பவர்களை எந்தநேரமும் அரசு காலி செய்யச் சொல்லும்.


Assignment பட்டாவில் உள்ள 

கண்டிஷன் பார்க்காமல் வாங்காதீர்.


ஒப்படை நிலங்களை அரசாங்கமே திருப்பி எடுத்துக் கொண்டு விட்டாதா என்றும் பார்க்க வேண்டும்.


--------


1956- பூமி தான நிலம்


Manual EC 

கட்டாயம் 1950-1965 வரை manual EC போட்டுப் பார்க்க வேண்டும்.


manual EC யில் மட்டும்தான் 

பூமி தான போர்டுக்கு,

பெரும் நிலக்கிழார்கள் நன்கொடையாக கொடுத்த  தான பத்திரம் (கிரயபத்திரம்) காட்டப்பட்டு இருக்கும்.


பூமி தான போர்டு பெயரில் பட்டா, சிட்டா ஆகியவை மாறி இருந்தால் 

VAO அலுவலகத்தின் A-Record இல் காட்டும்.


ஏர் உழவன் பட்டா=பூமி தான நிலத்திற்கு ஆன குத்தகை பட்டா.


Manual EC யில் கிடைக்காத பூமி தான நிலங்களை பற்றிய தகவல்கள் revenue record யில் தான் கண்டுபிடிக்க முடியும்.


பூமி தான நிலம் என்றால் 

சென்னை  சைதாப்பேட்டை 

 பனகல் மாளிகையில் உள்ள 

பூமி தான அலுவலகத்திற்குச் சென்று, நீங்கள் வாங்க விரும்பும் நிலத்தின் சர்வே எண்

பூமி தான வரையறைக்குள் வருகிறதா என்று பாருங்கள். 


Master ரெஜிஸ்டர் பார்க்க வேண்டும்.


பூமி தான நிலம்  வாங்காதீர்.


பூமி தான நிலத்தை 

பயனாளி விற்க அதிகாரம் இல்லை. பயனாளிக்குக் குத்தகை உரிமை மட்டுமே உண்டு.


எனவே, அது பூமி தான நிலம் என்று தெரியவந்தால் வாங்காதீர்.


-----------

Zero value நிலம்


-EC யில் நிலத்தின் மதிப்பு Zero மதிப்பு என்று இருந்தால் அது பூமி தானம் & புறம்போக்கு அல்லது வில்லங்க நிலம்.


-----------

கோயில் நிலம் -HR&CE நிலமா 


வாங்க விரும்பும் நிலம் கோயில் நிலமா என்று பாருங்கள்.


கோயில் நிலம் என்றால் 

பயந்து விடக் கூடாது‌


அது இறையிலி (100% கோயிலுக்கு சொந்தம்), 

தேவதானம், தர்மதாயம் ஆக  இருக்கக் கூடாது அவ்வளவே.


கோயில் நிலத்தில் கட்டளை என்று ஒரு பிரிவு உண்டு‌

இதையும் வாங்கக் கூடாது. 


கட்டளை எப்படி உடைக்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் மட்டுமே வாங்கலாம்.


கோயில் மணியமாக இருந்து ரயத்துவாரி நிலமாக 1963 இல் மாறி இருந்தால் 

அது கண்டிஷன் பட்டாவா என்று பார்க்க வேண்டும்.


இந்த நிலம் வாங்கும் போது கவனம் தேவை. 

ஏன் என்றால் HR&CE நிறைய நிலங்களைத் திருப்பி எடுத்துக் கொண்டு உள்ளது.


-----------


ஜமீன் & மானியம் முற்றாக ஒழித்தது 1950 to 1960 களில்.


land reforms act.

இதற்கு நிலச் சீர்திருத்தம் என்று பெயர்.


 ஜமீன் இடம் இருந்து அரசு எடுத்த உபரி நிலம் 

கிராமக் கணக்கில் B register இல் இருந்து 

A-register க்கு மாறும் போது 

உபரி நிலம் , அனாதீனம், உரிமையாளர்கள் பெயர்கள் மாறி உள்ளது போன்ற சிக்கல் உள்ளதா என்றும் பார்க்க வேண்டும்.


-----


1963 minor இனாம் ஒழிப்புச் சட்டம்


இனாம் ஒழிப்பு to ரயத்வாரி பட்டா. உழுபவனுக்கே நிலம் சொந்தம் திட்டம்


RSLR இல் "கிராமத்தார்" என்று பட்டா தாக்கல் செய்யப்பட்டு

 1963 minor இனாம் ஒழிப்புச் சட்டம்

மூலம் ரயட்வாரி பட்டாவாக மாறி 

பின்பு 1987 UDR இல் 

மீண்டும் RSLR இல் உள்ளது போன்று "கிராமத்தார்"  என்று மாறி இருந்தால் அந்த நிலத்தை வாங்காதீர்.


அது தனி நபர் பட்டா என்று மாறி இருக்கின்றதா என்றும் பார்க்க வேண்டும்.


--------

1963 கோவில் நிலம்

 (இனாம் ஒழிப்பு சட்டம், ஒழிப்பு மற்றும் ரயட்டுவாரியாக மாற்றுதல்) சட்டம் 


தேவதாசி மானியம் 

நிபந்தனை பட்டாவாக உள்ள நிலத்தைப் பயன்படுத்தி கொள்ளலாமே தவிர சொந்தம் கொண்டாட முடியாது.


ஊழிய மானிய நிலங்கள் 

கண்டிஷன் பட்டா வா இல்லை normal ரயட்வாரி பட்டா நிலமா? என்று பார்க்க வேண்டும்.


இந்த நிலம் வாங்கும் போது 

மிகுந்த கவனம் தேவை. 

தமிழ் நாட்டின் நில நிர்வாக பற்றிய அறிவு உள்ள ஒரு வழக்கு உரைஞர்தான் உங்களைக் காப்பாற்ற முடியும்‌


--------

1961 ஒன்றிய அரசு 

1972 தமிழ்நாடு நில உச்சவரம்புச் சட்டம்


 வரையறைகுள் மாட்டிக்கொண்ட நிலமா என்று பார்க்க வேண்டும்.


UDR லே celing இடம் என்று இருக்கானு பார்க்க வேண்டும்.


Section 37B இல் வந்த நிலமா என்று பார்க்க வேண்டும்.


--------

1976 களின் Urban land seiling act


ULC ஆக்ட் இல் மாட்டி கொண்ட ULC நிலமா என்று பார்க்க வேண்டும். 


ULT என்று குறிப்பு இருந்தால் 

சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகில் உள்ள 

உச்சவரம்பு அலுவலகத்தில்

சர்வே நம்பர் கொடுத்து விசாரிக்க வேண்டும்


தெரியாமல் வாங்கி விட்டேன் என்று நில ஆணையருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


ULC நிலம் தவறுதலாக நீங்கள் வாங்கினாலும் 

நிலத்திற்கு வருவாய்த் துறை

  revenue department (தாசில்தார், VAO )பட்டா மாற்றம் செய்து கொடுக்க மாட்டார்கள். 


எனவே எச்சரிக்கை.


8. நீதிமன்றங்கள் முடக்கிய நிலத்தை attached property வாங்காதீர்.


9. திருமண விலக்கு கோரி நீதிமன்றங்களில் வழக்கு உள்ளவரிடம் நிலம் வாங்காதீர். 


அந்த நிலத்தை அவர் மனைவி maintenance (ஜீவனாம்சம்) வேண்டி மனு செய்து இருந்தால் 

நீங்கள் போட்ட பணம் காலி.


எனவே விற்பவர் இடம் 

இந்த விவரத்தைக் கேளுங்கள். ஒரிஜினல் பத்திரதைக் காட்டச்சொல்லி பத்திரத்தின் பின் புறம் கோர்ட் சீல் இருக்கின்றதா என்று பாருங்கள்.


10. அந்த நிலத்தின் சர்வே என்னை கொண்டுபோய் 

நிலம் அமைந்துள்ள கிராம VAO கிட்ட அந்த நிலத்தோட FMB, பட்டா, சிட்டா,

 A ரெகார்ட் வாங்குங்கள்.


11. அந்த இடத்தில் சாலை அமைக்க தண்ணீர் த் தொட்டி கட்ட

பிற்காலத்தில் அரசுத் திட்டங்களுக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு இருக்கின்றதா என்று கேளுங்கள்?.


பாலுமாகேந்திரவின் "வீடு " படத்தை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.


VA டாக்குமெண்ட் தர வில்லை என்றால்,


12. மேற்கூறிய ஆவணங்கள் அனைத்திற்கும் அட்டெஸ்ட் copy வேண்டும் என்று VAO office மற்றும் தாசில்தார் ஆபீஸில்

 RPD போஸ்ட் அல்லது நேரடி மனுவோ அல்லது RTI யில் கேட்டு  நகல் வாங்கிக் கொள்ளுங்கள்.


(கண்டிப்பாக attest copy வேண்டும் )


13..அடுத்து நிலத்தின் 1858 காலத்து 

OSR, RSR A-Record எடுக்க முடிந்தால் இன்னும் நல்லது.


1908,1936 ஆண்டின் SLR, RSLR A- Record, FMB

 80  முதல் 100 ஆண்டுகளுக்கு வேண்டும்.


1987 ஆம் ஆண்டின் FMB, A-record, சிட்டா அடங்கல் கட்டாயம் எடுக்கணும்.


இதன்  நகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கேளுங்கள்.


1.அது வெள்ளைக்காரன் காலத்தில்

 DC land @பஞ்சமி நிலம் ஆக இருந்தால் போட்ட பணம் எல்லாம் காலி. 

சுப்ரீம் கோர்ட் போனாலும் கேஸ் நிற்காது.


2. அடுத்து அது ஜமீன் ஒழிப்பு & கோயில் மானிய ஒழிப்பில் அரசால் எடுக்கப்பட்டு ஆனால் revenue record இல் அரசு நிலம் என்று பதிவேற்றம் செய்யப்படாமல் இருக்கும் நிலமா என்று பார்க்க வேண்டும்.


ஏன் என்றால் இவர்கள் revenue record இல் பதிவேற்றம் செய்யாத ஓட்டையை பயன்படுத்தி 

UDR சர்வே செய்ய வந்த தனியார் கம்பெனி அதிகாரிகளுக்குப் பணம் கொடுத்து

UDR இல்  திரும்பவும் ஜமீன் பெயரே ரயத்துவாரி யாக மாற்றிக் கொண்டார்கள்.


14.அடுத்து பத்திரப்பதிவு அலுவலகத்தில் 

 அந்த நிலத்தின் மீது யாராவது பத்திரம் பண்ணக் கூடாது என்று  தடை மனு கொடுத்து இருக்ககன்றார்களா? என்று பாருங்கள்.


15.. அந்தப் பத்திரம் முழுமையான ஆவணமா 

 ஸ்டாம்ப் டூட்டி கட்டி இருக்கின்றதா என்று பாருங்கள்.


16.அடுத்து நிலம் இருக்கும் இடத்தை குறைந்தது 10 தடவை பாருங்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் நிலத்தின் மீது ஏதாவது பிரச்சனை, வில்லங்கம், ஆக்கிரமிப்பு இருக்கின்றதா என்று கேளுங்கள்.


இதை ஏற்கனவே யாராவது வாங்கி இருக்கிறார்களா 

தற்போதைய உரிமையாளர் யார் என்று கேளுங்கள் 


17.அடுத்து நிலம் விற்பவர் வீட்டுக்கு அருகில் இருப்பவர்களிடம் 

அவருக்கு எத்தனை உடன்பிறந்தோர், மனைவி, குழந்தைகள்?


விற்பவருக்கு இந்த நிலம் எப்படி வந்தது? 


விற்பவரின் உடன் பிறந்தவர்களுக்கு பங்கு இருக்கின்றதா ? என்று கேளுங்கள்.


18. மேற்கூறிய ஆவணங்கள் எல்லாம் வாங்கி விட்டு 

உங்கள் நிலத்தின்  பத்திரப்பதிவு அலுவலக பகுதியில் நல்ல வழக்கு உரைஞரைப் பாருங்கள்.


அவர் எங்கே படித்தார் 

எந்த ஆண்டில் இருந்து தொழில் செய்கிறார் 

எத்தனை பத்திரம் பதிந்து இருக்கிறார், எத்தனை லீகல் ஒப்பீனியன் கொடுத்து இருக்கிறார் போன்ற கேள்விகள் கேளுங்கள் 


புரோக்கர் சொல்லும் வழக்கு உரைஞர் இடம் செல்லாதீர்.


வழக்கு உரைஞருக்குப் பணம் கொடுக்க அழுகக் கூடாது. 

அந்தப் பணம் தான் நிலத்தின் முதலீடு நீங்கள் விற்பவருக்குக் கொடுக்கும் பணம் அல்ல.


19. எல்லாம் சரியாக அமைந்து விட்டால் அடுத்து அரசு பதிவு பெற்ற நில அளவையர் (சர்வேயர்) பாருங்கள்


அவர் நிலத்தை அளந்து, encroachment, deviation எல்லாம் சொல்லுவார்.

பின்பு படத்தை வரைந்து தருவார்.


20. தயவு செய்து டாக்குமெண்ட் writer வைத்து பத்திரம் எழுதலாமா என்று நிதானமாக யோசிக்கவும்..


பத்திரம் எழுதும் உரிமம்  1990களில் இருந்து தரவில்லை என்று கேள்வி . சந்தேகம் என்றால் 

அவரது உரிமம் எண் கேளுங்கள்.


பாதி பேர் பத்தாம் வகுப்பு தாண்டாதவர்கள்


மீதிப் பேர் ஆந்திரா, கருநாடகவில் பணம் கொடுத்து LLB டிகிரி வாங்கினவர் எல்லாம் பழைய டாக்குமென்டில் இருந்து copy paste செய்கின்றார்கள்


========

காசு போனாலும் நல்ல வழக்கு உரைஞர் வைத்து எழுதுங்கள்.


கொஞ்சம் தவறினாலும்  பல லட்சம், கோடியை இழந்து விடுவீர்கள்.


முறையான ஆவணங்களை பெற அரசு அலுவலகங்களுக்கு நடப்பது 

நமது  நன்மைக்கே.


வழக்கு உரைஞர், நில அளவையர்,

நிலம் விற்பவரின் அண்டை வீட்டார், நிலம் இருக்கும் இடத்தின் அண்டை வீட்டார் இடம் பேசாமல் 

புதிய சொத்து வாங்காதீர்.


திருத்தப் பதிவு


அருணகிரி

9444 39 39 03

22 ஆகஸ்ட் 2021

Sunday, August 22, 2021

வாட்ஸ் அப்பில் வந்த வேதனை

 மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் குடும்பநிலை இது.. 


அப்புறம் எப்படி சார் தமிழ் வாழும்.. ஆளும்.. 

--------------------------------


இன்று பிற்பகல் ECR இஞ்சம்பாக்கத்தில் ஒரு ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்றேன். கொரோனா wave 2 க்கு பிறகு பிள்ளைகளை பொது இடத்துக்கு இப்போது தான் கூட்டி செல்கிறேன், அதுவும் இன்று பெரிய மகள் தமிழிசை பிறந்த நாள் என்பதால்.

ஹோட்டலுக்குள் ஒரு ஊரே இருந்தது வெளியிலும் கூட்டம். நேரம் இரண்டு மணி ஆனதால், வேறெங்கும் செல்ல முடியாது, இந்த கூட்டத்திலும் நிற்பதா என இருவேறு எண்ணங்கள் எங்களுக்குள். கிளம்பி விடுவோம் என ஏதோ சொல்ல சற்று தள்ளி நிறுத்தப் பட்டுருக்கும் காரை நோக்கி நடந்தோம்.


காரில் நான் ஏறி உடகார, பின்னர் வந்த மனைவி ஏறும் போது ஒரு அம்மா பாவமா நம்ம கார பார்த்துகிட்டே இருக்காங்க என்றார்.


அதற்குள் கார் கண்ணாடி அருகே அந்த அம்மா வந்து நின்றார்.


கண்ணாடியை நான் கீழே இறக்க..


ஐயா கொஞ்சம் காசு கிடைக்குமா என உடைந்த குரலில் சொன்னார்... ப..ஸ்...ஸுக்கு இல்ல... என்றார் உடைந்த குரலில் தயங்கி தயங்கி!


ஆளை பார்த்தவுடன் வாழ்ந்த குடும்பம் என்றே பட்டது... எழுபது வயது க்கு மேல வயது.....சீரான உடை.... கையில் பழைய handbag... மாஸ்க் போட்டுக்கொள்ள வேண்டும் என்கிற முனைப்பு... கையேந்துவது பற்றி உள்ள குமுறல்..


நான் சட்டென ஒரு நோட்டை எடுத்து நீட்டினேன்... வாழ்ந்து கெட்டவர் வலி மிக கொடியது ... அதுவும் முதுமையின் இயலாமையில் ஏழ்மை மிக மிக கொடியது.


வாங்கி கொண்டு கையெடுத்து கும்பிட்டார்..


கண்ணாடியை ஏற்றினேன்...


ஏதோ சொல்வது அறிந்து கண்ணாடியை மீண்டும் இறக்கினேன்...


"நான் தேவநேயப் பாவாணர் பேத்தி.... யார் கிட்டயும் கேட்க கூச்சமா இருந்தது... உங்க கார் பின்னாடி நல்ல தமிழ் எழுதி இருந்தது அதான் உங்க கிட்ட கேட்கணும் ன்னு தோனுச்சு" என முடித்தார்


"என்னது தேவநேயப் பாவாணர் பேத்தியா நீங்க??!?" என்றேன் அதிர்ச்சியுடன்


"ஆமாம் சார்" என கண்ணில் நீர் வழிந்தது..

_______


தேவநேயப் பாவாணர் தற்கால தமிழ் சமூகம் மறந்த, எக்கால தமிழ் சமூகமும் மறக்க கூடாத மிகச்சிறந்த தமிழறிஞர் சொல்லாராய்ச்சி வல்லுநருமாவார். இவர் 40க்கும் மேலான மொழிகளின் இயல்புகளைக் கற்று மிக அரிய சிறப்புடன் சொல்லாராய்ச்சிகள் செய்துள்ளார்.

இன்று பலர் நடத்தும் தனித்தமிழ் இயக்கத்திற்கு அடிமரமாய் ஆணிவேராய் இருந்தவர். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று வந்த முதல் குரல்களில் ஒன்று அவருடையது‌. குமரிக்கண்டம் ஆராய்ச்சி கட்டுரைகள், இலக்கணம் இலக்கியம் என அவருடைய எழுத்துக்கள் சொல்லி மாளாது.

இவரது ஒப்பற்ற தமிழறிவும் பன்மொழியியல் அறிவும் "மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்" என்கிற பட்டம் இவருக்கு பெற்று தந்தது... இந்திய அரசு தபால் தலை வெளியிடும் அளவுக்கு மிக முக்கியமான நம் மொழி பாட்டன் ஐயா.


________


தேவநேயப் பாவாணர் பற்றி அறிந்த எனக்கு அவரின் உயரம் அறிந்த எனக்கு பெரும் அதிர்ச்சி தான் தந்தது அந்த அம்மாவின் கண்ணீர்


தொடர்ந்த அவர்...

"சார்... எனக்கு ன்னு யாரும் இல்ல ‌.... சர்கார் எனக்கு தந்த வீட்டையும் என் பையன் புடுங்கிட்டு துரத்திட்டான்..." என அழுதபடியே இந்த படத்தில் இருக்கும் செர்டிஃபிகேட்டை நீட்டினார்...

படித்தபடியே காரை விட்டு இறங்கினேன்..


"என்னம்மா பண்ணுறீங்க ‌‌.... எங்க இருக்கீங்க..."


"பெரும்பாக்கம் ஹவுசிங் போர்டுல வாடகைக்கு இருக்கேன்..."


"வேற செலவுக்கு...?"


"எங்க சர்ச் பாஸ்டர் வீட்டு வாடகை ரெண்டாயிரம் குடுத்துடுறாரு... முதியோர் பென்ஷன் ஆயிரம் ரூபாய் வருது.... சோழிங்கநல்லூர் government Libraryல வேலைக்கு இருந்தேன்.. இப்ப கொரோனா க்கு அப்பறம் அதுவும் இல்ல...ரொம்ப சிரமமா இருக்கு..." என்றார் கண்ணீர் மல்க.


"பையன் ஏன் உங்கள வீட்ட விட்டு துரத்துனார்?"


"அவன் ஒரு மாதிரி ஆயிட்டான் சார்... என்ன அடிக்க வருவான்...வீட்டுல இருக்க கூடாது ன்னு சொல்லிட்டான் ‌.."


"Government குடுத்த வீடு எங்க இருக்கு.."


"அது தாம்பரம்ல"


பேசும்போதே...

இந்த படத்தை எடுத்து காட்டினார்...

"எங்க தாத்தா நினைவு நாளுக்கு பிறந்தநாளுக்கு கூப்பிட்டு அனுப்பவாங்க...சிலை க்கு முன் ஃபோட்டோ எடுப்பாங்க..."


"அம்மா இப்ப யாருமே உங்களுக்கு இல்லையா... சாப்பாட்டுக்கு..?."


"ஆயிர ரூபாய் மாச பென்ஷன் வெச்சு... தண்ணீர் செலவு போக சாப்பாட்டு க்கே கஷ்டம்... மருந்து மாத்திரை வேற... கோவிலுக்கு போக வர பஸ்ஸுக்கு கூட இருக்காது... ரொம்ப கஷ்டமா இருக்கு ய்யா...."


"அம்மா உங்க கஷ்டத்தை நான் எழுதட்டுமா... இந்த மாதிரி உங்க பையன் செஞ்சுட்டாரு... பாவாணர் பேத்தி இப்படி கஷ்ட படுறாங்க ன்னு"


"தாராளமாக எழுதுங்க சார்... "


"இப்ப இங்க எதுக்கு வந்தீங்க..."


"ஒருத்தங்க காசு தரேன் ன்னு சொன்னாங்க... "


"தந்தாங்களா... எவ்வளவு"


"தரல சார்.... அப்பறம் வா ன்னு சொல்லிட்டாங்க...அத வெச்சு தான் இந்த மாசம் சாப்பிடலாம் ன்னு இருந்தேன்... ___ரூபாய் " என்றார்


என்னிடம் அந்த தொகை இருந்தது அதை எடுத்து குடுத்தேன்..


கண்ணீர் அதிகமாகி அழுதார்...


"நீங்க நல்லாருக்கணும் சார்" என்றார்


"உங்க நம்பர் குடுங்க மா...இதை வெச்சு பதிவு போடலாம் ல... உங்களை யாராவது அழைத்து பேசுவாங்க உதவி வரும் ன்னு நம்புறேன்"


"செய்யுங்க சார்... செய்யுங்க...."


"என் பெயர் ராஜகோபாலன் ‌...." என்று சொல்லி என் நம்பர் தந்தேன்


"உங்களுடைய தேவை என்ன ம்மா?"


"எனக்கு வேலை போயிடுச்சு...ஒரு வேலை வேணும்...எது இருந்தாலும் செய்வேன்"

இந்த வயதில் காசு வந்தால் போதும் என சொல்லவில்லை...பையனை விரட்டி வீட்ட மீட்டு தாங்க என சொல்லவில்லை ... உழைத்து சாப்பிட வேண்டும் என்கிற தீர்க்கம் இருந்தது... கொஞ்சம் விரக்தி தொட்டு.

அந்த குரலில் விரக்தியில் நனைந்து நஞ்சுப்போன துளி நம்பிக்கை இருந்தது


நம் நாட்டின் விடுதலை போர் மொழி வளர்ப்பு தியாகிகள் தலைவர்களின் வாரிசுகளுக்கு இத்தகைய நிலைமை புதிதல்ல ‌....

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய்ந்நன்றி கொன்ற மகற்கு


என்றான் வள்ளுவன்


அதனால் தான் என்னவோ நம்மை சுற்றி இப்படி புது புது வியாதிகள் வந்து வாட்டுகிறது..


பல பல நன்றிகளை எளிதாக மறந்து விடுகிறோம்


இந்த அம்மா கேட்பது ஒரு சிறிய வேலை... அதன்மூலம் மாதம் சாப்பாட்டு க்கும் மருத்துவ செலவுக்கும் கையேந்தா நிலை.... கேட்பது நம் மொழியின் மிகப்பெரும் ஆளுமையின் வாரிசு...இதை கூட நாம் ஒரு சமுதாயமாக செய்ய முடியாதா...?


இந்த பதிவை பார்க்கும் அதிகாரிகள், அரசு இயந்திரத்தில் இருப்பவர்கள் அந்த அம்மாவின் குறைந்தபட்ச உதவியை நிறைவேற்றி தர தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்...

பெரும் கஷ்டத்தில் இருக்கும் நம்மொழியின் பெரும் ஆளுமையின் வாரிசு க்காக.... தமிழுக்காக...மனிதத்து க்காக.


(திருமதி. ரச்சேல், 7358431059 )


முடிந்தவரை இந்த பதிவை பகிருங்கள்


பேச்சுக்கு இடையில் என் மகளை அழைத்து, இன்னைக்கு என் பொண்ணுக்கு பிறந்தநாள்... உங்க ப்ளெஸ்ஸிங் வேண்டும் என்றேன்


உடனே ஜெபம் செய்து, நூறு வயது வாழ்வ குழந்தை என்றார்


லாக் டவுன் சட்டத்தால் எப்போதும் மகளின் பிறந்தநாளுக்கு சென்று தரிசனம் செய்யும் திருவேற்காடு கருமாரி அம்மனை இன்று தரிசனம் செய்ய முடியவில்லையே என இருந்தேன்


கருமாரியம்மனுடன் மேரி மாதா ஆசியும் சேர்ந்தே கிடைத்தது என் மகளுக்கு.


எழுதியவர்- இரா. இராஜகோபாலன்

21-8-2021

https://www.facebook.com/photo.php/?fbid=10165547946555511