Tuesday, July 18, 2017

தமிழனுக்கே உரியது என உலக அங்கீகாரம் பெறுவோம்...

பணம் பத்தும் செய்யும்
இது பழைய மொழி
பதினொன்று செய்வது
"அன்பே வா "காலம்
எதையும் செய்யும் என்பது
"சசியின்" காலம்
இப்படிச் சொல்லிப் பெருமை கொள்வோம்
-----------
பணத்தைக் கொண்டு
எதையும் செய்யலாம் எனச்
சமூகச் சூழல் ஆன பின்பு

எதையும் செய்து
பணம் சம்பாதிக்கலாம் என்பது
இன்றைய தர்மம்
இப்படிப் பேசிச் சமாதானம் கொள்வோம்
--------------

பணம் பாதாளம் வரை
பாயும் எனில்
பக்கம் இருக்கிற
மாநிலச்சிறைக்குள்
பாய்வதில் என்ன ஆச்சரியம் ?
இப்படிக் கேட்டு எதிரியை மடக்குவோம்
---------------

விலையில்லா பொருட்கள் கொடுத்து
நம் வாயடைத்து
அரசுப்பணிகள்
அனைத்திற்கும்
விலை வைத்தது ராஜ தந்திரம்
இப்படிச் சொல்லிப் பெருமை கொள்வோம்
----------------

தர்மம் நியாயம்
நீதி சட்டம் அனைத்தையும்
சந்தைப்படுத்தியது
அரசியல் சாகசம்
இப்படிச் சொல்லிப் பெருமிதம் கொள்வோம்
--------------------
மறக்காது
சாக்கடை அரசியலும்
அதனைச் சகிக்கும் மனப்பாங்கும்
தமிழனுக்கே உரியது என
உலக அங்கீகாரம் பெறுவோம்
மீசையை முறுக்கிக்  கர்வமும் கொள்வோம்

6 comments:

வெங்கட் நாகராஜ் said...

ஆதங்கம். அரசியல் இன்னும் அசிங்கமாகிக் கொண்டிருக்கிறது.....

Unknown said...

இணை இல்லா இறுதிக் கவிதை! உண்மை!

KILLERGEE Devakottai said...

வேதனையான ஆதங்க வரிகள்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கூறிய விதம் அருமை.

Unknown said...

மற்ற மாநிலத் தலைவர்களும் இந்த விஷயத்தில் சளைத்தவர்களா என்ன :)

Thulasidharan V Thillaiakathu said...

சகித்துக் கொள்கிறோம் ஆனால் அதனால்தான் இன்னும் கூவமாய் நாறுகிறதோ...

கீதா

Post a Comment