Thursday, February 26, 2015

வாழ்வை ரசிப்போம்

நிழலைத் தொடர்பவனோ
அது குறித்த நினைவிலேயோ
பயணத்தைத் தொடர்பவனோ
நிச்சயம் இலக்கினை அடைவதில்லை

நிழல் தொடரத்தான் வேண்டும்
அது விதி என்றுணர்ந்தவனே
எல்லையினைக் கடக்கிறான்

கூலி குறித்தோ
பயன் குறித்த கற்பனையிலோ
கடமையினைச் செய்கின்றவன்
நிச்சயம் உயர்வடையச் சாத்தியமில்லை

உழைப்பின் மதிப்பின் கீழ்
கூலியிருக்க விரும்புபவனே
அடையாததையெல்லாம்  அடைகிறான்

நேற்றைய சுகங்களில்
நாளைய கற்பனையில்
இன்றினைத் தொலைப்பவன்
நிச்சயம் வெற்றிகாண வாய்ப்பேயில்லை

நேற்றும் நாளையும்
இன்றின் விளைவெனத் தெளிந்தவே
என்றும் எப்போதும் வெல்கிறான்

அந்த அந்த நொடியில்
விழித்து உயிர்த்து இருத்தலே
ஞானம் எனத் தெளிவோம்

என்றும் எங்கும் எப்போதும்
உடலிருக்குமிடத்தில் மனம் வைத்து
தொடர்ந்து வாழ்வை ரசிப்போம்

20 comments:

KILLERGEE Devakottai said...

ரசிக்க வேண்டிய கவிதை அருமை
தமிழ் மணம் 2

UmayalGayathri said...

என்றும் எங்கும் எப்போதும்
உடலிருக்குமிடத்தில் மனம் வைத்து
தொடர்ந்து வாழ்வை ரசிப்போம்//

ரசித்தேன் ஐயா.

RAMA RAVI (RAMVI) said...

//நேற்றைய சுகங்களில்
நாளைய கற்பனையில்
இன்றினைத் தொலைப்பவன்
நிச்சயம் வெற்றிகாண வாய்ப்பேயில்லை//

அருமை. மிகவும் ரசித்தேன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஆனால் எப்போதும் நம் உடல் இருக்கும் இடத்தில் மனம் இடம்கொள்வதில்லை....

மனதை அலையவிட்டே உடல் ஓரிடத்தில் நிலைக்கொண்டிருக்கும் காலம் இது..

இன்றை நாளை ரசித்து உழைப்பவன்
உயர்வடைவது காலத்தின் கட்டாயம்

அழகிய வரிகள்

Thulasidharan V Thillaiakathu said...

நேற்றைய சுகங்களில்
நாளைய கற்பனையில்
இன்றினைத் தொலைப்பவன்
நிச்சயம் வெற்றிகாண வாய்ப்பேயில்லை//

இன்றை நாளை ரசித்து உழைப்பவன்
உயர்வடைவது காலத்தின் கட்டாயம்//

ஆம்! மிக மிக உண்மை! அருமையான வரிகள்!

G.M Balasubramaniam said...

அருமை ரமணி சார். பாராட்டுக்கள்.

VELU.G said...

/*அந்த அந்த நொடியில்
விழித்து உயிர்த்து இருத்தலே
ஞானம் எனத் தெளிவோம்

என்றும் எங்கும் எப்போதும்
உடலிருக்குமிடத்தில் மனம் வைத்து
தொடர்ந்து வாழ்வை ரசிப்போம்
*/

ஆம் உங்கள் கூற்று முற்றும் உண்மை

இந்த நிமிடம் மட்டுமே நிஜம் என இந்த நிமிடத்தில் வாழ்ந்தால் போதும் மொத்த வாழ்வும் அர்த்தமுள்ளதாகிவிடும்

அருமை வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தத்துவ மழை பொழிந்து விட்டீர்கள் ரமணி சார்!
ஒவ்வொன்றும் அருமை

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
சொல்லிய வரிகள் உண்மைதான் இரசித்து படித்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 6

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

ஐயா, அருமை.

கே. பி. ஜனா... said...

//நேற்றும் நாளையும்
இன்றின் விளைவெனத் தெளிந்தவே
என்றும் எப்போதும் வெல்கிறான்// அருமை...

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!



ரசித்தேன்...

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான தத்துவக் கவிதை! வாழ்த்துக்கள்!

Unknown said...

ஜென் தத்துவத்தை ,நீங்கள் சொன்ன விதத்தை ரசித்தேன் :)
த ம 8

Unknown said...

ஆம் உங்கள் கூற்று முற்றும் உண்மை!
நலமா!!?

kingraj said...

மிகவும் ரசித்தேன் அய்யா
தம+1

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

ரசனையான கவிதை. நன்று.

ப.கந்தசாமி said...

நேற்று என்பது காலாவதியான காசோலை. நாளை என்பது கானல் நீர். இன்று என்பதுதான் நிஜம்.

நல்ல கவிதை.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்வை ரசிப்போம்
அருமை
நன்றி ஐயா
தம +1

Anonymous said...

அந்த அந்த நொடியில்
விழித்து உயிர்த்து இருத்தலே
ஞானம் எனத் தெளிவோம்
அனுபவம் சுட்ட பழங்கள் நன்று.
தொடரட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

Post a Comment