Tuesday, December 12, 2017

சராசரித்தனமும் அதீதமும்

சராசரித்தனம் எதையும் சாதித்ததில்லை
அதீதமே அனைத்து மாறுதலுக்கும்
மூலகாரணமாயிருக்கிறது

வெறித்தனம் அனைத்து அழிவிற்கும்
காரணமாதல் போலவே

காதல் எதையும் அழித்து இரசித்ததில்லை
காமமே அனைத்தையும் அழித்து
சுகம் காணவிழைகிறது

ஜாதி மத வெறி அனைத்து அழிவிற்கும்
காரணமாதல் போலவே

பாசம் மருமகனைக் கொன்று
மகளைக் கொள்ள நினைப்பதில்லை

ஜாதி வெறியே எதையும் அழித்து
நினைத்ததைச் சாதிக்க நினைக்கிறது

காதல் கூட பழிக்குப் பழிக்குப் பழி வாங்கி
கணக்கை நேர்செய்ய முயல்வதில்லை

காமமே தந்தையோடு பெற்றதாயையும்
பலி கேட்டு தன்முனைப்புக்குத் தீனியைத் தேடுகிறது

நற்சமூகம் எச்சிறு அழிவையும் இரசிப்பதில்லை
மன அழுக்குச் சமூகமே பிறர் அழிவில்
தன் கொடிக்கு வலுசேர்க்க நினைக்கிறது

அழிகிற இரண்டு குடும்பங்கள் குறித்த
எந்தப்  பச்சாதாபமும் இன்றி
இரு கூறாய்ப் பிரிந்து

பட்டிமன்றம் நடத்துகிற
ஊடகங்கள் போலவே
மதிகெட்ட ஜாதி அரசியல் தலைவர்கள் போலவே

4 comments:

KILLERGEE Devakottai said...

முடிவில் தந்த வரிகள் அருமை கவிஞரே.
த.ம.2

தலை மறைவான அதிரா said...

கவிதையை ரசித்தேன்..

//பாசம் மருமகனைக் கொன்று
மகளைக் கொள்ள நினைப்பதில்லை///
எழுத்துப்பிழையைத் திருத்திடுங்கோ ரமணி அண்ணன்.

ஸ்ரீராம். said...

சரி, இந்த நிலையை எப்படி சீராக்குவது?

கரந்தை ஜெயக்குமார் said...

வேதனை
தம +1

Post a Comment