Friday, September 11, 2015

ஒரு சந்தேகம்

எனக்கு திடீரென ஒரு சந்தேகம்
முன்பு அந்நியர்கள் நீதிபதியாக இருந்தார்கள்

அவர்களுக்கு வெப்பம் தாங்காது
அதிலும் நம் கோடை வெப்பம் நிச்சயம் தாங்காது

எனவே அந்தக் காலங்களில் குளிர்பிரதேசம் போகவோ
அல்லது குளிரான அவர்கள் தேசம் போகவோ
கோடை விடுமுறையை நீதிமன்றங்களுக்குக்
கொடுத்திருந்தார்கள்.

அதுசரி இப்போது நம் நீதிபதிகள் எல்லாம்
நமமவர்கள் தானே

புழுதியிலும் வெய்யிலிலும் வளர்ந்த குப்பனும்
சுப்பனும் நீதிபதியானபின்
கோடை விடுமுறை எதற்கு ?

அதுவும் லட்சக்கணக்கான வழக்குகள்
தேங்கிக் கிடக்கிற நிலையில் ?

நீதித்துறை சம்பத்தப்பட்டவர்கள் விளக்கினால்
என் போன்ற பாமரனுக்கு
புரிந்து கொள்ள ஏதுவாய் இருக்கும் ?

9 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பல நிகழ்வுகளில் நாம் இன்னும் காலனி நாட்களில் இருந்த பழக்கங்களைத்தான் கடைபிடிக்கிறோம். வேதனையே.

மலரின் நினைவுகள் said...

மெக்காலேயை முதுகில் இருந்து இறக்கி விட்டால் தான் இவ்வழக்கம் ஒழியும்...

கரந்தை ஜெயக்குமார் said...

நீதித் துறையும், பள்ளிகளில் மாணவ மாணவியரும் நாள்தோறும், தங்களின் மூளைக்கு வேலை தருகின்றோர்கள் எனவே இவ்விரு துறைகளுக்கு மட்டும் கோடைகால விடுமுறை வழங்கப் பட்டது ஐயா
அப்படியானால் மற்ற துறையினர் என்று எண்ண வேண்டாம்....
தம +1

Thulasidharan V Thillaiakathu said...

மலர்வண்ணன் அழகாகச் சொல்லிவிட்டார்...அதே!

நாம் இன்னும் இங்கிலிஷ்காரனின் நினைவலைகளில் இருந்து வெளிவரவில்லை....அதே போல நம்மூரில் புழங்கும் கோட் சூட்...இங்கு தென்னிந்தியாவில்....ஷூ இப்படிப் அல சொல்லலாம்....கோர்ட்டில் லட்சக்கணக்கான தீர்ப்புகள் தேங்கிக் கிடக்கின்றனதான் ரெட் டேப்பிசம்...

மகிழ்நிறை said...

இதெல்லாம் சத்தமா பேசினா நீதிமன்ற அவமதிப்புன்னு சொல்லிடப் போறாங்க சார்!!

திண்டுக்கல் தனபாலன் said...

விடுமுறை தேவையில்லை தான்...

ப.கந்தசாமி said...

எல்லாப் பயலும் சம்மருக்கு ஊட்டியில்தான் கோர்ட்டு நடத்துவேன் அப்படீன்னு சொல்லாம இருக்காங்களே அதுக்கே ஒரு சலாம் போடணும்.

Geetha Sambasivam said...

நல்ல கேள்வி தான். ஆனாலும் விடுமுறைக்காலங்களிலும் நீதிமன்றம் இயங்கும். விடுமுறைக்கால நீதிபதிகள் பொறுப்பேற்பார்கள். சில அவசரமான வழக்குகளுக்காக இயங்கும்.

G.M Balasubramaniam said...

நீதிக்கு கோடை விடுமுறை தேவையில்லை.

Post a Comment