முந்தைய காலங்களில்
முன்னணி இருந்தவர்
பின்னணிப் பார்க்கின்..
உழைப்பு இருக்கும்
தியாகம் இருக்கும்
நேர்மை இருக்கும்
வீரமும் இருக்கும்
விவேகமும் இருக்கும்
இன்றைய காலங்களில்
முன்னணி நிற்பவர்
பின்னணிப் பார்க்கின்
ஜாதி இருக்கும்
மதம் இருக்கும்
பொய்மை இருக்கும்
பணமும் இருக்கும்
பரம்பரையாயும் இருக்கும்
இனியும் வரும் காலங்களில்
முன்னணி செல்பவர்
பின்னணி பாராது
பின்னணி தொடரின்..
எந்நிலை ஆயினும்
மேலும் கொள்ளும்
நம் நிலை நிச்சயம்
கையறு நிலையே
உணர்ந்து தெளிந்தால்
மாறிடத் துணிந்தால்
நிச்சயம் மாறிடும்
நம்தலை விதியே
முன்னணி இருந்தவர்
பின்னணிப் பார்க்கின்..
உழைப்பு இருக்கும்
தியாகம் இருக்கும்
நேர்மை இருக்கும்
வீரமும் இருக்கும்
விவேகமும் இருக்கும்
இன்றைய காலங்களில்
முன்னணி நிற்பவர்
பின்னணிப் பார்க்கின்
ஜாதி இருக்கும்
மதம் இருக்கும்
பொய்மை இருக்கும்
பணமும் இருக்கும்
பரம்பரையாயும் இருக்கும்
இனியும் வரும் காலங்களில்
முன்னணி செல்பவர்
பின்னணி பாராது
பின்னணி தொடரின்..
எந்நிலை ஆயினும்
மேலும் கொள்ளும்
நம் நிலை நிச்சயம்
கையறு நிலையே
உணர்ந்து தெளிந்தால்
மாறிடத் துணிந்தால்
நிச்சயம் மாறிடும்
நம்தலை விதியே
6 comments:
"உணர்ந்து தெளிந்தால்
மாறிடத் துணிந்தால்
நிச்சயம் மாறிடும்
நம்தலை விதியே" என்பதே
இன்றைய தேவை! - இதை
உணருவோம் இன்றே!
’நம் தலை விதியே’
என்ற தங்களின் நிறைவு வரிகளைப் படித்ததும் நான் கேள்விப்பட்டுள்ள ஓர் நகைச்சுவை (சிலேடை வரிகள்) கதை என் நினைவுக்கு வந்தது.
ஒரு ஏழைப்புலவர். மறுநாள் அவர் மனைவியின் திவசம். அதற்காக கடையில் அவர் வாங்கியுள்ள பொருட்களை தலையில் ஓர் மூட்டையாக சுமந்து சென்று கொண்டு இருக்கிறார்.
அவர் எதிரில் மாறுவேடத்தில், நகர்வலம் வந்து, நாட்டு நடப்பினை அறிய, அந்த ஊர் மன்னன் நேரில் வருகிறார்.
அந்த ஏழைப் புலவரிடம் ”தலையில் என்ன மூட்டை?” என வினவுகிறார்.
அந்த ஏழைப் புலவர் சொல்கிறார்:
”தலை விதி வசம் ..... தலைவி திவசம் !”
என்கிறார்.
’முந்தைய காலங்களில்.. முன்னணி இருந்தவர்.. பின்னணிப் பார்க்கின்..’ என்ற தங்களின் ஆரம்ப வரிகளுக்கும் இது பொருந்துகிறது. அதாவது மிக மிக முந்தைய காலங்களில் என நாம் இங்கு எடுத்துக்கொள்ளலாம்.
யோசிக்க வைத்த பகிர்வுக்கு என் நன்றிகள்.
/// உணர்ந்து தெளிந்தால்
மாறிடத் துணிந்தால் ///
நன்மை தான் ஐயா...
ஆமாம் அய்யா! பின்னணி பாராது தொடர்ந்தால் நம் நிலை? - சமூக வலைத்தளங்களில் ஒருவரைத் தொடர்வது பற்றியும் விழிப்புணர்வு தருகிறது இந்த பதிவு.
நம் நிலை நிச்சயம்
கையறு நிலையே---எனக்கு உண்மை அய்யா
நல்ல பகிர்வு.
Post a Comment