Thursday, April 27, 2023

அவர் திருவடி தினம் தினம் பணிவோம்..

 ஐன்ஸ்டீனை விட அதிக IQ

பள்ளி படிப்பு முடிக்கும் முன்னே

கல்லூரி டிகிரி.

வலை வீசும் ஐடி நிறுவனங்கள் அதுவும்

சம்பளம் 153 கோடியில்.


இந்த பெருமைக்கு உடையவர் தான்

திருநெல்வேலியை சேர்ந்த விசாலினி என்ற

இளம் மாமேதை.


தாய் ராகமாலிகாவுக்கு குறை பிரசவம்

அதுவும் ஏழாவது மாதத்திலே 

இன்னும் 30  நாட்கள் தான் உயிரோடு இருப்பாள் என அவள் இறப்பிற்கு தேதி குறித்தனர் டாக்டர்கள்.


ஆனால் அந்த தாய் நம்பிக்கை இழக்கவில்லை, இருக்கிற மருத்துவமனைக்கெல்லாம் படி ஏறி இறங்கினாள்,

அசையா நாக்குடன் இருக்கும் குழந்தையினை காப்பாற்ற.


பேசும் சக்தி இருக்காது, மூலையில் பாதிப்பு வரும், மனம் நலம் குன்றித்தான் இந்த குழந்தை இருக்கும் இனி உயிரோடு இருந்தாலும் என்றனர்.


தாய் முயற்சியை விடவில்லை

குழந்தையோடு ஒவ்வோரு நொடியும் செலவிட்டாள்,

இறைவனின் அற்புதம் நிகழ்ந்தது.


இப்போ அந்த குழந்தை தான் உலகிலே அதிக கற்றல் நுன்னறிவு திறன் (IQ)

அதுவும் 15 வயதினிலே இந்தியாவிலே அதிக IQ அதுவும் 225 என்ற அளவில், 

போதிய அளவு அறிவு இருக்கும் மணிதனோ

85 to 115  IQ அளவில் தான்.


ஒன்பதாவது பள்ளி படிப்பு முடிந்ததும்

பொறியியல் கல்லூரிமில் B Teh.

Computer science and Engineering.

அதுவும் 18 வயதில் படித்து இளம் வயதிலே பட்டதாரி என் பெருமை பெற்றார்.


இவரை அறிந்து கல்லூரியில் சேரும் குறைந்த பட்ச வயது வரம்பினை குறைத்து அதற்கு பிரத்யேகமான அனுமதி பெற்ற

திருவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவிலில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்திற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும்.


இவர் படிக்கும் போது இவரின் அறிவினை உலகிற்கு அறியும் விதமாக

ராக்கெட் நாயகன் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் பாராட்டை பெற்று தந்தது

இவர் படித்த கல்லூரி

அதற்கு நன்றி சொல்ல வேண்டும்.


மனநிலை, உடல் நிலை பாதிக்கபட்ட குழந்தை என மருத்துவர்களின் கூற்றினை பொய்யாக்க போராட விலாசினி ஐந்து வயதிலே தன் வானோலி அறிவிப்பாளர் என்ற மத்திய அரசு வேலையை விட்ட இவரின் தாய் ராகமாலிகா.

குழந்தையின் ஒவ்வொரு அசைவிற்கும் காரணமானவர், குழந்தையிடம் எப்போதும் நம்பிக்கையூட்டும் வார்த்தைகளையே இரவும் பகலிலும் செலவிட்டவர் இவர்.


ஆம் அசையாத நாக்கோடு பிறந்த குழந்தையை சர்வதேச அரங்கில் அறிவியல் அறிஞர்கள் மத்தியில் நுன்னறிவாக பேச

காரனமான இவரின் தாய்க்கு நன்றி சொல்ல வேண்டும்.


அடுத்து இவரின் தந்தை குமாரசாமி, ஒரு எலக்ட்ரிசியன் பெரியதாக வருமானம் இல்லாத போதும் விசாலினி எழுதும் ஒவ்வொரு சர்வதேச நுன்னறிவு தேர்வில்

நகைகளை அடகு வைத்து செலவு செய்தார்.

இதுவரை 13 சர்வதேச நுன்னறிவு தேர்வு சான்றிதழ் வாங்கி இருக்கிறார்.

ஒரு இந்திய பெண்ணின் அறிவு நுட்பத்தை

உலக அளவுக்கு கூட்டிச் சென்ற இந்த தந்தையை பாராட்ட வேண்டும்.


விசாலினி

பில்கேட்ஸ் மைக்ரோசாப்ட் நடத்தும் MCP தேர்வில் 87 சதவீதம் மார்க் பெற்றவர்.

கடினமான சின்கோ சர்டிஃபைட் நெட் ஒர்க் அசோசியேஷன் (CCNA) தேர்வில் 90 சதவீதம் மார்க்.

CCNA மற்றொரு செக்யூரிட்டி தேர்வில் 98சதவீதம் மார்க்.


இஸ்ரோ தலைவர் மயில்சாமி அவர்கள்

விசாலினியை அறிந்து இஸ்ரோ மாளிகையில் தங்க வைத்து இவரின் நுன்னறிவு திறமையால் 700 விஞ்ஞானிகள் இருந்த கருத்துக்கு அரங்கில் இந்த பெண் படிக்கும் போதே பல மணி நேரம் பேசி அனைத்து அறிஞர்களும் எழுந்து நின்று கை தட்டி மரியாதையினை பெற்றவள் இவர்.


இப்போ இவருக்கு வயது 22.

இவருக்கு சம்பளமாக 150 கோடிக்கும் மேலாக கொடுக்க கம்யூட்டர் சாஃப்ட் வேர் நிறுவனங்கள் உலக அளவில் போட்டி போட்டுக் கொண்டு இருக்கிறது.


இவரின் இலட்சியமோ மூன்று தான்.

1). இந்தியாவிற்கு நோபல் பரிசு வாங்கி தரனும்,  இந்த கம்யூட்டரில் துறைய நுன் அறிவு  மூலம் இன்னும் பல புதிய

கண்டுபிடிப்பால்.


2) தானே ஒரு சாஃப்ட்வேர் நிறுவனம் அமைத்து அதற்கு CEO வாக இருந்து இன்னும் எத்தனையோ நுன்நுட்ப அறிஞர்களை உலகுக்கு தர வேண்டும்.


அவரின் மூன்றாவது இலட்சியம் தான்

மிகப் பெரியது அவரின் மனிதாபிமான தன்மை யினை காட்டுவது,


அவரைப் போன்று பிறக்கும் போது

ஏதோ சில குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்காக தனியாக  காப்பகங்கள் அமைத்து அவர்களுக்கு எல்லா உதவிகளையும் இலவசமாக வழங்கி

இன்னும் எத்தனையோ விசாலினைகளை

உருவாக்குவது என்பது.


இது வெல்லாம் விரைவில் நிறைவேற வாழ்த்துவோம், அதனையே இறைவனிடம் வேண்டுவோம்.


ஏன்எனில் விசாலினிக்கு

முதலில் மாதா வின் உழைப்பு

பின் பிதா வின் உழைப்பு

அப்புறம் குருவாக பல்கலைக்கழகம்

இதை யெல்லாம் தந்தது தெய்வம்.


ஆம்.

மாதா, பிதா, குரு, தெய்வம்......                        .அவர் திருவடி தினம் தினம் பணிவோம்..

Tuesday, April 25, 2023

புத்திசாலித்தனம்..

அடர்ந்த காடு ஒன்று இருந்தது.


அதைச் சுற்றிலும் அழகான குட்டிக்குட்டித் தீவுகள் இருந்தன. 


அந்தக் காட்டுக்கு ஒரு தலைவர் இருந்தார்.


அவர் காட்டுவாசிகளைத் தன்னுடைய சொந்தப் பிள்ளைகளைப் போலக் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.


அவருக்கு வயதாகிவிட்து. அவருக்குப் பிறகு அந்த மக்களை வழி நடத்த வேறு ஒருவரை நியமிக்க முடிவு செய்தார் .


அந்தக் காட்டில் , பரம்பரை ஆட்சி என்ற வழக்கம் கிடையாது. கடினமான போட்டிகளை நடத்தியே தலைவர்களைத் தேர்ந்தெடுப்பார்கள்.


எனவே தலைவர் போட்டிகளை

அறிவிக்கும்படி தன்னுடைய

உதவியாளர்களுக்குக்

கட்டளையிட்டார்.


நான்கு நாட்கள் நடந்த போட்டிகளில் இரண்டு இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இருவருமே வீரத்திலும் , வலிமையிலும் சிறந்தவர்களாக இருந்தனர். இருவரில் யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற பெரிய குழப்பம் வந்து விட்டது. இருவரையும்

நேரடியாக மோதவிட்டால் , பதவி ஆசையினால் ஒருவரை ஒருவர் பலமாகத் தாக்கி அதில் ஒருவர் கொல்லப்படுவது உறுதி.


தலைவருடைய மனம் அதற்கு சம்மதிக்கவில்லை. எனவே வேறோரு திட்டத்தை முடிவு செய்தார்.


மறுநாள் இரண்டு வீரர்களையும்

அவருடைய இடத்துக்கு

வரவழைத்தார்.


” இளைஞர்களே! இதுவரை

உங்களுடைய பராக்கிரமத்தால்

உங்களுக்கு நிகர் யாருமில்லை

என்பதை நிரூபித்து விட்டீர்கள்.


இப்போது நடக்கப் போவது இறுதிப் போட்டி. இதில் ஜெயிக்கும் ஒருவன்தான் தலைவனாக முடி சூட்டப்படுவான்.


இப்போது உங்கள் இருவருக்கும் சில

ஆயுதங்களும் , சமையல்

பாத்திரங்களும் , நம்முடைய உணவு தானியமான சோளம் ஒரு மூட்டையும்

கொடுக்கப்படும். 


நம்முடைய ஆட்கள் உங்கள் இருவரையும் நம்முடைய காட்டுக்கு அருகிலிருக்கும்

வெவ்வேறு தீவுகளில் படகில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்து விடுவார்கள். 


நீங்கள் உங்களிடம் இருக்கும் தானியத்தை சமைத்து சாப்பிட்டு அது தீரும்வரை காட்டிலேயே தங்கி இருக்க வேண்டும். 


தீர்ந்த பிறகு காற்றில் இருக்கும் மஞ்சள் மரத்தின் கிளைகளை ஒடித்துக்

கடற்கரையில் வைத்துக்

கொளுத்துங்கள் . 


அதிலிருந்து வரும்

புகையைக் கண்டவுடனேயே

இங்கிருந்து படகை அனுப்பி உங்களை மீட்டுக் கொள்ளுவோம் . உங்களில் யார், கையில் இருக்கும் தானியத்தை அதிக நாட்கள் பயன்படுத்தி அந்தத் தீவில் தாக்குப் பிடிக்கிறீர்களோ அவன் தான் தலைவனாகத்

தேர்ந்தெடுக்கப்படுவான் ” என்றார்.


மஞ்சள் மரம் என்பது அந்தக்

காடுகளில் அதிகமாகக் காணப்படும் ஒரு மரம். அதை எரிக்கும் போது எழும்பும் செம்பழுப்பு நிறப் புகை நீண்ட நேரம் நிலைத்திருக்கும்.


தலைவர் சொன்ன நிபந்தனைகளை

இரண்டு வீரர்களும் ஏற்றுக்கொண்டு

ஆளுக்கொரு தீவுக்குப்

பயணமானார்கள் . 

பொதுவாகவே ஒவ்வொரு காட்டுவாசிக்கும் ஒரு நாளைக்கு ஒரு படி சோளம் தேவைப்படும். அந்த இளைஞர்கள் அதிகமாக உடற்பயிற்சி செய்பவர்கள் என்பதால் அவர்களுக்கு சராசரியை விட இரண்டு மடங்கு அதிகமாகத் தேவைப்படும். அந்தக் கணக்கின்படி பார்த்தால் ஒரு மூட்டை சோளம் அவர்களுக்கு மூன்று மாத காலம் வரும். இறைச்சித் தேவைகளுக்கு அந்தத் தீவில் கிடைக்கும் முயல்களும், மீன்களும் போதுமானதாக இருக்கும்.


ஆனால் சோள அடையோ , சோள சோறோ சாப்பிட்டால்தான்

அவர்களுக்குப் பசி அடங்கும்.


அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் ஆளுக்கொரு தீவில் விடப்பட்டார்கள். போட்டி ஆரம்பமாகிவிட்டது . இரு இளைஞர்களும் ஆளில்லாத தீவுகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். இரண்டு தீவுகளிலும் எங்கேனும் செம்பழுப்பு நிறப்புகை எழும்புகிறதா என்று பார்த்தபடி எந்நேரமும் படகை எடுத்துச் செல்ல ஆயத்தமாக ஆட்கள்

நியமிக்கப்பட்டார்கள்.

நாட்கள் ஓடின. மூன்று மாதம் முடிந்தது.

 

படகுக்காரர்கள் ஏதேனும் தீவிலிருந்து புகை எழும்புகிறதா என்று உன்னிப்பாக கவனித்துக்

கொண்டிருந்தார்கள். ஒரு நாள் ஒரு தீவின் கடற்கரையிலிருந்து புகை எழும்பியது. உடனே ஒரு படகு புறப்பட்டுப் போய் அங்கே எலும்பும் தோலுமாக இருந்த இளைஞனை அழைத்து வந்தது.


அவன் கரைக்கு வந்ததும் மற்றவன் இன்னும் வந்து சேரவில்லை என்பதை அறிந்து திடுக்கிட்டான். இருப்பினும் சுதாரித்துக் கொண்டு தலைவரிடம் சொன்னான், ”தலைவா , எங்களுக்குக்

கொடுக்கப்பட்ட சோளம் இரண்டு மாதத்திற்கு மட்டுமே போதுமானதாக

இருந்தும் நான் சாமர்த்தியமாக

இத்தனை நாள் தாக்குப் பிடித்திருக்கிறேன். அவனும் என்னைப் போலத் தாக்குப் பிடித்திருப்பான் என்ற

நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே ஓரிரு நாட்கள் பார்த்துவிட்டு எனக்கே பதவியைக் கொடுக்க வேண்டுகிறேன்” என்றான்.


தலைவருக்கு அவன் சொன்னதைக் கேட்டு கொஞ்சம் அச்சம்

உண்டாகிவிட்டது.


இருந்தாலும் இன்னும் சிறிது நாட்கள்

பொறுமையாக இருக்க முடிவு செய்தார். இன்னும் சிறிது நாட்கள் ஓடி மறைந்தன. நான்கு மாதங்கள் கழிந்து விட்டன. தலைவருக்கே சந்தேகம் வலுத்து விட்டது . தானே நேரில் சென்று பார்த்து விட முடிவு செய்தார். படகோட்டியை அழைத்து ஒரு படகை எடுக்கச் சொன்னார் .


இரண்டு மணி நேரத்தில் படகு அந்தத் தீவை அடைந்து விட்டது. அவனை உயிரோடு காணப் போகிறோமா அல்லது துஷ்ட மிருகங்கள் தின்று தீர்த்த எலும்புக் கூடாய்ப் பார்க்கப் போகிறோமா? என்ற அச்சத்தில் அவருக்கு நெஞ்சு படபடத்தது.


ஏனென்றால் தீவுகளுக்குச் சென்ற சிலர் பசியில் இறந்ததும் உண்டு.


இந்தப் போட்டியை அறிவித்தது கூடத் தவறோ என்று மனம் கலங்கினார்.


கொஞ்சதூரம் காட்டுக்குள்

நடந்ததுமே தான் கண்ட காட்சியில் திடுக்கிட்டுப் போனார். ஆம். அங்கே மூங்கிலாலும், ஓலைகளாலும் கட்டப்பட்ட அழகான வீடு அவர்களை வரவேற்றது.


அதிலிருந்து அவர்கள் தேடி வந்த இளைஞன் ஓடி வந்தான். முன்னை விட நல்ல புஷ்டியாக மாறி இருந்தான்.


தலைவரை வணங்கி வரவேற்றான்.


”உள்ளே, வாருங்கள் தலைவா” என்று அழைத்துச் சென்று அமர வைத்தான்.


உள்ளே ஓடிப்போய் சூடான சோள அடையும் , மீனும் கொண்டு வந்து கொடுத்தான்.


தலைவருக்கோ ஒன்றும்

புரியவில்லை.


” உனக்குக் கொடுக்கப் பட்ட சோளம் மூன்று மாதத்துக்குள் முடிந்திருக்குமே. நீ என்னவென்றால் அருமையான சோள அடையால் எங்களை

வரவேற்கிறாய். நீயும் நன்கு சாப்பிட்டு

கொழுத்திருக்கிறாய். இது எப்படி சாத்தியம் ?” என்றார்.


” கொஞ்சம் என்னோடு வாருங்கள் தலைவரே ” என்று அவன் அவரை வீட்டின் பின்புறம் அழைத்துச் சென்றான். அங்கே அழகான சோளக்கொல்லை ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. 


அவன் சொன்னான், ”தலைவா, நான் வந்த அன்றே எனது

தானியத்திலிருந்து ஒரு பங்கை எடுத்து விதைத்து வைத்து விட்டேன்.


இரண்டு மாதங்களிலேயே

அறுவடைக்குத் தயாராகி விட்டது.


நான் எந்தக் கவலையுமில்லாமல்

நிறைவாக சாப்பிட்டேன். இந்த நான்கு மாதம் மட்டுமல்ல. இன்னும் எத்தனை வருடம் வேண்டுமென்றாலும் என்னால் இங்கே சந்தோஷமாய் வாழ

முடியும் ” என்றான்.


தலைவர் அவனைக் கட்டி அணைத்துக் கொண்டார்.


”நீ தடுமாறிப் போவாய் என்று எண்ணி இந்தப் போட்டியை வைத்தேன். நீயோ-உன் அறிவாலும், உழைப்பாலும் என்னைத் திணறடித்து விட்டாய்."


*_காட்டுக்கு ஒரு நல்ல தலைவனைக் கொடுத்த கடவுளுக்கு நன்றி என்றார்._*


*அன்பு நண்பர்களே, கையில் கொடுக்கப்பட்டதைத் திட்டமிட்டுப் பெருக்கிக் கொள்ளுகிறவர்களே*


*ஜெயிக்கிறார்கள். அது பொருளாக இருந்தாலும் , வாழ்க்கையானாலும் நேரமானாலும் சரி.*

வாட்ஸ் அப் உபயம்..

Monday, April 24, 2023

கவியாகிப் போகும் உணர்வு..

 குவளை நீரில்

பால் கலக்க
மெல்ல மெல்ல
நிறம் மாறிப் போகிறது நீர்
பாலாகிப் போகிறது நீர்

இருளில்
ஒளிகலக்க
மெல்ல மெல்ல
ஒளியாகிப் போகிறது இருள்
பகலாகிப் போகிறது இரவு

மண்ணுக்குள்
விதை கலக்க
மெல்ல மெல்ல
நிலை மாறிப் போகிறது விதை
பயிராகிப் போகிறது விதை

உணர்வுக்குள்
சிந்தனை கலக்க
மெல்ல மெல்ல
கனமாகிப் போகிறது உணர்வு
கவியாகிப் போகிறது உணர்வு

Thursday, April 20, 2023

சிலிர்த்துத் திரிவோம் வா..

 உழைத்துக் களைத்தவன்

மீண்டும் துள்ளி எழ
புத்துணர்ச்சி பெற
என இருந்த கலைகள் எல்லாம்

ஓய்ந்து கிடப்பவனுக்கும்
உளறித் திரிபவனுக்கும்
ஊன்றுகோல் ஆகிப் போய்
வெகு நாளாகிவிட்டது

மனத்தளவில்
பள்ளத்தில் கிடப்பவனை மேட்டுக்கும்
மேட்டில் இருப்பவனை உச்சத்திற்கும்
ஆற்றுப் படுத்திக் கொண்டிருந்த
கலைகள் எல்லாம்

நிற்பவனைத் தள்ளாடச் செய்யவும்
தள்ளாடுபவனை வீழச் செய்யவுமான
சதுப்பு நிலமாகிப் போய்
வெகு காலமாகிவிட்டது

தேவையான உணவுக்கும்
பசிக்கும் இடையினில்
நொறுக்குத் தீனியாய் இருந்த
கலைகள் எல்லாம்

துரித உணவாகி
அதுவே முழு உணவாகி
சக்திக்குப் பதில்
விஷமேற்றும் பொருளாகி
வெகு காலமாகிவிட்டது

இந்நிலையில் கவி முலம்
அறம் கூறி அறிவுரை கூறி
காணாமல் போகாதே
"ஐய்யோ பாவமென்னும்" பட்டமேற்று
பரிதவித்துப் போகாதே

"டைம் பாஸுக்கென "
தனிப்புத்தகமே வந்தபின்
காலத்தின் அருமையைச்
சொல்ல முயலும்
முட்டாள்  நிலை  நமக்கெதற்கு  ?

விஷத்தின் மீது தேன்தடவி
விற்கிற கலையினைப்பயின்று
கவிதைகள் புனைவோம் வா
ஆடுகள் இடையில் சிங்கமென நாமும்
சிலிர்த்துத் திரிவோம் வா

Monday, April 17, 2023

விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்..


 இலையைப் பறித்து வந்து சாப்பிட்டு முடித்து விட்டு பின் குப்பைத் தொட்டியைத் தேடி ஓடுவதற்குப் பதில் இப்படிச் செய்யலாம் என்றான். விடாக்கண்டன்.............................  அதற்குக் கொடாக்கண்டன்  சிரித்தபடிச் சொன்னான்...இதை விட அரிசியைக் கழுவித் தின்று விட்டு கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு வயிற்றை அடுப்பில் காட்டலாம் என்றான்..(கொஞ்சம் சிரிப்போமே)

Thursday, April 13, 2023

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

 *தமிழ் புத்தாண்டு*


ஒரு ஆரவாரம் இல்லை....


நள்ளிரவு நாய்கள்போல் ஊளைஇல்லை.


டாஸ்மாக்கில் கூட்டம் அலை மோதவில்லை


குடித்துவிட்டு கும்மாளமிடும் கூட்டமில்லை


பார்ட்டிகுடுடா மச்சி என்று பல்இளிக்கும்

பரதேசிகள் இல்லை.


குடித்துவிட்டு வாகனங்களில் பந்தயம் வைத்து பறந்துசென்று  உயிரைவிடும்

பைத்தியக்காரத்தனமில்லை...


நட்சத்திர விடுதியில் நடன அரங்கில்லை


நள்ளிரவு முழுதும்

காமகளியாட்டங்கள் இல்லை...


தூங்கிக்கொண்டு இருக்கும்

தொட்டில்குழந்தையை துடித்து அழவைக்கும் பட்டாசு வெடி இல்லை..


என்னதான் புத்தாண்டாய் இருந்தாலும்


காலையில் யாரிடமாவது இலவசமாக

காலண்டர் கிடைக்குமா என்கிற

எதிர்பார்ப்புமில்லை


அதனால் ஏமாற்றமுமில்லை...


வருடத்திலேயே டாஸ்மாக் வியாபாரம்

மந்தமான நாள்


ஆனால்.....?

இத்தனையும்தாண்டி.....


மனதில் ஓர் அமைதி......

நல்லநாள் எனும் 

நம்பிக்கையோடு மகிழ்ச்சி......


எல்லோர் மனதிலும்,எல்லா வீட்டிலும்

ஒரு தெய்வீக உணர்வு.

குழந்தைகள்முதல் பெரியவர் வரை கோவில் தரிசனம் 

இதில் 


ஜாதிகள் வேறுபடுத்தவில்லை...


ஏற்றதாழ்வு இல்லை. 

ஏமாற்றம் இல்லை...


தமிழ்த்தாயையே 

வரவேற்று உபசரிப்பதாய் ஒவ்வொருவருக்கும் பூரிப்பு


என் தமிழ்

என் தாய்மண்

என் வீரம்

என் கலாசாரம்

என் பண்பாடு.......

என் அமைதி....

என் ஒழுக்கம்.....

என் மக்கள்....


தலை நிமிர்கிறேன் நான்.....

இந்தியத் தமிழனாக...


என் அன்பு நண்பர்களுக்கும் சொந்தங்களுக்கும் அனைவருக்கும் 


இனிய புத்தாண்டு திருநாள் நல்வாழ்த்துக்கள்…(வாட்ஸ் அப்புக்கு நன்றி)

Tuesday, April 4, 2023

இனிய பயணமே வாழ்க்கை..

 சங்கடங்களைச் சந்திக்க

 சங்கடப்படுவோன்....

சுகச் சூழல் விடச்
சஞ்சலப்படுவோன்....

சராசரித்தனம் தாண்டச்
 சாத்தியமே இல்லை

நினைவு அலையின்   மடியிலேயே
முழுமனம் பதித்தவன்...

அடி ஆழம் செல்ல
அச்சப்படுபவன்....

சாதனை முத்தெடுக்கச்
சத்தியமாய் வாய்ப்பே இல்லை

சூழல் மறந்த
நேர்ச்சிந்தனையும்

இழப்புகளைத் தாங்கும்
 மனவலிமையும்

கொண்டவனே
 சிகரத்திற்குப் பாத்தியப்பட்டவன் 

ஒவ்வொரு நாளையும்
புதிய நாளாகவே  கொள்வதும்

ஒவ்வொரு செயலையும்
புதிதெனச்  செய்தலுமே

தொடர்ந்து வெல்வதற்கான
கம்ப  சூத்திரம்

இழந்தவைகளையும்
கடந்தவைகளையும்
கனவெனவே  கொள்வோம் வா

நடப்பதையும்
நடக்க இருப்பதையும்
நினைவினில் கொள்வோம் வா

வெற்றியும் சாதனையும்
நாம் அடையும் இலக்கல்ல
கடக்க  ஒரு குறியீடு  அவ்வளவே

தொடர்ந்து  குறியீடுகள் கடப்பதில்
கவனம் கொள்வோம்  வா வா

 இனிய பயணமே வாழ்க்கை
இரசித்துப்  பயணிப்போம் வா வா