Friday, November 25, 2016

"கவிதையைக் கேள்வி ஆக்கு "


"என்ன செய்வ திந்தக் கையை "
என்றேன்.
 
"என்ன செய்வ தென்றால்.."
என்றான் சாமி.
 
"கைக்கு வேலை
என்றி ருந்தால் பிரச்னை இல்லை.
மற்ற நேரம், நடக்கும் போதும்
நிற்கும் போதும் இந்தக் கைகள்
வெறுந்தோள் முனைத்தொங்கல்
தாங்காதஉறுத்தல்
வடிவத் தொல்லை "
என்றேன்.

"கையைக் காலாக் " கென்றான்

            .....................சி. மணி


"என்ன செய்வதிந்தக் கவிதையை  "
என்றேன்

"என்ன செய்வதென்றால்... "
என்றான் சாமி

"அர்த்தம் பொருத்தம் என்றிருந்தால்
பிரச்சனை இல்லை .
இல்லையேல்
படிக்கும் போதும்
நினைக்கும் போதும்
இந்தக் கவிதை ,
வெறும் சொல்லடுக்கு
வார்த்தைத் தொங்கல் .
தாங்காத உறுத்தல்
வடிவத்தொல்லை "என்றேன்

"கவிதையைக் கேள்வி ஆக்கு    "
என்றான்

4 comments:

ஸ்ரீராம். said...

"பின்னூட்டத்தைப் பாராட்டாக்கு" என்றார்.

:))

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஸ்ரீராம். said...
"பின்னூட்டத்தைப் பாராட்டாக்கு" என்றார். :))//

இதையேதான் நம் முனைவர் பழனி. கந்தசாமி ஐயா அவர்கள் தன் கீழ்க்கண்ட பதிவினில் செய்திருந்தார்:

http://swamysmusings.blogspot.com/2016/11/blog-post.html

வை.கோபாலகிருஷ்ணன் said...

கவிதையைக் கேள்வி ஆக்கி வெளியிடத்தூண்டும் இந்தப்பதிவுக்குப் பாராட்டுகள்.

G.M Balasubramaniam said...

எதை எப்படிச் செய்தாலும் பலரது புரிதலும் மாறுபடுகிறதே ஸ்ரீரா சொல்வதே நடக்கிறது

Post a Comment