Friday, June 24, 2022

நம்பி...யார்...

 ❣️ #நம்பி_யார். ....??!!


சென்னையில் செய்தியாளர்களிடம்  நடிகர் மாதவன் #ராக்கெட்டரி திரைப்படத்தை அறிமுகம் செய்து பேசினார்.


இஃது முழுக்க முழுக்க நிஜத்தில் நடந்த கதை..... கிட்டதட்ட சமீபத்தில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை ஒத்த விதத்தில் வந்திருக்கிறது. இத்திரைப்படம் நம் இந்திய விஞ்ஞானி திரு. நம்பி நாராயணனை குறித்து பேசுகிறது‌. 


நம் சமகாலத்தில் நம்மோடு  வாழும் நம் இந்திய விஞ்ஞானி திரு நம்பி நாராயணன் தான் சொந்தமாக கண்டடைந்த...... இந்த உலகின் ஆகச் சிறந்த க்ரையோஜனிக் இஞ்சினை.... இந்திய ராக்கெட் தொழில்நுட்பத்தின் உயிர் நாடியை...... இந்த சாதனையை செய்தற்காகவே அவர் பட்ட துன்பங்களை.... அனுபவித்த வேதனைகளை.... இத்திரைப்படத்தில் வாயிலாக நாம் அறிய சொல்ல இருக்கிறார்கள்......


செயற்கரிய செயல்களை செய்தால் இந்த உலகம் கொண்டாடும் என்பதற்கு மாறாக..... இவரது இந்தஅ ரிய கண்டுபிடிப்பிற்காக ....... செல்லரித்த நம் இந்திய அரசியல் கட்சி (காங்கிரஸ்) ஆட்சி காலத்தில்  படாதபாடு பட்டிருக்கிறார். இதனால் இவருக்கு மட்டுமே பாதிப்பு இல்லை..... ஒட்டுமொத்த தேசமும் சுமார் 17 ஆண்டு காலம் விண்வெளி துறையில் பின்தங்க நேர்ந்தது. ஆனால் இவை குறித்து நம் யாருக்கு சரியாக தெரியாது...... அல்லது அப்படி தெரியாமல் பார்த்து கொண்டார்கள்.


உதாரணமாக ஒன்று பாருங்கள்.....


இவரது கண்டுபிடிப்பில் உருவான இந்த க்ரையோஜனிக் இஞ்சின் இது நாள் வரை ஒரேயொரு முறை கூட ஃபெயிலியர் ஆனது இல்லை....... சரியாக சொன்னால் .0% கூட இயங்காமல் நின்றது இல்லை என்கிற ரெக்கார்ட் இருக்கிறது. இஃது மஹா உலக சாதனை. ஆனால் இவை குறித்து எந்த ஒரு தகவலும் வெளியே தெரிவிக்கப்பட்டதில்லை.


இவரது இந்த கண்டுபிடிப்பால் மட்டுமே மங்கள்யான் மற்றும் சந்திராயன் கனவிலும் நினைத்துப் முடியாத மிக குறைந்த செலவில் சாத்தியமாகி இருக்கிறது....... இதோ நாளைய நம் இந்திய தேசத்தின் மிக முக்கியமான ககண்யான் விண்வெளி திட்டமும் சாதிக்க காத்துக் கொண்டு இருக்கிறது.


இத்தனைக்கித்தனை சாதித்த இவரது தொழில்நுட்ப பண்புகளுக்காக இவர் பெற்ற பெயர் பெண் மோகத்தால் தேசத்தின் விண்வெளி திட்டத்தை அந்நிய சக்திகளுக்கு விற்றார் என்கிற ரீதியிலான கடும் குற்றச்சாட்டு.

இவர் நீதிமன்ற விசாரணையின் போது இவர் சொன்னது... குற்றம் சாட்டப்பட்ட பெண்ணை தன் வாழ்நாளில் இது நாள் வரை நேரில் பார்த்தது கூட இல்லை என்பது தான்........ அதுதான் உண்மையும் கூட...... இதனை ஆதாரங்களுடன் நிரூபிக்க அவருக்கு பதிமூன்று ஆண்டு காலம் பிடித்திருக்கிறது. அதாவது அத்தனை ஆண்டு காலம் நம் இந்திய தேசத்தின் விண்வெளி திட்டத்தை தள்ளி வைத்து விளையாட்டு காட்டி இருக்கிறார்கள் அந்நிய சக்திகள்.


1969 முதல் 2014 ஆண்டு காலம் வரை நடந்தவற்றை நடந்த விதமாகவே பதிவு செய்து இருப்பதாக இத்திரைப்பட குழு சொல்கிறது.


மிக முக்கியமாக மாதவனே இத்திரைப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார்....... அல்ல அல்ல..... வாழ்ந்து காட்டி இருக்கிறது. நேரிடையாக நம்பி நாராயணனோடு கலந்து ஆலோசித்து அவரோடு வாழ்ந்து இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். அவர் இயக்கும் முதல் திரைப்படமும் இதுவே‌.... படத்தினை நேரிடையாக தமிழ் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எடுத்து இருக்கும் அவர்..... உலகளவில் எட்டு நாடுகளில் எட்டு மொழிகளில் நேரடியாக டப் செய்யப்பட்டு வரும் ஜூலை முதல் நாள் வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.


கேரளாவில் வசித்து வரும் இவரை..... இந்த நம்பி நாராயணனை பலரும் மலையாள பிராமணர் என்றே நினைத்துக்கொண்டு இருக்கிறார்கள். அது தவறு. நம் தமிழகத்தில் நாகர்கோவில் பிறந்த சுத்தமான ஸ்ரீவைஷ்ணவ பிராமணர் இவர் . மாஞ்சேரி நாராயண நம்பி தெரிந்து வைத்துக் கொண்டு இருப்பவர்கள் கூட இவரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை....... இந்த பெயரில் சொன்னால் கூட நமக்கு சரிவர புரியாது போகலாம்...... M.N. நம்பியார் உடனே தெரியும்.இவரது மகன் தான் பாஜகவின் முக்கிய பிரமுகர் சுகுமாரன் நம்பியார்.


போகட்டும் நம் விஷயத்திற்கு வருவோம்.... நம்பி நாராயணனை முழுவதுமாக தெரிந்த கொள்ள நம் இந்திய தேசத்தின் சமகால வரலாற்று பக்கங்களை புரட்டி பார்ப்பதற்கு சமமானதாக இருக்கும். இன்றைய காலகட்டத்திற்கு மிக முக்கியமான ஒன்றும் கூட தான் அது. அத்தனை முக்கியமான பல விஷயங்கள் அதில் பொதிந்து கிடக்கின்றன.

இன ரீதியாக.... ஜாதி வாரியாக..... பிரிந்து நின்று பார்த்தால் ஒன்றும் கிடையாது..... இந்தியனாக ஒன்றிணைந்து பார்த்தால் நம் தேசம் எத்தனை சூழ்ச்சி கரமான பாதையிலும் திறமையாக நடை போடுகிறது என்பது புரியும்.அதற்கு ஆகச் சிறந்த உதாரணம் இவர்.


நம் கடந்த கால பதிவுகளில் இந்திய விமானங்களை பற்றியும்..... அது கடந்து வந்த பாதை பற்றியும் விவாதித்து இருக்கிறோம்..... அதனை ஒட்டிய ராக்கெட் தொழில்நுட்பத்தின் பங்களிப்பும் அதிலிருந்து பிரிந்த ஏவுகணை தொழில்நுட்ப பண்புகளுக்காக நாம் எதிர்கொண்டு சர்வதேச சதிவலையின் சோதனைகளும்...... இவர் போலான இந்திய விஞ்ஞானிகள் பட்ட துன்பங்களும் நம் மனக் கண் முன்னே காட்சிகளாக விரிவடையும்........ 


இது நாள் வரை இங்கு நம் இந்திய தேசத்தில் எதுவும் மாறவில்லையோ என்று எண்ணும் அளவிற்கே இங்கு காரியங்கள் நடைபெற்று வருகின்றன......


எந்த ஒரு இந்திய நலன் சார்ந்த திட்டங்களும் நம்மை வந்து சேர நெருப்பாற்றில் நீந்தி வர வேண்டி இருக்கிறது..... நம் கண் முன்னே நம்முடன் இருப்பவர்களை கொண்டே நம் கண்களை குத்துகிறார்கள். உதாரணத்திற்கு #அக்னி_பாத் திட்டம் ஒன்றே போதும். இஃது நம் தமிழகத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிர் நீத்த நம் இந்திய முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் அவர்களின் கனவு திட்டங்களில் ஒன்று தான் இது என்பதே நம்மில் பலருக்கும் தெரியாத சமாச்சாரமாகவே இன்றளவும் இருக்கிறது.


நாம் நம் தேசத்தில் போர் விமானங்களை சொந்தமாக நாமே உருவாக்கி இருக்கிறோம்....... அவற்றை கொண்டு தாக்குதல் நடத்தி வெற்றியும் பெற்று இருக்கிறோம் என்பது வெறும் கடந்த கால வரலாறு மாத்திரம் அல்ல...... நாளைய சரித்திரமும் கூட....... அதற்கு சாட்சியாக.... சான்றாக.... மீண்டும் நாமே சொந்தமாக போர் விமானங்களை உருவாக்கி கொண்டு இருக்கிறோம்....... அதுவும் சர்வதேச தரத்திலான போர் விமானங்களை வெறும் சொகுசு படகுகளின் விலையில்....... இதனை வல்லரசு நாடுகளால் ஏற்றுக்கொள்ள முடியாமல் தத்தளிக்கிறார்கள்...... எப்பாடுபட்டாவது தடுக்க துடிக்கிறார்கள்....... இதற்கு இங்கு உள்ள சில புல்லுருவிகளும் மதத்தின் பெயரால் .... இனத்தின் பெயரால் துணை நிற்கின்றனர்.......


இதற்கு ஆகச் சிறந்த சான்று இந்த நம்பி நாராயணன். இதுநாள் வரையில் கூட இவருக்கு..... இவரது குடும்பத்தினருக்கு யாரும் துணை நிற்கவில்லை...... வெறும் ஆறுதல் வார்த்தைகள் கூட இல்லை என்பது இந்த தேசத்தின் சாபக்கேடு என்பதை மாற்றிட வேண்டும். தேசத்திற்காக உழைப்பவர்களை கொண்டாடவில்லை என்றாலும் கூட பரவாயில்லை...... அவர்களை அவர்களது அறிவு திறனை இந்த தேசத்தின் சொத்துக்களாக பாதுகாக்கப்பட வேண்டும்.


அதற்குண்டான அவதானிப்பை இத்திரைப்படம் நமக்கு ஏற்படுத்தலாம்.


பொறுத்து இருந்து பார்க்கலாம்.


💓 ஜெய் ஹிந்த்.


பதிவு Sri Ram ji

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

மாதவனின் உண்மையான முகத்தை இரண்டு தாளாக பலரும் அறிந்து விட்டார்கள்...

ஸ்ரீராம். said...

சிறப்பு.

நெல்லைத்தமிழன் said...

அந்தக் காலத்திலேயே எம்பிக்கள், எதைக் கேட்கக்கூடாதோ அதை ஹோமி பாபாவிடம் பாராளுமன்றத்தில் வற்புறுத்திக் கேட்டு, அணுசக்தி சோதனையில் குறிப்பிடத்தக்க வெற்றி பெறுகிறோம் எனச் சொன்னபிறகு உடனேயே விமான விபத்தில் அவர் மறையவேண்டி வந்தது என க.உராசாராம் எழுதியதைப் படித்திருக்கிறேன்.

Anonymous said...

நமது பாராளுமன்ற உறுப்பினர்களின் மடத்தனத்தால் ஹோமிபாபா விமான விபத்தைச் சந்திக்க நேர்ந்தது என்று படித்திருக்கிறேன்.

மாதேவி said...

'சில புல்லுருவிகளும் மதத்தின் பெயரால் .... இனத்தின் பெயரால் துணை நிற்கின்றனர் ' கவலை கொள்ளும் விடயம்.

Post a Comment