Friday, September 11, 2015

வள்ளுவன் சொன்ன ராஜ ரகசியம்

சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்

சட்டம் போட்டு அரசு இதனைச்
செய்ய விடாது-நாமே
இஷ்டத் தோடு இதனைச் செய்து
இன்னல் களைவோம்

ஒட்ட ஒட்டக்  கறந்த போதும்
கன்றுக் கெனவே-மடியில்
கஷ்டப் பட்டுப்  பாலை ஒதுக்கி
கொடுக்கும் பசுவென

வெட்டி வெட்டிக்  காடு தன்னை
அழிக்கும் போதிலும்-நாளும்
வெக்கை கூட்டிப்  பசுமைக் குடிலை
குலைத்தப் போதிலும்

பட்டம் பார்த்து மழைக் கொடுக்கத்
திணரும் இயற்கையை-இனியும்
கஷ்டப் படுத்திக் கறக்கும் செயலை
குறைக்கப் பழகுவோம்

கடவுள் வாழ்த்துப் பாடி முடித்த
வள்ளுவ னவனுமே-அடுத்து
மறந்தி டாது வானின் சிறப்பைச்
சொல்லிச் சென்றது

மறைவாய் நமக்குச் சொல்லிப் போன
ராஜ ரகசியம் -இதை
மறந்து  விட்டால் அழிவு நமக்குச்
சர்வ நிச்சயம்

11 comments:

KILLERGEE Devakottai said...

சரியான விளிப்புணர்வு வார்த்தைகள் இன்றைய மனிதர்களுக்கு புரிதல்தான் இல்லை அருமை
தமிழ் மணம் 1

திண்டுக்கல் தனபாலன் said...

அனைவரும் உணர வேண்டிய அதிகாரம்...

கரந்தை ஜெயக்குமார் said...

அனைவரும் உணர வேண்டிய ராஜ ரகசியம்
நன்றி ஐயா
தம +1

G.M Balasubramaniam said...

நீரை வீணாக்குபவரைக் கண்டால் எனக்குக் கோபம் வரும் என் தளத்தில் ஒரு கதைப் போட்டி அறிவித்திருக்கிறேன் வருகை தந்து பங்கேற்க வேண்டுகிறேன்

Yarlpavanan said...

"சொட்டு நீரைக் கூட வீணே
விட்டு விடாது-அதைத்
திட்டம் போட்டுச் சேர்க்கும் முறையை
அறிய முயல்வோம்" என்ற
நல்வழிகாட்டலை
நம்மாளுங்க நாள்தோறும்
செயலில் காட்ட முன்வரவேண்டும்!

வெங்கட் நாகராஜ் said...

அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டிய விஷயம்.....

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! நண்ப்ரே! அனைவரும் இவற்றைத் தெரிந்து உணர வேண்டிய விஷயங்கள் தான்...அருமை!

balaamagi said...

தங்கள் பா அருமை,
அடுத்து நீத்தார் ,,,,,,,,,
வாழ்த்துக்கள்,,,,,,,,

வலிப்போக்கன் said...

அந்த ராஜ ரகசியத்தை மறைவாய் சொல்லி விட்டு சென்றதனால்... பலருக்கும் தெரியாமல் போனதனால் இன்று அழிந்து கொண்டு இருக்கிறது தண்ணீர் தேசம்..

கோமதி அரசு said...

விழிப்புணர்வு கவிதை.
வாழ்த்துக்கள்.

Geetha Sambasivam said...

முன்னெல்லாம் பணத்தைத் தண்ணீராகச் செலவு செய்கிறார் எனச் சொல்வதுண்டு. இப்போது தண்ணீரைப் பணத்தை விடக் குறைவாகச் செலவு செய்ய வேண்டும். காசு கொடுத்து வாங்குபவர்கள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும்.

Post a Comment