Friday, September 25, 2015

புதுகைப் பதிவர் திருவிழா ( 8 ) கால இயந்திர தயவில் ( 2 )

சிற்றுண்டிச் சாலை மிக விஸ்தாரமாக
குறைந்த பட்சம்300 பேர் தாராளமாக அமர்ந்து
உணவருந்துப் படியாக சிறப்பாக இருந்தது

காலைச் சிற்றுண்டியை பஃபே முறையில்
 உண்ணும்படியாகஏற்பாடு செய்திருந்தார்கள்.
இது போன்ற நிகழ்வுகளில் பிறருடனானத்
தொடர்புக்குஇந்த பஃபே முறைதானே  சிறந்தது

ஏனெனில் நிகழ்ச்சித் துவங்கிவிட்டால் அனைவரும்
 தம்ஒட்டு மொத்த கவனத்தை அதில்தானே
செலுத்த இயலும்

இடையில் இருப்பது மதிய உணவு நேரம்.
அது எப்படியும்வாழை இலை போட்டு நம்
பாரம்பரிய முறையில் இருந்தால்தானே
சிறப்பாக இருக்கச் சாத்தியம்.

அப்போது ஒருவரை ஒருவர்சந்தித்துப் பேச
சாத்தியம் இல்லை எனவே இந்த ஏற்பாடு
எனக்கு மிகவும் பிடித்திருந்தது

காலை உணவுக்கு எப்படியும் 150 பேருக்குக்
குறையாமல் இருப்பார்கள்.அவர்கள் ஒரே வரிசையில்
இருந்து உணவு பெற வேண்டுமானால தேவையற்ற
தாமதம்  ஏற்படுத்தும் என்ற நோக்கில் இருபக்கமும்
உணவு தரும்படி ஏற்பாடு செய்திருந்தது
சிறப்பாக இருந்தது

குறிப்பிட்ட உணவை அளவு அதிகம்
உண்ணும்படியாகச் செய்யாமல் பல வகைப்பட்ட
 உணவை அளவு குறைவாக இரசித்து உண்ணும்படியான
நோக்கில் ஆறு ஐயிட்டங்களாக வைத்திருந்தார்கள்.
இனிப்பு மற்றும் காரப் பணியாரம்
இட்டிலி பொங்கல் வடை பூரி என வைத்திருந்தது
வசதியாக இருந்தது.

அவரவர்களுக்குத் தேவையானதை
 பிடித்ததை கூடுதலாகப் பெற்றுக் கொள்ளவும்
பிடிக்காததை தவிர்க்கவும்
இந்த ஏற்பாடு வசதியாக இருந்தது

தண்ணீர் பாட்டிலை வைக்காது ஹாலின்
 மையப் பகுதியில் சில்வர் டம்ளர்களில் ஒருவர்
நீர் நிரப்பியபடி இருந்தார்

ஹாலின் ஒவ்வொரு மூலையிலும் குடி நீர்
பிடித்துக்குடிக்கும்படியாக ஏற்பாடுகளையும்
செய்திருந்தார்கள்

அதைப் போல சிற்றுண்டி பெருவதற்காக
ஒரு புறம்100 எவர்சில்வர் தட்டும் மறுபுறம்
100 பாக்குத் தட்டும் பேப்பர் போட்டு அழகாக
அடுக்கி வைத்திருந்தார்கள்

இரண்டு வகையாக எதற்கு  ?
தண்ணிர் பாட்டில் வைக்காது
 சில்வர் டம்ளர் எதற்கு " என்றேன்

பிளாஸ்டிக் தட்டு மற்றும் பிளாஸ்டிக் பாட்டில்
உபயோகித்துநாமே பிளாஸ்டிக் கழிவுகளை
உண்டாக்கவேண்டாம என்கிற நோக்கத் தோடும்,
விழா நிகழ்வு முடிந்ததும் சில்வர் ஜக்
டம்ப்ளர் மற்றும் சில்வர் தட்டுகளை ஏதாவது
 ஒரு ஆதரவற்றோர்இல்லத்திற்கு அளித்து விடலாமே ."
என்றார்கள்

அவர்கள் சொல்வதும் மிகச் சரியாகத்தான் இருந்தது
இரண்டு வேளை தண்ணீர்  பாட்டில் செலவும் டம்ளர்
விலையும் ஒன்றாகத்தான் வரும்.தண்ணீர் மட்டும்
வாங்க வேண்டி இருக்கும்.அவ்வளவுதானே

இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் பல வகைகளில்
மாற்றி யோசித்துச் செய்யும் புதுகைப் பதிவர்களை
நினைக்க நினைக்க மனம் மிகப் பூரிப்படைத்தது

அத்துடன் அருமையான சிற்றுண்டி
கொடுத்த திருப்தியிலும் மெல்ல முன்  அரங்கில்
வைத்திருந்த புத்தக ஸ்டாலை நோக்கி
என்  நடையைக் கட்டினேன்


(தொடரும் )

14 comments:

வலைப்பதிவர் சந்திப்பு 2015 - புதுக்கோட்டை said...

ஆகா....!

அன்புடன் DD

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
ஆகா
அருமை
தம +1

வெங்கட் நாகராஜ் said...

பிளாஸ்டிக் இல்லாது எவர்சில்வர் டம்ளர் - நல்ல யோசனை..... தொடர்கிறேன்.

G.M Balasubramaniam said...

நல்ல யோசனைகள். எப்படி அமைகிறதோ பார்ப்போம்

ப.கந்தசாமி said...

இட்லிக்கு தொட்டுக்கொள்ள கோழிக்குருமா இருந்ததா, இல்லையா? இந்த மாதிரி முக்கியத்துவம் வாய்ந்த செய்திகளைத் தராமல்
ஏதேதோ செய்திகளைத் தருகிறீரே, ரமணி சார் !
இது மட்டும் இருந்தால் மற்ற ஐட்டங்கள் தேவையேயில்லை. எவ்வளவு செலவு மிச்சமாகும்? விழாக்குழுவினர் கொஞ்சம் யோசிக்கவேண்டும்.

Yaathoramani.blogspot.com said...

பழனி. கந்தசாமி s//அவர்களுக்கு

கொஞ்சம் நன்றாக யோசித்தே இதனை எழுதுகிறேன்
சில இடங்களில் காலை டிஃபனுக்கு ஏதோ ஒன்று அல்லது
இரண்டு ஐட்டங்களை( கூடுமானவரையில் அது இட்லி
அல்லது பொங்கலாக இருக்கும் )

அரிசி வகைகளைத் தவிர்ககிறவர்கள் இதனால்
சாப்பிடமுடியாமல் போகலாம்
விருந்தினரில் ஒருவர் தமக்கான உணவு இல்லை என
வெளியில் சாப்பிட்டாலும் அது சரியில்லை தானே

இரண்டாவதுதண்ணீர் பாட்டில்கள் வசதியென்றாலும்
தவிர்க்கப் பார்க்கலாம்

பதிவு விஷயம், ஒத்த உடை விஷயம் சேவை விஷயம்
குறித்தெல்லாம் கூட எழுதி இருக்கிறேன்
அதைப் பற்றியும் எழுதலாம்.இன்னும் நாள் இருக்கிறதே
நல்லதாக இருந்தால் விழா ஏற்பாட்டாளர்களுக்கு
உதவக் கூடும் தானே ?

உடன் வரவுக்கும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

S.P.SENTHIL KUMAR said...

அருமையான யோசனைகள்!

ப.கந்தசாமி said...

கூடிய மட்டில் அனாவசிய செலவுகளை மட்டுப்படுத்தி, உணவுகள் வீணாகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Unknown said...

....also every one contributed 10000 rupees...

Yaathoramani.blogspot.com said...

தலையற்ற உடலுக்கு ஒரு பெயர் இருத்தல் போல்
இந்த முகமற்ற பதிவர்களுக்கு என்ன பெயர் சொல்லலாம் ?

தி.தமிழ் இளங்கோ said...

நல்லது! உங்களோடு கால இயந்திரத்தில் (TIME MACHINE ) பயணம் என்பது சுகமாகத்தான் இருக்கிறது. நானும் சைவம்தான் (ஆனாலும் மீன் மட்டும் சாப்பிடுவேன். இது எப்படி இருக்கிறது அய்யா).

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கால இயந்திரப் பயணம் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விட்டது.

”தளிர் சுரேஷ்” said...

நல்ல யோசனைகள்! உடன் பயணிக்கிறேன்!

கீதமஞ்சரி said...

நல்ல ரசனையான அதே சமயம் உபயோகமான பதிவு. முன்பே விழாவுக்கான திட்டங்கள் தீட்டப்பட்டிருக்கும் காரணத்தால் இந்தமுறை இந்த யோசனைகளைப் பயன்படுத்த இயலாவிட்டாலும் வருகிற ஆண்டுகளில் இதுபோன்ற யோசனைகள் செயலாக்கம் பெற்றால் மகிழ்ச்சியே.

Post a Comment