Thursday, November 24, 2016

மோடிஜிக்கு கடைக்கோடியிலிருந்து...

என் நெருங்கிய நண்பன் வருடத்திற்கு
இரண்டுமுறையேனும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி
ஒரு கிடாவெட்டிற்கு ஏற்பாடு செய்து
உறவினர்கள் மற்றும் நண்பர்களையெல்லாம்
அழைத்து மிகப் பிரமாதமாக விருந்துக்கு
ஏற்பாடு செய்துவிடுவான்

சில கிடாவெட்டுக்குச் சொல்லும் காரணம்
எனக்கே பல சமயம் இது தேவையா எனத் தோன்றும்

இந்த வாரம் நடந்த கிடாவெட்டுக்குப் போயிருந்தபோது
இந்தக் கிடாவெட்டும் தேவையா எனத் தோன்றியதால்
"ஏன் இப்படி அனாவசியமாகச் செலவு செய்கிறாய் ?"
எனப் பொறுமைக் காக்காது கேட்டும் விட்டேன்

அவன் சொன்ன பதில் எனக்கு மிகவும்
ஆச்சரியமளிப்பதாக இருந்தது

"உண்மையில் நான் வேண்டுதலுக்காக
கிடா வெட்டுவதில்லை.கிடா வெட்டுவதற்காகத்தான்
வேண்டிக் கொள்கிறேன்

காரணம் நான் மிகச் சராசரிக் குடும்பத்தைச்
சேர்ந்தவன்தான் என் உறவும் நட்பு வட்டமும் கூட
இன்னமும் அப்படித்தான்.

நான் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்த
வியாபாரம் என் உழைப்பினாலும்,அதிர்ஷ்டத்தினாலும்
ஏதோ நல்லபடியாகப் போவதால் வீடு, கார் எனச்
செட்டிலாகிக் கொண்டிருக்கிறேன்

என்னால் முடிந்த அளவு தனிப்பட்ட முறையில்
பிறருக்கு வெளியே தெரியாமல்
உதவிக் கொண்டிருந்தாலும் கூட
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டத்தில்
மிக லேசாக பொறாமையும் கொஞ்சம் விலகலும்
இருப்பதை உணர முடிகிறது

இதை இந்த விருந்து சரி செய்து விடுகிறது
நானும் என்னை மனத்தளவில் சரி செய்து கொள்ள
முடிகிறது " என்றான்

எனக்கு இவன் பதில் உண்மையாகவும்
நேர்மையாகவும் படுகிறது

இதையே மோடிஜி வேறுவகையாக யோசிக்கலாம்

இந்த 500/1000 செல்லாததாகிய விவகாரத்தில்
அதிகம் சங்கடப்படுவது கீழ்த்தட்டு மற்றும்
நடுத்தர மக்கள்தான்

உண்மையில் கறுப்புப்பணமக்கள் பாதிக்கப்
படுகிறார்களா இல்லையா என்பது கூட
இனி போகப் போகத்தான் தெரியும்

இந்த நிலையில் என் நண்பனைப் போல
மோடிஜியும் நம் போன்ற கீழ்த்தட்டு மற்றும்
நடுத்தர மக்களின் திருப்திக்காகவேணும்

கோடிக்கணக்கில் கடன் வாங்கிக் கட்டாதுத் திரிகிற
பலரின் பெயர்களை பகிங்கிரமாக வெளியிடுவதோடு
அதில் ஒரு சிலர் மீதாவது உடன் நடவடிக்கை
எடுப்பார் ஆயின்,

இந்தக் கிடாவெட்டு உறவினர் மத்தியில்
இவர் பணம் வந்தும் மாறாது இருக்கிறார் என்கிற
நம்பிக்கையைக் காப்பாற்றுவது மாதிரி,

பிரதமர் பொதுமக்கள் சார்ந்துதான் இருக்கிறார்
எதிர்க்கட்சிகள் சொல்வது போல
அந்தப் பகாசுரப் பணமுதலைகள் பக்கம்
இல்லை என்கிற எண்ணத்தையாவது
தோற்றுவிக்கும் அல்லவா

ஊதுகிற சங்கை நாமும் ஊதி வைப்போம்
காது எப்படி இருக்கிறது என்பது போகப் போகத்
தானாகத்தெரிந்துவிடும் தானே 

6 comments:

அது ஒரு கனாக் காலம் said...

I agree with you, in a interview to a channel, he boosted his quality of not taking revenge on any one from Gujarat CM days...but it is not a virtue ,at least he should have taken action against J.Reddy, Marann brothers , PC .

கரந்தை ஜெயக்குமார் said...

பார்ப்போம் ஐயா
என்ன நடக்கப் போகிறது என்று

V Mawley said...



பணம் கட்டாதவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டால் 'பெரிதாக'
என்ன நடந்துவிடும் ..?.எல்லாம் "வெட்கம் வாழக்கா கறி ஆகுமாடி?" கேஸ் தான் !
மாலி

வெங்கட் நாகராஜ் said...

நல்ல யோசனை.... பார்க்கலாம் என்ன நடக்கிறது என....

Yarlpavanan said...

"ஊதுகிற சங்கை
நாமும் ஊதி வைப்போம்
காது எப்படி இருக்கிறது என்பது
போகப் போகத்
தானாகத் தெரிந்துவிடும் தானே!" என
நானும் நினைவூட்டுகிறேன்!

”தளிர் சுரேஷ்” said...

கறுப்பு பணத்தை மீட்டு ஏழைங்க அக்கவுண்ட்ல போட்டா நல்லாத்தான் இருக்கும்!

Post a Comment