Friday, January 27, 2017

பெரியகுளமும் மன்னர் குடியும்

எத்தனை உயரியப்
பதவியே ஆயினும்
எத்தனைச்
சிறந்த பொருளே ஆயினும்

நிழல் போல் உன்னை
விடாது தொடர
வேண்டுமாயின்

அதனை அடைவதற்கான
வரிசையிலும்
முயற்சியிலும் இரு

மிக முக்கியமாக
அதன் மீது அதீதப்
பற்றுக் கொள்ளாமலும்

 அடைந்தே தீர்வதென
புறக்கடை  வழிகளில்
முயற்சிகள்  செய்யாமலும்

அடைவதற்கென
செயற்கையான
புறவேஷங்கள்  புனையாதும் 

மிக முக்கியமாய்
அதனை அடைந்தால்
அதிகம் துள்ளாமலும்

மிக மிக முக்கியமாய்
அதனை இழந்தால்
துளியும் துவளாமலும்

மிகச் சுருக்கமாக
ஆரவார அலைகளற்ற
"பெரிய குளம்" போலவும்..

மாறாக..... அது
"மன்னர் குடியே " ஆயினும்
........................................................
....................................................
...........................................................

(தொடர வேண்டுமா என்ன ? )

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ம்ஹிம்... இதற்கு வாய்ப்பில்லை...

வெங்கட் நாகராஜ் said...

மன்னர் குடியே ஆயினும்..... :)

நல்ல பகிர்வு.

KILLERGEE Devakottai said...

ரசித்தேன் மன்னார்''குடியோ ? என்று நினைத்து விட்டேன்
த.ம.4

Yaathoramani.blogspot.com said...


KILLERGEE Devakottai //

அட ஆமா
அப்படியும் நினைக்க வாய்ப்பிருக்கு இல்ல ?

Thulasidharan V Thillaiakathu said...

மன்னார்குடி மன்னர் குடியாகி ஆகிவிடுமோ?! வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை!!

Post a Comment