Friday, June 26, 2015

ஏனில்லை எதிலும் தமிழ் ?

வெகு நாட்களுக்குப் பின்
என் நண்பனின் கடைக்குப் போனேன்
சங்கர் சைக்கிள் மார்ட் என இருந்த நேம் போர்டை
சங்கர் மிதிவண்டிக்கான அங்காடி என
அழகாக மாற்றி இருந்தான்
நான் பூரித்துப் போனேன்

" நேம் போர்டை எப்போது மாற்றினாய்
சிறப்பாக இருக்கிறது " என்றேன்
 " யார் மாறினாலும் நீ எல்லாம் மாற மாட்டாய்
பெயர் பலகை எனச் சொல் " என்றான்

" ஓ சாரி சாரி..பெயர் பலகையை
எப்போது மாற்றினாய் "என்றேன்

தலையில் அடித்து கொண்டான்
"ஏன் தவறு.. தவறு எனச் சொல்லக் கூடாதா " என்றான்

அவன் முழுத் தமிழன் ஆகிப் போனது
அப்போதுதான் புரிந்தது
இனி ஜாக்கிரதையாகப் பேசவேண்டும் என
முடிவெடுத்துப் பேசத் துவங்கினேன்

"ஒரு மிதி வண்டிக்கு இருபது
சிறு பொருட்கள் தேவைப் படுமா " என்றேன்
முதன் முதலில் முழுத் தமிழில் பேசியது
எனக்கே பெருமையாக இருந்தது

"படும் " என்றான் சுருக்கமாக

"நிறுத்தாது ஒரு பதினைந்து பெயரைச்
சொல்ல முடியுமா " என்றேன்

என்னை அலட்சியமாக பார்த்தபடி
மடமடவென சொல்லத் துவங்கினான்

"டயர், ட்யுப்,ரிம்,போக்ஸ்
ஹேண்ட்பார்,பெல்,ப்ரேக்,பெடல்,
சீட்,ஸ்பிரிங்,மக்காட்,செயின்,
பால்ரஸ்,வால்டுப்,பெடல் கவர்
பதினைந்து ஆச்சா" என்றான்

" மிகச் சரியாகவும் சொல்லிவிட்டாய்
மிக விரைவாகவும் சொல்லிவிட்டாய்
பொருட்கள் பதினைந்து சரி
தமிழ் என்ன ஆயிற்று "என
வைரமுத்து பாணியில் பேசிவிட்டு
கிளம்பத் தயாரானேன்

விடைகொடுத்து அனுப்பிய அவன் கண்களில்
ஏனோ அதிகக் குழப்பம் தெரிந்தது
விரைவாகக் குழம்புகிறவனே
விரைவாகவும் தெளிவடைவான்
எங்கும் எதிலும் ஏன் தமிழ் இல்லை என்பது
நிச்சயமாக நம்மைப் போலவே  
அவனுக்கும் சில நாளில்  புரியக் கூடும்

32 comments:

ப.கந்தசாமி said...

நல்லா இருக்கு. தெளிவடைய சில வருடங்கள் ஆகலாம்.

Yaathoramani.blogspot.com said...

பழனி. கந்தசாமி said...
நல்லா இருக்கு. தெளிவடைய சில வருடங்கள் ஆகலாம்.//

தங்கள் உடன் வரவுக்கும்
நம்பிக்கையூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

தி.தமிழ் இளங்கோ said...

I ) மீள் பதிவே என்றாலும் மீண்டும் படித்தேன். ரசித்தேன். மீண்டும் வருவேன்.
த.ம.2

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ said...//
I ) மீள் பதிவே என்றாலும் மீண்டும் படித்தேன். ரசித்தேன். மீண்டும் வருவேன்//

புதியவர்கள் நிறையத் தொடர்கிறார்கள்
அவர்களுக்காக சில தேர்ந்தெடுத்த பதிவுகளை
படைத்ததில் பிடித்தது எனப் பதிவிடுகிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நகைச்சுவையுடன் நல்ல கருத்தை சொன்னது அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல கருத்து ஐயா
தம+1

Iniya said...

ஹா ஹா ரசித்தேன் சகோ சிந்திக்கவைக்கும் நிச்சயமா அனைவரையும். பதிவுக்கு நன்றி !

Yaathoramani.blogspot.com said...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said..//.
நகைச்சுவையுடன் நல்ல கருத்தை சொன்னது அருமை.//

ஆயினும் தங்கள் கைலியின் அழுகைப்
பதிவுக்கு பக்கத்திலேயே கூட வர இயலாது
அது மிகச் சிறப்பாக இருந்தது
உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...//
நல்ல கருத்து ஐயா//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Iniya said...//
ஹா ஹா ரசித்தேன் சகோ சிந்திக்கவைக்கும் நிச்சயமா அனைவரையும்.//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா ஹா... தெளிவு பெற நாளாகும்...

வெங்கட் நாகராஜ் said...

மீள் பதிவு என்றாலும் மீண்டும் ரசித்த பதிவு.

எல்லா மொழி வார்த்தைகளையும் தமிழில் மாற்றுவது கடினம். புரிந்து கொண்டால் நல்லது!

கரிகாலன் said...

உங்கள் பதிவு நன்று ரமணி
இயலுமானவற்றை தமிழளுக்கு மாற்றலாம் .மாற்ற முடியாதவற்றை ஆங்கிலத்தில்
உச்சரிப்பதில் தவறில்லை .ஆனால் தேயிலை எனும் அழகான தமிழ் சொல் இருக்கும் போது டீதூள் என்பதை என்ன சொல்வது ?
சிலவற்றை தமிழில் சொன்னால் சிலநாட்களில் பயன்பாட்டில் வந்து விடும் .

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said..//.
ஹா ஹா... தெளிவு பெற நாளாகும்.//.

வருடங்கள் நாளானது
மகிழ்வளிக்கிறது
வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் said...//
ரசித்த பதிவு.

எல்லா மொழி வார்த்தைகளையும் தமிழில் மாற்றுவது கடினம். புரிந்து கொண்டால் நல்லது!//

தங்கள் வரவுக்கும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

கரிகாலன் said...
உங்கள் பதிவு நன்று ரமணி
இயலுமானவற்றை தமிழளுக்கு மாற்றலாம் .மாற்ற முடியாதவற்றை ஆங்கிலத்தில்
உச்சரிப்பதில் தவறில்லை //
தங்கள் வரவுக்கும்
அருமையான விரிவான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

காரிகன் said...
This comment has been removed by the author.
காரிகன் said...

அருமையான சிந்தனையைத் தூண்டும் பதிவு. முடிவை ரசித்தேன்.

தமிழ் வாழ்க என்று கோஷம் போட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான் போல. நடைமுறையில் எதிலும் தமிழ் என்பதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. குழம்பி, கொட்டை வடிநீர் (தவறாக நினைக்க வேண்டாம். சில பெயர்ப் பலகைகளில் பார்த்திருக்கிறேன்.) ) என்று அழைக்கப் படவேண்டிய காஃபியை காப்பி என்றே சொல்லலாம். மேலும் கார் என்பதை மகிழுந்து என்பதெல்லாம் சாத்தியமில்லை. நாம் எல்லாவற்றிகும் காரணம் தேடி அதை பெயராக வைக்க முயல்வதே தவறு என்று நினைக்கிறேன்.

சசிகலா said...

தலைப்பும் அதனைத்தொடர்ந்த வரிகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது பகிர்வுக்கு நன்றிங்க ஐயா.

தி.தமிழ் இளங்கோ said...

II ) ஒரு பொருளை அல்லது செயலைக் குறிப்பிட்டால், அந்த சொல் அதன் வடிவத்தை சட்டென்று நினைவுக்கு கொண்டு வரவேண்டும். எனவே, தமிழுக்கு, தமிழ்நாட்டிற்கு புதுமையான அதேசமயம் உலகளாவிய கண்டுபிடிப்புகளை அதே பெயரால் அழைப்பதில் தவறில்லை. அதே சமயம் இருக்கும் தமிழ்ச் சொற்களை புறக்கணித்துவிட்டு அதற்கு மாற்றாக அயல்மொழிச் சொற்களைப் பயன்படுத்துதலும் கூடாது. (உதாரணம் முடி (HAIR), புத்தகம் (BOOK), தண்ணீர் (WATER),அடுக்களை அல்லது சமையலறை (KITCHEN) போன்றவற்றைச் சொல்லலாம்). என்னதான் தமிழ் மக்கள் மத்தியில் தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும் என்ற உணர்வு இருந்தாலும் சில பொருட்களை அல்லது சில பெயர்களை அதன் மூலச் சொல்லிலேயே அழைக்கப்படுவதை விரும்புகின்றனர்.

G.M Balasubramaniam said...

சில பொருட்களின் பெயர்களைத் தமிழ்ச்சொல்லாகவே கருதலாம் தமிழ்ப் பற்று குறைந்து விடாதுஃபேஸ் புக் என்பதை முகநூல் என்று சொல்வதே சரியில்லை என்று ஒரு முறை மதுரைத் தமிழன் எழுதி இருந்ததாக நினைவு. வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

காரிகன் said...
அருமையான சிந்தனையைத் தூண்டும் பதிவு. முடிவை ரசித்தேன்.//

தங்கள் வருகைக்கும் விரிவான
அருமையான தெளிவான அபிப்பிராயத்தை
பின்னூட்டமாகத் தந்தமைக்கும்
உற்சாகமூட்டும் பாராட்டுதலுக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

சசி கலா said..//.
தலைப்பும் அதனைத்தொடர்ந்த வரிகளும் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது//

தங்கள் உடன் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

வெட்டிப்பேச்சு said...

சிக்கல்தான்...

நல்ல பதிவு.

God Bless You

வை.கோபாலகிருஷ்ணன் said...

படித்தேன். ரசித்தேன். சிரித்தேன். அருமை.

எல்லாவற்றையும் ஒரேயடியாக மாற்றி, அவற்றை உடனடியாக அமுலுக்குக் கொண்டுவந்து, அனைவரும் பின்பற்றுவது என்பது, சற்றே சிரமமான காரியம்தான். தமிழ்பற்று என்பது முக்கியமே. இருப்பினும் அதைவிட முக்கியம் அடுத்தவர் அதை எளிதில் புரிந்துகொள்ளுதல் மட்டுமே.

மீள் பகிர்வுக்கு நன்றிகள்.

”தளிர் சுரேஷ்” said...

அனைத்தும் தமிழ் என்பதில் எனக்கும் உடன்பாடில்லை! முடிந்தவற்றை சொல்லலாம்! பழகியவற்றை விட்டுவிடலாம்! சிறப்பான பகிர்வு! நன்றி!

balaamagi said...

வணக்கம், ஏன் நல்லா தானே போய்கிட்டு இருக்கு,
ஆனாலும் இது தேவை தான்,
அடுத்த முறை போகும் போது அவை அனைத்தும் நிச்சயம் தமிழில் இருக்கும் ,
நம்புவோம்.
பதிவுக்கு நன்றி.

சென்னை பித்தன் said...

பெரிய செய்தியைச் சுருக்கமாக ச் சொல்லி விட்டீர்கள்
தம 10

மின் வாசகம் said...

அரசு தலைக்கவசத்தை கட்டாயமாக்கிய போது பலரும் அதனை நய்யாண்டி செய்கின்றனர், இதில் உள்ளரசியல் இருப்பதாக பொறுமுகின்றனர், இதனால் தலைக்கவசம் உற்பத்தியாக்கும் நிறுவனங்களுக்கு லாபம் என புலம்புகின்றனர், சிலரோ காவல்துறையினர் இதைச் சாக்காக வைத்து லஞ்சம் வாங்குவார்கள் என கவிதை பாடுகின்றனர், சிலரோ இது எதார்த்த சாத்தியமில்லாத ஒன்று எனவும், சிலர் சலைகளே ஒழுங்கில்லை என்னத்துக்கு தலைக்கவசம் எனவும், சிலரோ அதனால் தலை வியர்க்கும், முடி கொழியும் என வருத்தப்படுகின்றனர்.

ஆனால், எவருமே தலைக்கவசம் அணியாமல் போனால் விபத்துக்கள் ஏற்படும் போது மண்டை உடையும், மூளை பாதிக்கும் மரணம் நிகழும் வாய்ப்புக்கள் மிகவும் அதிகம் என்பதை உணரவில்லை. பலமுறை விபத்துக்களை நேரில் பார்த்ததினால் தலைக்கவசம் எவ்வளவு அவசியம் என்பதை உணர்ந்திருக்கின்றேன். ஆனால் பெரும்பாலான மக்கள் இதனை எதிர்க்கின்றனர்.

அடடா ! என்ன சம்பந்தேமில்லாமல் தலைக்கவசம் பற்றி நம் பதிவில் கருத்திடுகின்றானே என நீங்கள் யோசிக்கலாம். தலைக்கவசம் போலத் தான், தமிழும். தமிழரது வாழ்க்கைக்கு மொழி மிக முக்கியம். அதுவே நமது மண் மீதான நமது உரிமைகளை காத்து நிற்கின்றது. தமிழ் சிதறிப் போனால் தமிழகத்தில் தமிழருக்கு உண்டான உரிமைகள் சிதறிவிடும்.

தலைக்கவசத்தை ஆரம்பம் முதலே கட்டாயப்படுத்தி இருந்தால் இன்று யாரும் இதனை எதிர்க்க மாட்டார்கள், ஆயிரம் காரணங்கள் சொல்லி தடுக்க மாட்டார்கள், எதார்த்ததில் தலைக்கவசம் என்பது முறையாக பயன்படுத்தப்படவில்லை என்பதற்காக எப்போதும் அதை வேண்டாம் என சொல்லுவதில் நியாயமில்லை.

அதே போலத் தான், தமிழில் புதிய பொருட்களுக்கு பெயரிட்டு சந்தப்படுத்தி அறிமுகம் செய்திருந்தால், தமிழே அனைவரும் பயன்படுத்தி இருப்பர். ஆனால் முதலில் ஆங்கிலத்தில் வந்தபடியால் அனைவரும் ஆங்கிலச் சொல் கொண்டு அழைக்கின்றனர். அதற்காக தமிழை பயன்படுத்த வேண்டாம் என சொல்லுவதில் நியாயமில்லை. கொஞ்சம் கொஞ்சமாக பயன்படுத்தினால் பழகிவிடும், குறிப்பாக அடுத்த தலைமுறைக்கு ஆரம்பம் முதலே தமிழில் சொல்லிக் கொடுத்தால் அதுவே நிலைத்துவிடும்.

போர்த்துகேசியர் நம் நாட்டுக்கு தக்காளி, மிளகாய், உருளைக் கிழங்கு, பப்பாளி போன்றவைகளை அறிமுகம் செய்யும் போது யாருக்கும் அதன் பேர் கூட தெரியாது. ஆனால் பாமரர்கள் அதற்கான தமிழ் பெயரிட்டு பயன்படுத்தியதால் இன்று அனைவரும் தமிழில் தான் இந்த பொருட்களை அழைக்கின்றோம்.

தங்களது நண்பர் உண்மையில் தமிழுக்கு மாற நினைத்தது சரி தான். அவருக்கு மிதிவண்டியின் பொருட்களுக்கு தமிழில் சொல்லத் தெரியவில்லை என்பதால் எங்கும் தமிழ் சாத்தியமில்லை என்றோ, அவர் தமிழில் எடுத்துக் கொண்ட முயற்சி தோற்றதாகவோ பொருள்படாது. உண்மையில் நீங்கள் அவரை குழப்பவில்லை, நீங்களே குழும்பியுள்ளீர்கள். உங்களது இயலாமையை மற்றவர் மீது திணித்து அதில் வெற்றிகண்டதாக நினைத்துள்ளீர்கள். உங்கள் நண்பர் ஆங்கிலத்துக்கு மாறினாலோ, நீங்கள் அதை கொண்டாடினாலோ தமிழுக்கு இழப்பில்லை, தமிழருக்குத் தான் இழப்பு.

மிதிவண்டி மட்டுமல்ல எண்ணற்ற புதிய பொருட்களுக்கு தமிழில் பெயர்கள் வைக்கப்பட்டு கற்பிக்கவும் படுகின்றன. ஆனால் அவற்றை அறிந்து பயன்படுத்தவோ புழக்கத்தில் கொண்டு வரவோ யாரும் முயல்வதில்லை. அதே காரணங்கள் தான், தலைக்கவசம் நல்லது என தெரிந்தும் அதை கற்றவர் கூட எதிர்க்கின்றனர், காரணம் பழகிவிட்ட ஒன்றில் இருந்து மாற மனம் ஒப்புவதில்லை. இதனால் யாருக்கு இழப்பு தலைகவசத்துக்கா நமக்கா?! விபத்து ஏற்பட்டால் நொடியில் மரணத்தை சந்திப்பது யார்?!

தலைக்கவசமோ, தமிழோ எங்குமில்லை என்பதற்காக எப்போதும் எங்குமில்லாமலேயே இருந்துவிடுவது தான் நல்லது என கருதுவது தான் பிற்போக்குத் தனமும், முடங்கிய மனோபாவமும் ஆகும்.

உலகின் சீனா உட்பட பல நாடுகளில் தலைக்கவடம் பயன்படுத்தப்படுகின்றன, ஏன் மிதிவண்டி ஓட்டக் கூட தலைக்கவசம் போட வேண்டும் என்பதே அமெரிக்கா, கனடா உட்பட பல நாடுகளின் சட்டமும். இங்கே சாத்தியப்படவில்லையா?! இதே போன்று வளர்ச்சியும், சட்ட ஒழுங்கும் நிறைந்த நாடுகளில் அவரவர் தாய்மொழியின் பயன்பாடும் ஊடுருவி புழக்கப்பட்டுள்ளது எப்படி சாத்தியமானது? முதலில் இருந்தே தாய்மொழியும் தலைக்கவசமும் பயன்பட்டது என்றாலும் சில நாடுகளில் இடையில் தான் இவை இரண்டும் புகுத்தப்பட்டன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் செத்த மொழியான ஈப்ருவை அரை நூற்றாண்டுக்குள் உயிர்ப்புடைய மொழியாக்கி, பல மொழிகளை தாய்மொழியாக பேசிய மக்கள் ஒரே தலைமுறையில் ஈப்ருவுக்கு மாறியது இஸ்ரேலில் சாத்தியப்பட்டதை விட தமிழை எங்கும் பயன்படுத்த வைப்பதில் பெரிய சிக்கலில்லை. என்ன தங்களாய்ப் போன்றோரும் பலரும் அதற்காக இசைய மாட்டேன் என நிற்பது தான் வருத்தம் தருகின்றது.

நன்றிகள் !

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

சிந்திக்க வைக்கும் பதிவு. கண்டுபிடிப்புகளுக்கான தமிழ் சொற்களை உடனுக்குடன் அறிமுகப்படுத்தி பயன்படுத்தினால் நன்றாக இருக்கும்..ஒன்றறக் கலந்தவற்றை மாற்றுவது சாத்தியமா தெரியவில்லை..எங்கும் எதிலும் தமிழ் வந்தால் மகிழ்ச்சியே
நன்றி ஐயா

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

எடுத்த மமைக்கருத்தை சொல்லி முடித்த விதம் வெகு சிறப்பு ஐயாபகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

V Mawley said...



Sub: HELMETRULES..!



The hullabaloo being generated about compulsory wearing of helmets by two wheeler users is ,to say the least, amusing…Life is full of risks; people’s intelligence informs them about the steps needed to escape the risks unscathed..Life is Equally full of solutions to traverse the various risks; it is left to the individuals’s

Innate instinct of survival to take appropriate safeguards, depending upon the

Particular contexts..It passes common sense as to why the Judiciary must come to the Roads , to implement a rule , that is already there in the Rule Books…

I bought a Helmet, during MGR Regime when wearing helmet was made ‘Compulsory ‘..for 10-15 days..I then packed and stored the Helmet and take it out , each time the THAMASHA is orchestrated…

My objections are mainly ;

1. I may find it advisable to wear a helmet while going on a long trip on the Highways..but I need not wear helmet while going to vegetable shop in the Street corner ( But I become an easy prey to the police, only if made compulsory)

2. The society is full of thieves…safe-guarding our possessions is a nerve-racking experience ( Helmets cost quite a heavy sum ) ..remember the shoe-keeping arrangements in the various temples…

3. And this is important ;The popular homily by the so called specialists is that ‘Helmet protects you from head-injuries that tend to cost your life’..Of course helmet would not save you from limb fractures –arising out of Accidents..

Before we became ‘Developed ‘ , consequent upon GPL,A visit to a Dr./Nursing Home casted us a few hundreds Now, it is everybody’s knowledge that if you are taken to a Multi-specialty Hospital in an Ambulance ( essentially mendacious commercial units ), you will not be let out , without sucking out a few lacs of your hard-earned Life-savings…As I am past 60 ‘s I would rather die of head-injuries than live on ,

for the rest of my life,as a bothersome dependent on my family members;this is my calculated Decision…out of my common sense/prudence..



Just like ,taking a Mediclaim Policy is left to the financial sense/prudence of the individual , wearing helmet must be also left to the common sense of the Road-users ..OR will the High Court also issue Orders that taking

Medic aim Policy is compulsory ?..

Post a Comment