Thursday, April 11, 2013

உள்ளும் புறமும் (7)

எம்பார்மெண்ட் பிச்சை ஏழரைதான் என்றதும்
அதுவும் எங்க  ஏரியாதான் என்றதும் கலங்கிப்
போயிருந்த எனக்கு மேலும் பயமுறுத்தும் விதமாக
ஸ்டேஷனுக்குள்  பயங்கர கோபத்துடன்
இருவர் சண்டையிடும் சப்தமும் ஏதோ டேபிள் சேர்
உருளும் சபதமும் கேட்க ஆரம்பித்தது

வாசலில் அடுத்த டாட்டா சுமோவில் இருந்த
குண்டர் கூட்டம் சட்டென வண்டியில் இருந்து குதித்து
உள்ளே இருந்து ஏதாவது சிக்னல் கிடைத்தால்
உள்ளே பாய்கிற நோக்கத்தில் ரெடியானார்கள்

"நான் சொன்னேனில்லை ஆரம்பிச்சுடுச்சு ஏழரை
இனிமே இங்கே நின்னா சரியா வராது
வண்டியை எடுங்க வெளியே நின்னுகிடுவோம்"
அவசரம் அவசரமாக பிச்சை வெளியேறத்
துவங்கினான்

நானும் வேகமாக வண்டியை உருட்டியபடி
ஸ்டேஷனை விட்டு வெளியே வந்துவிட்டேன்

ஸ்டேஷனில் சப்தம் கூடிக் கொண்டே இருந்தது
குண்டர்கள் இப்போது ஸ்டேஷன் படிக்கட்டை
நெருங்கி இருந்தார்கள்

என்னால் இதற்கு மேல் பொறுமையாக இருக்க
முடியவில்லை,என்ன நடக்கிறது என்பதை
தெரிந்து கொள்ளாவிட்டால் தலை வெடித்துவிடும்
போல இருந்தது

பிச்சை அலட்டிக் கொள்ளவில்லை
சாவாதானமாக ஸ்டேஷனுக்கு
எதிர் வரிசையில் இருந்த வேம்பின் அடித் தூரில்
அம்ர்ந்த படி ஸ்டேஷன் வாசலில்
பார்வையை வைத்தபடியே சொல்ல ஆரம்பித்தான்

அதன் சாராம்சம் இதுதான்

ஏற்கெனவே இரண்டு பெரிய சாராய வியாபாரிகள்
ஸ்டேஷன் மற்றும் எல்லா இடங்களுக்கும் கப்பம் கட்டி
எனது வீட்டில் அருகில் இருந்த ஏரியாவில்
சாராய வியாபாரம் செய்து வர

புதிதாகஇப்போது ஸ்டேஷன் வந்துள்ள
சாராய வியாபாரியும் வேண்டிய மாமுல்
கொடுத்துவிடுவதாகவும் தனக்கும்இரண்டு கடை போட
ஏற்பாடு செய்து தருமாறும் இன்ஸ்பெக்டரிடன் பேசி
ஒரு தொகையை அடவான்ஸாசாகவும்
கொடுத்துச் சென்றுள்ளான்

ஏற்கெனவே வியாபாரம் செய்துள்ள வியாபாரிகள்
புதிதாக ஒருவரை உள்ளே வரவிடக் கூடாது
என்கிற முடிவில் ஒரு பெரும்தொகையை மாவட்டம்
மற்றும் மந்திரியிடம் கொடுத்துவிட
இன்ஸ்பெக்டரால் ஏதும் செய்ய முடியவில்லை

இன்ஸ்பெக்டர் கொஞ்சம்  பணத்தாசைப் பிடித்தவர்
ஏற்பாடு செய்ய முடியாவிட்டாலும் பணத்தையாவது
திருப்பித் தர நினைக்காது
மேலிடத்தில் கொடுத்துவிட்டேன் இனி திருப்பிக்
கேட்க முடியாது எனச் சொல்லி பல நாட்களாக
இழுத்து அடித்துக்கொண்டிருக்கிறார்

இந்த சாராய வியாபாரியும் உசிலம்பட்டி
தேனிப் பக்கம் பெரிய வியாபாரி.
ஒரு இன்ஸ்பெக்டர் தன்னை இப்படி
சாதாரணமாக ஏமாற்றுகிறாரே எப்படியும்
காசை வாங்காமல் விடக் கூடாது என அதை
ஒரு தன்மானப் பிரச்சனை போல எடுத்துக் கொண்டு
நாலைந்து முறை வந்து விட்டான் இன்றுதான்
கடைசிக் கெடு எனச் சொல்லி இருந்தான்
அதுதான் பிரச்சனை என்றான்

இவன் சொல்லி முடித்துக்  கொண்டிருக்கும் போதே
சாராய வியாபாரியை கழுத்தைப் பிடித்து
வாசலில் தள்ளியபடி "என்ன திமிர் இருந்தா
என்னையே ஸ்டேஷனுக்குள் வந்து மிரட்டுவே
தொலைச்சுப் புடுவேன் தொலைச்சு " என
முட்டியை உயர்த்திக் கொண்டிருந்தார் இன்ஸ்பெக்டர்

கீழே விழுந்த சாராய வியாபாரியை உடன்
வந்த குண்டர்கள் கைக் கொடுத்துத் தூக்க
தட்டுத் தடுமாறி எழுந்தான்.அவனுடைய நிலையைப்
பார்க்க நிச்சயம் ஸ்டேஷனுக்குள் அடித்திருப்பார்கள்
போலப் பட்டது

அவன் மெல்ல நிமிர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்தபடி
"யூனிபார்ம் போட்ட திமிரு ஸ்டேஷன் வேற
அதனாலே உன்னை ஒன்னும் செய்ய முடியாதுன்னுதானே
கையை வைச்சுட்ட.பார்ப்போம்.
உன்னைய  எங்க வைச்சு யாரை வைச்சு
எப்படிப் பணத்தை வாங்கனும்னு எனக்குத் தெரியும் "
எனச் சொல்லிவிட்டு காரில் ஏறி அமர
இரண்டு கார்களும் ஸ்டேஷனைவிட்டு வெளியேறி
மெயின் ரோட்டில் வேகமாகப் போகத் துவங்கியது

எனக்கு உண்மையில் என்னடா இது நிஜம்தானா
இல்லை சினிமாதான் பார்க்கிறோமா என
சந்தேகமாக இருந்தது

பிச்சை மெதுவாக என் காதோரம்
"இன்ஸ்பெக்டர் நினைப்பது போல இவன்
சாதாரண ஆள் இல்லை,நிச்சயம் இந்த இன்ஸ்பெக்டரை
பழி வாங்கியும் விடுவான்.பணத்தையும்
வாங்கிவிடுவான்."என்றான்

"எப்படி அது முடியும்.என்ன ரசீதா வைத்திருக்கிறான்"
என்றேன்

"சார் கள்ள கடத்தலில் எல்லாம் ரசீது கிடையாது
ஆனால் ஏமாத்தனும்னு நினைச்சா உசிரு இருக்காது"
என்றான் சர்வ சாதாரணமாக

"சார் இன்னைக்கு நீங்க வந்த நேரம்  சரியில்லை
பேசாம போயிட்டு ரெண்டு நாள் கழிச்சு வாங்க
நான் ஏட்டையாவிடம் சொல்லிவைக்கிறேன் "
என்றவன் அத்தோடு நிறுத்தி இருந்தால்
பரவாயில்லை." "

இந்த இன்ஸ்பெக்டர் ஏரியாவில் ஏதாவது
பிரச்சனை செய்தால்தான் அவருக்கு இடஞ்சல் வரும்
என்று  பெரிய கலாட்டாவாக ஏதாவது
செய்தாலும் செய்வான்.அது ஒங்க
பாண்டிச்சேரி ஏரியாவாகக் கூட இருக்கலாம்
எதற்கும் ஜாக்கிரதையாக இருங்கள்" என
ஒரு குண்டைப் போட்டு முடித்தான்

அவன் அப்போது சொல்லும் போது எனக்கு
அப்படியெல்லாம் ஏதும் நடக்காது.இவனாக
ரீல் விடுகிறான் என நினைத்தேன்

ஆனால் இது நடந்த ஒரு வாரத்தில் தமிழ் நாடே
ஸ்தம்பித்துப் போகும்படியான ஒரு நிகழ்வு ஒன்று
எங்கள் பகுதியில் நடக்கும் என்று நான்
சத்தியமாக எதிர்பார்க்கவே இல்லை

(தொடரும் )

42 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தப்பகுதியிலும் நல்ல விறுவிறுப்பு தான். சஸ்பென்ஸ் தான். தொடரட்டும். பாராட்டுக்கள்.

Avargal Unmaigal said...

மிகவும் சஸ்பென்ஸாகவும் அதே நேரத்தில் விருவிருப்பாகவும் செல்கிறேதே உங்கள் பதிவு

கவியாழி said...

கதையை விருவிருப்பா கொண்டுபோறிங்க சார்.ஆனாலும் இந்த பேராசைப் பிடித்த பணம்தான் எல்லா ஆசைக்கும் காரணம்.

Avargal Unmaigal said...

உண்மையை சொல்லுங்க ஏதாவது டிவி சிரியலுக்கு நீங்கள் கதை எழுதி கொடுக்கிறிர்களா இல்லையா?

கரந்தை ஜெயக்குமார் said...

பதிவில் நாளுக்கு நாள் சஸ்பென்ஸ் கூடிக்கொண்டே செல்கின்றது

கீதமஞ்சரி said...

எம்பார்மெண்ட் உதவியால் உங்களால் அப்போதைய சூழ்நிலையின் சிக்கலை மிக நன்றாகவே அறிந்துகொள்ள முடிந்திருக்கிறது. எச்சரிக்கையாய் இருக்கவும் தூண்டியிருக்கிறது. தமிழ்நாடே ஸ்தம்பித்துப் போகும்படியான அந்நிகழ்வு என்னவாக இருக்குமென்று அறியும் ஆவல் அதிகரிக்கிறது. தொடரும் பகுதிகளுக்காய் காத்திருக்கிறேன். மிக சுவாரசியத்துடன் எழுதிச்செல்கிறீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.

வெங்கட் நாகராஜ் said...

தொடரும் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன். பகுதிக்குப் பகுதி சஸ்பென்ஸ்....

G.M Balasubramaniam said...


கதையை தன்னிலையாகச் சொல்வதில் இருந்து இது அனுபவமாக இருக்குமோ என்றும் எண்ணத் தூண்டுகிறது. கற்பனையானால் சிரங் குவீந்த பாராட்டுக்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

மேலும் மேலும் சுவாரஸ்யம் தொடர்கிறது... அடுத்த பகிர்வு எப்போது...?

Unknown said...

நடந்த தா இல்லை கற்பனையா? எப்படிஇருந்தாலும், அருமை!

அகல் said...

என்ன நடத்தையா ? அடுத்தா பக்கத்திற்காக காத்திருக்கிறோம்...

காரஞ்சன் சிந்தனைகள் said...

நடந்தது என்ன? அறிய ஆவல்!

Anonymous said...

சகல நலங்களும், மகிழ்வும் நிறைய
இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.




சேக்கனா M. நிஜாம் said...

ஆர்வம் தரும் தொடர் !

அருமை தொடர வாழ்த்துகள்...

Muruganandan M.K. said...

இன்றுதான படித்தேன்
சுவார்ஸமாக எழுதுகிறீர்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

கீதமஞ்சரி said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் ரமணி சார்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

எனதினிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் .

kowsy said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்து.இது உண்மைக் கதையா

Seeni said...

mmmm...!

appuram...!

மாதேவி said...

நடந்தவைதானா !

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன்
.
இந்தப்பகுதியிலும் நல்ல விறுவிறுப்பு தான். சஸ்பென்ஸ் தான். //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //
.
மிகவும் சஸ்பென்ஸாகவும் அதே நேரத்தில் விருவிருப்பாகவும் செல்கிறேதே //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் //
.
கதையை விருவிருப்பா கொண்டுபோறிங்க //


தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

உண்மையை சொல்லுங்க ஏதாவது டிவி சிரியலுக்கு நீங்கள் கதை எழுதி கொடுக்கிறிர்களா //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் //

பதிவில் நாளுக்கு நாள் சஸ்பென்ஸ் கூடிக்கொண்டே செல்கின்றது//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //

ஆவல் அதிகரிக்கிறது. தொடரும் பகுதிகளுக்காய் காத்திருக்கிறேன். மிக சுவாரசியத்துடன் எழுதிச்செல்கிறீர்கள். பாராட்டுகள் ரமணி சார்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தொடரும் அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன். பகுதிக்குப் பகுதி சஸ்பென்ஸ்....//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

கதையை தன்னிலையாகச் சொல்வதில் இருந்து இது அனுபவமாக இருக்குமோ என்றும் எண்ணத் தூண்டுகிறது. கற்பனையானால் சிரங் குவீந்த பாராட்டுக்கள்./

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //
.
மேலும் மேலும் சுவாரஸ்யம் தொடர்கிறது... ///

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம்//

நடந்த தா இல்லை கற்பனையா? எப்படிஇருந்தாலும், அருமை!/

/தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்

Yaathoramani.blogspot.com said...

அகல் //

என்ன நடத்தையா ? அடுத்தா பக்கத்திற்காக காத்திருக்கிறோம்..//
.
தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seshadri e.s. //

நடந்தது என்ன? அறிய ஆவல்!//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி




Yaathoramani.blogspot.com said...

kovaikkavi /

/வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சேக்கனா M. நிஜாம்
//.
ஆர்வம் தரும் தொடர் //

!தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Muruganandan M.K. //

இன்றுதான படித்தேன்
சுவார்ஸமாக எழுதுகிறீர்கள்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்//!

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி ///

வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

அருணா செல்வம் said...

தொடர்கிறேன் இரமணி ஐயா.

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Ranjani Narayanan said...

என்னவாயிற்றோ? அடுத்த பகுதி படிக்க செல்கிறேன்.

Post a Comment