"அப்பா இன்னைக்கு நாம இந்த நாட்டில்
உள்ள முக்கியமான
மிருகக் காட்சிச் சாலைக்குப் போறோம்"
என்றாள் என் மகள்..
"நான் நம்ம ஊரூலேயே நிறைய
மிருகக் காட்சிச் சாலையைப்
பார்த்துவிட்டேன் .வேறு
எங்காவது போவோம் "என்றேன்
"அப்பா இது நம்ம ஊர்
மிருகக் காட்சி சாலைபோல இருக்காது
மிருகங்கள் எல்லாம் சுதந்திரமாய்த் திரியும்
நாம தான் கூண்டு வண்டியில பாதுகாப்பாய் இருந்து
அதைப் பார்க்கணும்." என்றாள்
"ஓ.. நம்ம ஊருல சட்டத்த மதிக்கிறவங்க
வாழற மாதிரியா.." என்றேன்
"எக்ஸாட்லி " என்றாள் மெல்லச் சிரித்தபடி...
 
 
8 comments:
சரிதான்... (!)
Super
ஹா.. ஹா..
அருமை...
மிகவும் அருமை மகிழ்ச்சி நல்ல இடுக்கை நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/
வித்தியாசமான அணுகு முறை
விலங்குகளை மிருகக் காட்சி சாலைகளில் அடைத்து வைத்திருப்பது காண வேதனை தான். அங்கே சென்று வந்த போது கிடைத்த அனுபவங்களையும் சொல்லுங்களேன்.
அருமை
Post a Comment