Tuesday, July 25, 2017

காற்று வாங்கப் போனால் ....

காற்று வாங்கப் போனால்
கவிதை வாங்கி வரலாம்-இந்தக்
கூற்று மெத்த நிஜமே-இதை
உணர்ந்து தெளிந்தால் நலமே

இல்லந் தன்னில் அனலாய்
எரித்துக்  கொல்லும் தனிமை-தனித்துச்
செல்லும் போது நெஞ்சில்-தானே
பெருக்கித்  தருமே இனிமை

வீட்டுச் சுவற்றில் எங்கும்
ஒட்டி வைத்தச் செய்தி-நமக்கு
நாட்டு நடப்பைச் சொல்லும்-அதனால்
கருவும் தானே சுரக்கும்

மெல்ல விரியும் கதிர்கள்
மலர்ந்து சிரிக்கும் மலர்கள்-காணும்
உள்ளம் நிறைத்துப் போக-கவிதை
ஊற்று பெருகும் தானே

உள்ளம் அதனில்  உடலில்
உடனே  சக்திக்  கூட்டும்  -எளிய
நல்லப்  பயிற்சி என்றால் --அது
நடக்கும் பயிற்சித் தானே

  எனவே நாளும்----

"காற்று வாங்கப் போனேன்
கவிதை வாங்கி வந்தேன் " -இந்தக்
கூற்றை நினைவில் கொண்டே    -நாமும்
காற்று  வாங்கப் போவோம்  

9 comments:

Unknown said...

இன்று மதுரையில் 1௦7 டிகிரி வெயில் சுட்டு பொசுக்கி விட்டது ,மாலை எப்போது வரும் ,சுகமான காற்று வாங்கலாம் என்று ஏங்க வைத்து விட்டது :)

ஸ்ரீராம். said...

இப்போதைய நிலைமை கவிதை வாங்கப் போனால் காற்று கிடைக்குமா என்பதுதான்!

G.M Balasubramaniam said...

மனம் எதைச் சிந்திக்கிறதோ அதுவே கவிதையாகிற்தோ

வெங்கட் நாகராஜ் said...

காற்று வாங்கப் போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன்..... சுகமான காற்று இப்போதைய தேவை....

ராஜி said...

எங்கிருந்தாலும் கவிதை கிடைச்சிடும்... காத்து/?! தம. 4

கரந்தை ஜெயக்குமார் said...

காற்று வாங்கப் போவோம்

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

இப்போதைய சூழல் இதுதான்.

Thulasidharan V Thillaiakathu said...

கேரளத்துக்குப் பொருந்தும்...இப்போது நல்ல மழை! கோயம்புத்தூரிலும் நன்றாகவே இருக்காம்..

கீதா: ஆ! சென்னையில் காற்றா? வெயில் கொளுத்துது..

தனிமரம் said...

நல்ல காற்று தொடர்ந்தால் நலமே.

Post a Comment