Sunday, October 11, 2020

ஆம் பதிவர் சந்திப்பில் உச்சம் இதுவே...

  நான் சிறுவனாக இருக்கையில்

எல்லா விஷயங்களிலும் ஒற்றுமையாக
இருந்தவர்கள் எல்லாம்  சிவாஜி
எம்.ஜி.ஆர் விஷயத்தில் இரண்டாகப்
பிரிந்து விடுவோம்

யாராக இருந்தாலும் இரண்டில் யாராவது
ஒருவர் பக்கம் நின்றாகவேண்டும்

இரண்டு பக்கமும் என்பதற்கெல்லாம்
அப்போது வாய்ப்பே கிடையாது

எப்படித்தான் அருமையாக சண்டைப்
போட்டாலும்  எம்.ஜி ஆர்அவர்களுடன்
ஒப்பிட்டுப் பேசுதல் என்பது கிடையாது
அவர் லெவலே வேறு

ஆனால் புதிதாக நடிக்க வந்தவர்கள்
யாராக இருந்தாலும் மிகச் சிறப்பாக நடித்தால்
அவரை சிவாஜி அவர்களுடன் ஒப்பீடு
செய்வோம்.அனேகமாக அது
சிவாஜிக்கு முக்கால்  வருவார்,அரை வருவார்
கால் தூசி பெறமாட்டார் என்பதைப்
போலத்தான் எப்போதும் இருக்கும்

எனக்குத் தெரிய அந்த லிஸ்டில் மேஜர்
சவுந்திரராஜன்,ஏ.வி எம் ராஜன் எல்லாம்
 வந்து போனதுண்டு

ஆனால் யாரும் சிவாஜி அவர்களுக்கு
இணையாக வந்ததில்லை

அதைப் போலவே இனி பதிவர் சந்திப்பு
என்றால் புதுகைப் பதிவர் சந்திப்புத்தான்
நிச்சயம் ஒரு அளவுகோலாக இருக்கும்
புதுகைப் பதிவர் சந்திப்புப் போல் வராது
அல்லது புதுகைச் சந்திப்பைப்போலச்
சிறந்தது,அல்லது புதுகைப் பதிவர் சந்திப்பை
விட மிகச் சிறப்பாக இருந்தது
என்பதைப் போலத்தான் நிச்சயம் இருக்கும்

அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக பதிவர்
சந்திப்பை நடத்தி முடித்த அனைவருக்கும்
அதற்கு முழுமையாக அனைத்து விதத்திலும்
ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும்
மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்
கொள்வதோடு...

இந்த ஒற்றுமையும்,அமைப்பும் பதிவர்
சந்திப்பு நடத்துவதற்காகக்த்தான்
என்பதற்காக மட்டும் இல்லாது,

பதிவர்களுக்குள் எப்போதுமே ஒரு
இணப்புப் பாலமாக இருக்கும்படியான
ஒரு அமைப்பாக மாற்றினால்...

கூட்டு முயற்சியில் பொதுவாக ஒரு
வலைத்தளம்(தமிழ்மணம் போல் )
உருவாக்கும்படியான முயற்சியில் ஈடுபட்டால்...

புத்தகமாக தமது படைப்புகளை வெளிக்
கொணர விரும்புவோருக்கு  உதவும் ஒரு நல்ல
அமைப்பாக மாறினால்...

தொழில் நுட்ப ரீதியாக ஆலோசனை
வேண்டுவோருக்கு எப்போது வேண்டுமானாலும்
உதவும் ஓர் அமைப்பாக மாறினால்..

நல்லதோர் வீணையை  நலங்கெடாது
அதற்குரிய உயரிய பீடத்தில் வைத்தது போலாகும்
எனக் கூறி எனது இந்தத் தொடர்பதிவை
மகிழ்வுடன் நிறைவு செய்கிறேன்

வாழ்த்துக்களுடன்....(ஆம் இதே நாளில் 2015 ல் பதிந்தது )
























8 comments:

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம்தான்.  

திண்டுக்கல் தனபாலன் said...

நடந்த நான்கில் புதுகை பெருமை என்றாலும்...

மதுரை சந்திப்பும் மறக்க முடியாதது...

KILLERGEE Devakottai said...

அருமையாக சொல்லியுள்ளீர்கள்.

படங்கள் ஸூப்பர்

G.M Balasubramaniam said...

புதுவை படிவர் சண்ட்ப்பில் சில குறைகள் ருண்டன சொன்னபோதுபொங்கி எழுந்தவரு உண்டு சொன்னது இன்னும் சிறக்கச்செய்யவே அல்லாமல் வெறு மே குறை கூற அல்ல என்பது பலருக்கும் தெரிய வில்லை

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு சந்திப்பு. அது பற்றி மீண்டும் படிக்கத் தந்தமைக்கு நன்றி.

சென்னை சந்திப்பில் நாம் சந்தித்தது இன்றைக்கும் நினைவில்!

சிவபார்கவி said...

I missed to receive 2 prize in this moment, also unable to mingle in this great event. Thanks a lot for everyone who worked behind. Wishes to arrange again in simple manner at Madurai, or Trichy !

மனோ சாமிநாதன் said...

படங்களும் தகவல்களும் அருமை!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

பதிவர் சந்திப்பின் இனிய நினைவுகள் எப்போதும் உண்டு. புதுகைக்கு வர முடியாவிட்டாலும் போட்டிகளில் கலந்துகொண்டது..
மதுரை சந்திப்பு இனிதாய்..என் நூல் வெளியீட்டோடு..

Post a Comment