Thursday, October 28, 2021

வாலி...நீ வாழீ

 இன்று அக்டோபர் 29


கவிஞர் வாலி அவர்களின் 

பிறந்த நாள்.


      கவிஞர் வாலி (இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன்)


பிறப்பு:29அக்டோபர்,1931

மறைவு:18 ஜூலை, 2013


   தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார். 

   இவர் எழுதிய பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் ஆகிய கவிதைத் தொகுப்புகள் புகழ் பெற்றவை.

    ஆனந்த விகடன் இதழில் வாலி தான் பழகிய ஆளுமைகள் பற்றி எழுதிய‌ 'நினைவு நாடாக்கள்' என்ற தொடரும் பெயர் பெற்றது.

    வாலி திரைப்படங்களுக்கு 

15,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 

    இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.அவர் நடித்த திரைப்படங்களுள் சத்யா, ஹேராம், பார்த்தாலே பரவசம், பொய்க்கால் குதிரை ஆகியவை குறிப்பிடத்தக்கவை. 

    மேலும் 'கையளவு மனசு' என்ற தொலைக்காட்சித் தொடரிலும் வாலி நடித்துள்ளார்.                 

     ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட வாலி பிறந்தது திருப்பராய்துறையில், வளர்ந்தது திருவரங்கத்தில்.

    ஓவியர் மாலி போல இவர் பெயர் எடுக்க வேண்டும் என்று பள்ளித்தோழன் பாபு, வாலி என்ற பெயரைச் சூட்டினான்.

    தன் நண்பர்களின் துணையுடன் ‘நேதாஜி” என்னும் கையெழுத்துப் பத்திரிக்கையைத் துவக்கினார். அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் எழுத்தாளர் கல்கி. அன்று திருச்சி வானொலி நிலைய அதிகாரி பார்த்தசாரதி அவர்களும் வந்திருந்ததால் வானொலிக்கு கதைகள் நாடகங்கள் எழுதிக் கொடுக்கும் வாய்ப்பு வாலிக்குக் கிடைத்தது.

    திருவரங்கத்தில் 

வாலி நடத்திய அந்தக் கையெழுத்துப் பத்திரிகையில் பல இளைஞர்கள் பங்கேற்றுக் கொண்டனர்.அப்படிப் பங்கேற்று கொண்டவர்களில் ஒருவர் பின்னாளில் புகழ்பெற்ற எழுத்தாளரான சுஜாதா.       

    இவர் சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தங்கள் எழுதியுள்ளார்.

    அவற்றுள் குறிப்பிடத்தக்கவை: அம்மா, பொய்க்கால் குதிரைகள், நிஜ கோவிந்தம், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம் மற்றும் அவதார புருஷன். 

   வாலி அவர்களின் 80வது பிறந்தநாள் அன்று நடைபெற்ற விழாவில், 'வாலி 1000' என்ற பெயரில், வாலியின் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையிசைப்பாடல்கள் புத்தகமாக வெளியிடப்பட்டது.

      இவரது பாடல்களில் குறிப்பிடத்தக்க

பாடல்கள் சில:


" ஏன் என்ற கேள்வி கேட்காமல் வாழ்க்கை இல்லை... "( ஆயிரத்தில் ஒருவன் 1968)


" மல்லிகை என் மன்னன் மயங்கும்... " (தீர்க்க சுமங்கலி 1974)


" மாதவிப்பொன் மயிலாள் தோகைவிரித்தாள்... "( இரு மலர்கள் 1967)


நான் ஆணையிட்டால் (எங்க வீட்டு பிள்ளை 1965)


காற்று வாங்க போனேன் - (கலங்கரை விளக்கம் 1965)


சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ- (சந்திரோதயம் 1966)


வெற்றி வேண்டுமா போட்டு பாரடா - (எதிர்நீச்சல் 1968)


இறைவா உன் மாளிகையில்- (ஒளிவிளக்கு 1968)


அந்த நாள் ஞாபகம் - (உயர்ந்த மனிதன் 1968)


புன்னகை மன்னன் பூவிழிகண்ணன்- (இருகோடுகள் 1969)


ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி (சுபதினம் 1969)


மதுரையில் பறந்த மீன்கொடியை- (பூவா தலையா 1969)


     இவர் பெற்ற விருதுகள்:

     பத்மஸ்ரீ விருது-2007

         

     1973-ல் 'இந்திய நாடு என் வீடு' என்ற பாரத விலாஸ் திரைப்படப் பாடலுக்காகக் கிடைத்த இந்திய தேசிய விருதை மறுத்தார்.

     வாலி ஐந்துமுறை சிறந்த திரைப்படப் பாடலாசிரியருக்கான மாநில அரசின் விருது பெற்றவர்.

     கவிஞர் வாலி ஒரு படத்தையும் இயக்கியுள்ளார். "வடை மாலை" (1982) என்ற படத்தை ஒளிப்பதிவாளர் மாருதிராவுடன் இணைந்து இவர் (வாலி) இயக்கியுள்ளார். இப்படத்தின் வசனம் மற்றும் பாடல்களை இவர் எழுதியுள்ளார். 

     2013ஆம் ஆண்டு ஜூன் மாதம் 7ஆம் நாள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் 18 ஜூலை 2013 அன்று காலமானார்...நன்றி வாட்ஸ் அப்


3 comments:

Post a Comment