Tuesday, March 1, 2016

கேப்டன் விஜயகாந்த் என்ன முடிவு எடுக்கலாம் ?

கர்மவீரர் சொன்னதைப் போல
இரு கழகங்களும் அனைத்து விதத்திலும்
ஒரே குட்டையில் ஊறிய
மட்டைகள்தான் என்பதில் யாருக்கும்
எந்தவித சந்தேகமும் இல்லை.

ஒன்றுக்கு மாற்றாக ஒன்று இருக்கும்படியும்
ஒருவருக்கு மீதான வெறுப்பை மற்றொருவர்
பயன்படுத்திக் கொள்ளும்படியாகவே
தங்களைத் தகவமைத்துக் கொள்வதும்,
இரு கழகங்களின் பலம் .

விஜயகாந்த அவர்களுக்கு அரசியல் ரீதியாகவும்
தனிப்பட்ட முறையிலும் கெடுதல்கள் செய்ததில்
இரு கழகங்களுமே ஒன்றுக்கு ஒன்று
சளைத்ததில்லை.

தொடர்ந்து எதிர்க்கட்சியாக செயல்பட
விடாதது முதல் எதிர்கட்சித் தலைவர்
 பதவியைப் பறித்தது வரை
தொடர்ந்து  அதிமுக  கெடுதிகள்செய்தது என்றால்

திருமண மண்டபத்தை இடித்தது முதல்
தொடர்ந்து செய்த அரசியல் கெடுபிடிகளால்
அதிமுக பக்கம் ஒதுங்கச் செய்ததில்
திமுகவுக்கும் பெரும் பங்குண்டு

எனவே இரு கழகங்களில் எந்தப் பக்கமும்
சாய்வதற்கு நிச்சயம சாத்தியமே இல்லை

அடுத்து இருப்பது மக்கள் நலக் கூட்டணி.

தேர்தலில் சதவீத கணக்கு செல்லுபடியாகும்
இந்தக் காலக் கட்டத்தில் தனித்து நின்றால்
தங்கள் சதவீதக் கணக்கு அம்பலமாகிவிடும்
என்னும் எண்ணத்திலும் ....

இரு கழகங்களின்
மீதான வெறுப்பு ஓட்டுகளைக் கவரலாம்
என்கிற ஆசையிலும்  ...

விளைந்த கூட்டணியாக
ஒருபுறமும் இருக்கும் இக்கூட்டணி
வெல்வதற்கான வாய்ப்புகளை விட
ஓட்டுக்களைப் பிரிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம்

அப்படியும் ஒருவேளை தப்பித் தவறி
சில குறிப்பிட்ட இடங்களைப் பெற்றுவிட்டாலும்
அவர்களுக்குள் கூட்டணித் தலைவரை
தேர்ந்தெடுக்க நேரும் பட்சத்தில்
நிச்சயம் சிதறித்தான் போவார்கள்

காரணம் முதல்வர்  வேட்பாளரைச்
சொல்லவேண்டியதில்லைஎன்பது மிகச் சரிதான்
ஆனாலும் இன்று அனைத்துக் கட்சிகளும்
அதனால் லாபமோ நஷ்டமோ தங்கள்
முதல்வர் வேட்பாளரை முன்னிருத்துகையில்
அது குறித்து ஒரு முடிவெடுக்கமுடியாமல் இருப்பதே
அதற்கு அத்தாட்சி.

மேலும் அரசியலில்   அவரவர்
கொள்கைகளில் அதிகப் பிடிப்புள்ள
தலைவர்களுடன்..

நமது கேப்டன் அவர்களின். கட்சியை
இணைத்துப் பார்க்க
நமக்கே மனம் ஒப்பவில்லை என்பதுவும்    நிஜம்

அடுத்து இருக்கிற வாய்ப்பு...

தனித்து நின்று மீண்டும் தன் பலம் காட்டும் வாய்ப்பு

அல்லது

பி.ஜெ. பி.கூட்டணியில் சேரும் வாய்ப்பு

(அலசல் தொடரும் )

10 comments:

KILLERGEE Devakottai said...

T.M. 2

தனிமரம் said...

அரசியல் அலசல்சிறப்பு பார்க்கலாம் மக்கள்முடிவை விரைவில் ஐயா!

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

பாஜக கூட்டணியில் சேர்வதுதான் அவருக்கு லாபம் (இரண்டு பொருளிலும்). மக்கள் இரண்டு தீமைகளிலிருந்தும் தப்பிக்கலாம்.

ஸ்ரீராம். said...

நீங்கள் சொல்வது சரி. சரத்குமார் கூட தனக்கும் முதல்வர் ஆசை உண்டு என்று சொல்லியிருக்கிறார்!

திண்டுக்கல் தனபாலன் said...

பார்ப்போம்...

Pandiaraj Jebarathinam said...

திமுக அதிக பெட்டிகள் கொடுக்க வாய்ப்பு உண்டு

மனோவி said...

நல்ல அலசல் நண்பரே.. ஆனால் நெசமாவே கேப்டன் வொர்த்து தானான்னு தேர்தல் முடிஞ்சா தெரிஞ்சிடும்.
- tamiltel.in

G.M Balasubramaniam said...

கடந்த தேர்தலுக்குப் பின் விஜய காந்தின் சேட்டைகளை மக்கள் கவனிக்காமல் இல்லை.அவருக்கு இருக்கும் ஓட்டு வங்கி ஒரு பிரமையே என்ன இருந்தாலும் பிஜேபி ஒரு மதவாதக் கட்சி/ அதனுடன் கூட்டு சேர இவர் மனம் ஒப்புமா

KILLERGEE Devakottai said...

அலசல் நன்று கவிஞரே... இருந்தாலும் இவனுக்கு பேசக்கூடத் தெரியலையே மற்றவர்கள் இரண்டு பேரும் பேசியே மக்களை கொன்றார்கள் பார்ப்போம்.....

My Son said...

தற்போது விஜயகாந்திற்கு அதிகபட்சமாக 7% வாக்கு வங்கி உள்ளது. அதை வைத்துக் கொண்டு அவர் ஆட்சி அமைப்பது என்பது இயலாத காரியம். ஆனால் கட்சியைக் கட்டிக் கnப்பது என்பது அதைவிட முக்கியம். அதிமுக மற்றும் திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் என்று இதுவரை சொல்லிவிட்டு தற்போது அந்த கட்சிகளுடன் கூட்டணி வைத்தால் அது அவருக்கும் அவர் சேரும் கட்சிக்கும் பின்னடைவைத்தான் தரும் என்பதே உண்மை.

Post a Comment