Sunday, October 22, 2017

GST யை மெர்சலாக்குவோமா

வரிவிதிப்பு முறையை பயன்படுத்தி GST வரம்புக்குள் உட்படாத நிறுவனங்களும் அவர்களது ரசீதில் CGST, SGST என்று வரி விதிப்பதாக சொல்லப்படுகிறது.
இதை அனைவரும் தெரிந்துகொள்ளவேண்டும்.

அந்த நிறுவனங்கள் வரி வாங்க அனுமதி உள்ளதா என்பதை கண்டறிய 1 நிமிடம் மட்டுமே போதுமானது.

முதலில் அவர்கள் கொடுக்கும் ரசீதில் GSTIN எண் அச்சிடப்பட்டுள்ளதா என்று பாருங்கள். இல்லையென்றால் நீங்கள் வரிசெலுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் பொருள்.

GSTIN எண் இருந்தும் உங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால், அதுவும் 1 நிமிடத்தில் கண்டுபிடித்துவிடலாம்.
www.gst.gov.in என்ற இணையதளத்தில் "Search Tax Payer" என்பதை க்ளிக் செய்தால் GSTIN எண் கேட்கும் அதில் உங்கள் ரசீதில் உள்ள எண்ணை பதிவிடுங்கள். பதிவிட்ட உடனே கீழ்வரும் தகவல்கள் தெரியும்:

நிறுவனத்தின் பதிவு பெயர்.
மாநிலம்
பதிவு தேதி
நிறுவனத்தின்
வரி செலுத்தும் வகை
GST பதிவின் நிலை

என அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.

அப்படி அந்த எண் இந்த தகவலில் ஒத்துப்போகவில்லை என்றால் நீங்கள் வரி செதுத்த தேவையில்லை. அவர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு புகார் அளிக்கவேண்டும்.

14404 என்ற தொலைபேசி எண்ணை அழைத்து புகார் அளிக்கலாம்.

மேலும் core.nic.in என்ற இணையதள முகவரியில் உங்கள் குறைகளையும், குற்றச்சாட்டுகளையும் பதிவிடலாம்.

நிறுவனம் ஏமாற்றுகிறது என்றால் இந்த அளவிற்கு நீங்கள் செல்ல தேவையே இருக்காது. மொபைல எடுத்து இருங்க இந்த நம்பர் இருக்கா இல்லையானு பாக்குறேன்னு சும்மா டைப் பண்ணாலேயே அவர்கள் பயந்து வழிக்கு வந்துவிடுவார்கள்.

இது போன்ற தவறுகளை களைய மக்களுக்கும் அதிகாரம் இருக்கிறது. அதை நாம் தான் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முக்கியமா இந்த ஹோட்டல், தண்ணீர் கேன் விநியோகம், பலசரக்கு கடை, ஜவுளி கடை, எலக்ட்ரிக்கல்ஸ், ஹார்டுவேர் கடை இதெல்லாம் கவனிக்க வேண்டிய இடங்கள்...

மக்களே உஷார்...
அதை பயன்படுத்தி சில வியாபாரிகளும் அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்கிறார்கள். அதை அனுதிக்கக்கூடாது.

6 comments:

KILLERGEE Devakottai said...

பயனுள்ள தகவல் நன்றி கவிஞரே...

Avargal Unmaigal said...

இதை ஏன் பாஜக கட்சிகாரர்கள் அதிகம் மக்களிடம் எடுத்து சொல்ல மாட்டேங்கிறார்கள் ? தேவையில்லாத விஷயங்களை கையில் எடுத்து கம்பு சுற்றும் வர்கள் இது மாதிரியான விஷயங்களை மக்களிடம் எடுத்து சொல்லி அவர்களின் மதிப்பை பெறலாமே?

Avargal Unmaigal said...

ஆச்சிரியமாக இருக்கிற்து உங்கள் தளத்தில் கருத்து சொன்னால் உடனே வெளிவந்துவிடும் ஆனால் இன்று அப்படியில்லை.... உங்கள் தளத்திலும் வந்து வாந்தி எடுக்க ஆரம்பித்துவிட்டார்களா என்ன?

G.M Balasubramaniam said...

இந்த ஜி எஸ் டி யும் பணம் பார்க்க உதவுகிறதா

இராய செல்லப்பா said...

தங்கள் ஆலோசனையின் பேரில் ஒரு GST எண்ணை மேற்படி தளத்தில் சோதித்தேன். கடையின் பெயரும் பிற தகவல்களும் கிடைத்தன. நன்றி.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

நல்ல பயனுள்ள தகவல்

Post a Comment