Sunday, January 3, 2016

மின்னெழுத்தின் சக்தியறிவோம்


சக்கை எதுக்கு மொக்கை எதுக்கு
சரக்கு இருக்கையிலே-வெட்டி
குப்பை எதுக்கு கூளம் எதுக்கு
ஞானம் இருக்கையிலே

வித்தை தெரிந்த பதிவர் இங்கே
நிறைய இருக்கிறோம்-எனவே
முத்தைப் போல மின்னும் பதிவு
நிறையப் பண்ணுவோம்

பதிவர் நிறைய பெண்கள் இருக்க
பண்பாய் எழுதுவோம்-மூத்த
பதிவர் இங்கு நிறைய இருக்க
புரிந்து  எழுதுவோம்

புதிய பதிவர் நிறைய எழுத
ஊக்கம் கொடுப்போம்-அவர்கள்
உரியமதிப்பை   எட்ட நாளும்
வாக்கும் அளிப்போம்

நொடியில் உலகை சுற்றும் வலிமை
பதிவுக்  கிருக்குது-எதையும்
எளிதாய் மாற்றும் சக்தி  வலிய
பதிவுக் கிருக்குது

எடிட்டிங் கட்டிங் சென்ஸார்  எல்லாம்
பதிவுக் கில்லேங்க-அதனால்
பொறுப்பும் நமக்கு நிறைய இருக்கு
புரிந்து கொள்வோங்க

சக்தி கூடச்  சக்தி கூட
பொறுப்பும் கூடணும்-அந்த
"ஸ்பைடர் "மேனின் கருத்தை நாமும்
மனதில் கொள்ளணும்

கத்தி மேலே நடக்கும் நினைப்பில்
பதிவு எழுதுவோம்-புதிய
சக்தி யாக பதிவர் உலகை
மாற்ற முயலுவோம்

10 comments:

Pandiaraj Jebarathinam said...

பதிவர்களின் பண்புகளுக்கான பா

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நன்று.

G.M Balasubramaniam said...

முகநூலா வலைப்பதிவா என்னும் கேள்விக்கான பதிலா?

Unknown said...

கத்தி மேலே நடக்கும் நினைப்பில்
பதிவு எழுதுவோம்-புதிய
சக்தி யாக பதிவர் உலகை
மாற்ற முயலுவோம்

கவிதை மிகவும் நன்று! வலையுலகம் வளர நல்ல யோசனைகள்!

கோமதி அரசு said...

நல்ல கருத்துக்களை சொல்லும் பதிவு. வாழ்த்துக்கள்.

கோமதி அரசு said...

நல்ல கருத்துக்களை சொல்லும் கவிதை.

இராஜராஜேஸ்வரி said...

முத்தான , சத்தான பகிர்வுகள்..!

நிஷா said...

பதிவருக்காக ஆலோசனைகள் அசத்தல்!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான சிந்தனை....

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான அறிவுரை!

Post a Comment