Monday, February 2, 2015

எங்கோ இருந்து என்னை இயக்கும் அழகுப் பெண்ணே ரதியே

ஆத்து நீரு போகும் போக்கில்
போகும் மீனைப் போல-வீசும்
காத்தின் போக்கில் நித்தம் ஓடும்
கருத்த மேகம் போல-உன்

நினைப்பு போகும் போக்கில் தானே
நாளும் நானும் போறேன்-அந்த
நினைப்பில் பிறக்கும் சுகத்தைத் தானே
பாட்டாத் தந்துப் போறேன்

வண்டை இழுக்கப் பூத்துச் சிரிக்கும்
அழகு மலரைப் போல-இரும்புத்
துண்டை இழுத்து அணைத்துக் கொள்ளும்
விந்தைக் காந்தம் போல-உன்

அழகு போகும் போக்கில் தானே
மயங்கி நானும் போறேன்-அந்த
சுகத்தில் விளையும் உணர்வைத் தானே
கவிதை யென்றுத் தாரேன்

மறைந்து கிடந்து வீட்டைத் தாங்கும்
அஸ்தி வாரம் போல-மண்ணில்
மறைந்து இருந்து மரத்தைக் காக்கும்
ஆணி வேரைப் போல-மறைந்து

எங்கோ இருந்து என்னை இயக்கும்
அழகுப் பெண்ணே ரதியே-சகியே
உந்தன் தயவில் நானும் கவியாய்
மாறிப் போறேன் தினமே

17 comments:

ஸ்ரீராம். said...

(நீ) 'ரதியானால் நான் கவியாவேன்' ன்று பாடி விட்டீர்களோ...!

துரை செல்வராஜூ said...

//எங்கோ இருந்து என்னை இயக்கும்
அழகுப் பெண்ணே ரதியே - சகியே
உந்தன் தயவில் நானும் கவியாய்
மாறிப் போறேன் தினமே!..//

இயல்பு.. எளிமை..
ஆற்றோரச் சோலை என
சிலுசிலுக்கின்றது - கவிதை!..

ஆத்மா said...

இளையராஜா இசையும் சேர்ந்தால் சூப்பர் ஹிட் பாட்டுத்தான்
வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam said...

பாடலின் வரிகளை மெட்டோடு நினைத்து எழுதினீர்களா?அருகே இருந்து இயக்கும் ரதி கருத்து கூறினார்களா?.

சென்னை பித்தன் said...

அழகு ,கவிஞனை உருவாக்குகிறது!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
அருமை
தம +1

Unknown said...

#எங்கோ இருந்து என்னை இயக்கும்
அழகுப் பெண்ணே ரதியே#
எனக்கும் அந்த ரதியைப்பார்க்கணும் போல இருக்கு ...
உங்க கண்ணுக்கே தெரியலைன்னு கேட்கும்
போது வருத்தமாவும் இருக்கு :)
த ம 5

kingraj said...

காதல் ரசம் சொட்டுகிறது.....

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

உங்களது கவிதைகளைப் படிப்பதால் நாங்களும் கவிஞர்களாகிவிடுகிறோம். நன்று

திண்டுக்கல் தனபாலன் said...

திரைப்படத்தில் வரும் காலம் வெகு அருகில்...

தனிமரம் said...

அழகான ரதியே கவிக்கு உவமையாக வந்துவிட்டாள் .ரசித்த கவிதை ஐயா வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

மிகவும் ரசித்தோம்! காதல் ரசம் சொட்டவைக்கும், சொக்க வைக்கும் அழகு ரதியோ!!! எங்கே அவள்?!!!

கே. பி. ஜனா... said...

பாட்டு நல்லாருக்கு..

மோகன்ஜி said...

படிக்கும் போதே ஏனோ கால்கள் தாளம் போட்டது... அழகு!

வெங்கட் நாகராஜ் said...

மனதினை வருடிய கவிதை.
த.ம. +1

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

உவமை மிக்க வரிகள் கற்பனை நன்று இந்த கவிக்கு இசை அமைத்து அழகாக பாடலாம்... பகிர்வுக்கு நன்றி ஐயா.
த.ம12
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வை.கோபாலகிருஷ்ணன் said...

//வண்டை இழுக்கப் பூத்துச் சிரிக்கும் அழகு மலரைப் போல-இரும்புத்துண்டை இழுத்து அணைத்துக் கொள்ளும் விந்தைக் காந்தம் போல-//

மிகவும் அழகான வர்ணனை. :) பாராட்டுக்கள்.

Post a Comment