Wednesday, July 29, 2015

புரியாத சில புதிர்கள்

கடவுள் மீதும்
சாஸ்திரங்கள் மீதும்
நம்பிக்கையற்றவனுக்கு வாரீசுகள்
டஜன் கணக்கில் இருக்க

பூர்வ புண்ணிய  பாக்கிய ஸ்தானங்களின்
தோஷ ங்களை
புண்ணிய ஷேத்திரங்களிருந்து
 சீர் செய்யும் பண்டிதருக்கு
ஏனோ குழந்தை பாக்கியம் இல்லை

இலக்கண அறிவு
மருந்துக்கும் இன்றி
இட்டுக் கட்டிப் பாடும்
சுந்தர பாகவதரின் பாடல்களில்
இலக்கணச செறிவு
 பூரணமாய் அமைய

 இருபதாண்டு அனுபவமிக்க
தமிழ் பேராசிரியருக்கு
எத்தனை முயன்றும்  ஏனோ
 கவிதை  ஒருவரி எழுத வரவில்லை

வரப்பு வாய்க்கால் தகராறில்
பங்காளியின் தலையெடுத்தவனின் வாரீசு
படித்து முடித்து முதல் நிலை அலுவலராய்
முன்னேறிச் சிறக்க

சமூகத்தின் மேன்மை குறித்து
அன்றாடம் மேடையில் முழங்கும்
தலைவரின் வாரீசுகள்  எல்லாம்
தறுதலையாய்த் திரியவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

கீழான உணர்வுகளைத் தூண்டிவிட்டு
ஒரு தலைமுறையையே
தடம் மாற ச் செய்பவனின்
படைப்புகள் எல்லாம்
பட்டி தொட்டியெல்லாம் பவனி வர


அடுத்த தலை முறை குறித்து
அக்கறை கொண்டவனின்
 படைப்புகள் எல்லாம்
கரையானுக்கு விருந்தாவதை
ஏனோ தடுத்திட முடியவில்லை

விளக்கங்கள்
ஆயிரம் சொன்ன போதும்
சில விஷயங்கள் புரியத்தான் இல்லை

எப்படித்தான் முயன்றபோதும்
சில புதிருக்கான விடை
கடைசிவரை புரியத்தான் இல்லை

8 comments:

ஸ்ரீராம். said...

எனக்கும்!

தி.தமிழ் இளங்கோ said...

விடை தெரியாக் கேள்விகள்
வாழ்வினில் ஓராயிரம் – விளக்கம்
கேட்டீர் உலகிடம் – யாருக்கும்
தெரியவில்லை இவ்விடம்.

த.ம. 3

திண்டுக்கல் தனபாலன் said...

சிலது அப்படித்தான்... புரியாமல் இருப்பதே நல்லது என்றும் தோன்றுகிறது...

G.M Balasubramaniam said...

எனக்கும் புரியாத பிடிபடாத கேள்வி,

Unknown said...

பூர்வ ஜென்ம புண்ணியம் என்று சொல்லக் கூடும் ,அதையும் ஏற்றுக்கொள்ள முடியாது :)

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அதனால்தான் அவை புதிர்கள்.
கலாமைப்பற்றி வெளிநாட்டுப்பத்திரிக்கைகளில் வந்த செய்தியைக் காண வாருங்கள்.
http://www.drbjambulingam.blogspot.com/2015/07/blog-post_12.html

வெங்கட் நாகராஜ் said...

புரியாத புதிர்......

த.ம. 7

தனிமரம் said...

சிலது புரியாத புதிர்தான் ஐயா கவிதை ரசித்தேன்,

Post a Comment