Monday, September 18, 2017

யாருக்குப் பொருந்தும் ?

யாருக்குப் பொருந்தும் ?

திருடிக் கொண்டு ஓடுகையில்
கண்டு கொண்ட
மக்கள் கூட்டம்
"திருடன் திருடன்' எனக் கத்தியபடி விரட்ட

கெட்டிக்காரத் திருடன்
தானும்
"திருடன் திருடன் " எனக் கத்தியபடியே
முன்னே ஓடுகிறான்

பார்ப்பவரையும்
விரட்டுபவர்களையும்
குழப்பியபடியும்
ஏமாற்றியபடியும்..

துரோகம் இழைத்ததற்காக
"அவர்" இருக்கையில்
ஒதுக்கியே வைக்கப்பட்டவர்
இப்போது
"துரோகிகள் துரோகிகள் "
என அனைவரையும்
தூற்றியபடியே
நகர் வலம் வந்து கொண்டிருக்கிறார்

தொண்டர்களையும்
மக்களையும்
முட்டாள்கள் என
நினைத்தபடி
கணித்தபடி

(இது யாருக்குப் பொருந்தும் என
கணிக்க முடியாதவர்களுக்கு
ஒரு அருமையான க்ளூ

அவர் மூன்றெழுத்து இன்சியலால்
அழைக்கப்படுபவர்

மூவரும் அப்படித்தானே அழைக்கப்படுகிறார்கள்
என நீங்கள் யூகித்தால் அதற்கு
நான் பொறுப்பல்ல )

7 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
தம +1

ராஜி said...

கைப்புண்ணுக்கு கண்ணாடி எதுக்குப்பா

Thulasidharan V Thillaiakathu said...

நல்லாவே தெரிஞ்சுருச்சே....

Avargal Unmaigal said...

எங்க மூளையை உபயோகித்த்தால் சுளுக்கு வந்துடுமே

பூ விழி said...

ஹா ஹா பூனை கண்ணை முடிகிச்சினா பூலோகம் இருண்டு போச்சின்னு நினைச்சிக்குமா

தி.தமிழ் இளங்கோ said...

மூவரும் ஒன்றாகி விடுவார்கள். எல்லாம் ஒருவகை நாடகம் என்றே எண்ண வேண்டியுள்ளது.

G.M Balasubramaniam said...

நேரத்துக்குத் தகுந்தாற்போல் திருடன்போலிஸ் ஆட்டம் ஆடுபவர்கள் மக்களை சந்திப்பார்களா

Post a Comment