Thursday, January 30, 2014

சமநிலை மகாத்மியம்

தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாது
குடும்பத்தைக் காக்கத் துடிப்பவன்
நிச்சயம் புத்திசாலி இல்லை

குடும்பத்தை ஸ்திரப்படுத்தாது
சமூகத்தைத் தாங்க முயல்பவன்
நிச்சயம் சிறந்த மனிதனில்லை

சமூக அக்கறை கொள்ளாது
தன்னலம் மட்டும் பேணுபவன்
நிச்சயம் மனிதனே இல்லை

நம்மை உயர்த்திப் பார்க்கத்தான்
சௌகரியமாய் அமர்த்திப்பார்க்கத்தான்
இருகால் ஏணியும்
முக்காலியும்
நாற்காலியுமென்றாலும்
இவைகளில் ஏதேனும்ஒரு காலில்
நீளக் குறையிருப்பின்
வீழ்ந்துவிடவே சாத்தியம் அதிகம்

எனவே
உயர்வுக்கு முதல்நிலை
சமநிலை எனத் தெளிவோம்

தொய்வின்றி வெற்றியைத்
தொடர்ந்துப் பெற்று மகிழ்வோம்

32 comments:

ஸ்ரீராம். said...

நல்ல சிந்தனை.

கரந்தை ஜெயக்குமார் said...

சம நிலை
பெறுவோம்

Muthu said...

சமநிலை அடைவதின் முக்கியத்துவத்தைக் கூறும் அருமையான மொழிகள்! மனமாரப் பாராட்டுகிறேன்.

vimalanperali said...

சமநிலை என்கிற வார்த்தையே கேட்க சந்தோஷமாய் இருக்கிறது.அதிலும் உயர்வுக்கு வித்திடும் சம நிலை.வாழ்த்துக்கள்/

திண்டுக்கல் தனபாலன் said...

உயர்வுக்கு முதல்நிலை சமநிலை என்பதை சொன்னவிதம் அருமை ஐயா...

வாழ்த்துக்கள்...

Thulasidharan V Thillaiakathu said...

தனக்கு மிஞ்சியதுதான் தானம் என்றும், நாம் மகிழ்வாக இருந்தால் தான் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்வாக வைத்துக் கொள்ள முடியும் என்றும் சொல்வது இது தானோ?!!!!!

நாம் சம நிலையுடன் இருந்தால் தானே இது சாத்தியம்!!!!

அருமையான வரிகள்!!!!!!

த.ம.

Thulasidharan V Thillaiakathu said...

தனக்கு மிஞ்சியதுதான் தானம் என்றும், நாம் மகிழ்வாக இருந்தால் தான் நம்மைச் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்வாக வைத்துக் கொள்ள முடியும் என்றும் சொல்வது இது தானோ?!!!!!

நாம் சம நிலையுடன் இருந்தால் தானே இது சாத்தியம்!!!!

அருமையான வரிகள்!!!!!!

த.ம.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான நடப்பு அரசியல் கவிதை.

MANO நாஞ்சில் மனோ said...

சின்ன கவிதைக்குள்...மனிதன் எவ்வாறு இருக்க வேண்டும் என்று சொல்லிப்போகும் கவி வரிகள்...!

Avargal Unmaigal said...

கலைஞருக்கு மறைமுகமாக சொன்ன செய்தியோ? tha.ma 8

இராஜராஜேஸ்வரி said...

உயர்வுக்கு முதல்நிலை
சமநிலை எனத் தெளிவோம்

தெளிவான கருத்துகள்..பாராட்டுக்கள்..!

Unknown said...

சம நிலை
பெறுவோம்

Unknown said...

மனிதனின் மூன்று நிலைக்கு மூன்று
உதாரணங்களைப் பொருத்தமாய் சொன்ன விதம் அருமை !
த ம 1 ௦

விமல் ராஜ் said...

// குடும்பத்தை ஸ்திரப்படுத்தாது
சமூகத்தைத் தாங்க முயல்பவன்
நிச்சயம் சிறந்த மனிதனில்லை

எனக்கும் உண்மை தமிழனின் பின்னூட்டத்தை படித்தவுடன் , இக்கவிதையில் சமீபத்திய அரசியல் நிகழ்ச்சியை பற்றி சொல்கிறீர்களோ என தோன்றுகிறது...!!!

இருப்பினும் கருத்து மிக நன்று...!!!

http://bharathidasanfrance.blogspot.com/ said...


வணக்கம்!

பற்றிப் படைத்த எழுத்தெல்லாம் ஏற்றிடுமே
வெற்றிக் கொடியை விரைந்து

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/ said...

வணக்கம்

தமிழ்மணம் 11

Anonymous said...

உயர்வுக்கு முதல்நிலை
சமநிலை எனத் தெளிவோம்....
Vetha.Elangathilakam.

உஷா அன்பரசு said...

கலைஞருக்கு சொன்னது போல் தெரிந்தாலும் ஒவ்வொரு மனிதனுக்கும் பொருந்தும். இந்த சம நிலையை நான் ஓரளவுக்கு பின்பற்றிவருவதாக என் மனம் சொல்கிறது.
சிறப்பான மிகவும் பிடித்த கவிதை!

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

//உயர்வுக்கு முதல்நிலை
சமநிலை எனத் தெளிவோம்// அருமை ஐயா!

த.ம.12

உஷா அன்பரசு said...

த.ம-12

நிலாமகள் said...

உயர்வுக்கு முதல்நிலை
சமநிலை//

எல்லோருக்கும் பொருந்தும் என்றாலும் நடைமுறையில் நடப்பவற்றில் பொருத்திப் பார்த்தாலும்...

G.M Balasubramaniam said...

உங்கள் கவிதையும் ஒரு நல்ல balancing act தான் .பாராட்டுக்கள்.

மகிழ்நிறை said...

கவிதை அருமை!
நான் எவ்ளோ டுயுப் லைட் பாருங்க!
மதுரை தமிழன் கருத்தை படித்தப்பின்
மீண்டும் ஒரு முறை வாசித்தேன்.
புரியவேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி !

காமாட்சி said...

உயர்வுக்கு முதல்நிலை ஸமநிலை. எவ்வளவு உண்மையான கருத்து.. அன்புடன்
கவிதையை திரும்பவும் வாசித்தேன். அருமையான கவிதை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

புதுமையான உவமைகள். சிறப்பான கவிதை

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

த.ம.14

RajalakshmiParamasivam said...

முன்னேற்றத்திற்கு சம நிலைஎவ்வளவு முக்கியம் என்பதை நன்கு விளக்கி விட்டீர்கள் ரமணி சார்.

சுந்தரா said...

சமநிலை பழகினால் சகலமும் வெற்றிதான். புரியவைத்தமைக்கு நன்றிகள் ரமணி சார்.

”தளிர் சுரேஷ்” said...

உயர்வுக்கு முதனிலை சமநிலை! அருமையான அறிவுரை! நன்றி!

Anonymous said...

வணக்கம்
ஐயா.

எனவே
உயர்வுக்கு முதல்நிலை
சமநிலை எனத் தெளிவோம்
தொய்வின்றி வெற்றியைத்
தொடர்ந்துப் பெற்று மகிழ்வோம்

என்ன வரிகள்..... சொல்ல வார்த்தைகள் இல்லை...சிறப்பு.. வாழ்த்துக்கள் ஐயா.த.ம 16வது வாக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

'சமூக அக்கறை கொள்ளாது
தன்னலம் மட்டும் பேணுபவன்
நிச்சயம் மனிதனே இல்லை" -
உயர் சிந்தனை அய்யா. ஆனால், இப்போதெலலாம்,
“உழவுக்கும் தொழிலுக்கும் நிந்தனை செய்வோம் - வீணில்
உண்டுகளித்திருப்போரை வந்தனை செய்வோம்” என்பதாகத்தான் புரிந்து வைத்திருக்கிறார்கள்! மாற்றுச் சிந்தனையாளர்களால்தான் வையம்
மாறிமாறிச் சுழன்றுகொண்டிருக்கிறது. நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

//உயர்வுக்கு முதல்நிலை
சமநிலை எனத் தெளிவோம்//

சிறப்பான சிந்தனை.....

த.ம. +1

Post a Comment