Tuesday, August 18, 2015

ஐந்தில் இரண்டேனும் ......

"வயல்வெளி
நாற்றிடை வளர்
களையினைக் காணலும் களைதலும்
எளிதானதைப்போல் அல்லாது

முற்றியக்
கதிருடன் திகழ்
பதரினைக் காணலும் களைதலும்
அரிதாகுதே என் செய்வேன்"
என்றேன்

"மனத்திடை வளர்
கருவதன் குறையதை நிறையதை
காணுகிற அளவு

படைத்திட்ட
படைப்புடன் திகழ்
பதரதை களையதை குறையதை
காணல் அரிதாகிறது என்கிறாய்
அப்படித்தானே "என்றார் குரு

மௌனமாய்த் தலையாட்ட
குருவே தொடர்ந்தார்

" களத்தினில்
கதிரடித்துக் காற்றினில் வீச
பதர் பறக்கும் கதிர்மட்டுமே
உயர்ந்துக் குவியும்

காலக் காற்றினில்
படை ப்பதைத் தூற்ற
குப்பைகள் பறக்கும்
தக்கதே நிலைக்கும் "என்றார்

இப்போதெல்லாம்

போக்கும்வழியறிந்ததால்
 பதர் குறித்து
பதற்றமடைவதில்லை

களையும்  முறைதெரிந்ததால்
களைகுறித்தும்
கவலை கொள்வதில்லை

 நாளெல்லாம்

 கூடுதலாய் விதைப்பது குறித்தும்
அதிக விளைச்சல் குறித்துமே
அக்கறை கொள்கிறேன்

பழுதற்றதாய்
ஐந்தில் இரண்டேனும்
காலம் கடக்குமெனும்
அசையாத நம்பிக்கையோடு

9 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
அற்புதமான வரிகள் நல்ல கருத்தை சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் ஐயா த.ம 1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Imayavaramban said...

கருத்தாழமிக்க கவிதை!

இராஜராஜேஸ்வரி said...

தக்கதே நிலைக்கும் என்கிற
தகவமை கருத்தை விதைக்கும்
அருமையான கவிதைக்கு வாழ்த்துகள்..

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அசையாத நம்பிக்கைக்கு பலன் உண்டு.

”தளிர் சுரேஷ்” said...

அருமையான உதாரணத்துடன் சிறப்பான தத்துவம்! படைப்போம்! சிறந்தவை என்றும் சிறந்தோங்கும்! நன்றி!

KILLERGEE Devakottai said...

நம்பிக்கையூட்டும் வரிகள்
தமிழ் மணம் 3

Thulasidharan V Thillaiakathu said...

நல்லதொரு கருத்தைச் சொல்லும் வரிகள்...நம்பிக்கையுடன்

G.M Balasubramaniam said...

பழுதற்றதாக ஐந்துக்கு இரண்டுக்கும் மேல் இருக்கிறது. வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான கருத்து. வாழ்த்துகள்.

Post a Comment