Friday, February 26, 2021

அஸ்தமனத்திற்கு ஆரத்தி ?

 சமூக அக்கறைக் கொண்ட

சில அமைப்புகள் மட்டும்

குடிக்கெதிராய்ப்

போராடிக் கொண்டிருக்க


குடியால்

குடும்பம் 

சீரழிவது குறித்து

பெண்கள் மட்டுமே

தவித்துக் கொண்டிருக்க


குடித்துப் பழகிய

பெருங் கூட்டத்தின் 

பேரமைதி

பயமுறுத்துவதாய் இருக்கிறது


கூடவே குடியின் 

தீமை குறித்து

தம் தொண்டர்களுக்கு

அறிவுறுத்தாத தலைமை "களின்

 "கெட்டிக்காரத்தனமும்


"படிப்படியாய்  "என்பது

குடிகாரர்களுக்கு 

இப்போது இல்லை என்ற

சந்தோசமளிக்கும்

சமிக்கையோ என்றும்


சலுகைகளும்

இலவசங்களும்

" துயரில் அழுதிடும் 

பெண்களுக்குத் தருகிற

"குச்சிமிட்டாயாய் "

இருக்கலாமோ என்றும்


மிக லேசாய்

மனதில் ஒருஎண்ணம் பரவ

மனம் மிகப் பதைப்பதைக்கிறது

என்ன செய்யப் போகிறோம் ?


இனியாவது

தமிழகத்தின்

விடியலுக்கு 

வித்திடப் போகிறோமா ?


இல்லை

அஸ்தமனத்திற்கு

தொடர்ந்து

ஆரத்தி எடுக்கப் போகிறோமா?

3 comments:

ஸ்ரீராம். said...

அரசியலுக்கு முடிவில்லை!

திண்டுக்கல் தனபாலன் said...

விடியலுக்கு அஸ்தமனம்...

வெங்கட் நாகராஜ் said...

விடியல் கண்ணுக்கெட்டிய தூரம் வரை இல்லை என்றே தோன்றுகிறது. இன்றைய அரசியல் - முன்பை விட அழுக்கு!

Post a Comment