Saturday, January 7, 2012

அழகே... இயற்கையே உனக்கு எதிரியாய் ..

இயற்கை உனக்கு எதிராய் இருக்கு
வெளியே வீணே வராதே-அந்த
ரகசியம் தன்னை உனக்கும் சொல்வேன்
எவருக்கும் அதைநீ சொல்லாதே

மேகத் துணியில் நாளும் துடைத்தும்
மருவு சிறிதும் நீங்காது-தொடரும்
சாபம் போல தொடரும் துயரை
நிலவு தாங்கச் சகியாது-உன்
மோகம் கூட்டும் முகமது கண்டு
மனதில் எரிச்சல் தாங்காது-தினமும்
கோபம் கொண்டு வானில் திரியும்
இரவு முழுதும் தூங்காது

கண்கள் இரண்டைக் கவரும் வண்ணம்
காட்சி தந்த போதும்-தினமும்
உண்ண உண்ண தெவிட்டா சுவையை
அள்ளித் தந்த போதும்-உன்
கன்னக் கதுப்பே இனிக்கும் கனியென
மயங்கி நாளும் சாகும்-காளையர்
எண்ணம் தன்னை அறிய கனியும்
உன்னைப் பகையாய்க் காணும்

மலர்ந்து சிரித்து மகிழ்ச்சிப் பரப்பி
மனதைக் கவர்ந்த போதும் -நல்ல
மணத்தைக் கொடுத்து மனதில் காதல்
உணர்வை நிறைத்த போதும்-உனது
இதழின் சுவையே இதமே பதமே-என
உளறும் இளைஞர் காணும் மலரும்
உன்னை  எண்ணி வாடும்

உறுப்பு உறுப்பாய் சொல்லிப் போக
விஷயம் நிறைய இருக்கு-உந்தன்
சிறப்பு தன்னை எண்ண எனக்குள்
பொங்கிப் பெருகுது மலைப்பு -இருந்தும்
இயற்கை உனக்கு எதிராய் இருக்கு
வீணே வெளியே வராதே-அந்த
ரகசியம் உனக்கும் தெளிவாய் சொன்னேன்
மறந்தும் வெளியே சொல்லாதே

(கல்லூரி நாட்களில்   எழுதியதில்  ஞாபகத்தில்
இருந்த மட்டும் )


61 comments:

துரைடேனியல் said...

நினைவில் நின்றதே இவ்வளவு இனிமையென்றால் முழுக் கவிதையும் வெளிவந்திருந்தால் ஆஹா... எவ்வளவு இனிமையாயிருக்கும். நாங்கள் கொடுத்து வைத்தது அவ்வளவுதான். அருமை சார். கவிதை மயில் தோகை விரித்தாடக் கண்டேன். கண்ணுக்கு குளிர்ச்சி!

தஓ 2.

Ahila said...

கவிதை இனிமை...
கல்லூரி நாட்களில் இருந்தே கவிதையா, கவிஞரே...
அப்போ இனிமை கவிதை மட்டும் அல்ல கல்லூரியும்தான்....

Anonymous said...

வாவ் ..சூப்பர் ///அப்போவே இவ்வளவு சூப்பர் ரா எழுதி கலக்கி இருக்கீங்க ....
அருமை ....

பால கணேஷ் said...

அடடா... கவிதையும் கைப்பழக்கம் போலும்! கல்லூரி நாட்களைக் காதலில்லாமல் கழித்தது எவ்வளவு பெரிய தவறென்று இப்போது புரிகிறது... (நான் கவிஞனாகாமல் போயிட்டேனே...) அழகிய கவிதையை மிக ரசித்தேன்.

G.M Balasubramaniam said...

சாதாரணமாகக் காதல் வயப்படும்போது கவிதை வயப்படும். சோகம் கூடும்போதும் சொற்கள் தானே வந்து வீழும். இன்று வலையில் எழுதும் வயதானவர்கள் ( உங்களை சொல்லவில்லை)பெரும்பாலும் அந்த அனுபவம் உள்ளவராகத்தான் இருப்பார்கள்.தொடர வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் ]
அருமையான உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

முனைவர் இரா.குணசீலன் said...

கல்லூரி நாட்களைப் போல் அப்போது எழுதிய எழுத்துக்களையும் மறக்கமுடியாதுதான் அன்பரே...

நல்ல கவிதை..

Yaathoramani.blogspot.com said...

அகிலா //

மிகச் சரி
கல்லூரி நாட்களின் பசுமை நினைவுகள்தான்
இன்றைய பாலைச் சூழலுக்கு நீவார்த்துக் கொண்டிருக்கிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கலை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
(குறிப்பாக அந்த வாவ்..)
மனமார்ந்த நன்றி

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
இராக சுகம் கொண்ட அருமையான கவிதை, இறுதிப் பந்தி படிக்கும் வரை நீங்கள் இயற்கையினை, மலரின் இதழ் அழகைத் தான் பாடுறீங்க என்பதனை யாராலும் ஊகிக்க முடியாது. அத்துணை அழகாய் செதுக்கியிருக்கிறீங்க. இன்றைக்குப் பல வருடங்கள் முன்பாக யாத்திருந்தாலும், வரிகளை நினைவில் வைத்து ராக லயம் மாறாது கவிதையை கொடுத்திருப்பது சிறப்பு.

தமிழ்மணத்திலும் என் பங்களிப்பை செலுத்தியிருக்கிறேன்.

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

காதலித்துச் ஜெயித்தவர்கள்
சராசரியாகிப் போனார்கள்
சம்சாரியாகிப் போனார்கள்
காதலித்துத் தோற்றவர்கள்
கவிஞனாகிப் போனார்கள்
எதற்கும் லாயக்கற்றும் போனார்கள்
காதல் வயப் படாதவர்களே
பட்டம் பெற்றும் போனார்கள்-வாழ்வில்
உச்சம் தொட்டும்போனார்கள்
இதில் நான முதல் இரண்டும் இல்லை
நிலவையும் பெண்ணையும் காதலையு பாடாதவனை
அப்போது யாரும் கவிஞனாக ஏற்கமாட்டார்கள்
அதனால் எழுதியது
மற்றபடி நான் உங்கள் கட்சி

Anonymous said...

ம்ம்... அந்த பேரழகுப் பெண்ணிற்குத் [ college queen ?] தான் எத்தனை எத்தனை
இயற்கை எதிரிகள் ....கறை வெண்ணிலவு , கதுப்பு மாங்கனி ,
மல்லிகை மலர் என்று ..... பாவம் .... எத்தனை நாள் அடைபட்டு கிடப்பதோ ?
இலைமறைவு காய் மறைவாய் சொல்லி இருப்பது இனிக்கிறது.
அழகு அவள் மட்டும் அல்ல .. உங்கள் கவிதையும் தான் ....
ரமணி சார் .... கலக்கறீங்க போங்க !

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

மிகச் சரியாகச் சொன்னீர்கள்
பதிவுலகில் இளைஞர் பிரிவு என ஒன்று துவக்கினால்
நிச்சயம் நீங்க்களும் நானும்தான் முக்கிய பொறுப்பில்
இருக்கவேண்டியிருக்கும்
மனது இன்னமும் கல்லூரி நாட்களில்தானே வாழ்கிறது
அழகான அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

guna thamizh //

நினைவில் இப்படி நிறைய இருக்கு
நிறையபேர் காதல் கவிதைகளாய் எழுதுவதால்
கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றத் திட்டம் உள்ளது
யாரும் திட்டாமல் இருந்தால்
அழகான அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

நிரூபன் //

நீங்கள் வசிஷ்டர் என்பது சரி
நான் பிரம்ம ரிஷியாக இல்லாதது
மிகுந்த வருத்தமாய் உள்ளது
அழகான அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்

Unknown said...

மரபுக் கவிஞரே! வாழ்த்துக்கள்!
அதிகம் எழுதயியலாது என் கணிணீ பழுது!
மடிக் கணிணீ இதில் தட்ட தடுமாற்றம்!

புலவர் சா இராமாநுசம்

தமிழ் உதயம் said...

பால்ய காலங்களை மறப்பது எளிதல்லவே, காதலையும். கவர்ந்தது கவிதை.

jayaram said...

உங்கள் நினைவில் நின்றவையே
இவ்வளவு அருமை என்றால்
நீங்கள் எழுதிய அனைத்தும்
எங்களுக்கு கிடைத்திருந்தால் ...
சூப்பர் சார்

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //
பொத்தாம் பொதுவாகப் பாராட்டிப் போகாது
சிறப்புகளை மிக்ச் சரியாகச் சொல்லி
பாராட்டும்போது கிடைக்கிற மகிழ்ச்சி அலாதியானது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

தங்கள் மேலான வரவுக்கும்
உற்சாகமூட்டும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

jayaram thinagarapandian //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Admin said...

கல்லூரி கால கவிதையும் அருமைதான்..
த.ம 8

வெங்கட் நாகராஜ் said...

ஓ.... கல்லூரி கால கவிதையா... அருமை.....

கடம்பவன குயில் said...

இனிமை இனிமை பாதிக்கவிதையே இப்படியென்றால் முழுதும் .....!! ரொம்ப அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள் சார்.

அப்பாதுரை said...

உங்கள் நினைவுத் திறன் வியக்க வைக்கிறது.
கவிதைத் திறனும்.

மகேந்திரன் said...

///கன்னக் கதுப்பே இனிக்கும் கனியென
மயங்கி நாளும் சாகும்///

அன்பு நண்பரே,
கல்லூரிகாலங்களில் இப்படி ஒரு கவிதை ஊற்றெடுத்ததில்
எங்களுக்குத்தான் ஆதாயம் ..
இவ்வளவு நாட்கள் கழித்து நாங்கள் அனுபவிக்க முடிகிறதே இவ்வளவு அழகான
கவிதையை...

என்ன ஒரு வார்த்தைகள்
கவியரசின் வரிகளை ஞாபகப் படுத்துகின்றன ஒவ்வொன்றும்.

இராஜராஜேஸ்வரி said...

-உந்தன்
சிறப்பு தன்னை எண்ண எனக்குள்
பொங்கிப் பெருகுது மலைப்பு -இருந்தும்
இயற்கை உனக்கு எதிராய் இருக்கு
வீணே வெளியே வராதே-

கவித்திறனுக்குப் பாராட்டுக்கள்..

ஹேமா said...

உங்கள் அனுபவத்தின் சிறப்பே சிறப்பு.தமிழைக் குழைத்தெடுக்கிறீர்கள்.அற்புதம் !

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Angel said...

ஞாபகத்தில் இருந்தது மட்டுமே இவ்வளவு இனிமையாக இருக்கே !!!!!
அப்ப முழுக்கவிதையும் தேனில் விழுந்த பலாச்சுளை .
இனிய கவிதை .

Yaathoramani.blogspot.com said...

angelin //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கடம்பவன குயில் //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சசிகுமார் said...

அருமையான கவிதை....

Unknown said...

கண்கள் மட்டுமே பேசி
வாய்கள் பேசாது
காகிதத்தில்
விரல்கள் பேசிய
காலமது!
பேசத் துணிவில்லாமல்
கருகிய காதல்கள் எத்தனை?

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை

விச்சு said...

"மேகத்துணியில்" - சூப்பரான கற்பனை சார்.

S.Venkatachalapathy said...

திடீர் என்று ரமணிசார் காதல் கவிதை எழுத ஆரம்பித்து விட்டாரா? அந்தப் பேரழகி அவர்தம் கற்பனையில் மட்டும் இருப்பவரா? பாரதியின் கண்ணம்மா மாதிரி?

கடைசியில் தெரிந்தது இது கல்லூரி காலக் கவிதை என்று. எதாவது தொகுப்பு நூல் வெளியிட்டு இருந்தீர்கள் என்றால் சொல்லுங்கள். மெல்லப் படித்து மெதுவாக ரசிக்க.

மாலதி said...

கலுரிகால காதல் இன்று நம்மிடையே பேசுகிறது பசுமையான நல்ல நினைவுகள் சந்தனத்தைபோல அது நினைக்கும் தேறும் இனிக்கும் பாராட்டுகள் .

எம்.ஞானசேகரன் said...

நல்ல கவிதை. ஹூம்........ நானும் இருக்கேனே?

கீதமஞ்சரி said...

சொல்லாதே சொல்லாதே என்று சொல்லிவிட்டு எங்களிடம் சொல்லிவிட்டீர்களே... காலம் கடந்துவிட்டத் தைரியமா? காலம் மாறினாலும் காதல் மாறாது என்பதை அறியாதார் இல்லையே... இன்றைய இளம்வாலிபர்களுக்கும் இந்தக் கையேடு நிச்சயம் உதவும். அருமையான கவிதைக்குப் பாராட்டுகள் ரமணி சார்..

Yaathoramani.blogspot.com said...

கீதா //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மாலதி //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவிப்ரியன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //
//
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

VENKAT //


தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

radhakrishnan said...

''மலர்ந்து சிரித்து மகிழ்ச்சிப் பரப்பி
மனதைக் கவர்ந்த போதும் -நல்ல
மணத்தைக் கொடுத்து மனதில் காதல்
உணர்வை நிறைத்த போதும்-உனது
இதழின் சுவையே இதமே பதமே-என
உளறும் இளைஞர் காணும் மலரும்
உன்னை எண்ணி வாடும்''
இளைஞர்களுக்குக் கோபம் வரப் போகிறது,
ஜாக்கிரதை. இனிய கவிதைக்கு நன்றி சார்

Yaathoramani.blogspot.com said...

radhakrishnan //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Avargal Unmaigal said...

ஒ நீங்கள் கவிதை எழுதுவதில் மட்டும்தான் மன்னன் என்று நினைத்து இருந்தேன் இப்போது அல்லவா தெரிகிறது நீங்கள் காதல் மன்னன் என்று. காதல் மன்னா நீங்கள் வழங்கிய இந்த கவிதை மிக அருமை. வாழ்த்துக்கள்

Anonymous said...

உங்கள் மற்ற கல்லூரிக் கவிதைகளைப்
படிக்க ஆவலாய் உள்ளோம். தொடரவும்.

பி.கு: கட்டுரைக்கு எல்லாம் கருத்து கிடையாது
என்ற கொள்கையோ ? குறை கூறினாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் மேலான வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் விரிவான
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

பிரிவோம்.. சந்திப்போம் - சிறுகதை http://vennirairavugal.blogspot.com/2012/01/blog-post_08.html

Yaathoramani.blogspot.com said...

Anonymous //

தங்கள் வரவுக்கும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Post a Comment