Tuesday, June 3, 2014

பதிவர் பகவான்ஜியுடன் ஒரு கற்பனை உரையாடல்

நான்:
பகவான்ஜி மிகக் குறுகிய காலத்தில்
அதிக வாசகர்களைப் பெற்றதும்
 தமிழ்மண தரவரிசைப்பட்டியலில்
 மிகச் சீக்கிரமாக முன்னிலை பெற்றுவருவதும்
 தாங்கள் தான் என்பதில் சந்தேகமில்லை
அதற்கு பிரதான காரணம் என்ன எனச்
சொல்ல முடியுமா ?

பகவான்ஜி:
ஓ தாராளமாக
 தினம் ஒரு பதிவு தருவதும்
 நகைச்சுவைப் பதிவாகத் தருவதும்
 அதை சுவாரஸ்யமாகத் தருவதும் தான்

 நான்;
அற்புதமான பதில் .தினம் ஒரு பதிவு புரிகிறது
சிறப்பான நகைச்சுவைப் பதிவு என்பதும் புரிகிறது
அதை சுவாரஸ்யமாகத் தருவது எப்படி என்பதுதான்
எங்களுக்குப் புரியவில்லை சிறப்பாகச் சொல்வதற்கும்
சுவாரஸ்யமாகச் சொல்வதற்கான
 சூட்சுமத்தைச் சொன்னால் எங்களுக்கும் பய்ன்படும்.
உதாரணத்துடன் சொல்லமுடியுமா ?

     
பகவான்ஜி:  
ஓ ! தாராளமாக

 நான் எனச் சொன்னால் உதடு ஒட்டாது
 நாம் எனச் சொன்னால்தான் உதடுகள் ஒட்டும்

 இது சிறப்பாகச் சொல்வது

 ஒயிஃப் என்றால் உதடு ஒட்டாது
 கீப் என்றால்தான உதடு  ஒட்டும்

 இது சுவாரஸ்யமாகச் சொல்வது இது போதுமா ?

 இன்னும் கொஞ்சம் வேணுமா ?

நான்   :  
அற்புதம்.இதை விடத் தெளிவாக
யாரும் விளக்கிச் சொல்லிவிட
 நிச்சயம் முடியாது.
நீங்கள் முதலிடத்தைப் பெறுவதையும்
அதிக வாசகர் எண்ணிக்கையைப் பெறுவதை யாரும்
தடுத்துவிடமும் முடியாது .

வாழ்த்துக்கள்

26 comments:

கவிதை வானம் said...

ஹா...ஹா...

பால கணேஷ் said...

எதற்கு கற்பனை உரையாடல்...? மதுரைக்காரங்க நினைச்சா நிஜ உரையாடலையே நிகழ்த்தலாமே... ஆனாலும் கற்பனையில் சுவாரஸய்த்தை விளக்கிய பகவான்ஜி அசத்துறாரு.

Anonymous said...

ஓகோ! கோ!......கவிதை!...கரு......
நானும் கருத்திடுவது..ரசிப்பதுண்டு
சிரிக்கிறோம்..அது உண்மை...
வேதா.இலங்காதிலகம்

ராஜி said...

உதடு ஒட்டும், ஒட்டாததுக்கு விளக்கம் அருமை!

Thulasidharan V Thillaiakathu said...

பகவான் ஜிக்கு வாழ்த்துக்கள்! அதை மிக அற்புதமாக பதிவு செய்து அவரை வாழ்த்தியது இன்னும் அருமை! உங்கள் எழுத்தாற்றலை என்னவேன்று புகழ்வது ரமணி ஜி!!!!!?? அந்த ஜி வருவார் பாருங்கள் உங்களுக்கு அழகான பதிலுடன்! தன் ஸடைலில்!!!!! சத்தியமாக நீங்கள் எல்லோருமே கலக்குகின்றீர்கள்! வாழ்த்துக்கள்! பாராட்டுக்கள்! எங்கள் இதயத்திலிருந்து!

ஸ்ரீராம். said...

பாராட்ட வேண்டும் என்று நினைத்தவரை வித்தியாசமான முறையில் பாராட்டி இருக்கிறீர்கள். பகவான்ஜிக்கும் வாழ்த்துகள்.

G.M Balasubramaniam said...

பகவான் ஜி இந்தக்கற்பனையைப்படித்தாரா.? எது எப்படி இருந்தாலும் சிறப்பு சுவார்சியம் இரண்டின் விளக்கம் பிரமாதம்...!

Yarlpavanan said...

சிறந்த கலந்துரையாடல்
தினம் ஒரு
புதிய நகைச்சுவை தருவது
பகவான்ஜி அவர்களது திறமை!

வை.கோபாலகிருஷ்ணன் said...

இந்தக்கற்பனை உரையாடல் மூலம் திரு. ரமணி சாருக்குள்ளும் ஒளிந்திருக்கும் மறுபக்கமான நகைச்சுவை உணர்ச்சிகளையும் எழுத்துக்களையும் என்னால் நன்கு உணர முடிந்தது. பாராட்டுக்கள்.

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

அனைவருக்கும் வணக்கம் வந்தனம் நமோஸ்கார் !
இப்போதுதான் வெளியே ஆணிப் பிடுங்கிவிட்டு வந்தேன் பசியாக இருந்தது சாப்பிடும் முன் இங்கே வந்து பார்த்தால் ஆச்சரியம் ,அதிசயம் ஆனால் உண்மை !என்னை மையப் படுத்தி(யும்) ஒரு பதிவு !
பசியே பறந்து போச்சு !
உண்மையில் என் பதிவுகளை ஊன்றிப் படித்து நல்ல புரிதலுடன் உரையாடலை நிகழ்த்தியுள்ளார் ரமணி அய்யா அவர்கள் .உண்மையில் இவ்வளவு சுவாரசியமாக பதில் சொல்லி இருப்பேனாவென்று தெரியவில்லை !
சில நாட்கள் முன் புலவர் இரமானுஜம்அய்யா என்னை என்னையும் தன கவிதையில் ஏற்றி வாழ்த்தி இருந்தார் (அதை தேடி எடுக்க முடியவில்லை }
தற்போது உரையாடல் வடிவில் என்னை வாழ்த்திய உங்களுக்கு மனமார்ந்த நன்றி !
பரிதி ஜி ,வழக்கமா என் ஜோக்குக்கு வந்து
சிரப்பீங்க ,இதுக்கும் சிரிக்கிறது நியாயமா ?
பால் கணேஷ் ஜி ,சில நேரங்களில் நிஜத்தை விட கற்பனைதானே நல்லாயிருக்கு ?
ராஜி மேடம் ,கொஞ்ச நாளா ஒட்டாமஇருந்தீங்க ,இந்த பதிவு மூலமா கருத்து சொல்லி ஒட்டிக்கிட்டதுக்கு நன்றி !
துளசிதரன் ஜி ,உங்களின் பொன்னான நேரத்திலும் நீங்கள் எனக்கு தரும் ஆதரவை எப்படி மறக்க முடியும் ?
ஸ்ரீ ராம் ஜி ,உங்கள் பாராட்டை தினமும் தந்து கொண்டுதானே இருக்கிறீர்கள்,அதற்கும் நன்றி !
GMB சார்,நீங்கள் எதிர்ப்பார்த்தது போல் வந்து படித்து நன்றி சொல்லி விட்டேன் !
ஹமீது ஜமான்,நான் இருக்கும்இடத்தில் எல்லாம் நீங்களும் வந்து கருத்து சொல்வதற்கு நன்றி !
ஜீவலிங்கம் காசி ராஜ லிங்கம் ஜி ,நீங்களும் ஜோக்காளிப் பற்றிய திறனாய்வு வெளியிடுவதாக சொல்லி இருந்தீர்கள் ,அதற்கும் நன்றி !
அய்யா வைகோ (சொல்வதில் தவறில்லையே ?)
உங்கள் கருத்து ,பூவோட சேர்ந்த நாறும் மணக்கும் என்பதை நிருபீக்கிறதே !
இனி வர இருப்பவர்களுக்கும் என் நன்றி !
த ம 5 (எனக்கு நூறு வோட்இருந்தால் இதுக்கே போட்டு இருப்பேன் ,என்ன செய்வேன் எனக்கு இருப்பது ஒரு வோட்தானே ?}

aavee said...

நல்ல கற்பனை..

”தளிர் சுரேஷ்” said...

மிக அருமையான கற்பனை! ஆனால் உண்மை! சுவாரஸ்யமாக தருவதில் பகவான் ஜி வல்லவர்! அதனால் நம்பர் ஒன் இடத்திற்கு பொருத்தமானவர்! நன்றி! வாழ்த்துக்கள்!

அருணா செல்வம் said...

இரமணி ஐயா..... பகவான் ஜிக்காகச் சொல்வது போல... நீங்கள் உங்களின் நகைச்சுவைத் திறனைக் காட்டிவிட்டீர்கள்.

என்னைப் பொறுத்தவரையில் பகவான் ஜியின் தலைப்புகள் மக்களை ஈர்கிறது.
அடுத்தது அவர் தரும் பின்னோட்டங்கள் வாசகர்களைக் கவர்கிறது.

அவரின் நனைச்சுவைப் பதிவு மூன்றாம் இடத்தில்....
அடுத்தது ஒரு முக்கியமானது... அவர் நிறையபேர்களின் பதிவுகளைப் படித்துக் கருத்திடுகிறார்.

நான் உண்மையைத் தான் சொல்கிறேன். இதில் யாருக்காவது (முக்கியமாக பகவான்ஜிக்கு) இது தவறாகப் பட்டால் என் அறியாமையைப் பொறுத்தாற்றுங்கள்.

Anonymous said...

ஒய்போ கீப்போ மனதிற்கு ஓட்டினால் தான் ஓட்டும்! எழுத்தும் மனதிற்கு பிடித்தால் மட்டுமே!

Unknown said...

மேடம் அருணா செல்வம் அவர்களே ,நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை !இதில் தவறேதும் இல்லை ...நன்றி !
தளிர் சுரேஷ் ஜி ,உங்கள் பொன்னான வாக்கு பலிக்கும் வரை பதிவுகளை போட்டுக் கொண்டே இருப்பேன் !
நன்றி

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.
பகவான் ஜி பற்றி சொல்லிய விதம் நன்றாக உள்ளதுஅவரது நகைச்சுவை ஒவ்வொன்றும் மிக அருமையாக சொல்லுவார் நானும் பகவான் ஜி பக்கம் கருத்துப் போடும் போது கேட்டிருக்கேன் எப்படியெல்லாம் சிந்தித்து எழுதுகின்றீர்கள்....பகவான் ஜி என்று.. அவரின் சிந்தனை ஆற்றல் மேலும் வளர எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

kingraj said...

நல்ல கற்பனை....இப்படியே .பே (போ)ட்டி நகைச்சுவை ....எழுதலாம் போல இருக்கே?

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ரசித்தேன் ஐயா...

Pandiaraj Jebarathinam said...

நீங்களும் சுவாரஸ்யத்தை அவரிடமிருந்து வாங்கி விட்டீர்கள் போல..

KILLERGEE Devakottai said...

நல்ல ரசனையான பேட்டி போல இருந்தது.
www.killergee.blogspot.com

அம்பாளடியாள் said...

ஆஹா... இத்தனை பேர் கருத்திட்டு வாழ்த்தியிருந்தாலும் இந்த ஆக்கத்தினை
மேடையில் ஏற்றும் பாக்கியம் எனது கையிலல்லவோ இருந்துள்ளது (த .ம .7 :)) )
நான் "அம்பாளடியாள் " அதனாலதானோ என்னவோ எனக்கு இந்தப் பாக்கியம்
கிட்டியுள்ளது :))) இருவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ஐயா .

வெங்கட் நாகராஜ் said...

செம கற்பனை ரமணி ஜி!......

தினம் பதிவிட்டு வலையுலகை நகைச்சுவை மழையில் நனைய வைக்கும் பகவான் ஜிக்கு வாழ்த்துகள்...

cheena (சீனா) said...

அன்பின் இரமணி - கற்பனை அருமை- பகவான் ஜீக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தினம் ஒரு ஜோக் சொல்லி அசத்தும் பகவான்ஜியை உங்களுக்கே உரித்தான முறையில் பாராட்டியது சூப்பர்.

Unknown said...

திருவாளர்கள் ரூபன்,King Raj,திண்டுக்கல் தனபாலன்,ஜெ பாண்டியன்
,KILLERGEE, அம்பாளடியாள்,வெங்கட் நாகராஜ்,cheena (சீனா) ,டி.என்.முரளிதரன் ஆகியோருக்கு என் மனம் கனிந்த நன்றி !
உங்களின் ஆதரவால் தமிழ் மணத்தில் இரண்டாம்
இடத்தை அடைய முடிந்துள்ளது !

Post a Comment