Wednesday, December 30, 2020

புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

 இன்றோடு.......

தளரட்டும் உடையட்டும் ஒழியட்டும்
தடையெனவே கிடந்தவைகள் எல்லாமே
நாளைமுதல்
வளரட்டும் படரட்டும் செழிக்கட்டும் 
வாழ்விற்கு வளம்சேர்க்கும் எல்லாமே

இருளோடு
நகரட்டும் விலகட்டும் மறையட்டும்
சுமையெனவே துயர்தந்த எல்லாமே
ஒளியோடு
பரவட்டும் தொடரட்டும் பலம்பெறட்டும்
நல்லோர்க்கு நலம்சேர்க்கும் எல்லாமே

அடியோடு
உடையட்டும் நொறுங்கட்டும் சிதறட்டும்
பொய்மைக்குத் துணைப்போன எல்லாமே
அழகோடு
நிறையட்டும்  நிமிரட்டும் வலுக்கட்டும்
உண்மைக்கு வலுசேர்க்கும் எல்லாமே

நிலையாக
கிழியட்டும் எரியட்டும் அழியட்டும்
கீழ்மைக்குத் துதிபாடும் எல்லாமே
விளைவாக
வளரட்டும் உயரட்டும் நிலைக்கட்டும்
உன்னதத்தின் எழில்கூட்டும் எல்லாமே

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

6 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமை. இன்றோடு அகலட்டும் இந்த பிணி பயங்களும்... நல்லதோர் புத்துணர்ச்சி வாழ்க்கை நாளை முதல் அனைவருக்கும் உதயமாகட்டும். அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி.

தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதே நடக்கட்டும்...

மனோ சாமிநாதன் said...

மனம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

ஸ்ரீராம். said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

பிலஹரி:) ) அதிரா said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ரமணி அண்ணன்..

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

அருமை ஐயா
தீமைகள் அகலட்டும், நலங்கள் நிறையட்டும்!

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

Post a Comment