Tuesday, June 2, 2015

ஸ்பான்ஸர் ( 4 )

ஹரி நேரடியாகவே விஷயத்திற்கு வந்தது
எனக்கு வசதியாய்ப் போயிற்று

"மாமா இங்கு உங்கள் வீட்டிற்கு முன்
விளையாடிக் கொண்டிருந்தவர்கள் எல்லோரும்
நல்லபடியாக வேலையில் செட்டில்
ஆகிவிட்டோம். நான் உட்பட பத்து பேர்
வெளி நாட்டிலும் ஐந்து பேர் வடக்கிலும்
இரண்டுபேர் மட்டும் தமிழ் நாட்டிலும்..

நான் பத்து வருடங்களுக்குப்  பின்பு
நான் ஊர் வருவதால் ஒரு கெட்-டுகெதருக்கு
ஏற்பாடு செய்யாலாமெனப் க்ரூப்பில்
பேசிக் கொண்டிருந்தபோது..
எல்லோரும் நல்லவிதமாகப் படித்ததும்
அதிர்ஷ்டம் இருந்ததும் காரணமாக
இருந்த போதிலும் அதையும் தாண்டி
நாங்கள் எல்லோருமே நல்ல விதமாகச்
செட்டில் ஆனதற்கு நாங்கள் (வேறு வேறு
பள்ளிக் கல்லூரிகளில் படித்தாலும்) தொடர்ந்து
பள்ளிக் கல்லூரி நாட்களில் தொடர்பில்
இருந்தததுதான் காரணம் என
எல்லோருக்கும்பட்டது

அதற்கு இந்த விளையாட்டுத் தான் காரணம்
எனப் பட்டது.

எனது மாமா ஒருமுறை வெளி நாட்டில்
இருந்து வந்தபோது " வாடா எங்கள் கல்லூரி வரை
போய் வருவோம் " என என்னை அழைத்துக் கொண்டு
தியாகராயர் கல்லூரி வரை அழைத்துப் போனார்

அங்கு கல்லூரியின் மெயின் சாலையில்
லைப்ரரிக்கு முன் இருந்த ஆலமரத்தடையில்
வெகு நேரம் உட்கார்ந்திருந்து பெருமூச்சுவிட்டார்

பின்"கல்லூரிக்கு முன் வருபவர்கள்
அடுத்தவர்களுக்காகஇங்குதான்அமர்ந்திருப்போம்.
கல்லூரி முடிந்து முன்னால்
வந்தவர்கள் அடுத்து வருபவர்களுக்காகவும்
இங்குதான் தினம் அமர்ந்திருப்போம்.பாடம்
கல்லூரி,வாத்தியார் குறித்து மட்டும் இல்லை
எங்கள் எதிர்காலம் குறித்த அக்கறையான பேச்சுக்களும்
இந்த ஆலமரத்தின் அடியில்தான் அதிகம் நடக்கும்

எங்களில் யார் எப்போது மதுரை வந்து போனாலும்
நிச்சயமாக இந்த ஆலமரத்தடியில் வந்து அமர்ந்துதான்
போவோம்.அது அத்தனை மன நிறைவைத் தரும்"
என்றார்

அப்போது எனக்கு அந்த அருமை புரியவில்லை

இப்போது அதுபோல் நினைத்துப் பார்க்கையில்
எங்கள் எல்லோருக்குமே ஒன்று சொன்னார்ப்போல
உங்களையும்உங்கள் வீட்டின் முன் உள்ள
தெருவையும் தான் நினைக்கத் தோன்றியது

மிகக் குறிப்பாக உங்களைத்தான் நினைத்தோம்

உங்களுக்குத்தான் தெரியுமே ...

விளையாட்டுக்கு ஸ்பான்ஸர் செய்பவர்கள்
எல்லோரும் தம் கம்பெனி விளம்பரம் தொடர்ந்து
இரசிகர்களின் கண்ணில் படவேண்டும் என்பதற்காக
எந்த இடத்திற்கு அதிகம் கேமரா செல்லுமோ
அந்த இடத்திற்கு கூடுதலாக எவ்வளவு தரவும்
தயாராக இருப்பார்கள்

விளையாட்டுக்கு ஏற்பாடு செய்பவர்களும்
அதைப் பொருத்தே அந்த இடத்திற்கான
ஸ்பான்ஸர் தொகையையும் முடிவு செய்வார்கள்

இரண்டுமே வியாபாரம்தான்

அந்த வகையில் பார்க்கையில் எங்களிடம்
எந்த வித பிரதி உபகாரமும் எதிர்பாராமல்
ஒரு நாள் போல நீர் எடுத்து வைத்ததும்..

அந்த இரப்பர் பந்தின் விலை என்னவோ
அப்போது இரண்டு ரூபாய்தான் இருக்கும்
அதையும் பொறுப்பாக சிறு பிள்ளைகள்போல
வாங்கி வைத்திருந்து தேவைப்படுகையில்
தாமதமின்றி எடுத்துக் கொடுத்ததும்...

இப்போது நினைத்தாலும் எங்களுக்கெல்லாம்
நிச்சயம் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

உங்களுக்கு வேண்டுமானால் அது சாதாரண
விசயமாக இருக்கலாம்.எங்களுக்கு அப்படியில்லை

அந்த வயதில் நாங்கள் டைவர்ட் ஆகாமல்
இருந்ததற்கும் எங்களுக்குள் பல காங்கிரீட் ஆன
விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளவும்
இந்த விளையாட்டுத்தான் காரணமாக இருந்தது

அதற்கு நீங்க்கள்தான் காரணமாக இருந்தீர்கள்

ஸ்பான்ஸர் என்பதற்கு கோடிக் கோடியாகத்தான்
இருக்கவேண்டும் என்பதில்லை " எனச் சொல்லி
ஸோபாவுக்கு அருகில் இருந்த பார்சலை எடுத்து
"எங்கள் சிறு அன்புக் காணிக்கை "
எனச் சொல்லிக் கொடுத்தான்

கொடுக்கையில் அவன் கண்கள் லேசாக
கலங்கி இருந்தது

எனக்கும் இந்தச் சின்ன விஷயத்தில் இத்தனை
இருக்குதே  என மலைப்பு வந்தது

அதே சமயம் இந்த நேரம் புதிதாக நான்
வீடுகட்டிக் குடியேறியுள்ள பகுதியில்
அருகில் உள்ள பொட்டலில் விளையாடும்
இளைஞர்கள் வந்திருக்கக் கூடுமே அவர்கள்
கிரிகெட் பேட்டும் ஸ்டம்பும் நம் வீட்டில் தானே
இருக்கிறது, மனைவி வேறு வெளியில்
போகவேண்டும் எனச் சொன்னாளே என்று
நினைவு வர அவனுக்கு
மனமார்ந்த நன்றியைக் கூறி வேகமாக
வீடு நோக்கி நடக்கத் துவங்கினேன்

12 comments:

Anonymous said...

ஹரி உணர்ந்து சொல்லியது முற்றிலும் உண்மை. பதின் வயதில் விளையாட்டு அல்லது இசை போன்ற ஏதோ ஒன்றில் ஈடுபட வாய்ப்புள்ள இளவயதினர் தவறான பழக்கங்களில் கவனம் செலுத்தாமல் வாழ்வில் நல்லபடியாக காலூன்ற முடியும். அதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் உங்களை போன்றோர் முக்கியம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான அனுபவங்களை வெகு அழகாகப் பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். புரிந்து கொண்டோம் :)

வெங்கட் நாகராஜ் said...

மூன்று-நான்கு - இரண்டையும் ஒன்றாகச் சேர்ந்து படித்து ரசித்தேன்.

பல சமயங்களில் விளையாட்டு இளைஞர்களுக்கு நல்ல பொழுதுபோக்கு. தவறான விஷயங்களில் கவனம் செல்லாமல் இருக்க ஒரு வழி.

கடைசியில் முடித்த விதம் மிக நன்று.

yathavan64@gmail.com said...

ஆல மரத்தடி அனுபவ பாடம்
அனு அனுவாய் ரசித்தேன்!
நினைவு என்னும் ஸ்பான்சர்தான்
நிலைத்து நிற்பார்!
த ம + 1
நட்புடன்,
புதுவை வேலு

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
ஒவ்வொரு அனுபுவங்களும் மனதை கவரும் வகையில் சொல்லியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி.

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இராய செல்லப்பா said...

சுவையான அனுபவம்! என் வீட்டெதிரில் தினமும் கிரிக்கெட் விளையாடும் ஏழு முதல் பத்து மாணவர்களுக்கு தினமும் தலா இரண்டு பாட்டில் குடிதண்ணீர் விநியோகம் செய்து வருகிறேன். ஒருவேளை எதிர்காலத்தில் அவர்கள என்னையும் நினைவில் வைத்துக் கொள்ளக்கூடுமோ?

தி.தமிழ் இளங்கோ said...

அன்புள்ள கவிஞர் அவர்களுக்கு வணக்கம்!
இந்த மாத வலைச்சர ஆசிரியர் திரு. வை.கோபாலகிருஷ்ணன் [VGK] அவர்களால் தங்களின் வலைத்தளத்தின் ஒருசில பதிவுகள், வலைச்சரத்தில் இன்று (03.06.15) அறிமுகம் செய்யப் பட்டுள்ளது என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.தங்களுக்கு எனது உளங்கனிந்த இனிய நல் வாழ்த்துக்கள். மற்றும் பாராட்டுக்கள்.

வலைச்சர இணைப்பு:
http://blogintamil.blogspot.in/2015/06/3.html

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அனுபவங்களை இவ்வாறாகத் தொடரில் கொண்டுவருவது என்பது பாராட்டத்தக்கது. யதார்த்தமான நிகழ்வுகளாக அமையும் விதம் படிக்க நன்றாக உள்ளது.

திண்டுக்கல் தனபாலன் said...

முடித்த விதமும் ரொம்பவே ரசித்தேன் ஐயா...

G.M Balasubramaniam said...

ஸ்பான்சர்ஷிப் இன்னும் தொடர்வது மகிழ்ச்சி அளிக்கிறது

ப.கந்தசாமி said...

ஆஹா, சஸ்பென்ஸ் முடிந்தது.

Unknown said...

நல்லவர்கள் நன்றி மறப்பதில்லை!

Post a Comment