Saturday, November 26, 2011

எல்லோரும் கவிஞர்களே (2)


சீர்மிகு கவிகள் செய்ய
சிந்தனை அதிகம் வேண்டாம்
கூர்மதி அதுவும் வேண்டாம்
குழப்பமும் சிறிதும் வேண்டாம்
யாரெது சொன்ன போதும்
அசந்து நீ போக வேண்டாம்
நேர்வழி அதற்கு உண்டு
புரிந்திடச் சொல்வேன் கேளாய்

உயிரது இல்லா தேகம்
பிணமென பெயரைப் பூணும்
அரிசியே இல்லா நெல்லோ
பதரென இழிசொல் காணும்
குயிலதன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்ய
கருவதே உயிர்போல் வேண்டும்

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்
வலம்வரும் உலகம் உன்னை
உயர்கவி என்றே நாளும்


( மரபுக் கவிதை புனைய அனைவருக்கும்
வழிகாட்டியாக விளங்கும்
புலவர் சா.  இராமானுசம் அவர்களுக்கு
இப்படைப்பை சமர்ப்பிப்பதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் )

98 comments:

ரிஷபன் said...

நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்

சந்தம் கொஞ்சும் கவிதை நல்ல கருத்துக்களால் மனசுக்குள் ஆசனம் போட்டு அமர்ந்து விட்டது.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

பகிர்வுக்கு நன்றி .
வாழ்த்துக்கள்.

M.R said...

அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்


நல்ல ஊக்கம் தரும் கவிதை நண்பரே

த.ம 3

Madhavan Srinivasagopalan said...

வழக்கம்போல நல்லாருக்கு..

துரைடேனியல் said...

Sir!
Arumai. Arumai. Saththaana kavithai. Muththaana kavithai. Kavithaiyin elimai azhagu. Thodara Vaazhthukkal.

TM 4.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை.

Unknown said...

நன்று! கவிதை எழுத மனதில் கொஞ்சம் துள்ளலும் வேண்டும்!

சுதா SJ said...

புத்துணர்ச்சி விதைக்கும் கவிதை

Yaathoramani.blogspot.com said...

ரிஷபன் //

முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

M.R //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Madhavan Srinivasagopalan //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துஷ்யந்தன் //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

SURYAJEEVA said...

மரபுக் கவிதை அருமை.. எனக்கு தான் அதன் அரிச்சுவடி தெரியவில்லை

அப்பாதுரை said...

சொல்லில் செதுக்கிய சிற்பம்.

ஸாதிகா said...

ஆஹா..கவிதையின் சூடுசுமம் இதுவன்றோ.

Yaathoramani.blogspot.com said...

suryajeeva //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
மரபுக் கவிதை அவ்வளவு கடினமில்லை
எனச் சொல்ல்வே இதை எழுதினேன்
நீங்கள் நிச்சயம் எழுதுவீர்கள்
வாழ்த்துக்களுடன்...

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை..... என் போன்றவர்களுக்கு தைரியம் தரும் கவிதை.

நல்ல பகிர்வுக்கு நன்றி.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை said.. //

தன்யனானேன்

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி

Unknown said...

குருவென சொன்னீர் அன்றே
கொடுத்தீராம் தட்சணை இன்றே
கருவென பெற்றால் ஒன்றே
கவியென வருமே நன்றே
உருவென மரபில் வந்த
உன்னத கவிதை தந்த
திருவென வந்தீர் ஐயா
திகட்டாத தேனாம் மெய்யா

த ம ஓ 7

புலவர் சா இராமாநுசம்

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகு கவியாலான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

jayaram said...

அருமை சார்..
உண்மை தான்
வாழ்வின் எதோ ஒரு அசைவினை
ரசிக்கும் வேளையில்
நாம் அனைவரும் அப்போது
கவிஞன் ஆகி தான் போகிறோம்

raji said...

பதிவு அருமை.பகிர்தலுக்கு நன்றி.பின்னூட்டத்தில்
புலவர் சா இராமாநுசம் அவர்களின் கவியும் ரசித்தேன்

மகேந்திரன் said...

ஐயா.. புலவர்.சா.இராமானுசம் அவர்களின்
மரபுக்கவிதை காந்த சக்தி கொண்டவைகள்...
இங்கே ஒரு அழகிய கவிதைக்கு கவி படைத்து
அதை இனிய கவிஞனுக்கு படைத்தமை
தங்களின் கவி உள்ளத்தை காண்பிக்கின்றது...

அருமை அருமை...

Yaathoramani.blogspot.com said...

jayaram thinagarapandian //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனம் கனிந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

raji //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

ஹேமா said...

அருமை.புலவருக்குச் சீடனாகிவிட்டீர்கள்.முயற்சிக்கு வாழ்த்துகள்!

Yaathoramani.blogspot.com said...

ஹேமா ... //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம்: 12

அழகிய கவிதை.

//தவழ்ந்திடும் குழந்தை மெல்ல
நடந்திட முயல்தல் போல
அயர்வது இன்றி நாளும்
தொடர்ந்துநீ முயன்றால் போதும்
நயமுடன் உரைக்கும் எல்லாம்
நவயுக கவிதை ஆகும்//

ஆஹா! அருமையாகச் சொல்லியுள்ளீர்கள்.

புலவர் திரு. புலவர் சா இராமாநுசம் ஐயாவின் பின்னூட்டக்கவிதையும் சிறப்பாக உள்ளது.

இருவருக்கும் மகிழ்ச்சி கலந்த வாழ்த்துக்கள். vgk

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உயிரது அசையும் சொல்லால்
அசைக்குது கவியாய் மெல்ல
அறுசுவை விருந்தின் முதலாய்
அரிசியும் அமர்ந்த் நெல்லாம்
பிணமில்லை பதரில்லை எல்லாம்
மணம் சொட்டும் மலரைப்போல
குயில தன் குரலில் தேனாய்
குழைந்திடும் இனிமை போல
கவிதனை சிறக்கச் செய்தீர்
கருவதே உயிர்போல் நன்றாம்.

ராஜி said...

நான் கொஞ்சம் மக்குங்க. மரபுகவிதை லேசுல புரியாது. ஆனாலும் மரபுகவிதை படைக்க முயற்சி செய்யுறேன் ஐயா

ராஜி said...

த ம 12

சசிகுமார் said...

சார் சூப்பர் எல்லா திரட்டியிலும் ஓட்டு போட்டாச்சு....

ஸ்ரீராம். said...

கவி(ஞருக்கு)க்கு மரியாதை. அருமை.

ADHI VENKAT said...

வழக்கம் போல் அருமையாக இருந்தது சார்.

மாய உலகம் said...

மிக அருமையாக கவிதையை சொல்லிருக்கிறீர்கள்.. பல முறை பொறுமையாக படித்து புரிந்து கொள்ள முடிந்தது.. வாழ்த்துக்கள் சகோ!

கோகுல் said...

தவழ்ந்திடும் குழந்தை போல நாங்களும் இனி கற்கிறோம்.
அன்றே சொன்னார் ஐயா நீங்கள் சொற்கள் சுலற்றுவதில் வல்லவரென்று நிரூபித்து விட்டீர்கள்.

சாகம்பரி said...

புலவரய்யாவின் மரபுக் கவிதைகளை கௌரவப்படுத்தும் தங்கள் கவிதையும் மிக நன்று. மூன்று மூன்று சீராக கோர்த்த அமைப்பு வஞ்சிப்பா ... சிந்தடி.....(வஞ்சிக்கு மூன்றடி) இது போன்று பதியும்போது இறுதியில் குறிப்புகளும் தாருங்கள். நினைவுபடுத்திக் கொள்வேன். நன்றி சார்.

குறையொன்றுமில்லை. said...

வழக்கம்போல நல்லாருக்கு

Anonymous said...

நல்ல ஊக்கம் தரும் கவிதை ரமணி சார்...தொடர்ந்து இது போல் பல எனக்கு தீனியாய்...

இராஜராஜேஸ்வரி said...

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

மனதில் சிக்கென அமர்ந்தவரிகள்..
பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

மரபுக் கவிதை புனைய அனைவருக்கும்
வழிகாட்டியாக விளங்கும்
புலவர் சா. இராமானுசம் அவர்களுக்கு
இப்படைப்பை சமர்ப்பிப்பதில்
பெரும் மகிழ்ச்சி கொள்கிறேன் )

புலவர் சா. இராமானுசம் ஐயா அவர்களுக்கு
குரு வணக்கம்!

S.Venkatachalapathy said...
This comment has been removed by the author.
S.Venkatachalapathy said...

கவிதைக்கு ஒரு சந்தம் போதும் போல் படுகிறது. பாட்டுக்கு பல சந்தம் தேவைப்படும் போலல்லவா இருக்கிறது. உங்கள் கவிதையைப் பாட்டாகப் பாட முயற்சி செய்தேன்.

மேற்கொண்டு விளக்கம் வேண்டுகிறேன்?.

கீதமஞ்சரி said...

மிகவும் எளிமையாகவும் ஊக்கம்தரும் வகையிலும் அமைந்த கவிதைக்கு என் வந்தனம். புலவர் ஐயாவின் வேண்டுகோளே தூண்டுகோலாய் அமைய அழகான பாடல் இயற்றியத் தங்களுக்கு என் பாராட்டுகள்.

Yaathoramani.blogspot.com said...

@ வை.கோபாலகிருஷ்ணன் -
வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

@ சுந்தர்ஜி - வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

@மாய உலகம்,கோகுல் ,சாகம்பரி ,Lakshmi -வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

அம்பாளடியாள் said...

மலரதன் வனப்பு காணும்
வடிவினில் என்ற போதும்
மலரதன் சிறப்பு என்றும்
மணமதைச் சார்ந்தே நிற்கும்
நயம்மிகு கவிதை வேண்டின்
கருவுடன் படிப்போர் சிந்தை
கவர்ந்திடும் வகையில் சந்தம்
நச்சென அமைதல் வேண்டும்

மிகவும்அருமையாகச் சொன்னீர்கள் .
சந்தங்கள் கூடாத கவி என்றும்
சரித்திரத்தில் இடம் பிடிப்பதில்லை .
உங்கள் கவிதை அர்ப்பணம் மிகச்
சரியானவரை சென்றடைந்துள்ளது .
புலவர் இராமனுசம் ஐயாவிற்கும்
உங்களுக்கும் என் மனமார்ந்த
வாழ்த்துக்கள் ஐயா .மிக்க நன்றி பகிர்வுக்கு

அம்பாளடியாள் said...

தமிழ்மணம் 19

ashok said...

arumai sir...

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

அழகான வரிகள்

kowsy said...

ஆஹா அற்புதம். சந்தம் இக்கவிதையில் சொந்தம் கொண்டாடியிருக்கின்றது. ஆயிரம்தான் கவி சொன்னாலும் சந்தக் கவிதையில் உள்ள இன்பம் எந்தக் கவிதையிலும் இல்லை. ரமணி சார் நீங்கள் படு கெட்டிக்காரன். ஒவ்வொரு ஆக்கத்திலும் எதோ ஒரு சிறப்பை தந்து விட்டு எங்கள் மனங்களில் நிறைத்து விடுவீர்கள். என்ன உங்கள் புதுப் பதிவதைத் தெரிந்து கொள்வதுதான் புதிராக இருக்கிறது. அடிக்கடி மறக்காமல் உங்கள் தளத்தில் வாசம் செய்ய வேண்டும் . வாழ்த்துகள் . தொடருங்கள்.

Spark Arts Kovai said...

wonderful

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் said... //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதா //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்பார்க் ஆர்ட்ஸ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாவி தங்கமணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ashok said... //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதா //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாய உலகம் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கோகுல் said... //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சாகம்பரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி said... //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி said... //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சுந்தர்ஜி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி
இது அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்கிற
இலக்கண வரம்புக்கு உட்பட்டு எழுதப்பட்ட படைப்பு
இந்த அமைப்பில் மிகச் சிறந்த பாடலாக அனைவரும்
ஏற்றுக் கொண்டது மகா கவியின் " இதந்தரு மனையினீங்கி.."
என்கிற அருமையான ஒப்பில்லாத கவிதையே
இது புலி பார்த்து பூனை போட்டுக் கொண்ட சூடு

Unknown said...

அருமை.

Yaathoramani.blogspot.com said...

விக்கியுலகம் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

r.v.saravanan said...

மரபு கவிதை பகிர்வுக்கு நன்றி

Anonymous said...

சுப்பர் ஐயா. இப்போது நீங்கள் எனக்கு வாத்தியார். மிக அருமையாக கவிதை அமைந்துள்ளது. ரமணியா கொக்கா என்பது போல.
''...இது அறுசீர் கழி நெடிலடி ஆசிரிய விருத்தம் என்கிற
இலக்கண வரம்புக்கு உட்பட்டு எழுதப்பட்ட படைப்பு..''

இதெல்லாம் எனக்கு ஒன்றுமே புரியாது.
வாழ்த்துகள். இடைவெளியில் விட்டவைகளை எடுக்கிறேன்..வாழ்த்துகள். இடைவெளியில் விட்டவைகளை எடுக்கிறேன்..
(எனது இரட்டைக்கட்டில் என்றதை வாசிக்கவும்...)
வேதா. இலங்காதிலகம்.

சிவகுமாரன் said...

அறுசீர் விருத்தம் மிக அருமை.
கவிதை எழுதுவது ஒன்றும் பெரிய விஷயமில்லை .. என்பதை மிக அழகாக சொல்லி விட்டீர்கள் .

Yaathoramani.blogspot.com said...

r.v.saravanan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

சார் , உங்கள் கவிகளில் இவை அனைத்துமே உள்ளன. என்னை உங்கள் சிஷ்யையாக
ஏற்றுக் கொள்வீர்களா ? அழகு , அருமை , அற்புதம் இன்னும்
என்னென்ன சொற்கள் தமிழில் உள்ளன என்று அசைப் போட்டுக்
கொண்டு இருக்கிறேன் .... இன்னுமோர் தேவை .... அழகுற அதை 'ப்ரெசென்ட்' செய்வது...

Yaathoramani.blogspot.com said...

இன்னுமோர் தேவை .... அழகுற அதை 'ப்ரெசென்ட்' செய்வது...

முயற்சிக்கிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Anonymous said...

சார் ,

மன்னிக்கவும் . தவறாகப் பொருள் கொண்டு விட்டீர்கள்.
நான் உங்களைக் குறிப்பிடவில்லை. பொதுவில் நீங்கள் சொல்வது போல்
கரு , சந்தநடையுடன் சிறுது அலங்காரம் தேவை என்று சொன்னேன். அவ்வளவே.
மற்றபடி உங்கள் கவிதைகள் பதிவேற்றம் அனைத்தும் வெகு நேர்த்தி.
பார்த்தவுடன் பதறிப்போய் பதில் அளிக்கிறேன். உங்கள் பதில் பார்த்தப் பின்தான்
இனி என் உறக்கம்.

Yaathoramani.blogspot.com said...

அன்பார்ந்த ஸ்ரவாணி அவர்களுக்கு
மன்னிக்கவும் நானதான் தவறாக பொருள் கொண்டுவிட்டேன்
நான் கவிதையும் இல்லாமல் வசன கவிதையும் இல்லாமல்
உரை நடைக்கும் வசன நடைக்கும் இடையில் இருக்கும்படியாக
ஒரு நடையைத் தேர்ந்தெடுத்து பதிவுகள் கொடுத்து வருகிறேன்

Yaathoramani.blogspot.com said...

இது மரபுப் படி கவிதைப் படைப்போர் சிலருக்குப் பிடிக்காமல்
பின்னூட்டம் இட்டிருந்தார்கள்.அந்த வகையில் தாங்களும்
சொல்கிறீர்களோ என்கிற எண்ணத்தில் பதில் கொடுத்துவிட்டேன்
மனதை சங்கடப்படுத்திவிட்டேன் என நினைக்கிறேன் மன்னிக்கவும்
.தொடர்ந்து சந்திப்போம்

Anonymous said...

அன்பான ரமணி சாருக்கு ,
கண்டிப்பாகத் தொடர்ந்து சந்திக்கலாம்.
சரியாகப்ப் புரிந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
தங்கள் நடை மிகவும் தெளிந்த நீரோடை .
எனக்குப் பிடிக்கும்.

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

radhakrishnan said...

கவிதைக்கு நல்ல சந்தம் வேண்டும். இனியகருத்து
சந்தமில்லாக் கவிதைசிந்தையில் தங்காது
நன்றிசார்.

Yaathoramani.blogspot.com said...

radhakrishnan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

என்னையும் அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி

Post a Comment