Thursday, April 25, 2013

அறிதல் குறித்த ஒரு புரிதல்

அறியாதிருந்தும்
அறியாததை அறிந்திருந்தும்
அறியாதபடியே காட்டிக் கொண்டுமிருப்பவன்
நிச்சயம் நல்லவனே

அறிந்திருந்தும்
அறிந்ததை அறிந்திருந்தும்
அறிந்தவானாய்க் காட்டிக் கொண்டுமிருப்பவன்
உண்மையில் வல்லவனே

அறிந்திருந்தும்
அறிந்ததை அறிந்திருந்தும்
அறியாதவனாய்க் காட்டிக் கொண்டிருப்பவன்
சந்தேகமில்லாமல் உயர்ந்தவனே

அறியாதிருந்தும்
அறியாததை அறிந்திருந்தும்
அறிந்தவனாய்க் காட்டித் திரிபவன்
 கடைந்தெடுத்த முட்டாளே

என்ன செய்வது
எண்ணிக்கையில்  இவர்கள் அதிகம் இருப்பதால்
இன்று முட்டாள்களின் அறிவுரைகளைத் தானே
நல்லவனும் வல்லவனும் உயர்ந்தவனும்
கேட்டுத்  தொலைக்கவேண்டியிருக்கிறது

என்னசெய்வது
ஜன நாயகக்கோட்பாடின்படி
அவர்கள்  வழிகாட்டுதலின்படித்தானே
வாழ்ந்தும்  தொலைக்கவேண்டியிருக்கிறது

அதனால்தானே  வாழ்வும் நாடும்
நாசமாகவும் போய்க்கொண்டிருக்கிறது

39 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // said...

///////
அறியாதிருந்தும்
அறியாததை அறிந்திருந்தும்
அறிந்தவனாய்க் காட்டித் திரிபவன்
கடைந்தெடுத்த முட்டாளே
////////////

நாட்டுல இவங்கதாங்க அதிகம்...

ப.கந்தசாமி said...

எங்கே, எல்லாத்தையும் இன்னோரு தடவை, பார்த்திபன் பாணியில், திருப்பிச்சொல்லுங்க, பார்க்கலாம்.

கீதமஞ்சரி said...

நல்லவனுக்கும் வல்லவனுக்கும் உயர்ந்தவனுக்கும் முட்டாளுக்குமான வரையறை விளக்கம் மிகத் தெளிவு. இப்படியாகப்பட்டவர்களிடம் சிக்கி நாடும் வாழ்வும் நாசமாய்ப் போகும் அவலத்தை அருமையாகச் சொல்லிவிட்டீர்கள்.

அறியாதிருந்தும் அறியாததை அறியாது, அறிந்ததாய்க் காட்டித் திரிபவர்களுக்கும் ஏதேனும் பெயர் இருக்கவேண்டுமே... அதையும் சொல்லுங்க சார்.

G.M Balasubramaniam said...


ஆங்கிலத்தில் இதே பொருளில் படித்தது நினைவுக்கு வந்தது. சரியான வார்த்தைகள் நினைவுக்கு வரவில்லை. வயசின் கோளாறோ.?

கோமதி அரசு said...

அறிதல் குறித்த ஒரு புரிதல் கவிதை அருமை.

Yaathoramani.blogspot.com said...

கவிதை வீதி... // சௌந்தர் // //

உங்களது ஒரு வரிப்படி
கவிதையின் இறுதி வரிகளை மாற்றினேன்
திருப்தியாயிருந்தது மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

பழனி. கந்தசாமி //

எங்கே, எல்லாத்தையும் இன்னோரு தடவை, பார்த்திபன் பாணியில், திருப்பிச்சொல்லுங்க, பார்க்கலாம்.//

குறிபார்த்து மிகச் சரியாக
அம்பெய்த்துவிட்டீர்களே
எழுதத்தான் முடியும்
சொல்வது கடினமே
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீத மஞ்சரி //

அறியாதிருந்தும் அறியாததை அறியாது, அறிந்ததாய்க் காட்டித் திரிபவர்களுக்கும் ஏதேனும் பெயர் இருக்கவேண்டுமே... அதையும் சொல்லுங்க சார்.//

விசு பார்த்திபன் என கிண்டலடித்து விடுவார்களோ
எனப் பயந்து இதையும் இன்னொன்றையும் விட்டுவிட்டேன்
ஆழ்ந்து படித்து பின்னூட்டமிட்டமைக்கு
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

இதுமொழிபெயர்ப்பில்லை
இது என் மனத் தோட்டத்தில்
விளைந்ததுதான்.இதையொட்டிய
சிந்தனையில் வேறேதுனும் எனக்குப்
படித்த ஞாபகமில்லை.இருந்தால்
எனக்கும் சிறப்புதானே
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி





Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு //

அறிதல் குறித்த ஒரு புரிதல் கவிதை அருமை.//

உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

முதலில் குழப்பமாகத் தோன்றினாலும் நிதானாமாக படித்தால் தெளிவாகிவிடுகிறது.
கடைசியாக தற்போதைய நிலையையும் சொல்லி விட்டீர்கள் உங்கள் பாணியில் அசத்தல் கவிதை

திண்டுக்கல் தனபாலன் said...

அசத்தல்... ரசித்தேன்...

முடிவில் உண்மை வரிகள்...

அறிந்து தெரிந்து புரிந்து கொண்டேன்...

வாழ்த்துக்கள்...

கவியாழி said...

ஜன நாயகக்கோட்பாட்டின்படி
அவர்கள் வழிகாட்டுதலின்படித்தானே
வாழ்ந்தும் தொலைக்கவேண்டியிருக்கிறது//எல்லாம் விதி என்றிருக்க முடிகிறதே.அறிந்தேன் ரசித்தேன் உணர்ந்தேன்

vimalanperali said...

அறிந்தும் அறியாமலும்,தெரிந்தும் தெரியாமலும்,புரிந்தும் புரியாமலும் ,,,,,,,,,என நிறைந்து சேர்கிற வகைகளில் இதுவும் ஒன்றாகிப்போகிற்தான்.என்ன செய்ய இப்படிப் பட்டவர்களுடனும் நாம் சேர்ந்தோஅல்லது அவர்கள் வழிகாட்டுதல் படியோ நடக்க வேண்டியிருக்கிறது.

சேக்கனா M. நிஜாம் said...

ரசித்து வாசித்தேன் !

அறிதல் - புரிதல் அருமை வரிகள்

தொடர வாழ்த்துகள்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

அரிது அரிது அறிதலைப்புரிதல் அரிது, அதைவிட அரிது தாங்கள் எழுதியுள்ளதை புரிந்து கொள்ளல் மிகவும் அரிது.

அறிதல் புரிதல் பற்றிய மிகவும் அசத்தலான பதிவு.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

குழப்புகிறது!

பால கணேஷ் said...

அறிந்தது போலவும் புரிந்தது போலவும் அறியாதது‌ போலவும் புரியாதது போலவும் இருக்கிறது எனக்கு இப்போது. ஹி... ஹி...!

Unknown said...

முதலில் கொஞ்சம் குழப்பம் முடிவில் நல்ல திருப்பம்!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

விடுகதைபோல் விளைந்துள்ள கவிதை! என்றன்
விழிக்கரையில் நன்கமா்ந்தே ஆட்டம் போடும்!
மடுக்கரைபோல் அமைந்துள்ள சொற்கள் யாவும்
மனிதத்தின் நிலைகாக்கும்! வாழ்த்து கின்றேன்!
சுடா்கதைபோல் வடித்துள்ள காட்சி! தேனின்
சுவைகதைபோல் இனிக்கின்ற ஆட்சி! ஓங்கித்
தொடா்கதைபோல் செல்லட்டும் உன்றன் ஆக்கம்!
துாயதமிழ் உன்வலைக்கோ இல்லை துாக்கம்!

நாள்முழுதும் உங்கள் வலைப்பூ திறந்தே உள்ளது என்பதை உரைத்துள்ளேன்!

நிறைந்த தமிழ்ப்பணியில் உள்ளேன்
தொடா்ந்துவந்து உங்கள் கவிதைகளுக்குக் கருத்தெழுத இயலவில்லை! வருத்தம் வேண்டாம்!

ஆண்டு விடுமுறையில் உங்கள் வலையில் உள்ள அனைத்துப் பதிவுகளையும் படித்து மகிழ்வேன்!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...


தமிழ்மணம் 9

மகேந்திரன் said...

மிகச்சரியான வரையறைகள் ரமணி ஐயா ....

அருணா செல்வம் said...

அறிதல் குறித்த அருமையான புரிதல்.

வணங்குகிறேன் இரமணி ஐயா.

MANO நாஞ்சில் மனோ said...

இதை படிக்கும் சில அரசியல்வியாதிகள் நாண்டுகிட்டு நின்று சாகலாம் குரு...

செமத்தனமான டோஸ் குடுத்துருக்கீங்க...!

உஷா அன்பரசு said...

அறிதல் பற்றி இத்தனை வகைகளை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.ஒரு விஷயத்தை பத்தி தெரியலைன்னு தெரிஞ்சாலும் தெரிஞ்ச மாதிரி நிறைய பேசறவங்கதானே இன்னிக்கு அதிகமா இருக்காங்க..அதனாலதானே நல்லவர்கள், வல்லவர்கள், உயர்ந்தவர்கள் எல்லாம் எடுபடாம போயிடறாங்க... அருமையான கருத்து பொதிந்த கவிதை !

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

முதலில் குழப்பமாகத் தோன்றினாலும் நிதானாமாக படித்தால் தெளிவாகிவிடுகிறது.
கடைசியாக தற்போதைய நிலையையும் சொல்லி விட்டீர்கள் உங்கள் பாணியில் அசத்தல் கவிதை//

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் //

அசத்தல்... ரசித்தேன்...
முடிவில் உண்மை வரிகள்...
அறிந்து தெரிந்து புரிந்து கொண்டேன்...//

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் ////

எல்லாம் விதி என்றிருக்க முடிகிறதே.அறிந்தேன் ரசித்தேன் உணர்ந்தேன்/

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

.என்ன செய்ய இப்படிப் பட்டவர்களுடனும் நாம் சேர்ந்தோஅல்லது அவர்கள் வழிகாட்டுதல் படியோ நடக்க வேண்டியிருக்கிறது.//

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

சேக்கனா M. நிஜாம்

ரசித்து வாசித்தேன் !
அறிதல் - புரிதல் அருமை வரிகள்//

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

அரிது அரிது அறிதலைப்புரிதல் அரிது, அதைவிட அரிது தாங்கள் எழுதியுள்ளதை புரிந்து கொள்ளல் மிகவும் அரிது.//

கொஞ்சம் நின்று நிதானித்துப் போகட்டும் என
சாலையில் போடப்படும் வேகத்தடைபோல
இதை இப்படி எழுதினால்தான் கொஞ்சம்
கவனித்துப்படிப்பார்கள் என எழுதினேன்
வேறு காரணமில்லை
தங்கள் மேலான வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

அறிதலும் அறியாமையும் இருவேறு
துருவங்கள்.இரண்டையும் குழம்பாது
குழப்பாது சொல்ல முயன்றேன்
குழம்பிவிட்டென் என தங்கள்
குழப்பத்திலிருந்து புரிகிறது
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //\
.
அறிந்தது போலவும் புரிந்தது போலவும் அறியாதது‌ போலவும் புரியாதது போலவும் இருக்கிறது எனக்கு இப்போது. ஹி... ஹி...!//

அறிதலும் அறியாமையும் இருவேறு
துருவங்கள்.இரண்டையும் குழம்பாது
குழப்பாது சொல்ல முயன்றேன்
குழம்பிவிட்டென் என தங்கள்
குழப்பத்திலிருந்து புரிகிறது
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் இராமாநுசம் //

முதலில் கொஞ்சம் குழப்பம் முடிவில் நல்ல திருப்பம்//

தங்கள் மேலான வரவும் வாழ்த்துமே
எப்போதும் என் விருப்பம்
வரவுக்கு பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கி. பாரதிதாசன் கவிஞா் //


நாள்முழுதும் உங்கள் வலைப்பூ திறந்தே உள்ளது என்பதை உரைத்துள்ளேன்!

நிறைந்த தமிழ்ப்பணியில் உள்ளேன்
தொடா்ந்துவந்து உங்கள் கவிதைகளுக்குக் கருத்தெழுத இயலவில்லை! வருத்தம் வேண்டாம்!

ஆண்டு விடுமுறையில் உங்கள் வலையில் உள்ள அனைத்துப் பதிவுகளையும் படித்து மகிழ்வேன்!//


பிரீ கே ஜீ குழந்தையின் ஆங்கில உச்சரிப்பைப்
பாராட்டி மகிழும் பேராசிரியரைப் போல
எனது உளறல்களையும் பல்வேறு
பணிகளுக்கிடையிலும் அன்போடு பாராட்டி
பின்னூட்டமிட்ட தங்களுக்கு
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

மிகச்சரியான வரையறைகள் ரமணி/

/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

அருணா செல்வம் //
.
அறிதல் குறித்த அருமையான புரிதல்.//

/உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ//
.
இதை படிக்கும் சில அரசியல்வியாதிகள் நாண்டுகிட்டு நின்று சாகலாம் குரு...///

உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/



Yaathoramani.blogspot.com said...

உஷா அன்பரசு //

அறிதல் பற்றி இத்தனை வகைகளை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.ஒரு விஷயத்தை பத்தி தெரியலைன்னு தெரிஞ்சாலும் தெரிஞ்ச மாதிரி நிறைய பேசறவங்கதானே இன்னிக்கு அதிகமா இருக்காங்க.//உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டும் அருமையானவிரிவான அழகான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி/

Post a Comment