Saturday, October 15, 2011

தேர்தல்

எங்களூரில் இருபதான ஜாதீயப் பிளவுகள்
கொடிகளின் சலசலப்பில்
எட்டாகச் சுருங்கும்
தேர்தல் புயலில்
கொடிகள் அகோரத் தாண்டவமாடுகையில்
எட்டு
மீண்டும்
இருபதாகிப் பல்லிளிக்கும்

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்

அணில்களும் பட்டாம்பூச்சிகளும்
நேரம் சரியில்லை என
வீதி விட்டு ஒதுங்கி
வீட்டு மூலைகளில்
'முக்காடிட்டு' அமரும்

பாம்புகளும் ஓநாய்களும்
பொந்து விட்டு வெளியேறி
வீதிகளில்
"விட்டேத்தியாய்" உலா வரும்

துண்டு இழந்து வேட்டி இழந்து
அம்மணமானது தெரியாமல்
வார்த்தை ஜாலங்களில்
வான வேடிக்கைகளில்
மெய் மறந்து நிற்பர்
'திருவாளர்' பொதுஜனம்

நானே பெரும்பூதம்
நானே கருப்பணசாமி என
உறியடித்து
தீவட்டி சாட்டைகளோடு
ஊர் மிரள
ஊர் வலம் வந்து. . . .பின்
சிறிய தீய ஜந்துக்களுக்குக் கூட
சிறு தீங்கும் செய்யாது
மீண்டும் மலையேடறிப் போகும்
அதிகாரமிக்க 'ஆணையம்'
 
(அடுத்த தேர்தல்  வந்துவிட்டது  ஆயினும்
நிலைமைகள் எப்போதும்போல்தான்  உள்ளது 
எனவே புதிதாக  ஒரு பதிவு  போடாமல் 
பழைய பதிவையே  மிண்டும்  பதிவாகத
தந்துள்ளேன்  )

66 comments:

r.v.saravanan said...

எத்தனைமுறை காவடிஎடுத்தும்
அதிகாரச் சன்னதியின் திரைவிலக்காத
"மூலவர்களெல்லாம்"
"உற்சவ மூர்த்திகளாக" உருமாறி
குடிசை வாயில்களில்
நாளெல்லாம் தவமிருப்பர்

வரிகள் அருமை சார் தேர்தலின் உண்மையை தோலுரிக்கும் பதிவு

G.M.Balasubramaniam said...

இப்போதெல்லாம் நிலைமை மாறிவிட்டதாகவும் தேர்தல் ஆணையம் சீராகச் செயல்படுவதாகவும் கேள்விப் பட்டது தவறா.?

வெங்கட் நாகராஜ் said...

உண்மையை வெளிப்படுத்தும் நிதர்சனக் கவிதை... எப்போது மாறுவார்கள் இந்த அரசியல்வாதிகள்.....

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

உண்மை உண்மை

அருமை.

RAMA RAVI (RAMVI) said...

//கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்//

ஆம், அருமையான கவிதை.

குறையொன்றுமில்லை. said...

தேர்தல் சமயங்களில் நடக்கும் நிகழ்வுகளை நல்லா சொல்லிட்டீங்க.

ஸாதிகா said...

///கொள்ளையடித்ததுதானே
கொடுக்கட்டும் என
துண்டுக்குப்பதில் வேட்டியையே
விரித்துக் காத்திருக்கும்
"கெட்டிக்கார" மக்கள் கூட்டம்

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம் என
அதிகாரத் துணையோடு
இரவில் வீடுவீடாக
"கவர்" கொடுத்துப்போகும்
"வெறி" பிடித்த வேட்பாளர்கள் கூட்டம்
////


செமத்தியான சாட்டையடி.கவிதை வரிகளை கூர் வாளாக்கி செமையாக குத்தி உள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்.

கோகுல் said...

கொடுக்கவா செய்கிறோம்
விதைக்கத்தானே செய்கிறோம்

//

சரியா சொன்னீங்க!
மொத்தமாய் அறுவடை செய்யத்தான்
விதைக்கிறார்கள்!
த.ம.4

மாலதி said...

தேர்தல் நாளில் ஒரு சிறந்த படிப்பு ஆம் படைப்பு அல்லவே இங்கு பலருக்கு படிப்பிற்கும் படைப்பிற்கும் வேறுபாடு புரிபடுவதில்லை அதனால்தான் திருவாளர் போது மக்கள் கொடுக்கும் போஹு வாங்கி பின்னர் அல்லல் படுகிறனர் பாராட்டுகள் நன்று

Unknown said...

உண்மையை

உண்மையாகவே வெளிப்படுத்தும் கவிதை

அம்பலத்தார் said...

தேர்தல் ஆணையகம் தீவிரமாக செயல்படுவதாக கூறப்படுகிறதே. ஆயினும் நிலைமையில் மாற்றம் இல்லையா?

கீதமஞ்சரி said...

சாட்டையடிகளாய் வார்த்தைகளை சொடுக்கியுள்ளீர்கள். திருவாளர் பொதுசனத்துக்கு சுரணை வந்துவிட்டால் போதுமே.... தேர்தல் கால சாமிகள் யாவும் மலையேறிப் போகுமே... காலம் மாறினாலும் காட்சி மாறாக்கொடுமையைக் கச்சிதமாயுரைத்துவிட்டீர்கள் மீள்கவிதை மூலம். அருமை ரமணி சார்.

சாகம்பரி said...

இந்த தேர்தலை அப்போதெல்லாம் 'குப்ப்\இ தொட்டி' தேர்தல் என்று சொல்வார்கள். உள்ளாட்சியின் அதிகாரம் துப்புறவு பணிகளில் மட்டுமே உள்ளது என்பதை இவ்வாறு குறிப்பிட்டார்கள்.

தினம் தோறும் வேட்பாளர் வருகை. அவர்கள் வரும் முன் ஒரு கூட்டம் கதவை தட்டி ரகளை செய்கிறது, வாசலில் நிற்கனுமாம் இது எங்கள் ஏரியா நிலவரம்.

MANO நாஞ்சில் மனோ said...

வேட்பாளர்களின் கும்மிக்கு சாட்டையடி, சூப்பர் குரு...!!!

MANO நாஞ்சில் மனோ said...

அணில்களும், பட்டாம்பூச்சிகளும் முக்காடிட்டு அமரும்....ஹா ஹா ஹா ஹா செம டச்சிங்...!!!!

Yaathoramani.blogspot.com said...

r.v.saravanan . //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோகுல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாலதி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சாந்தி மாரியப்பன் said...

காலங்கள்தான் மாறுதே தவிர இதையெல்லாம் மாத்தவே முடியாது போலிருக்கு..

Unknown said...

அண்ணே நச் கவிதை நன்றி!

Rathnavel Natarajan said...

அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

எத்தனை முறை மீள் பதிவாக இட்டாலும் இவை பொருந்தத்தானே செய்கின்றன. எதிலும் எந்த மாற்றமும் இல்லாமல் ஏமாற்றம் தானே மிஞ்சுகிறது.

காலத்திற்கேற்ற அருமையான பதிவு. பாராட்டுக்கள்.
தமிழ்மணம் : 9

Yaathoramani.blogspot.com said...

வைரை சதிஷ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M.Balasubramaniam //

தேர்தல் ஆனையத்தின் அரட்டலை மிரட்டலை
தினசரி ப்த்திரிக்கைகளில் படித்திருக்கிறோம்
விதி மீறினார் என யார் தேர்ந்ததெடுக்கப் பட்டதையாவது
நிறுத்திவைத்து கேள்விப் பட்டிருக்கிறோமா ?
அண்டா குண்டாவை பணத்தைப் பிடித்ததாக
தகவல்களாக வரும் ஆனால் எந்த தொடர் நடவடிக்கையும்
இதுவரை நான கேள்விப்பட்டதில்லை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வைரை சதிஷ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அம்பலத்தார் //

தேர்தல் ஆனையத்தின் அரட்டலை மிரட்டலை
தினசரி ப்த்திரிக்கைகளில் படித்திருக்கிறோம்
விதி மீறினார் என யார் தேர்ந்ததெடுக்கப் பட்டதையாவது
நிறுத்திவைத்து கேள்விப் பட்டிருக்கிறோமா ?
இதுவரை நான கேள்விப்பட்டதில்லை
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

கண் திறக்க வேண்டியது பொதுமக்கள். வேட்பாளர்களைக் குறை சொல்லி என்ன பயன்? நீங்கள் அழகாகச் சொல்லியிருக்கும் "வேட்டி விரிப்பு" கூட விதைப்பது தானே, பொதுஜனப் பார்வையில்? அடுத்த பத்தாண்டுகளுக்கான தேர்தல் சட்டங்கள் வழிமுறைகள் என்று தொலைநோக்குடன் தேர்தல் கமிஷன் செயல்பட்டால், பதினைந்து இருபது வருடங்களில் இந்த நிலை மாற வாய்ப்புண்டு. ஒவ்வொரு தேர்தலின் போதும் இப்படி அறிவுப் புலம்பல் நடந்து கொண்டிருக்கிறது. இதுவும் நின்றுவிட்டால் இன்னும் மோசமாகி விடும் என்ற அச்சத்துடன்...

அப்பாதுரை said...

ம்ம்ம்... இந்த நிலை எல்லா நாடுகளிலும் நடப்பது தான். சில நாடுகளில் தினசரி வாழ்க்கையைப் பாதிக்காத அளவுக்கு நடக்கிறது; சில நாடுகளில் இதுவே தினசரி வாழ்க்கையாக நடக்கிறது. முன்னேற்றம் என்பது பல பரிமாணங்கள் கொண்ட வைரம். பட்டை தீட்டித் தீட்டி ஓய்ந்து போய்விடலாம்!

அப்பாதுரை said...

அணில்களும் பட்டாம்பூச்சிகளும் வளர என்ன செய்யலாம்? அவர்கள் வீதிக்கு வர என்ன செய்யலாம்?

Unknown said...

உள்ளூர் தேர்தலுக்கு பதவியைப் பிடிக்க ஜொள் விட்டு அலைகின்றனர் சிலர்! அவர்களிடம் சில்லறை தேறாதா என பொதுஜனம்! என்னவென்று சொல்ல்வதோ? த.ம 11

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

மிக மோசமான நிலைமைகளை எதிர்க்கும்
எண்ணங்கள வளர்த்துக் கொள்ளுதல்
முணுமுணுத்தல் பேசுதல் விவாதித்தல்
ஒத்த கருத்துதுடையோருடன் இணைதல்
போராடுதல் தியாகங்களுக்குத் தயாராதல் என
பல படிகளில் இன்னமும் முதல் படியிலேயே
இருக்கிறோமோ என்கிற ஆதங்கமே இந்தப் பதிவு
தங்கள் வரவுக்கும் விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஷைலஜா said...

இதே பதிவை இன்னும் ஒருமுறைகூட அளிக்க நேரிடலாம்...அப்படி உள்ளது நிலமை.

jayaram said...

பொதுமக்கள் மணம் காணும் களமாக இல்லாமல்
பணம் காணும் களமாக இருக்கும் வரை ,
அரசியலின் நிலை இது தான் ..:(

இராஜராஜேஸ்வரி said...

மூலவர்கள் உற்சவர்களாய்
மாறிய தேர்தல் களத்தை
அருமையாய் பகிர்ந்த்தமைக்கு பாராட்டுக்கள்>

மகேந்திரன் said...

தேர்தல் கூத்துக்களை அழகாய்
சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.

பொதுவாகவே உள்ளாட்சி தேர்தல் சந்தைக்கடை போல தான்
விளங்கும். நீங்கள் விவரித்த விதம் மிக அழகு.

Yaathoramani.blogspot.com said...

ஷைலஜா //

தங்கள் வரவுக்கும்பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

jayaram thinagarapandian //
தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கவி அழகன் said...

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

கவி அழகன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ShankarG said...

எத்தனை முறை படித்தாலும் சிந்தனையைத் தூண்டுகிற கவிதை இது. செம்மலர் பத்திரிக்கையில் நீங்கள் எழுதி இக்கவிதை வெளி வந்ததை சிறு பிராயத்தில் படித்த பின்பே எனக்குள் கவிதை எழுதும் ஆவல் ஏற்பட்டது. பொருத்தமான நேரத்தில் இதனை வெளியிட்டமைக்கு நன்றி.

சிவானந்தம் said...

இந்திய ஜனநாயகத்தை அப்பட்டமாக வெளிபடுத்தி இருக்கிறீர்கள். இருந்தாலும் மாற்றம் மெல்ல மெல்ல வரும், வந்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் என் நம்பிக்கை. வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

ShankarG //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிவானந்தம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

M.R said...

உண்மை சொல்லும் கவிதை ,பகிர்வுக்கு நன்றி நண்பரே

Yaathoramani.blogspot.com said...

M.R //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

vanathy said...

அருமையான கவிதை. தொடர வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

vanathy //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Unknown said...

கவிதை நல்லா இருக்கு சார்:)

Anonymous said...

உண்மையை வெளிப்படுத்தும் நிதர்சனக் கவிதை...
அருமை ரமணி சார்...

ஹேமா said...

நாட்டு நடப்பை விடாவாரியாய் கொட்டித் தீர்த்திருக்கிறீர்கள் !

Yaathoramani.blogspot.com said...

மழை

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

மாதேவி said...

யதார்த்தமான கவிதை.

Yaathoramani.blogspot.com said...

மாதேவி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Murugeswari Rajavel said...

எத்தனை மீள்பதிவுகள் இட்டாலும்,எப்போதும் பொருந்துவதாகத் தானே இருக்கிறது.தேர்தல் எனும் நிகழ்வால் தேறுதல் என்பது?

Yaathoramani.blogspot.com said...

Murugeswari Rajavel //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment