Wednesday, September 20, 2017

நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்


மரத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும்
ஆணிவேர்தான் காரணம்
என்பதை விவசாயிக்கு விளக்க வேண்டியதில்லை

மாளிகையின் நிலைப்புக்கும் உறுதிக்கும்
அஸ்திவாரம்தான் முழுக்காரணம் என்பதை
எந்த பொறியாளருக்கும  
விளக்க வேண்டியதில்லை

இச்சமூகத்தின் வளச்சிக்கும் மேன்மைக்கும்
பெண்கள்தான்காரணம் என்பதை
இந்தியாவில் எவருக்கும் யாரும்
விளக்கவேண்டிய அவசியமே இல்லை

ஏனெனில் இதனைஆதியிலேயே
மிகத் தெளிவாக அறிந்திருந்தனால்தான்......

படைக்கும் பிரம்மனுக்குத் துணையாக
கலைக்கும்கல்விக்குமான கலைமகளை
துணையாக்கி மகிழ்ந்திருக்கிறான்

காக்கும் திருமாலுக்கு இணையாக
கருணையும்செல்வத்திற்குமான திருமகளை
துணைவியாக்கி குதூகலித்திருக்கிறான்

அழிக்கும் ருத்திரனுக்கு இணையாக
ஆக்ரோஷமும்சக்தியின் சொரூபமான
மலைமகளை இணையாக்கி
இன்பம் கொண்டிருக்கிறான்

கலைமகள் துணையற்று படைத்தலும்
திருமகள் கருணையற்று காத்தலும்
சக்தியின் அருளற்று அழித்தலும்
ஆகாத ஒன்று என அறிந்ததால்தான்
முப்பெரும் தேவியரை பிரதானப் படுத்தி
ஒன்பது இரவுகளை தேர்ந்தெடுத்து
 நவராத்திரியாக கொண்டாடியும்  மகிழ்ந்திருக்கிறான்

அவர்களின் உள் நோக்கமறிந்து
நாமும் தொடர்ந்து கொண்டாடி மகிழ்கிறோம்

குழந்தையாய்
முழுமையாக அவளைச்  சார்ந்திருக்கும் நாளில்
அன்பின் மொத்த வடிவான   அன்னையாக

கணவனாக
அவளுக்கு இணையாக சேர்ந்திருக்கும் நாளில்
பின்னிருந்து இயக்கும் சக்தியாகத்  தாரமாக

வயதாகி
சக்தியிழந்து ஓய்ந்துச் சாய்கிற நாளில்
அனைத்துமாய்  தாங்கும் அன்புமிக்க மகளாக

 மண்ணகத்தில் மங்கையர் எல்லாம் கண்கண்ட
முப்பெரும் தேவியராய்த் திகழ்வதாலேயே

மங்கையரைக் கௌரவிக்கும் நாளாகவே இந்த
 நவராத்திரித் திரு நாளைக் கொண்டாடி
 நாமும் மகிழ்கின்றோம்

அவர்களது தியாக உள்ளங்களை இந் நாளில்
 சிறிதேனும் நாமும் கொள்ள முயல்வோம்

அவர்களோடு இணந்து  சமூகம்  சிறக்க
 நாமும்  நம்மாலானதைச் செய்வோம்

அனைவருக்கும் இனிய நவராத்திரி தின
நல்வாழ்த்துக்கள்  

7 comments:

Thulasidharan V Thillaiakathu said...

நம்மால் இயன்ற நன்மையைச் செய்வோம்.
அனைவருக்கும் நவராத்திரி தின நல்வாழ்த்துகள்!

ராஜி said...

இனிய நவராத்திரி நல்வாழ்த்துகள்ப்பா.

கரந்தை ஜெயக்குமார் said...

வாழ்த்துக்கள்

Unknown said...

விளக்கம் நன்று!!எங்கே என் வலைப் பக்கம் காணோம்

Unknown said...

த ம 4

G.M Balasubramaniam said...

அவரவர் மனதுக்குப் பிடித்தவகையில் தெய்வங்களை நினைக்கிறோம் கொண்டாடுகிறோம் நவராத்திரி வாழ்த்துகள்

ராமலக்ஷ்மி said...

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். நவராத்திரி வாழ்த்துகள்!

Post a Comment