Thursday, July 13, 2017

அரண்மனை மெத்தைக் கூட....

பசித்தலில் குடலில் ஏதும்
பிரச்சனை இல்லை யென்றால்
புசித்திடும் உணவு எல்லாம்
நிச்சயம் விருந்து தானே

பசித்தலில் குறைகள் ஏதும்
தொடர்ந்திடக் கூடும் ஆயின்
புசித்திடும் மருந்தும்  கூட
நிச்சயம் சுமைபோல் தானே

உறங்கிட முயலும் போதில்
உடனது தழுவும் ஆயின்
உறங்கிடும் இடங்கள் யாவும்
உன்னத மெத்தை ஆமே

உறக்கமே எதிரிப் போலே
உறுத்தியே இருக்கு மாயின்
அரண்மனை மெத்தைக் கூட
முள்ளென உறுத்தும் தானே

பழகிடும் பாங்க றிந்து
பழகிடக் கூடு மாயின்
துயர்தரும் பகைவர் கூட
விரும்பிடக் கூடும் தானே

பழகிடும் நேர்த்தி தன்னில்
பங்கமே இருக்கு மாயின்
உறவுகள் கூட நம்மை
ஒதுக்கிடக் கூடும் தானே

கவித்திறன் பெற்றுப் பின்னே
கவியது புனைவோம் ஆயின்
நதியெனக் கருக்கள் நம்முள்
மகிழ்வுடன் பாயும் நாளும்

இலக்கண அறிவு இன்றி
இலக்கண மீறல் செய்யின்
குழப்பமே வந்து சூழும்
மனமதில் கொள்வோம்  வெல்வோம் 

14 comments:

ஸ்ரீராம். said...

​வோம்....

ananthako said...

வி தி தெ ரி யா கரு த் தை வெ ளி யி டு ம் என் போன்ற வருவர் களுக் கு
உறு த் தல் என்றா லு ம்
நல்ல மதி தரு ம் அழகு கவிதை.
என்னை ப் போ ன் றோ ர்
தமி ழை சற் றே பொ று த் தரு ள வு ம்.

KILLERGEE Devakottai said...

//கவித்திறன் பெற்றுப் பின்னே
கவியது புனைவோம்//
மிகவும் அருமை.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு கவிதை. நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

Unknown said...

நன்று நண்பரே!

Nagendra Bharathi said...

அருமை

கோமதி அரசு said...

அருமையான கவிதை.

G.M Balasubramaniam said...

அப்படியாச் சொல்கிறீர்கள்

மாதேவி said...

நன்று.

Unknown said...

உங்க அளவுகோல் படி பார்த்தால் இன்றைய கவிஞர்கள் பலரும் காணாமல் போய் விடுவார்களே :)

சிகரம் பாரதி said...

அழகு தமிழில் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் தமிழ் சார்ந்த படைப்புகள் என உங்கள் திறமைகளுக்குக் களம் அமைக்க நாம் தயாராக உள்ளோம். இலக்கியம், விஞ்ஞானம், அரசியல், கணிதம் மற்றும் பொருளியல் என எது சார்ந்த படைப்புகளாக இருந்தாலும் சிகரம் இணையத்தளத்துக்கு அனுப்பி வையுங்கள். தமிழால் இணைவோம்! தமிழை வளர்ப்போம்!
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!
சிகரம் இணையத்தளம் : https://www.sigaram.co
தொடர்புகளுக்கு : editor@sigaram.co

ராஜி said...

அருமை

Thulasidharan V Thillaiakathu said...

அருமை! கொள்வோம் வெல்வோம்!!!

Post a Comment