Wednesday, November 24, 2021

வன் கொடுமை ஒழிப்பு நாள்..

 இன்று நவம்பர் 25


பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள். 


   டொமினிக்கன் குடியரசில் 

1960 நவம்பர் 25 ல் 

மிராபெல் சகோதரிகள் என அழைக்கப்படும் மூன்று சகோதரிகள் அவர்களின் அரசியல் செயற்பாடுகளுக்காக அந்நாட்டின் அன்றைய ஆட்சியாளர் உத்தரவின் பேரில் படுகொலை செய்யப்பட்டனர்.

    பாதிக்கப்படும் பெண்களுக்கெதி

ராகவே இவர்கள் சிறப்பாகக் குரல் கொடுத்தவர்கள்.

    'மறக்கமுடியாத வண்ணத்துப் பூச்சிகள்" என்று பின்னர் உலகில் பெயர் பெற்ற இந்த மிராபெல் சகோதரிகள் இலத்தீன் அமெரிக்காவில்   

பெண்களுக்கு எதிரான வன்முறைக் கொடுமையின் சின்னமாக மாறினார்கள். 

   1980 ஆம் ஆண்டு முதல் அந்த நாள் அவர்களின் படுகொலையை நினைவு கூருவதற்காகவும், பால்நிலை வன்முறைகளுக்கு 

எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் தெரிவுசெய்யப்பட்டது.

    ஐக்கிய நாடுகள் 

பொதுச்சபை 1999 

டிசம்பர் 17 ஆம் நாள் கூடிய போது ஆண்டு தோறும் நவம்பர் 25 ஆம் நாளை பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினமாகப் பிரகடனம் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

    பெண்களுக்கு, சமுதாயத்தில் ஓரளவு அங்கீகாரம் கிடைத்திருந்தாலும், அவர்கள் மீதான வன்முறைகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.

    பாலியல் கொடுமை, குடும்ப வன்முறை, போர்கள், கலவரங்கள், மோதல்களில் பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் குற்றங்கள் மற்றும் பிற வடிவங்களினால் வன்முறைக் கொடுமைகளுக்கு உலகம் முழுவதும் பெண்கள் ஆளாகி வருகின்றனர். 

    உலகில் மூன்றில் ஒரு பெண், அவளின் வாழ்நாளில் ஒருமுறையேனும் கொடுமையான வன்முறைக்கு ஆளாகிறாள் என்று ஆய்வு கூறுகிறது.

     இவற்றைத் தடுத்து நிறுத்த உரத்துக் குரல் கொடுக்க வேண்டிய நாள் இன்று.


No comments:

Post a Comment