Wednesday, February 12, 2014

கெட்டிக்காரனும் அரைவேக்காடும்

மிகத் தீவீரமாகச்
செயல்படும்
மிக மிக
மோசமானவனும்

துணிவின்றி
செயல்படத் தயங்கித்
தினம் திரியும்
மிக மிக நல்லவனுமே

நாடு நாளும்
நாசமாக மூல காரணம்

சொல்லும் திறனிருந்தும்
மோசமானதைச் சொல்லிப்
புகழ் பெற விழையும்
"கெட்டிக்காரப்  "படைப்பாளியும்

சொல்லும் பாங்கறியாது
மிகச் சிறந்ததைச் சொல்லி
உலகைத் திருத்த முயலும்
"அரைவேக்காட்டுப்  "படைப்பாளியும்

படைப்புலகை நாளும்
பாழ்படுத்துதல் போலவே

31 comments:

bandhu said...

அட.. அட..

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

இன்றைய யதார்த்தம் புரிந்து சொல்வீச்சு வீசிய விதம் சிறப்பு ஐயா .....வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
ரூபன்

திண்டுக்கல் தனபாலன் said...

இன்றைய உண்மை நிலவரங்கள் ஐயா...

Avargal Unmaigal said...

ஆஹா நல்லாவே போட்டு தாக்குறீங்களே இந்த பதிவுலகத்தில் உள்ளவர்களைப் பற்றி

ஸ்ரீராம். said...

உண்மை....உண்மை!

கரந்தை ஜெயக்குமார் said...

இன்றைய யதார்த்த நிலை

கரந்தை ஜெயக்குமார் said...

த.ம.5

மகிழ்நிறை said...

ஆஹா ,ரொம்ப நோந்துபோயிருகிங்க போலவே?
விடுங்க சார், (இதுல நாமளும் இருக்கமோ ?மைன்ட் வாய்ஸ்)

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal said...
ஆஹா நல்லாவே போட்டு தாக்குறீங்களே இந்த பதிவுலகத்தில் உள்ளவர்களைப் பற்றி//

நான் முதலாவது இல்லை எனச்
சந்தோஷப்பட்டாலும் இரண்டாவதில் இருப்பது
சங்கடமாகத்தான் இருக்கிறது

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

படைப்புலகெனத்தான்
சொல்லி இருக்கிறேன்
பதிவுலகைச் சொல்லவில்லை
ஜன ரஞ்சக எழுத்தாளர்களையும்
மற்றபடி பிரச்சார எழுத்தாளர்களையும்
(என்னைப்போல ) சொல்ல முயன்றிருக்கிறேன்
அவ்வளவே...

பால கணேஷ் said...

படைப்புலகம் பற்றிய உங்களின் ஆதங்கம் நியாயமானதே. படைப்புலகைப் பற்றிக் குறிப்பிடும் போதே அதில் பதிவுலகமும் இணைந்ததுதானே ரமணி ஸார்...! ஆகவே, சுய அலசல் செய்துகொண்டு சிறந்த படைப்புகளை வழங்குதலே சிறந்தது.

Unknown said...

#நான் முதலாவது இல்லை எனச்
சந்தோஷப்பட்டாலும் இரண்டாவதில் இருப்பது
சங்கடமாகத்தான் இருக்கிறது#
என் உள்ளத்தில் உள்ளதை கவிதையாக்கி
விட்டீர்கள் !
த .ம.7

கோமதி அரசு said...

ஆதங்கம் புரிகிறது.

Avargal Unmaigal said...

உங்களிள் ஆதங்கம் புரிகிறது .இரண்டாவதில் இருந்தாலும் சந்தனமாக மணக்கிறீர்களே அதை பாருங்கள் ரமணி சார். என்னை விட அனுபவசாலியான உங்களுக்கு இது நல்லாவே தெரியும்.

இந்த காலத்தில் உயிரைகாப்பவனை விட உயிரை எடுக்கும் கொலையாளிகள்தான் அதிகம் பாப்புலராக ஆகின்றனர். அதற்காக கொலையாளிகளாக ஆகவேண்டுமா என்ன? இன்னும் நிறைய உதாரணங்கள் சொல்லிச்
செல்லலாம்

குறைவாக இருந்தாலும் சந்தணம் போல மணக்க வேண்டும் நிறைய சாக்கடையாக இருப்பதில் பெருமை இல்லை...

உங்களின் எழுத்துக்கள் சந்தனம் அதை மட்டும் மறக்க வேண்டாம்

Avargal Unmaigal said...

பால கணேஷ் மிக அருமையாக பதில் அளித்து இருக்கிறார்

கவியாழி said...

புரியாமல் புரிந்து கொண்டேன்

Thulasidharan V Thillaiakathu said...

ரமணி ஸார்! தங்களின் கவிதை அருமை! யதார்த்த நிலையைச் சொன்னதற்கு!...

படைப்பு என்றாலே பத்திரிகை உலகமும், பதிவுதளங்களும் அடக்கம்தனே!

நல்ல படைப்புகளை எதிர்பார்த்தல் நியாயமே! நாம் எல்லோருமே முனைந்தால் அதுவும் சாத்தியமே!

நல்ல ஆதங்கம், நம் படைப்புகளைத் திருத்திக் கொள்ளவும் உணர்த்தும் படைபு தங்களது!

மிக்க நன்றி!

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

எனக்கும் மிகவும் பிடித்திருந்தது
பாலகணேசா கொக்கா அல்லது
பாலகணேசுன்னா பாலகணேசுதான்னு
சொல்லலாமோ ?

Yaathoramani.blogspot.com said...

Thulasidharan V Thillaiakathu //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.com said...

பால கணேஷ் //

தங்கள் வரவுக்கும்
அருமையான கருத்துரைக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Anonymous said...

பலர் இரண்டாவதில் தானே உள்ளனர்.
சிந்தனைப் பதிவு நன்று.
வேதா. இலங்காதிலகம்.

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

உண்மைதான் ஐயா!

Iniya said...

நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ரமணி சார். நான் இல்லை என்று நினைத்து சந்தோஷப் படவா.......? எனக்கு தெரியும் இல்லை என்று அடித்து சொல்வீர்கள் போல் தெரிகிறது. (இருப்பதாக) ஹா ஹா எல்லோருக்கும் தான் இந்த சந்தேகம் வரப் போகிறது போல் தெரிகிறது....

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையான கவிதை! உங்களை நீங்களே தாழ்த்திக் கொள்ளாதீர்கள் சார்! உங்கள் படைப்புக்கள் ஒவ்வொன்றையும் படித்து வருகிறேன்! அருமையான எழுத்துக்கள்! வாழ்த்துக்கள்!

MANO நாஞ்சில் மனோ said...

அப்பிடி போடுங்க குரு அருவாளை !

அம்பாளடியாள் said...

தங்களின் படைப்புகள் சிறப்பானவை தானே இதில் வருத்தம் எதற்கு ?..
எண்ணற்ற படைப்பாளிகள் திகழும் இவ்வுலகில் நல்லவைகளைக் கண்டு
மகிழ்வோம் .சிறப்பான அலசலிற்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் ஐயா .

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

உண்மை நிலையைச் சொல்வதற்குத் துணிவு வேண்டும். அதனைத் தங்கள் பதிவில் காணமுடிகிறது. நன்றி.

Yarlpavanan said...

தங்கள்
ஒப்பீட்டு இலக்கணத்திற்கு
நான்
அடிமை ஐயா!
கெட்டிக்காரனும்
அரைவேக்காடும்
பதிவை வரவேற்கிறேன்!

அருணா செல்வம் said...

mmmm... அருமை!

kowsy said...

உண்மைதான் எது எப்படி எவ்வாறு எவ்விடத்தில் எப்பொழுது சொல்ல வேண்டும் என்று அறிந்து சொல்லலே அற்புதம். எப்படி சார் அவசியமான விடயங்களை அளந்து தருகின்றீர்கள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

இதுதான் இன்றைய உண்மை நிலை என்று சொல்ல வேண்டும்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment