Wednesday, July 5, 2017

வாடித் தவிக்குது பதிவர் உலகு

வாடித் தவிக்குது பதிவர் உலகு -நீங்கள்
வாரா திருப்பதாலே-இருள்
மூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்
எழுதா திருப்பதாலே

தேரின்றி நடக்கும்
திருவிழா போலவும்
நீரின்றித் தவிக்கும்
காவிரி போலவும்

கண்ணனைக் காணாத
கோகுலம் போலவும்
வெண்நிலவைத் தேடும்
வானமதைப் போலவும்

வண்ணமதைப் பூணாத
ஓவியத்தைப் போலவும்
வண்ணமலர் இல்லாத
பூங்காவைப் போலவும்

கோலமது வரையாத
வெளிவாசல் போலவும்
தாளமது சேராத
சுகராகம் போலவும்

வாடித் தவிக்குது பதிவர உலகு -நீங்கள்
வாரா திருப்பதாலே-இருள்
மூடத் துடிக்குது பதிவர் உலகு -நீங்கள்
எழுதா திருப்பதாலே

பதிவர் மனமதில் உள்ளதனை-இங்கே
பதிவாய்  நானும் தந்து விட்டேன்
இனியும் தாமதம் செய்யாது-பதிவினைத்
தந்தெமை மகிழ்ந்திடச் செய்வீரே

(எழுதாது இருக்கும் நம்  மனம் கவர்ந்த
பதிவர்கள் அனைவருக்கும்
பதிவர்கள் சார்பில் ஒரு வேண்டுகோளாய்  )

16 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

தலைப்பைப் பார்த்ததும்

’வாடி என் கப்பக்கிழங்கே’ என்று ஆரம்பிக்கும்
சினிமா பாடல் வரிகள் நினைவுக்கு வந்து ஹிம்சித்து விட்டது. :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

பதிவர்களுக்கு ஊக்கமும் உற்சாகமும் கொடுத்து, வலைப்பதிவினில் எழுத வரவேற்கும் அற்புதமாக ஆக்கம். பாராட்டுகள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஒவ்வொரு வரியினிலும் உள்ள உதாரணங்கள் மிகவும் அருமையாக வந்து அவைகளாகவே விழுந்துள்ளன.

அதுதான் தங்களின் தனிச்சிறப்பு.

வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai said...

அனைவர் மனதில் உள்ளதை சொல்லி விட்டீர்கள்

ராஜி said...

வரனும், எல்லாரும் வரனும்... பழைய பன்னீர்செல்வமா திரும்பி வரனும்

Thulasidharan V Thillaiakathu said...

அருமை.....எங்கள்/ நம் எல்லோர் மனதிலும் இருப்பதை அழகாகச் சொல்லிவிட்டீர்கள்.....வரணும் எல்லோரும்....

Unknown said...

வரப் போறீங்களா இல்லையா ?தூங்கும் போதும் காலாட்டிகிட்டே இருந்தால்தான் ,உங்களின் இருப்பை இந்த உலகம் நம்பும் :)

Avargal Unmaigal said...

வந்திட்டேன்ல திரும்பி வந்துடேன்ல......

தனிமரம் said...

வரவேண்டும் எல்லோரும் என்பதே என் ஆசையும் . அருமையான அழைப்புக்கவிதை ஐயா!

கோமதி அரசு said...

பதிவுலகுக்கு எல்லோரையும் வரவேற்கும் கவிதை அருமை.

Unknown said...

அருமை என் ஏக்கமும் அதுவே!

G.M Balasubramaniam said...

சில நேரங்களில் இந்த மாதிரியான உயர்வு நவிற்சி அணியுள்ள எழுத்தும் தேவைதானோ என்னவோ

Anuprem said...

அனைவரையும் எழுத தூண்டும் ஆவல் மிகு வரிகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... நல்லதொரு மாற்றம் வரட்டும்...

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை said...

அய்யா, நானும் ஒருமாத இடைவெளிக்குப் பிறகு இன்று எழுதிவிட்டேன்! நன்றி

வெங்கட் நாகராஜ் said...

பதிவுலகத்திலிருந்து பலரும் விலகி இருப்பது வருத்தம் தருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக நானும் பதிவுலகம் வருவதில் சிக்கல்கள்.....

நல்லதொரு மாற்றம் வரட்டும்.

Post a Comment