அந்தப்புரச் சுகமும்
அரியணைச் சுகமும்
பங்கப்படாதிருக்க
அரசனுக்கு அன்று
தகவல்கள் அவசியமாக இருந்தது..
ஆம் தகவல்கள்
தேடிப்பெற வேண்டிய
தங்கமாயிருந்தது
அதனாலேயே
படைபலத்தை விட
ஒற்றர்பலம்
அதிகத் தேவையாக இருந்தது
அறிவின் பசியடக்க
வாய்ப்பின் வாசலறிய
பின்னடையாதிருக்க
அனைவருக்கும் பின் நாளில்
தகவல்கள் தேவையாயிருந்தது
ஆம் தகவல்கள்
தேடிப்பெற வேண்டியப்
பொக்கிஷங்களாக இருந்தது
அதனாலேயே
புத்திசாலித்தனத்தை விட
தகவல்களைச் சேகரித்தவன்
வெற்றியாளனாய் இருந்தான்
மன அமைதியும்
வாழ்வின் முன்னேற்றமும்
சாத்தியப்பட
அனைவருக்கும் இன்று
தகவல்கள் ஒருதடையாக இருக்கிறது
ஆம் தகவல்கள்
அதிகமாகி நாற்றமெடுத்த
குப்பையாய் வழிமறிக்கிறது
அரியணைச் சுகமும்
பங்கப்படாதிருக்க
அரசனுக்கு அன்று
தகவல்கள் அவசியமாக இருந்தது..
ஆம் தகவல்கள்
தேடிப்பெற வேண்டிய
தங்கமாயிருந்தது
அதனாலேயே
படைபலத்தை விட
ஒற்றர்பலம்
அதிகத் தேவையாக இருந்தது
அறிவின் பசியடக்க
வாய்ப்பின் வாசலறிய
பின்னடையாதிருக்க
அனைவருக்கும் பின் நாளில்
தகவல்கள் தேவையாயிருந்தது
ஆம் தகவல்கள்
தேடிப்பெற வேண்டியப்
பொக்கிஷங்களாக இருந்தது
அதனாலேயே
புத்திசாலித்தனத்தை விட
தகவல்களைச் சேகரித்தவன்
வெற்றியாளனாய் இருந்தான்
மன அமைதியும்
வாழ்வின் முன்னேற்றமும்
சாத்தியப்பட
அனைவருக்கும் இன்று
தகவல்கள் ஒருதடையாக இருக்கிறது
ஆம் தகவல்கள்
அதிகமாகி நாற்றமெடுத்த
குப்பையாய் வழிமறிக்கிறது
22 comments:
உண்மை! சொன்னவிதம் அருமை! பாராட்டுக்கள்!
ஆம். தாங்கள் சொல்வது மிகவும் உண்மை.
இன்றைய நவீன தொழில்நுட்பங்களான மெயில்கள், வாட்ஸ்-அப் போன்றவற்றில் விஷயங்களை விட குப்பைகளே மிக அதிகமாக நிரம்பி வழிந்து நாற்றமெடுக்க வைக்கின்றன.
இவற்றை உடனுக்குடன் அகற்றவே தனியாக ஒரு ஆள் போட வேண்டும்போன்ற அவசியம் ஏற்படுகிறது.
ஒருவர் அனுப்பிய குப்பையே மீண்டும் மீண்டும் அடுத்தவரால், குரூப் குரூப் ஆக பகிரப்பட்டு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன .... இவர்களில் பலரையும் நான் BLOG செய்து வைத்திருந்தும்கூட. :(
இது கொசுக்கடிபோல மிகவும் தாங்க முடியாத தொல்லையாக உள்ளது என்பதை அனைவரும் உணர்ந்துகொண்டால் மிகவும் நல்லது.
மேலே உள்ள என் கமெண்டில் ஓர் திருத்தம்:
BLOG = BLOCK
இவர்களில் பலரையும் நான் BLOCK செய்து வைத்திருந்தும்கூட. :(
என அது இருக்க வேண்டும்.
தளிர்’ சுரேஷ் //
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வை.கோபாலகிருஷ்ணன் said...
ஆம். தாங்கள் சொல்வது மிகவும் உண்மை.
இன்றைய நவீன தொழில்நுட்பங்களான மெயில்கள், வாட்ஸ்-அப் போன்றவற்றில் விஷயங்களை விட குப்பைகளே மிக அதிகமாக நிரம்பி வழிந்து நாற்றமெடுக்க வைக்கின்றன.//
ஆம் ஆனாலும் அதற்குள்
ஏதாவது ஒன்றிரண்டு நல்லது
இருந்திடாதா என்கிற ஆதங்கத்தில்
குப்பையைத் தவிர்க்கவும் இயலவில்லை
வை.கோபாலகிருஷ்ணன் //
இவற்றை உடனுக்குடன் அகற்றவே தனியாக ஒரு ஆள் போட வேண்டும்போன்ற அவசியம் ஏற்படுகிறது. //
ஆம் புதிதாகவோ அல்லது
தேவையானதோ இருந்தால் என் பக்கத்தில்
அதைப் பதிவு செய்து விட்டு உடன்
அத்தனையும் அழித்துவிடுகிறேன்
அது கொஞ்சம் சிரமமான நேரம் எடுக்கும்
காரியமாகத்தான் இருக்கிறது
வை.கோபாலகிருஷ்ணன் //
ஒருவர் அனுப்பிய குப்பையே மீண்டும் மீண்டும் அடுத்தவரால், குரூப் குரூப் ஆக பகிரப்பட்டு எரிச்சலை ஏற்படுத்தி வருகின்றன .... இவர்களில் பலரையும் நான் BLOG செய்து வைத்திருந்தும்கூட. ://
அப்போதைய செய்தியாயினும் கூடப் பரவாயில்லை
ஆறு மாதங்களுக்கு முந்திய அரதப் பழசை
புதியதுபோல் பகிர்கையில்தான்
தாங்கமுடியவில்லை
வை.கோபாலகிருஷ்ணன் said...//
இது கொசுக்கடிபோல மிகவும் தாங்க முடியாத தொல்லையாக உள்ளது என்பதை அனைவரும் உணர்ந்துகொண்டால் மிகவும் நல்லது.//
கொசுக்கடி நல்ல உவமை
நானும் அந்தக் கடிப்பொறுக்காதுதான்
இதை எழுதினேன்
உடன் வரவுக்கும் விரிவான
மனம்திறந்த பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
உண்மை
அருமை
//தகவல்கள்
அதிகமாகி நாற்றமெடுத்த
குப்பையாய் வழிமறிக்கிறது// எது அதிகமாக இருந்தாலும் பிரச்சனைதான்... தகவல்கள் உட்பட!
இதுக்குதான் வாட்ஸ் அப் போன்ற குருப்புகளில் இருக்க கூடாது எனது வாட்ஸப் குருப்பில் உறவினர்கள் மற்றும் சில நண்பர்கள் மட்டும் உள்ளனர் அவர்களிடம் நான் சொல்லியது இதுதான் இணையத்தில் நீங்கள் பார்ப்பதை எனக்கு அனுப்ப வேண்டாம் என்றுதான் அதனால் குப்பைகள் என்னிடம் வருவதில்லை
எங்கே இருக்கிறீர்கள் அமெரிக்காவிலா இந்தியாவிலா? பேஸ்புக்கில் மெசேஜ் அனுப்பினேன் பார்க்கவில்லையா குருவே
ஆமாம்.முற்றிலும் உண்மை.
அதிலும் forward மெஸேஜை ஏதோ தன் கற்பனையில் உதித்தது போல் அனுப்பும் கொடுமை.
யப்பப்பா.
ஆமாம்.முற்றிலும் உண்மை.
அதிலும் forward மெஸேஜை ஏதோ தன் கற்பனையில் உதித்தது போல் அனுப்பும் கொடுமை.
யப்பப்பா.
இப்போதெல்லாம் தகவல்கள் தலைவலிகளாய் இருக்கிறது
Avargal Unmaigal //
மிகச் சரியான முடிவு
இல்லையெனில் தொடர்ந்து படிப்பதும்
எழுதுவதும் நிச்சயம் பாதிக்கப்படும்
சிவகுமாரன் //
மிகச் சரியாகச் சொன்னீர்கள்
தங்கள் வரவுக்கும் மனம் திறந்த
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
G.M Balasubramaniam //
ஆம் ஒற்றைத் தலைவலிபோல
தகவல்களால் வரும் தலைவலியென
தனியாக ஒரு தலைவலி நோயே வந்து விடுமோ
என அச்சமாக இருக்கிறது
சொன்ன விதம் அருமை...
திண்டுக்கல் தனபாலன் //
உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
//ஆம் தகவல்கள்
அதிகமாகி நாற்றமெடுத்த
குப்பையாய் வழிமறிக்கிறது//
அதனால் தான் google போன்ற தேடி இயந்திரங்கள் நமக்கு தேவையான பக்கங்களை மட்டுமே முன்வைக்க முயற்சி பெறுகின்றன. இலவசம் எனும்போது எல்லோரும் குப்பை கொட்டுவது இருக்கவே செய்யும். தகவல்கள் அதிகமானாலும் குப்பையைக் கிளறி மாணிக்கத்தைப் பொறுக்குவோம்.
--
Jayakumar
jk22384 //
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
Post a Comment