பற்பலப் பொருள் தரும் ஒரு சொல்
பலப்பலச் சொற்கள் தரும் ஒரு பொருள்
தமிழுக்கே ஆன சிறப்பு
அது தழிழனுக்குத் தந்தது பெரும் செறுக்கு
ஆனால் இன்று
முரண்பட்ட இரு சொற்கள் தரும்ஒரே பொருள்
இது தமிழுக்கே ஆன அழுக்கு
அது தமிழனுக்குத் தருதே பெரும் இழுக்கு
நம் விருப்பமின்றி நம்மை ஆண்ட
அன்னியனுக்கான
"ஆக்கிரமிப்பாளன் "எனும் சொல்லும்..
நம் வெறுப்புடனேயே கூட
நம்மை விடாது ஆளும்
"ஆட்சியாளன் "எனும் சொல்லும்...
அடிமை நாடு என்பதற்கு அடையாளமாய்
தவறாது அன்னியனுக்குச் செலுத்திய
"கப்பம் "என்னும் வரியும்
நமக்குப் பயன்படாது
சுய நலத்துக்குச் சுருட்டவே எனத் தெரிந்தும் செலுத்தும்
"வரி "என்னும் கப்பமும்
நமக்காக ஆள்வதாக சொல்லியபடி
தனக்காக ஆட்சி செய்பவனுக்கான
"சர்வாதிகாரி "எனும் சொல்லும்
நம் விருப்பப்படியே என முழங்கியபடி
தான் தன் குடும்பத்திற்கென ஆளுவோனுக்கான
"மந்திரி "எனும் மடச் சொல்லும்....
இப்படித் தொடரும் முரண்பட்ட சொற்கள்
ஒரு பொருள் தரும் இந்த அவலத்தை
என்று நம் செயலால் மாற்றப் போகிறோம்
முன்பு போலவே
பற்பல பொருள்தரும் ஒரு சொல் தரும் பெருமையும்
பற்பல சொற்கள் தந்த ஒரு பொருள் அருமையும்
போதுமென நம் முயற்சியால் ஆக்கப்போகிறோம்
பலப்பலச் சொற்கள் தரும் ஒரு பொருள்
தமிழுக்கே ஆன சிறப்பு
அது தழிழனுக்குத் தந்தது பெரும் செறுக்கு
ஆனால் இன்று
முரண்பட்ட இரு சொற்கள் தரும்ஒரே பொருள்
இது தமிழுக்கே ஆன அழுக்கு
அது தமிழனுக்குத் தருதே பெரும் இழுக்கு
நம் விருப்பமின்றி நம்மை ஆண்ட
அன்னியனுக்கான
"ஆக்கிரமிப்பாளன் "எனும் சொல்லும்..
நம் வெறுப்புடனேயே கூட
நம்மை விடாது ஆளும்
"ஆட்சியாளன் "எனும் சொல்லும்...
அடிமை நாடு என்பதற்கு அடையாளமாய்
தவறாது அன்னியனுக்குச் செலுத்திய
"கப்பம் "என்னும் வரியும்
நமக்குப் பயன்படாது
சுய நலத்துக்குச் சுருட்டவே எனத் தெரிந்தும் செலுத்தும்
"வரி "என்னும் கப்பமும்
நமக்காக ஆள்வதாக சொல்லியபடி
தனக்காக ஆட்சி செய்பவனுக்கான
"சர்வாதிகாரி "எனும் சொல்லும்
நம் விருப்பப்படியே என முழங்கியபடி
தான் தன் குடும்பத்திற்கென ஆளுவோனுக்கான
"மந்திரி "எனும் மடச் சொல்லும்....
இப்படித் தொடரும் முரண்பட்ட சொற்கள்
ஒரு பொருள் தரும் இந்த அவலத்தை
என்று நம் செயலால் மாற்றப் போகிறோம்
முன்பு போலவே
பற்பல பொருள்தரும் ஒரு சொல் தரும் பெருமையும்
பற்பல சொற்கள் தந்த ஒரு பொருள் அருமையும்
போதுமென நம் முயற்சியால் ஆக்கப்போகிறோம்
3 comments:
'மந்திரி’ என்பது மடச்சொல்லானால்
’அமைச்சர்’ என்பது அருமையாக இருக்குமோ !
நாம் எதை மாற்றி மாற்றிச் சொல்லியும் சம்மந்தப்பட்ட யாரும்
தங்களைத் துளியும் மாற்றிக்கொள்வதாகத் தெரியவில்லை.
தங்கள் ஆதங்கம் நன்று பாராட்டுகள்
மாறினால் தான் நிம்மதி...
Post a Comment