Thursday, June 18, 2015

பருவ வயது உளறல்கள்

அவன் அவசரமாய்
அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பினான்

"இப்போது வேதியல்  வகுப்பில்
உன்னைக் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் "

" என்னைக் குறித்தா?
வேதியல்  வகுப்பிலா ?"
அவள் பதில் செய்தி அனுப்பினாள்

"ஆம்.
தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்
பக்கத்தில் இருக்கும் பொருளை
மாறுதலடைச் செய்யும் பொருளை
டீச்சர் கிரியா ஊக்கி என்கிறார்
நான் அது நீ என்கிறேன் சரியா ?
அவன் அழகாய்ப் பிதற்றினான்

"இங்கு கூட இயற்பியல்  வகுப்பில்
உன் எதிர்காலம் குறித்துத்தான்
பாடம் எடுக்கிறார்கள் " என்றாள்

"இயற்பியல் வகுப்பிலா ?
என்  எதிர்காலம் குறித்தா "
அவன் வியந்துபோய்க்  கேட்டான்

அவள் இப்படிச்  செய்தி அனுப்பினாள்

"எந்த ஒரு செயலுக்கும்
எதிர் விளைவுகள் உண்டு என்கிறார் சார்
இப்படி படிக்கிற நேரத்தில்
செய்தி அனுப்பிக் கொண்டிருந்தால்
 நாளை  நீ நிற்கப் போவது
நடு ரோட்டில்தானே  ? "

அவன் பதில் செய்தி அனுப்பவில்லை

12 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

அருமை.

இருவரின் குறுஞ்செய்திகளும் அருமையோ அருமை.

மிகவும் ரஸித்தேன். :)

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... சரியான பாடம் தான் நடந்து கொண்டிருக்கிறது...!

”தளிர் சுரேஷ்” said...

நல்ல பாடம்! ரசித்தேன்! சிரித்தேன்!

சசிகலா said...

நல்லதொரு பகிர்வுங்க ஐயா. சிந்திக்க வைக்கும் மாணவர்களை.

balaamagi said...

ஆஹா அருமையான பதில், அருமை. நன்றி.

சென்னை பித்தன் said...

சூப்பர்
தம 5

Avargal Unmaigal said...

நல்ல குறுஞ்செய்தி.....ஓ ஒழுங்காக படிக்காவிட்டால் நாளை அவன் டிராபிக் போலீஸாகாத்தான் வேலை பார்க்க வேண்டுமா அல்லது இஞ்சினியாரகி நடு ரோட்டில் நிற்க போகிறானா?

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

சரியான பதில்தான்.
சொன்ன விதம் அருமை

Unknown said...

எதையும் எடுத்துச் சொல்லும் உங்கள் பாணியே தனிதான் இரமணி! இது ....! சுவையோ சுவை

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

ஹாஹா

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

படித்த போது சிந்திக்கவைத்தது... மிகவும் இரசனைமிக்கவையாக எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

G.M Balasubramaniam said...

புத்திசாலித்தனமான குறுஞ்செய்திகள்

Post a Comment