எந்த ஒரு
பெரும் தவறினையும்
தவறியும்
எவரும்
கண்டுபிடிக்கமுடியாதபடி
மிகச் சரியாகச்
செய்யத் தெரிந்தவர்கள்
கொள்ளும் தொடர் வெற்றியையும்
எந்த ஒரு
மிகச் சரியானதையும்
தவறியும்
எவரேனும்
கண்டுமகிழும்படி
மிகச் சரியாகச்
செய்யத் தெரியாதவர்கள்
காணும் தொடர் தோல்வியினையும்
நாள்தோறும்
கண்டு
மனம் புழுங்கி
வெந்து
வேதனைப்பட்டு
மெல்ல மெல்ல
நம்பிக்கை இழந்து
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
ஊமையாய் ஒரு சமூகம்
ஒரு உலகாண்ட சமூகம்
பெரும் தவறினையும்
தவறியும்
எவரும்
கண்டுபிடிக்கமுடியாதபடி
மிகச் சரியாகச்
செய்யத் தெரிந்தவர்கள்
கொள்ளும் தொடர் வெற்றியையும்
எந்த ஒரு
மிகச் சரியானதையும்
தவறியும்
எவரேனும்
கண்டுமகிழும்படி
மிகச் சரியாகச்
செய்யத் தெரியாதவர்கள்
காணும் தொடர் தோல்வியினையும்
நாள்தோறும்
கண்டு
மனம் புழுங்கி
வெந்து
வேதனைப்பட்டு
மெல்ல மெல்ல
நம்பிக்கை இழந்து
வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது
ஊமையாய் ஒரு சமூகம்
ஒரு உலகாண்ட சமூகம்
23 comments:
ம்...... எதைக் குறித்து... யாரைக் குறித்து.... அபுரி!
ஸ்ரீராம். //
நல்ல நோக்கத்தோடு
செய்யப்படுகிற எதுவும்
மிகச் சரியாகச் செய்யப்படாததாலும்
அதனாலேயே
சரியற்றவர்கள் மிகச் சரியாக
விமர்சனம் செய்ய வாய்ப்புப் பெறுதலையும்
நினைக்கப் பிறந்தது இது
புரியை விட அபுரியாய் இருந்தால்
எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க
வைக்கக் கூடும் அல்லவா
முதலில் சொல்லியுள்ள தொடர் வெற்றி புரிகிறது ..... அவர்கள் வல்லவர்கள் மட்டுமே என்பதால்!
இரண்டாவதாகச் சொல்லியுள்ள தொடர் தோல்வியினையும் புரிந்துகொள்ள முடிகிறது ..... அவர்கள் நல்லவர்கள் மட்டுமே என்பதால்!!
அடுத்துவரும் வரிகளும் புரிகின்றன ..... அவர்கள் யதார்த்தவாதிகள் மட்டுமே என்பதால்!!!
>>>>>
//புரியை விட அபுரியாய் இருந்தால்
எல்லாவற்றையும் நினைத்துப் பார்க்க
வைக்கக் கூடும் அல்லவா//
அதே .... அதே ! :)
வை.கோபாலகிருஷ்ணன் //
.ஆழமான புரிதலுடன் கூடிய
அற்புதமான பின்னூட்டதிற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வை.கோபாலகிருஷ்ணன் //
.ஆம் அதே அதே
இல்லையெனில்
இடைத் தேர்தலுடனோ
55/1000 த்துடனோ
புரிதல் அடங்கிவிடச் சாத்தியம்தானே ?
நல்லதொரு கவிதை.
நல்லவனாகவும் இருக்க வேண்டும், அதே சமயம் வல்லவனாகவும் இருக்க வேண்டும்..... அப்படி இருந்தால் தான் இங்கே நிலைக்க முடியும்.
விளக்கம் படித்தும் இன்னும் அபுரிதான் எனக்கு
கடைசி பத்தி குழப்பமாகவே எனக்கு தெரிகிறது.
சிந்திக்க வைக்கும் சிந்தனை வரிகள்
ஐயா
குழப்பமாக இருந்தாலும் கடைசியில் கொஞ்சம் தெளிவு உள்ளது. தவறு, சரி என்பது காண்பவர், மற்றும் செய்பவர் கண்ணோட்டம் ஆவது. பற்றற்ற நிலையில் செயல்களை தவறு அல்லது சரி என்று விலையிருத்த முடியாத சமூகம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
கண்ணால் காண்பதும் பொய். காதால் கேட்பதும் பொய். நடக்கும் நிகழ்வுகள் யாவும் பொய். ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே? எல்லாம் அவன் செயல்.
--
Jayakumar
தடியையும் துப்பாக்கிகளையும் காட்டி பயமுறத்தி வைக்கப்பட்டதால்..சமூகம் .ஊமையாய் இருந்துவிட்டது அய்யா...
தடியையும் துப்பாக்கிகளையும் காட்டி பயமுறத்தி வைக்கப்பட்டதால்..சமூகம் .ஊமையாய் இருந்துவிட்டது அய்யா...
நோக்கம் நல்லது எனில்
செயல் சிறக்கவே செய்யும் ஐயா
வெங்கட் நாகராஜ் //
ஆம் மிகச் சரி
நம் அடிப்படைப் பிரச்சனையே
நல்லவன் கோழையாகவும்
தீயவன் வீரனாகவும் இருப்பதுவே
அருமையான பின்னூட்டத்திற்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
G.M Balasubramaniam //
பின்னூட்டங்கள் படிக்க
அபுரி புரியாகச் சாத்தியமாகியிருக்கும்
என நினைக்கிறேன்
வாழ்த்துக்களுடன்...
S.P.SENTHIL KUMAR //
பின்னூட்டங்கள் படிக்க
அபுரி புரியாகச் சாத்தியமாகியிருக்கும்
என நினைக்கிறேன்
வாழ்த்துக்களுடன்..
Jeevalingam Yarlpavanan Kasirajalingam //
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
jk22384 said...
ஐயா
குழப்பமாக இருந்தாலும் கடைசியில் கொஞ்சம் தெளிவு உள்ளது.//
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வலிப்போக்கன் //
மிகச் சரியான
ஆதங்கத்துடன் கூடிய பின்னூட்ட்டம்
மனம் கவர்ந்தது
வாழ்த்துக்கள்
கரந்தை ஜெயக்குமார் //
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
சரி தான்...
திண்டுக்கல் தனபாலன் //
தங்கள் வரவுக்கும்
உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
Post a Comment